ஞாயிறு, ஜூலை 07, 2013

முகநூல் கவிதை இரண்டு

பின் நவீனம் பற்றி வீசிக்கொண்டிருந்தாள்
என்னோட கண்மணி அவள் தோழியிடம்!
இடையிடையே போர்கே டுபுக்கு, ஜெனே மச்சான்,
மார்க்குவஸ் மாப்ளே, என்று வாறி கொட்டினாள்!
எதிராளி இவளுக்கு சளைத்தவள் அல்ல போலும்!
ரெண்டு மணி நேரமாக நான் மணலைக் கீறியபடி
இருந்தவன் அவர்கள் சர்ரியலிசத்தை ஆரம்பித்ததும்
நான் கண்ணடிக்க ஆரம்பித்தேன்!
அந்தப் பாப்பா, “ஏய் இவன் என்னை சைட் அடிக்கான்”
என்று போட்டுக் குடுத்து விட்டது!
மூடைப் பொறுத்து விதம் விதமாய் பேசுவாள் இவள்!
நீயுங் கண்ணடிம்பாள், சும்மாயிர்றா என்பாள்…
இல்ல பொத்தீட்டு இரும்பாள். – இன்றென்ன
என்று முகம் பார்த்தேன்.
ரொம்ப அவசரமா டார்லிங்? இன்னம்
இருட்டு கட்டலை என்றாள்! – அவள் வீட்டில்
குளிர்சாதனப் பெட்டியில் மது வகைகள்
பல இருக்கிறது! இருவரும் சியர்ஸ்
போட வேணும்! இந்த திருவிழாவுக்கு முன்னால்
இவர்கள் பேசும் நவீனம் என்

மயிருக்குச் சமானம்!!!!!!நீ என்னை விரும்பாமல் போனதற்கு
ஆயிரம் காரணங்களை வரிசைப்படுத்தினாய்!
அதில் சிலவற்றை எனக்கே பிடிக்கவில்லை!
எந்த நேரமும் நான் சிறுநீர் கழிப்பதைக் கண்டு
உனக்கு சக்கரை டெஸ்ட் எடுக்கணும் என்ற போது
மருத்துவமனை செவிலியானாய்! –இந்த கருக்கலில்
நான்கு பியர் குடித்ததால் வந்த வினையடி!
என்றதும், மழுப்பாதே என்கிறாய்!
நீ என்னை மறுப்பதற்கு மூக்குப்பொடி போடுவது
கூட காரணமா? போத்தலையை உருண்டை பிடித்து
உள் நாக்கில் வைத்துள்ளேனே… நல்லவேளை
அதுவும் தெரிந்தால் 1001 என்றிருப்பாய்! –இந்த
காலம் என்ற ஒன்றிற்கு என்ன கேடு வந்தது?
பழுத்து விழும் மாம்பழமாய் சப்தமிடுகிறது!
கடைசியாக கூட ஒன்று சொன்னாய் நீ..
சாரிடா வேறு ஆள் பார், என்று!
நம்மிடையே மரப்பல்லி ஒன்று
உயிருக்கு பயந்து கத்தியபடி ஓடியது!
துரத்திவந்த பூனையின் நீலவர்ண கண்களில்
பல்லியின் வேண்டுதல் மட்டுமே எஞ்சி நின்றது!
வணக்கம் கூறி நீ விடை பெற்று போனபின்
நான் பூனையைக் கொன்றேன்! – உன்னை
விரும்பாமல் போக என்னிடம்
காரணங்கள் ஏதுமில்லை!!!!!!!!


Post Comment

கருத்துகள் இல்லை: