சனி, ஜூலை 06, 2013

மூஞ்சி புத்தகத்தில் கிறுக்கியவைகள்எல்லாரிஞ் சிரிக்கிறாகன்னு பூனையும் ஓடிப்போய் பொடக்காலியில உட்கார்ந்துட்டு கிக்கிக்கீன்னு சிரிச்சுதாம். எல்லாரும் மூஞ்சி புத்தகத்துல பாரதிராசா படத்தை குத்தஞ் சொல்றாகளேன்னு பாக்கலாமா நாணாமான்னு ரோசனையாவே இருந்தேன். இன்னிக்கி ரெம்ப தயிரியமா சம்மணம் போட்டு கம்பங்கூலு குடிச்சிட்டே பாக்க ஆரம்பிச்சேன். படமா அது! ஒளித்திரையில் ஒரு காதல் கல்வெட்டு. புதுமையான யாருமே செய்ய முடியாத ரோசனைகள். புருசங்கட்டுன தாலிய அந்தப்பிள்ளை கழட்டி வீசினப்ப கம்பங்கூலு குண்டானை மளார்னு காலி பண்ணிட்டு அடுத்து என்ன ஆவுமோ ஆத்தீன்னு பதை பதச்சு பார்வேடு ஓட்டி பாத்துடலாமான்னே வெறியாயிட்டேன். அசோகமித்திரனோட தண்ணீர் நாவலு, பொறவு ஜெயமோகனோட பார்த்தீனியம் இதெல்லாம் தமிழ்ல வந்த குறியீட்டு பொஸ்தவங்கள்.

எல்லாம் மறந்தும் போச்சு! செருப்பை குறியீடு பண்ணியிருக்காங்க படத்துல! அதுக்கெல்லாம் ரெம்ப தயிரியம் வேணும். காதல் ஒரு ஜீவநதின்னு கடசியா நமக்கு மெசேஜ் சொல்றாரு பாரதிராசா! சாணியக் கரச்சு ஊத்துற சீனெல்லாம் சும்மாங்க! நாயகனும் நாயகியும் மூஞ்சிய பாரதிராசா மாதிரியே பேசாம பேசுவாங்க பாருங்க..கூட உக்காந்து பாத்த விஜய் ரசிகன் இன்னும் உசுரோட தான் இருக்கான். எதயும் காலையில தான் சொல்ல முடியுமுன்னு டாக்டர்கள் சொல்லியிருக்காங்க!


 கடேசியாக இது வந்து பாரதிராசாவின் குடும்பபடம்! அந்த விசயத்துல ஜெயிச்சிட்டாரு! அதனால நானு 100க்கு 100 மார்க் குடுத்துடறேன்.


சாந்தாவின் புலம்பல் படலம் 1

லீவ் விட்டா ஐயா என்னை மறந்துடுவீங்களோ ?
ஒரு கடிதமாச்சும் அனுப்ப வேண்டாம் ?
நான் ஒருத்தி இங்க தினமும் கடுதாசி வரும்
வரும்னு பாத்துட்டிருந்துட்டு ஏமாந்து போறேன்.
நிஜமாலுமே மறந்துட்டியாப்பா ?
திருப்பூரு சுத்தி அலைவீங்க.. எவடா கெடைப்பான்னு.
பேச்சுல உங்கள அடிச்சிக்க முடியுமா ?
அன்னிக்கி பஸ்சுல என்ன சொன்னீங்க ?
போனதும் முதல் வேலையா உன்னை
நெனச்சு நெனச்சு எழுதுன கவிதை
அமுட்டையும் அனுப்பறேன்னு.. நல்லாவே
இருந்துச்சு வசனம் ! இதை
படிச்ச பின்னாடி அனுப்புனீங்க..
எல்லாத்தையும் அடுப்புல போட்டு கொளுத்தீர்வேன்.
இனியும் லெட்டர் வரலைன்னா
சாப்பிடக் கூட மாட்டேன். ப்ளீஸ்டா..
ஒரே ஒரு கடுதாசி .. ப்ளீஸ்.
இங்க உங்க போட்டோவுக்கு நான் கிஸ்
பண்ணிப் பண்ணி போட்டோ நசிஞ்சு போச்சி.
அழுத்தக்கார ஆளுப்பா நீங்க.
போனா போச்சாதுன்னு பழைய டென்த்
படிச்சப்ப எடுத்த போட்டாவ குடுத்தா
என்ன சொன்னீங்க ? அப்படியே தலையில
கிரீடமும் கையில வேலையும் குடுத்திட்டா
சாமியாக்கும்னு நெனச்சு தின்னீரு
இட்டுக்கிட்டு போயிருப்பேன்னு.. லொள்ளு !
சரியாந்த லொள்ளு ! பஸ்சுனு கூட
பாக்காம போட்டோவுக்கு கிஸ்சு வேற
குடுக்கறீங்க
பதிலுக்கு உங்க போட்டாவக் கேட்டா
நீயே எம் பாக்கட்ல இருக்கு
எடுத்துககோன்னு.. சரியாந்த கொழுப்பு !
இனி என்ன எழுத ? எனக்கு எல்லாமே
நீங்க தான்.
(
இந்தக் கடிதம் மிஸ்டேக் இல்லாம வர
காரணம் என் தங்கச்சி உங்க
கொழுந்தியாவின் திரு உதவி )

(
சொல்லக் கூசும் கவிதைத் தொகுப்பிலுள்ள கவிதை, உயிர்மை வெளியீடு )
இப்படி ஒரு புகைப்படம் தினப்பேப்பரில்
வருமென்று யாரும் எதிர்பார்க்கவில்லை!
அந்த அரசியல்வாதி வாயில் நுரைவர
பற்களை பிரஸ்சால் துலக்கியபடி
இருந்த காட்சி தான் அது! – எதிர்கட்சி
குழு பார்த்ததும் பீதியடைந்து விட்டது!
மக்களுக்கே அது அதிர்ச்சி தான்!
என்னது? தலைவரும் நம்மை போலவே
பல் துலக்குகிறாரே! –இடது கையில்
பிரபல கம்பெனியின் டூத்பேஸ்ட் வேறு!
கம்பேனிக்காரனிடம் காசு வாங்கிட்டாரோ?
கரிக்கட்டை, செங்கல் துகளில் துலக்கும்
தொண்டர்கள் ஓடிப்போய் தலவர்
பேஸ்ட்டையே வாங்கி கடன்பட்டார்கள்!
நம்மை போலத்தான் தலீவரு அப்ப யெல்லோ
கலர்ல போவாரோ? உண்மைத் தொண்டனுக்கு
கடைசியாய் சந்தேகம் வந்தே விட்டது!ஏலா! இந்த மேசைல இருந்த லேப்டாப்பை
எங்கிட்டாச்சிம் பாத்தியாவே! – ஏலா,
பெறலி பண்ணுதியா? இந்த எலி எங்குட்டாச்சிம்
இழுத்துட்டு போயிடுச்சாவே?
வரவர இந்த சல்லிப் பயலால தும்பம்வே!
அன்னிக்கே உன்னிட்ட சொன்னன்லா!
அந்த எலிய கொஞ்ச மெரட்டி வையினு!
ஏலா காது கேக்கா? ஒரு மனுசன்
கத்தீட்டு இருக்கன்லா!

()()()()()()()()(


முன்னால் புலவர்கள் எழுதிவிட்டுப் போன
வரிகள் போல கொவ்வை இதழ்கள் அவளுக்கு!
கூர் கொங்கைகள்! அழகான பிருஷ்ட்டங்கள்!
கண்மணியின் புகைப்படத்தை அலைப்பேசியில்
காட்டியவன், கடந்த ஒன்னரை வருட
காலமாக தன் காதலை ஏற்றுக் கொள்ளாமல்
நகர வீதியில் ஸ்கூட்டியில் அலைந்தபடியே
அலைக்கழித்தபடியே இருப்பதாக கூறினான்.
மேசையில் இருந்த கடைசி மதுக் கோப்பையும்
காலியாகி விட்டது! இருவருக்குமே
கண்கள் சிவந்து தலை தள்ளாடியது!
என் இப்போதைய பிரச்சனையெல்லாம்
எங்கே இவன் கூடிய விரைவில்
கண்மணியின் இடது துடையில் இருக்கும்
ஐம்பது பைசா அளவு மச்சத்தை
பார்த்து விடுவானோ என்றுதான்!

()()()()()()()()

மூச்சி றைக்க உன்னருகில் வந்து நின்றேன்..
என்னடா அப்படி அவசரம்? காலேஜ் பஸ் வர
இன்னும் பத்து நிமிசம் இருக்கு, என்றாய்!
கையிலிருந்த யாமம் நாவலை நீட்டினேன்.
போடா! காதலிக்கு எதை தரணும்னு கூட
தெரியாத பேக்குடா நீ! போ போயி ரமணிசந்திரன்
வாங்கியாந்து குடு! என்கிறாய்.
தலை குனிந்து செல்கிறேன் பழைய புத்தககடை பார்த்து!
என்ன மாதிரி வாழ்கிறோம்?

()())()()()

வள் எனக்கு எழுதிய கடுதாசி அனைத்திலுமே
நீ விளங்கமாட்டாய்! என்றே எழுதி இருப்பாள்.
நானும் அவளுக்கு கடுதாசிகள் எழுதி நீட்டியுள்ளேன்
உங்களைப் போலவே காதலிப்பதாயும்..
நீ பேசலை என்றால் இருதயம் தாறுமாறாய்  துடிப்பதாயும்!
இப்போது ரேசன் கடையில் வரிசையில் நின்றபடி
யோசித்தபடி இருக்கிறேன்! வீடு போனால் இம்புட்டு
நேரமா? யாரை பார்த்து பல்லை காட்டிட்டு இருந்தே?
யாரை பார்த்ததும் இருதயம் தாறுமாறா குதிச்சுச்சு?
கேட்பாளே! என் பழைய காதலியும் இன்றைய
மனைவியுமான சொர்ணா! என்ன மாதிரியான
வாழ்க்கை வாழ்கிறோம் நாம்?
()()()()()()

Post Comment

கருத்துகள் இல்லை: