வியாழன், அக்டோபர் 10, 2013

வா.மு.கோமு புதிய கவிதைகள்
உனக்குத்தெரியும் தூக்குபவனல்ல நான் என்று!
ஊராருக்குத் தெரியும் அப்படிப்பட்ட பயல் அல்லவென்று!
இருந்தும் எனைக்கண்டதும் தெருத்தெருவாய் பறக்கிறாய்!
உன்னிடமிருப்பது போல என்னிடம் சிறகுகள் கிடையா!
ஏதாவதொரு தெருச்சந்தில் வசமாய் ஒருநாள் மாட்டுவாய்!
அன்று நான் நடத்தும் கச்சேரியில் நீ ஊர் முழுக்க
போய்ச் சொல்வாய்! அந்தப்பயல் கசக்கீட்டான்! நல்லவன்னு
இத்தினி நாள் நெனச்சிருந்தேன் என! இதற்குத்தான்
பெருசுகள் முன்பே சொன்னார்கள் வேலியில போறதை
சுடிதார்க்குள்ள எடுத்து விட்டுக்க கூடாதுன்னு!
()()()()()()()

எல்லா நாளும் முத்தம் தருவாய் என்றால்
எல்லா நாளும் முச்சந்திக்கி வருகிறேன்!
எல்லா நாளும் காட்ட மறுப்பாய் என்றால்
எல்லா நாளும் ஏமார்ந்து திரும்ப மாட்டேன்!
எல்லா நாளும் அதே வேலை தானா என்றால்
அந்த வேலைக்காகத்தான் எல்லா நாளும் என்பேன்!
()()()()()()()

என் அழகு யாருக்கு வரும் என்று நீயே சொல்லிக்கொண்டால்
உலக அழகிகளையெல்லாம் என்ன செய்வது?
ஒன்று செய்! உனக்கு மிதி வெண்டுமென்றால்
வந்து கேட்டு வாங்கிப் போ!
உன்புருவங்களை எவனோ அர்ச்சுனனின் வில்லுக்கு ஒப்ப
கவிதை எழுதி நீட்டி விட்டான் என்பதற்காக படபடத்துத்
திரியாதே! இதயம் தெருமுனையில் கிடந்து மீனைப்போல் துடிக்கும்!
அது சரி அந்த வண்ணத்துப்பூச்சிக்கு உன்
உதட்டின் மீது என்ன வேலை?
()()()()()(

என் இறப்புச்செய்தி கேட்டு வீடு வந்திருந்தாய்!
பெண்கள் கூட்டத்தில் உதடு விம்ம நின்றிருந்த
உன்னை தற்செயலாய் கவனித்தேன்!
நல்ல சகுனம் என கிளம்பி விட்டேன்!
()()()()()(

இத்தினி நாள் நெனச்சிருந்தேன் என! இதற்குத்தான்
பெருசுகள் முன்பே சொன்னார்கள் வேலியில போறதை
சுடிதார்க்குள்ள எடுத்து விட்டுக்க கூடாதுன்னு! 
()()()()()()()

எல்லா நாளும் முத்தம் தருவாய் என்றால்
எல்லா நாளும் முச்சந்திக்கி வருகிறேன்!
எல்லா நாளும் காட்ட மறுப்பாய் என்றால்
எல்லா நாளும் ஏமார்ந்து திரும்ப மாட்டேன்!
எல்லா நாளும் அதே வேலை தானா என்றால்
அந்த வேலைக்காகத்தான் எல்லா நாளும் என்பேன்!
()()()()()()()

என் அழகு யாருக்கு வரும் என்று நீயே சொல்லிக்கொண்டால்
உலக அழகிகளையெல்லாம் என்ன செய்வது?
ஒன்று செய்! உனக்கு மிதி வெண்டுமென்றால்
வந்து கேட்டு வாங்கிப் போ!
உன்புருவங்களை எவனோ அர்ச்சுனனின் வில்லுக்கு ஒப்ப
கவிதை எழுதி நீட்டி விட்டான் என்பதற்காக படபடத்துத்
திரியாதே! இதயம் தெருமுனையில் கிடந்து மீனைப்போல் துடிக்கும்!
அது சரி அந்த வண்ணத்துப்பூச்சிக்கு உன்
உதட்டின் மீது என்ன வேலை?
()()()()()(

என் இறப்புச்செய்தி கேட்டு வீடு வந்திருந்தாய்!
பெண்கள் கூட்டத்தில் உதடு விம்ம நின்றிருந்த
உன்னை தற்செயலாய் கவனித்தேன்!
நல்ல சகுனம் என கிளம்பி விட்டேன்!
()()()()()(0
பஜக்கென ஒரு முத்தத்தை என் உதட்டின் மீது
கொடுத்துவிட்டு ஒன்னும் தெரியாதது போல்
போய் விட்டாய்! திருகிக் கிடந்தேன் நான்!
தினமும் கொடுத்து விட்டுப்போ இப்படி
சரக்குச் செலவு மிச்சம் எனக்கு!
()()()()()()

பலர் எரிந்தும் விழாத மாங்காயாய் இருந்த உன் இத்யம்
என் ஒரே கல்வீச்சுக்கு நாலாய் மூனாய்
தெரித்து விழுந்தது! கல்லெறின்னாலும்,
காதல்னாலும் சும்மாயில்ல பப்பி!
ஐ ஆம் இன் பேக்!
()()()()()()

எங்கே காதலித்து விடுவேனோ என்று
பார்க்கையிலெல்லாம் ஓடினாய் நீ!
எங்கே காதலிக்க வைத்து விடுவாயோ என்று
பார்க்கையிலெல்லாம் ஓடிக்கொண்டிருந்தேன் நான்!
கடைசியில் இந்த சினிமா படத்தில் வருவது
மாதிரியே ஆயிப்போயிற்று!
வர்றபோது பூ வாங்கிட்டு வாங்க என்று
வாசல் படியில் முத்தம் கொடுத்து
ஜாப்புக்கு அனுப்புகிறாய் நீ!
()()()()()()

மஞ்சுவோட ஒடஞ்ச வளையலு இது என்று சீனு
வந்து என் கையில் கொடுத்துப் போனான்.
மஞ்சுவோட பழைய ரிப்பனு என்று முருகன்
வந்து என் கையில் திணித்துப் போனான்!
மஞ்சுவோட உள்ளாடை என்று ரவி வந்து
வந்து வந்து வந்து நண்பர்கள் குடுத்தபடி சென்றார்கள்!
கடைசியாக மஞ்சு வந்து நின்றாள்.
எல்லாப்பொருளும் வந்துச்சா? என் ஞாபகார்த்தமா
ஊட்டுல பத்திரமா வெச்சுக்கோ.. நாளைக்கி
புதுப்பட்டில இருந்து என்னை பொண்ணு
பாக்க வர்றாங்க! என்று சொல்லிப் போனாள்!
இந்தப்புள்ளைக்கி எப்ப பைத்தியம் புடிச்சுது?
()()()()()

டாமி, ஜிம்மி, மணி, டைகர் என்று நிறையப்பேர்
நீயிருக்கும் வீதியில் எந்த நேரமும் சுற்றுவதால்
அழகி என்ற கர்வம் உனக்குள் வந்து விட்டது!
இன்றிலிருந்து யாரும் உன் வீதிப்பக்கம் வரமாட்டார்கள்!
உனக்கு கடுதாசியும் வீச மாட்டார்கள்! உன்னை உன்
வீட்டார் வேறு ஊருக்கு கட்டி அனுப்பி விடுவார்கள்!
அங்கு போய் நீ என்ன வேண்டுமானாலும் செய்துகொள்!
 ()()()()()

அரைக்கம்பத்தில் கொடி ஏற்றியிருந்தேன்.
பார்த்தவர்கள் எல்லாம் கேட்டார்கள் இது எந்த கட்சிக்கொடி?
எந்தத் தலீவரு செத்தாரு என்று?
என் காதல் இன்னிக்கி செத்துப்போச்சு என்றேன்!
தகவலறிந்து நீயும் சும்மா அந்தப்பக்கமாய்
வருவது போல் வந்து போனாய்!
வீடு போய் என் அலைபேசியில் பேசினாய்,
லூசாடா நீ! என்று. பிணம் பேசியதாக
சரித்திரத்தில் ஒரு குறிப்பு பின்னாளில் வரும்.
()()()()()()

நம் காதல் கூவி விட்டது என்று நண்பர்கள்
சந்தோசத்தில் பட்டாஸ் போட்டுக் கொண்டிருந்தார்கள்.
அந்தக்கூட்டத்தில் நீயும் கம்பி மத்தாப்பு பிடித்து
சங்கு சக்கரத்திற்கு தீ வைத்துக் கொண்டிருந்தாய்!
()()()()()()

நீ என்னை காதலிப்பதற்கு ஏகப்பட்ட
விதிமுறைகள் வைத்திருந்தாய்!
1. தண்ணி போடக்கூடாது
2. பீடி சிகரெட் ஊதக்கூடாது
3. அடுத்தவளை ஓரக்கண்ணால் பார்க்கக்கூடாது
4. பொய் சொல்லக்கூடாது
5. மேல கை படக்கூடாது
6. சினிமாக்கு கூப்பிடக்கூடாது என்று ஒரு குயர் நோட்டு
அளவுக்கு வைத்திருந்தாய். – இந்த டி. ராஜேந்தர் காலத்து
காதலை இன்னமும் யாரடி செய்து கொண்டிருக்கிறார்கள்?
இத்தனைக்கும் ஓக்கேடி! நான் சொல்ற ஒன்னுக்கு
ஓக்கே சொல்லு! ஒரு வாட்டி என் ரூமுக்கு வந்துட்டு
 போயிடு! அப்புறம் நீ சொன்னாப்ல இருந்துக்கறேன்!
()()()()()

என் கால் கட்டுகளை அவிழ்த்து தூக்கிப்போட்டு
மூடவே பத்திரமாய் வைத்திருக்கிறாள் ஒரு குழியை
அவள் வயிற்றுக்கருகில்!
()()()()()( 

மொகுட்டையே வெறித்துக்கொண்டு கிட!
காபி டம்ளரை கொட்டு!
பைக்ஹாரன் கேட்டால் ஓடி வந்து தேடு!
இரவெல்லாம் விழித்துக்கிட தலையணையை கட்டிக்கொண்டு!
இத்தனைக்கும் காதலித்துப்பார்!
()()()(


Post Comment

1 கருத்து:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

ரசித்தேன்... வாழ்த்துக்கள்...