திங்கள், ஜூலை 22, 2013

முகநூல் பதிவுகள்


முருகேஷ் ஒரு அற்புதமான நண்பர்.

அவரிடம் ஒரு பிரச்சனை இருக்கிறது.
சரக்கடித்து போதை ஏறியபின் பாட்டில்களை உடைக்கிறார்.
எனக்கு தெளிந்து விடுகிறது.
முருகேஷ் ஒரு அற்புதமான பகைவர்.

000பாசம் உலாவிய கண்களும் எங்கே? / பாய்ந்து துளாவிய கைகளும் எங்கே?/ தேசம் அலாவிய கால்களும் எங்கே?/ தீ உண்டதென்றது சாம்பலும் இங்கே....


-இது திருப்பூருல மின்மயானத்துல செத்துப்போனவங்கள எரிக்கிறப்ப போட்டு உடற ாட்டுடா!


கண்ணில் தெரிந்தது காற்றுடன் போக/மண்ணில் பிறந்தது மண்ணுடன் சேர்க/எலும்பு சதை கொண்ட உருவங்கள் போக/எச்சங்களால் அந்த இன்னுயிர் வாழ்க..

-அப்போவ், என்னப்பா பாட்டு இது..நிறுத்துப்பா. சங்கட்டமா இருக்குது!
-மின்மயானம்னா என்னப்பா?

-நம்மூர்ல செத்து போனவங்கள குழியில போட்டு மூடறாங்கள்ல! இங்க எடங் கெடக்குது மூடறாங்க..டவுன்ல எடம் இல்லீங்காட்டி கரண்ட்டுல எரிச்சுடுவாங்கடா ..கடசியில சாம்பலை துளி தருவாங்க..அதை நாம கொண்டி ஆத்துல கரைச்சி உட்டுடுவோம். இந்த பாட்டை வைரமுத்து எழுதி குடுத்தது! நெதானமா பாடினதால அப்பிடி இருக்குது! நீங்க தேசியகீதம் பாடறப்ப ஸ்கூல்ல நிப்பீங்கள்ல ..அப்பிடி செத்து போனங்க எரியறப்ப நின்னுக்கிறது.

-தெரியுமாப்பா?

-ம், தெரியும்

பிறப்பு இல்லாமலே நாளொன்றுமில்லை/ இறப்பு இல்லாமலும் நாளொன்றும் இல்லை/நேசத்தினால் வரும் நினைவுகள் தொல்லை/மறதியைப் போல் ஒரு மாமருந்தில்லை

-நிறுத்துப்பா! அம்மோவ் அப்பா தும்பம் பண்ணுது தூங்கறக்கில்லாம

மாப்பு! வெச்சுட்டியேடா ஆப்பு!


()())(
()()()()()


மருதன் என் புதிய நண்பர்! அழகாக சியர்ஸ் போட்டார்! அமைதியாக இருந்தார்! ஆப் முடிந்ததும், மச்சான் ஒரு ஸ்கிரிப்ட் ரெடியா இருக்கு என்றார். எனக்கு பயம் தட்டியது! இந்தோநேசியாவுல கதை ஓடுது..மதுரையில ப்ளாஸ்பேக் ஓடுது! என்றார்.அதுக்கு நான் என்ன பண்ணனும்? என்றேன். மச்சா, ஒரே கேள்வி கேப்பேன்..பதில் சொல்லிட்டின்னா நீ தான் இந்த படத்துக்கு வஜன கர்த்தா! (தலை வேறு சாய்கிறதே) சரி கேளுங்க நண்பா கேளுவிய! மூனு பசக ஒரு பொண்ணு......உவ்வே!!!!!!!


()()()()()()


செந்தில் என் புதிய நண்பர்! கள்ளியை பற்றி பேசுவதற்கு வரவேணும் என்று சொல்லிக் கொண்டிருந்தார் நீண்ட நாட்களாக! வந்தார்! கோவிலில் அமர்ந்து பேசுவோம் என்றார். கோவிலில் யாராவது தண்ணி மிக்சிங் என்றோ, தீப்பெட்டி ப்ளீஸ் என்றோ கேட்டால் கொடுத்து விட்டு கோர்வை விட்டுப் போய் தடுமாறினார். 3வது பாட்டில் முடிந்ததும் தும்மல் போட ஆரம்பித்து விட்டார். பேசத்துவங்கினால் தும்மல்! மூக்குல தெனாசு பூந்துடுச்சுங்ளா? என்றேன். இல்ல என்று தும்மல் போட்டார்! மீட்டிங் முடிவுக்கு வந்து விட்டது! தும்மிக் கொண்டே ஊருக்கு பஸ் ஏறினார்! செந்தில் என் தும்மல் நண்பர்!

Post Comment

2 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

"ஒரு" விசயத்தில் நண்பர்களின் ஒற்றுமையை கண்டேன்...!

பெயரில்லா சொன்னது…

//பாசம் உலாவிய கண்களும் எங்கே? / பாய்ந்து துளாவிய கைகளும் எங்கே?/ தேசம் அலாவிய கால்களும் எங்கே?/ தீ உண்டதென்றது சாம்பலும் இங்கே....
கண்ணில் தெரிந்தது காற்றுடன் போக/மண்ணில் பிறந்தது மண்ணுடன் சேர்க/எலும்பு சதை கொண்ட உருவங்கள் போக/எச்சங்களால் அந்த இன்னுயிர் வாழ்க..//

மேலதிகத் தகவல் கிடைக்குமா?