செவ்வாய், செப்டம்பர் 17, 2013

செப்டம்பர் முகநூல் குறிப்புகள்


அவனிடம் எதைச்சொல்லி அழாதே என்று தேற்றுவதெனத் தெரியாமல் தவித்தபடி இருந்தாள் அவள்! அவனோ அழுதபடியே இருந்தான். திடீரென அவன் முன்பாக அவள் மல்லாந்து விழுந்தாள் அவள் உடை கலைந்து! அவன் அழுகையை நிப்பாட்டி விட்டு அவள் உடலை ரசிக்கத் துவங்கினான். அழுகை நின்றதும் எழுந்தமர்ந்தாள் அவள்!இவன் மீண்டும் அழுகையை துவங்கினான். அவள் மல்லாந்து விழுந்தாள்! ஈடன் தோட்டத்தில் இந்த விளையாட்டு ஆரம்ப காலந்தொட்டு நடந்து கொண்டேதான் இருக்கிறது!!

()()()()()()()

அந்த இரவில் இடுகாட்டில் ஒரு யுவதியை புணர்ந்து கொண்டிருந்தவனுக்கு பேய்களின் பயம் இருந்திருக்காது என்றே நீங்கள் நினைக்கிறீகள்!! அந்த யுவதிக்கு ஒருவேளை பேய்தான் தன்னை புணர்கிறது என்ற நினைப்பு இருந்திருக்கலாம் என்றும் நினைக்கிறீர்கள்!! அல்லது அந்த யுவதிக்கு இல்லாமலும் இருந்திருக்கலாம்!! என்றும் நினைக்கிறீர்கள்!!

()()()()()()()


நகரில் நண்பர் வீட்டில் இருந்தேன். சமையல் கட்டில் காலை உணவுக்கு புட்டுமா தயாராகிக் கொண்டிருந்தது. திடீரென வீட்டினுள் சிட்டுக்குருவிகள் சப்தம். அடங்கொய்யாலே! இந்த நகரில் வந்ததிலிருந்து ஒரு காக்காயை கூட நான் பார்க்கவில்லை! மனிதன் இருக்குமிடமெல்லாம் காக்காயி வாழும் என்று கேள்விப்பட்டிருந்தேன். என்னங்ணா, வீட்டுல கூண்டுல காதலு பறவைகள் அஞ்சாறு வளத்துறீங்ளா? கீச்சு மூச்சுனு சத்தமா கெடக்குதே! --அதுங்ளா! அது செல்போனுல ரிங்கு டோனுங் கோமு!

()()()()()()()


உன்னை இறுக்கி அணைத்திருந்த வேளையில் பெருத்த மழை ஓய்ந்து தூறல் வீசிக்கொண்டிருந்தது! புல்லட் ஒன்று தடதடத்து விளக்கொளி பீய்ச்சிச் செல்ல விலகிச்சென்று நின்று ஈரத்துணி பிழிந்தாய்! புல்லட் தொலைதூரம் சென்றபிறகும் கட்டிக் கொள்ளாமல் எட்டியே நின்றாய்! அப்போது தோன்றியது நீ கட்டிக் கொள்ள தகுதியற்றவள்! சமீபத்தில் சந்திக்கையில் சொன்னாய்...உன் காதல் இன்றுவரை என்னைக் கொல்கிறது என்று! நீ பிரிந்துபோக எது காரணமாக நம்மிடையே இருந்தது? என்றாய். புல்லட்!!!!!

()()()()()(


அன்பு உள்ளங்களுக்கு! புத்தக வாசிப்பு அதிகம் உள்ளவர்கள் தங்களுக்குள் மேதாவித்தனம் வந்து விட்டதாகவும், எழுத்தனின் மீது பாசம் உள்ளவன் போல காட்டிக் கொள்வதும், அதுவே நடந்தும் விடுகிறது முக நூலில்  தன்னப்போல! நான் முகநூலுக்கு வந்து நான்கு மாதங்களாகி விட்டது என்றாலும் என் மேதாவித்தனங்களை எந்த இடத்திலும் இதுவரை காட்டவில்லை என்று தொடர்ந்து முகநூலில் என்னை கண்டு வருபவர்களுக்கு தெரியும். எனக்கு அப்படியென்றால் என்னவென்றும் தெரியாது. போக என் அப்பன் எழுதிய மாதிரி மற்ற கிரகங்கள் எல்லாம் என் மயிருக்குச் சமானம்! என்ற வரிகளைப்போல!  என் புத்தகங்கள் விற்பதற்காக நான் இங்கே முக நூலில் கடை விரிக்க வரவில்லை. இம்மாதிரியான வாய்ப்பு புதுமைபித்தனுக்கோ, நகுலனுக்கோ, ஆர். சண்முகசுந்தரத்திற்கோ, ஜி.நாகராஜனுக்கோ, சம்பத்திற்கோ, பிரமிளுக்கோ, மெளனிக்கோ, தி. ஜானகிராமனுக்கோ, ஸ்டெல்லாபுரூசிற்கோ, வைக்கம் முகமது பசீருக்கோ, அப்போது இல்லை. கிடைத்ததை சரியாக பயன்படுத்திக் கொள்ளும் மனநிலையிலும் நான் இல்லை. இது ஒரு அழகான விளையாட்டு மைதானம். இங்கு கோல் போட்டு ஜெயிப்பவர்களுக்கும் மரியாதை என்பது இல்லை. இதை அதன் போக்கிலேயே விட்டுப் போவதில் அடங்கியிருக்கிறது சூட்சுமம்.  ஒரு காலத்தில் ஒரு கவிதை எழுதி காசு போட்டு அச்சடித்து புத்தகமாக்கி அதையும் என் செலவிலேயே அனுப்பி வாரக் கடைசியில் மூன்று நான்கு போஸ்ட்கார்டு விமர்சனங்களை கண்டு இப்பிறப்பின் சந்தோசத்தை அனுபவித்தவன் நான். எல்லாவற்றையும் வெறுத்து நான் இப்போது எழுதும் படைப்புகள் புக்கர் பரிசையோ வேறு ஞாபகார்த்த பரிசுகளையோ பெற்றுக் கொண்டு மகிழ்ச்சிக் கடலில் திழைப்பதற்காக அல்ல. வா.மு.கோமு செத்துவிடுவான். அது இயற்கை. ஆனால் மீண்டும் ஒரு பத்தாண்டு காலம் படைப்புகள் நிற்க வேண்டும் என்பதே ஆசையாக இதுவரை இருந்தது. இருக்கவே இருக்கு மக்களே என்னிடம் காசு பார்க்கும் எழுத்து. பை பை சொல்லி விட்டு செல்ல பலவிதமான நெஞ்சை நக்கும் கதைகள் கைவசம் உள்ளன. ஒரு கூட்டு குடும்பத்தை வைத்து ஓராயிரம் கதை எழுதுவேன். எழுத்து என் சொத்து. அதை நான் என்ன மனநிலையில் இருக்கிறேனோ அப்படி பிரதிபலிப்பேன். திஸ் ஈஸ் த டஸ் ஆப் த டிஸ் ஆப் த டுஸ்!

()()()

உள்பொட்டியில வந்து இது ஒன்னுதான் நண்பர்கள் கேக்கலை!
அண்ணா வணக்கம்! நலமாய் இருக்கிறீர்களா? இப்போது சூட்டிங்கிற்கு கிளம்பி விட்டோம். நாளையிலிருந்து கேமரா ஸ்டார்ட் ஏக்சன் தான். தங்களிடம் காதல் கதை இருந்தால் இரண்டு வரியில் இங்கு குறிப்பிடவும். மிக அவசரம்! நம் படத்தின் நாயகன் புதுமுகம் வசந்தன். நாயகி கத்திரீனா. இருவரும் கல்லூரியில் படிப்பது போல் கதை இருந்தால் சூப்பர். ஏற்கனவே வந்த காக்கா வாழ்க, கம்மினாட்டி காதல் போல புதுவிதமாய் உடனே கூறுங்கள்..(பச்சை லைட் எரிந்து கொண்டே இருக்கிறது.. என் 2ஜி படுத்துப் படுத்து எழுந்து படுத்து விடுகிறது

()()()()()

மதுபானக் கடையில் கூட்டி எடுத்து வந்த 
பேச்சுக்கள் எல்லாமே குட்டியை பற்றியும்
குடியைப் பற்றியும் மட்டுமே இருந்தன!!!!

()()()()()

ஒன்றுமே தெரியாதது போல் தலைகள் சிலவற்றை
நிலம் பார்த்து குத்திக் கொண்டே போகும் சில
அழகான, அழகு குறைந்த யுவதிகளைப் போல்
இந்த பட்டாம்பூச்சிகளைப் பாருங்கள்...
எல்லாம் தெரிந்து அது அது பாட்டுக்கு காரியத்தில்
கண்ணாய் பறக்கிறதுகள்!!!!!

()()()()()(

உன் விருப்பத்திற்கு மொழிபெயர்த்து
படித்துக் கொள்ள என் கவிதைகளின்
மொழி அவ்வளவு சுலபமானதல்ல!!!!

()()()()()()(


எப்போது போனாலும் பிரேமாவின் நினைவு அந்த ஊரில் எனக்கு வருவதில்லை!. ஆனால் அது அவள் ஊர் தான். இந்த முறை சென்றபோது ஏனோ அவள் எதிர்க்கே வந்தால் ந்ன்றாக இருக்குமே என்று நினைத்தேன். 22 வருடங்களுக்கு பிற்பாடு பிரேமா மஞ்சள் வர்ண சேலையில் என் எதிர்க்க வந்து கொண்டிருந்தாள். அருகில் நிறுத்திபிரேமா, அடையாளம் தெரியுதா?” என்றேன். “நான் சுகந்திங்க அண்ணா! எங்கம்மாதான் பிரேமலதாஎன்றாள். அதே குரல்! அம்மா வீட்டுல தான் இருக்கு, என்றாள் சுகந்தி. பிரேமா என்கிற அம்மாக்களை பார்க்க விரும்பவில்லை நான்!!!!

()()()()()()()


-லத்திகா மிஸ் இருக்காங்கள்ல லத்திகா மிஸ்ஸு..

-ஆமா இருக்காங்க அவிங்களுக்கு என்னாச்சு?

-பூஜா மிஸ் இருக்காங்கள்ல பூஜா மிஸ்ஸூ..

-ஆமா அவிங்களுக்கு என்னாச்சு?

-பிரீத்தி மிஸ் இருக்காங்கள்ல பிரீத்தி மிஸ்ஸு

-ஐய்யய்யோ அவிங்களுக்கு என்னாச்சு?

-அவிங்களுக்கெல்லாம் ஒன்னும் ஆவலை
அங்கிள்..ஹைய்யோ! ஹையோ! இவிங்க எல்லாம் என் கிளாஸ்க்கு டீச் பண்ண வரமாட்டாங்க! நானு 4த் ஸ்டாண்டர்டு போனாத்தான் வருவாங்க!
()()()()()

-ஹலோ! நீ இன்னும் சாவலியாடா!
-நா எதுக்கு சாவணும்? எங்கப்பன் சங்கு சேவண்டி அடிக்றா மாதிரியே ஒரு போனு வாங்கி குடுத்துட்டான்ல!
-இப்புடி பக்கத்து பக்கத்து செவுத்துக்கு அந்தப்புறமா நின்னுட்டு நாம போனு பேசி நொங்கறமே வெளங்குவமாடா!
-மொதல் போனு வருதே..குரலு எங்கப்பன் மாதிரியே கேக்குதேன்னு டவுட்டு வந்துச்சு மாப்ளே..Post Comment

கருத்துகள் இல்லை: