புதன், ஜனவரி 29, 2014

முகநூல் பதிவுகள் சில 1


அன்பு நண்பர் வா.மு.கோமு அவர்களுக்கு,

வணக்கம். தாங்கள் அனுப்பித்தந்த மண்பூதம் தொகுப்பு கிடைத்தது. மகிழ்ச்சி. புத்தகம் கையில் கிடைத்ததுமே கடிதம் எழுத நினைத்திருந்தேன். வேலை நெருக்கடிகளால் உடனே முடியவில்லை. இரண்டு மூன்று நாட்களாய் சிறுகச் சிறுகப் படித்து இன்று தொகுப்பை படித்து முடித்தேன்.

தொகுப்பில் உள்ள பதினேழு கதைகளுமே ஒன்றைப் போல ஒன்றில்லாத தன்மையுடயனவாய் உள்ளன. FANTCY இக்கதைகளில் ஊடும் பாவுமாக இழையோடுவதைக் காணமுடிகிறது. இந்தக்கதைகள் அதன் பாடுபொருள் புதுமையினால் புதியவையாக இருக்கின்றன. எடுத்துரைப்பு முறையிலும் கூட, அலட்டிக் கொள்ளாத டாம்பீகத்தன்மை எதுவுமில்லாத எளிமை இருக்கிறது. ஆனால் கதைத் தன்மை, தமிழுக்கு முற்றிலும் புதிய ஒன்றல்ல. இப்படிச் சொல்வது ஒன்றும் குறை சொல்லுவதற்காக இல்லை. மார்க்குவஸ்ஸின் வரவுக்குப் பிறகு தமிழில் சிலர் இதைப் பரீட்சித்துப் பார்த்துவிட்டார்கள். எஸ்.ராமகிருஷ்ணன், ரமேஷ் பிரேம் வெகு காலத்திற்கும் முன்பே ஸில்வியா (பிரம்மனைத் தேடி) எனச் சிலர் கையாண்ட, கையாளும் கதைத் தன்மை போலத்தான் உங்கள் கதைகளும் இருக்கின்றன. ஆனால் உங்களை வேறுபடுத்துவது, மிகச் சாதாரணமான அன்றாட வாழ்வில் இதைக் கொண்டு வந்திருப்பதைத் தான்.

மார்க்குவஸ் போன்ற லத்தீன் படைப்பாளிகள் உயிர்ப்போடு இருக்கும் பகுதி அதுதான். அதை நீங்கள் சரியாக அடையாளம் கண்டிருக்கிறீர்கள். இதை நீங்கள் பிரக்ஞைப் பூர்வமாகச் செய்யவில்லை என்றாலும் கூட. இது தமிழ் நவீன கதை சொல்லும் முறைமையில் கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். மிகச்சாதாரணமான மக்களின் நம்பிக்கைகளும் உங்கள் கதைகளில் பொதிந்து கிடப்பதைக் காண முடிகிறது.

நோயின் அவஸ்தையை மிகவும் நுட்பமாகக் காட்டியிருக்கிறீர்கள். தங்களின் முன்னுரையைக் கதைகள் படிக்கத் தொடங்கும் முன்னரே படித்து விட்டேன் என்ற போதிலும் கூட, கதை முழுக்க புதுமைப்பித்தன் ஞாபகத்திற்கு வந்து கொண்டே இருந்தார். தன் மனைவிக்கு அவர் எழுதிய கடிதங்கள் நினைவில் அசைந்து கொண்டே இருந்தன.
புதிய எழுத்து முறைமையை மிக அழகாக கையாண்டிருக்கிறீர்கள். புதிய பாடு பொருள்களும் வந்து விழுந்திருக்கின்றன. நண்பர்களுக்கும் தெரியப்படுத்துவேன்!


தோழமையுடன்............. கி. பார்த்திபராஜா.

காதல் வெறும் பிரம்மை! ஒருவனுக்கு வேண்டியது நல்ல உடல்கட்டுள்ள எடுப்பான ஒரு பெண். கூட கூட்டிப்போனால் நாலுபேர் பார்த்து பொறாமைப்படுமளவு ஒரு அழகி! சலிக்க சக்தி உள்ளவரை அனுபவிக்க வேண்டியது. பிறகு மறக்க வேண்டியது. மனிதனுக்கான பல தேவைகளில் பெண்ணும் ஒன்று. துணிவுள்ளவன் அனுபவிக்கிறான். அனுபவிக்கத்தான் செய்வான். இல்லாதவன் கேள்வி கேட்கிறான்.. துன்பப்படுகிறான்! சில வேளைகளில் தற்கொலை செய்து கொள்கிறான். இது தான் பிரச்சனையாய் இருக்கிறது!
========
வயசுக்கு வந்த புள்ளைய ஊட்டுல வெச்சுட்டு ராத்திரி நேரத்துல ஊருக்கு கீருக்கு போவ முடியறதில்லீங்கொ! சீக்கிரம் கட்டிக் குடுத்துட்டா 

சவுரீத்துக்கு ஆட்டம் கட்டலாம்னு பாக்கேன்! என்ன சொல்றீங்க! உங்க போனு நெம்பரை சித்த காயித்துல எழுதிக்குடுத்துட்டு போங்களேன்! வர்றது தான் வர்றீங்க ஒரு கோட்டரு பாட்டலு வாங்கீட்டு வந்திருந்தீங்கன்னா தேவுல! 

-
அடி கிறுக்கு மணி என்னன்னு பாரு. ஒம்பதேகாலு தான் ஆச்சு! இன்னாரத்துல எவன் கடைய தொறந்து வெச்சிட்டு உக்காந்திருக்கான்?
-
ஆமாம் போங்க!

-எத்தன விசுக்காடி போனு மாத்தீட்டு நெம்பர் மாத்தீட்டே இருப்பே?
-
நானு என்னுங்கோ பண்ணுவேன்? அன்னிக்கி வேலக்காட்டுல இருக்கப்ப குனியறப்ப கெணத்துக்குள்ள ஒன்னு பொலக்குனு உழுந்திடுச்சி! இன்னொன்னு திண்ணையில் வெச்சிருந்தேன் ஊட்டுக்குள்ள போயிட்டு வர்றதுக்குள்ள மாயமாப் போச்சு!

-
உனக்கும் போனுக்கும் ராசியே இல்லடி!

-
அது இல்லாட்டி போச்சாது 100 இருந்தா குடுத்துட்டு போங்க! நேத்து ஆதிபராசக்தி கோயலுக்கு போயி கையில இருந்த அமுட்டு காசும் செலவாப் போயிடிச்சி
!
-
அப்பனுக்கே ஒட்டுக் கோமணமாம் மகனுக்கு பட்டுக் கோமணம் வேணுமாம்!
======

ஒரு கவிதை தொகுப்பு வெளி வந்த பிறகு அதைப்பற்றி வாசகர்கள் நல்லா இருக்கு இல்லை என்று விமர்சிப்பதும் நடக்கும். ஒரு வாசகன் தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் தொகுப்பு மற்றவனுக்கு குப்பையாக தெரியும். கவிதை வரிகளுக்காக, வார்த்தைகளுக்காக வெகுவெகு சிரமப்பட்டு கமாவ இங்க போடறதா? ஆச்சிரியக்குறிய எவத்திக்கி போடறது? ஆச்சரியக் குறியோட ஆரம்பிச்சுட்டா பின் நவீன கவிதை ஆயிடுமா? அப்படின்னு மண்டைய பிச்சுட்டு கவிஞர்கள் எழுதுறாங்க. கோணவாய்க்கால்பள்ளத்துல குக்கீட்டு லத்தீன் அமெரிக்க கவிதைகள் எழுத இப்ப எல்லோரும் கத்துக்கிட்டாங்க! மண்ணுல ஒட்டவே இல்லன்னு சொல்றவிங்க சொல்லீட்டு போச்சாறாங்க! வெள்ளக்காக்கா மல்லாக்க பறக்குதுன்னு கவிஞர் சொன்னார்னா…..  விமர்சகன் ஆமாமா.. அதுக்கு ரெண்டு விதரும் தொங்குது பாருன்னு சொல்லத்தான் செய்வார்கள்!!


Post Comment

1 கருத்து:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

/// காதல் வெறும் பிரம்மை! ஒருவனுக்கு வேண்டியது நல்ல உடல்கட்டுள்ள எடுப்பான ஒரு பெண். கூட கூட்டிப்போனால் நாலுபேர் பார்த்து பொறாமைப்படுமளவு ஒரு அழகி! சலிக்க சக்தி உள்ளவரை அனுபவிக்க வேண்டியது. பிறகு மறக்க வேண்டியது. மனிதனுக்கான பல தேவைகளில் பெண்ணும் ஒன்று. துணிவுள்ளவன் அனுபவிக்கிறான். அனுபவிக்கத்தான் செய்வான். இல்லாதவன் கேள்வி கேட்கிறான்.. துன்பப்படுகிறான்! சில வேளைகளில் தற்கொலை செய்து கொள்கிறான். இது தான் பிரச்சனையாய் இருக்கிறது! ///

தாய் சரியாக வளர்க்காத சொறி நாய்கள் இன்றைக்கு பெருகி விட்டன...