செவ்வாய், ஜூலை 09, 2013

முகநூல் பதிவுகள் ஜூலைமூன்றாம் பிறை திரைப்படம் கமலுக்கு விருது வாங்கி கொடுத்த படங்களில் ஒன்று! ஸ்ரீதேவி அதில் விபத்தொன்றினால் மனநலம் குன்றியவராக நடித்திருப்பார். கமல் ஒரு ஆசிரியராக நடித்ததினால் கண்டிப்பாக 1982ல் என் தந்தை அந்தப் படத்திற்கு என்னை கூட்டிப் போயிருந்திருக்க மாட்டார். அடுத்து ஓல்டு கணவனோடு வாழும் சிலுக்கு சுமிதா கமலோடு ஆடிப்பாடும் பொன்மேனி உருகுதேவுக்காகவும் என்னை அழைத்துப் போயிருக்க மாட்டார்.
  எம் ஜியார் படங்களை மட்டுமே ரசித்து பார்த்துக் கொண்டிருந்தவனை வேண்டுமென்றே கூட இழுத்துப் போயிருக்க மாட்டார். கமல் போலவே டெக்னிகல் விசயத்தில் எம்ஜியாரும் தூள் கிளப்பியவர் என்பது பின்னாளில் தான் தெரிந்து கொண்டது. 82ல் தந்தை மார்க்ஸியவாதியாகையால் டைரக்டருக்காக படம் பார்க்க அழைத்துப் போயிருப்பார். அதில் வந்த பாடல்களையும் அவர் ரசித்ததாக தெரியவில்லை. பின்னாளில் அவர் ரசித்த ஒரே பாடல் உள்ளத்தை அள்ளித்தாவில் இருந்தது! ஐ லவ் யூ லவ் யூ லவ் யூ.. சொன்னாளே! என்னா பாட்றா?!!! என்பார்.

 சுந்தர ராமசாமியின் புளியமரத்தின் கதையை 9 வாட்டி படித்த அவர்..தாய் நாவலை 10 வாட்டி படித்த அவர்.. படம் முடிந்து கூட்டத்தோடு நடக்கையில் சொன்னார். இதப் போயி நல்ல படமுன்னு புத்தகத்துல எழுதியிருந்தானுகளே!


 90 களின் ஆரம்பத்தில் டெக் வைத்து டெர்மினேட்டர் 2 காட்டினேன். பயங்கரம் என்றவர் இறப்பிற்கு ஒரு மாதம் முன்பு திரையில் என் நண்பனோடு பார்த்தது டைட்டானிக்! ஆனால் எனக்கே தெரியாமல் அவர் விசில் அடித்து பார்த்த படம் ஸ்டாரின் ..”முத்து” 


என்ன சாமி பெரியப்பனுக்கு ஒரு கதை சொல்ல மாட்டிங்றே! கோயமுத்தூர்ல வேன்ல போயி படிக்கிற..ஒரு கதை தெரியாதா? சொன்னீன்னா பெரீப்பன் சாயந்திரம் குடிக்க வெசிமங்கலம் போறப்ப உனுக்கு ஐஸ்கிரீமு, அஞ்சு ஸ்டாரு முட்டாயி வாங்கிட்டு வருவன்
.
  ஒரு ஊர்ல ஒரு புலி இருந்திச்சாம்..அப்புறம் புலி வந்து ரோட்டுல போயிட்டிருந்திச்சாம். எங்க ஸ்கூலு வேனு வந்தங்காட்டி ஓரமா போச்சாம். பீட்டி மிஸ் ஒரு கதை சொன்னாங்க..பெரீப்பா..அதுல பூனை வந்து ஐஸ்கிரிம் கேக்கும்..எங்க அம்மா சத்தி இருக்காள்ல அவுளும் ஐஸ்கிரீம் தான் சாப்பிடுவா! நந்தனா பாப்பாவுக்கும் ஐஸ்கிரிம் வாங்கிட்டு வருவீங்ளா? அவ திங்கமாட்டாளே! ப்பைவ் ஸ்டார் சாக்லைட் திம்பா! எனக்கு மூனு வாங்கிட்டு வா பெரிப்பா!

  கதை என்னாச்சுடி? சரி உங்க மிஸ் அழகா இருப்பாங்ளா! உன்னை அடிப்பாங்ளா?

  எங்க மிஸ் என்னை மாதிரி அழகெல்லாம் இல்ல பெரிப்பா! அவ அடிச்சாள்னா ஸ்கூலுக்கு போகமாட்டனே! நாம இப்பவே போயி முட்டாயி வாங்கிட்டு வந்துடலாமா? ஐஸ்கிரீமை அங்கியே தின்னுட்டு வந்துடலாம்!!!

()()()()()()

நவீன கவிதை என்றழைக்கலாம்!!!!!!
()()()()()())()()()

அந்த கிறுக்குப் பயல் சிறகசைத்த
பட்டாம்பூச்சியை எட்டிப்பிடித்து வாயில்
போட்டுக் கொண்டான்! – நல்லவேளை
இந்த நேரம் அது ரயிலில்
அடிபட இருந்தது!!!!!
()()()()()()())


சற்று நன்றாகவே குனிந்து…
கைகளைக் கட்டிக் கொண்டு..
பவ்வியமாய் ஒரு தலித் கூலியாள்
தன் ஆதிக்க எஜமானிடம் கூலி
கேட்பது போல..
உன்னிடம் கேட்கிறேன்!
உன் வீட்டுக்காரர் வீட்டில் இல்லாத
இரவு நேரத்தில் என்னை
விரும்பி அழைப்பாயா கண் ஏ!!!

()()()()()()()(


1/2 ீருக்கு வந்த மப்பு=====
ஆரியர்கள் கைபர் கணவாய் வழியாக இந்தியாவுக்குள்
நுழைந்து சட்டியும் பானையும் கண்டுபிடித்தான்கள்!
சாலமன் கிராண்டி பார்ன் ஆன் மண்டே...
காடு வா கமான்குது வீடு போ கோ  அவேங்குது!
டப்பா டப்பா வீரப்பா எப்படா மேரேஜ்? எம் ஜி ஆர்
சண்டெ பானுமதி கொண்டெ! கொண்டெய்ல குஸ்பூ!
பொடக்காலில பூனை சிரிக்குது! சாந்தி படுத்துக்க மாட்டீங்றா!
அவ்வாய் வொண்டர் வாட் யூ ஆர்? ஜீசசுக்கு நமஸ்காரம்.
முடிவா என்ன சொல்றே எஸ்தரு? தெரியுமா சேதி
கருப்பராயனுக்கு ரெண்டு கெடா! அன்புள்ள அல்லி
அரிப்பை தீர்க்க வா! நக்குற மாட்டுக்கு செக்குல
ஜிலேபின்னு தெரியும்! கந்தசாமிபுள்ள புதுமை
பித்தனை தேடீட்டு வாய்பாடி வந்தான்!
அதிகமில்ல ஜெண்டில்மேன் 1/2 பீர் தான்!
சரசா மப்புல போனா பாத்தியா? எல்லாம்
சாந்துமாக்கு தெரியும் அடியேன்
பத்து மாத்து தங்கமுன்னு!

()()()()()(0

Post Comment

3 கருத்துகள்:

வெளங்காதவன்™ சொன்னது…

அண்ணேன்...
இப்பத்தேன் உம்பட சொல்லக்கூசும் கவிதைகளைப் படித்துக்கொண்டிருக்கிறேன். படிச்சுப் படிச்சு சிரிப்பா வருதுய்யா....

#இதுக்கப்புறம், சாந்தாமணியப் படிக்கப்போறன்.

sathish kumar சொன்னது…

புதுமைப்பித்தனைத் தேடிட்டு வாய்ப்பாடி வந்த‌ கந்தசாமிப்புள்ளை .... கோயல்ல‌ குக்கீட்டு.. கிலாஸில் புதுமைப்பித்தனையும் ஹைட்ரஜன் மோனாக்ஸைடையும் மிக்ஸ் பண்டீட்ருந்த‌.... வாமு மாமுகட்ட‌ ஒரு கட்டிங்கும் கூடவே சித்த‌ வைத்திய‌ சிந்தாமணி தீபிகைக்கு ஆயுள் சந்தாவும் வாங்கிப்போட்டு.... பொச்சை ஆட்டிட்டே... போய்ச்சேந்தான் ஊருக்கு...

பெயரில்லா சொன்னது…

தென்னமொ ... பின்னாடி புதிய‌ கவுஜ‌ மாதிரி இருக்குதாட்ட‌...