வெள்ளி, ஜனவரி 24, 2014

கண்ணீரை வெட்டி முண்டத்திடம் பகிர்ந்து கொள்


கண்ணீரை வெட்டி முண்டத்திடம் பகிர்ந்து கொள்!

ஈ நுழைந்த பக்கங்கள்  முப்பத்தி ஏழாவது தொகுதி புத்தகமாக வருவதால் அது தொடர்பான வேலை தினமும் 24 மணி நேரமும் என்னை பெண்டெடுப்பதால் பல சமயங்களில் அலைபேசியைக் கூட எடுக்காமல் பணி செய்து கொண்டிருந்தேன். அப்படியான ஒரு நாளின் இரவு பத்தரை மணி. என் மின்சாரத்திடம் முக்கியமான அழைப்பாக இருந்தால் ஒழிய என்னை கூப்பிட்டு ரச்சை கொடுக்க வேண்டாமென சொல்லி இருந்தேன்.
இருந்தும் மின்சாரம், “கோழிச்சாறு இருக்கிறார்.. கொடுக்கிறேன்என அலைபேசியை நீட்டி விட்டது.

நான் திரையில் எப்போதோ பார்த்து வாய்பிளந்த உகாண்டா தேச கனவுக்கன்னி  தான் அலைபேசியில்! பத்தரை மணிக்கு  துவங்கிய பேச்சு விடிகாலை நான்கு மணி வரை நீடித்தது. அப்போது கூட நான் தான் பேச்சை நிப்பாட்ட வேண்டி இருந்தது. அதற்கே சுத்தி வளைக்க வேண்டியிருந்தது.

கோழிச்சாறு, என் பேச்சு உனக்கு கடுப்படிக்கிறது. அதனால் தான் அலைபேசியை அணைத்துவிட தவிக்கிறாய்! நான் முன்பெல்லாம் எத்தாச்சோட்டு கோபக்காரியாக இருந்தேன் தெரியுமா? கோபம் வந்து விட்டால் எதிராளியின் காதை கடித்து துப்பி விடுவேன். பயப்படாதீர்கள். உன் காதை இங்கே உகாண்டாவிலிருந்து போன் வழியாக கடிக்க முடியாது. நான் என் காதலைப் பற்றியே திரும்பத் திரும்ப பேசுகிறேன். என் வாழ்க்கை உன் ஊர்  நடிகனால் குட்டிச்சுவராகி பாழாய்ப் போய்விடும் போல் உள்ளது. உகாண்டாவில் ஒரு டமிழ்ப்பட  பாடல் காட்சிக்கு நடிக்க வந்தவன் அதை மட்டும் பார்த்துக் கொண்டு நடையைக் கட்ட வேண்டியது தானே! நானா இவனிடம் போய் என் உசுரே நீ தான் என்றேன்? கோழிச்சாறு! மை ஸ்வீட் பாய்! டமிழ் நாட்டில் நீ பெரிய ஒழுத்தாளனாமே! உன் எழுத்தைப் படிக்க நான் நீ என டமிழ் நாடு பறவாய் பறக்குமாமே! அந்த கம்மினாட்டி உன் சினேகிதனாமே

கோழிச்சாறு! அவன் என்னை எப்படி தன் வலையில் வீழ்த்தினான் தெரியுமா? என் மூத்திரத்தை முழுதும் குடித்துவிட்டு மண்டி போட்டு கையை நீட்டி, என் தங்கமே! என்றான்.அவன் பெரும் பாசக்காரன் என்று தான் என்னை அவனுக்கு அன்று இரவே எடுத்துக்கோ என்று கொடுத்தேன். என் மூத்திரத்தையே குடித்தவனுக்கு நான் அதைக்கூட செய்யாமல் விடுவேனா? நீயாவது அந்த மண்டை மாக்கானுக்கு என் காதலை எடுத்துச் சொல்!”

இதே ரீதியில் அவள் பேச்சு தொடர்ந்து கொண்டே இருக்கவே.. அவளுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல்ம்போட்டுக் கொண்டே இருந்தேன். உகாண்டாவிலும் ஏன் உலகத்திலும் பெண்கள் ஆண்களிடம் ஏமாறத்தான் செய்கிறார்கள் என்று தான் தோன்றுகிறது.
இது எனது 47வது தோல்வி. 46 தோல்விகளை எப்படியோ சகித்துக் கொண்டேன். தப்பிச்சாச்சு என்கிற நிம்மதி 46 தடவை இருந்தது. தடுக்கித் தடுக்கி உகாண்டா மண் மீதே விழுகிறேன். உகாண்டாவின் மண் என்னிடம் ஏற்கனவே எழுந்தவள் தானே! என்று இன்று வரை என் காதில் சொல்லி வந்தது. ஆனால் இந்தமுறை.. எப்பப்பாரு உனக்கு இதே பொழப்பாடி? அப்படின்னு மண்ணே சொல்லிடுச்சு கோழிச்சாறு!”

குறிப்பிட்ட நடிகரிடம் அடுத்த நாள் இதுபற்றி உரையாடினேன். தொகை கொடுத்துவிட்டுத் தானே வந்தேன் என்றார். கூடவே கண்ணீரை ஒரு வெட்டி முண்டத்திடமல்லவா பகிர்ந்திருக்கிறாள் கம்மினாட்டி! கோழிச்சாறு நீங்கள் பத்திரமாய் இருங்கள். உகாண்டாவில் அது இருக்கு, இது இருக்கு! பன்னி பிரயாணி இங்கு ஸ்பெசல். மூன்று சாமான்காரிகள் இங்கு அநேகம்பேர், எந்த நேரமும் ஜீரோ டிகிரி குளிர் இங்கு.. என்றெல்லாம் பசப்பி உங்களை அங்கு அழைப்பாள். ஒன்று மட்டும் நிச்சயம் கோழிச்சாறு, உங்களுது நீளம் அவளுக்கு பத்தாது!
*************************************************************************************************

வெளவால்களை பார்த்திருக்கிறீர்களா? மரத்தில் தலைகீழாக வாதுகளில் தொங்கிக் கொண்டேயிருக்கும்போன ஜென்மத்தில் நான் வெளவாலாய் பிறந்து தொலைத்திருப்பேனோ என்னவோ.. கால்களை மேலே அந்தரத்தில் வைத்தபடி தூங்கிவிட்டேன் என்றால் கால்களை இறக்க மறந்துவிடுவேன். அது ஒரு யோகாசனம். ஒரு சமயம் அப்படி டிவியை தலைகீழாய் ரசித்துப் பார்த்துக் கொண்டிருக்கையில் அழைப்புமணியின் ஓசை கேட்கவே அப்படியே கைகளால் கால்களைப்போல எட்டி வைத்து நடந்து வந்து, “எஸ் கமின்என்று குரலும் எழுப்பி விட்டேன். சமயம் பார்த்து என் வேட்டி நழுவி கீழிறங்கி என் முகத்தை மறைத்துவிட்டது.

உள்ளே வந்தவள் ஜெர்மன் தேசத்து உஷா! வீட்டிலிருக்கு சமயம் நான் உள்ளாடை எதுவும் அணிவதில்லை என்பது என் நண்பர்களுக்கு மட்டும் தெரியும். உஷா உஷார் பார்ட்டி என்பதை ஏற்கனவே இந்தப் பக்கங்களை வாசித்தவர்களுக்குத் தெரியும்.

சாரி! வேட்டியை ஒழுங்கா கட்டு மேன்!” என்றவள் தன் முகத்தை சுவர்ப்புறமாக திருப்பிக் கொண்டாள். என் பிஸ்டன் அவளை வெட்கமுறச் செய்திருக்க வேண்டும். நான் நேர் நிலைக்குத் திரும்பி வேட்டியை சரியாக கட்டிக் கொண்டு அசடு வழிய சிரித்தேன்.

ஜொள் ஊத்துறேஎன்றாள். அசடு வழிவதற்கும், ஜொள்ளுக்கும் வித்தியாசம் தெரியாதவள்.

நான் அசடு ஊத்தினேன்என்று விளக்கமாய் அவளுக்கு சொன்னேன்.
நீ அசடு ஊத்துவது கூட ஜொள்ளாக ஊற்றுகிறது எனக்கு. இங்கே டமிழ் நாட்டில் நீ புடுங்கி கத்தை கட்டினது போதும். பேசாமல் என்னோடு ஜெர்மன் வந்துடேன்என்றாள்.

ஆசையாகத்தான் இருக்கிறது.. இப்படி ஒரு அழகான யுவதியுடன் ஜெர்மன் தெருக்களில் கமலஹாசன் ரத்தியோடு, சித்திரமே செந்தேன் மலரே! என்று பாடியபடி ஓடியது போல் ஓட! ஆனால் என் மின்சாரம் ஒரு கடவுள் ஆயிற்றே! கடவுளை தவிக்க விட்டு செல்வது டமிழுக்கு நான் செய்யும் துரோகம்!
*************************************************************************************************

விளையாட்டுகளிலேயே எனக்கு மிகவும் பிடித்த விளையாட்டு கில்லி தாண்டு தான். அனால் அதை டிவியில் பார்க்க முடிவதில்லை. கிரிக்கெட் என்ற விளையாட்டை ஒருகாலத்தில் காலிலோ கையிலோ பிளைடால் கீறிக் கட்டுப் போடுவது என்று நினைத்துக் கொண்டிருந்தேன். கில்லி என்றொரு திரைப்படத்தின் போஸ்டரைக் கண்டு ஆஹா! நம் விளையாட்டை திரைப்படமாகவே எடுத்து விட்டார்களே என்று மின்சாரத்துடன் தியேட்டரில் பால்கனியில் அமர்ந்து பார்த்தேன். படம் போட்டதும் கபடி மேட்ச் காட்டினார்கள். மின்சாரத்திற்கு பிரமாதமாய் படம் பிடித்து விட்டது. அவள் விஜய் ரசிகை. எனக்கு தர்ம சங்கடம். ஏன் இப்படி தமிழ் இயக்குனர்கள் ஏமாற்றுகிறார்கள்? படத்தின் பெயரை கபடி என்று வைத்துத் தொலைக்க வேண்டியது தானே!

***********************************************************************************************

லண்டனைச் சேர்ந்த பரமேஷ்வர் என்னை சமீபத்தில் சந்திக்க வந்திருந்தார். பேசிக் கொண்டிருக்கையில் பச்சயாக பன்றிக்கறியை விருந்தோம்பலை முன்னிட்டு அவர்முன் வைத்தேன்.

என்னது இது? இப்படி பச்சையா இருக்கே? நீங்க நல்ல சமையல்காரர்னு கேள்விப்பட்டிருக்கேன். ரெண்டு உப்பு மொளகா போட்டு வறுத்து திங்க வேண்டியது தானே?” என்றார். அவர்முன் கத்தியால் நான்கைந்து துண்டுகளாகப் போட்டு (அது சற்று சிரமம்) ஒரு துண்டை மென்று காட்டி விழுங்கினேன்.

ஆதி மனிதனை இப்போது தான் நேரில் பார்க்கிறேன் . எதனால் இப்படிஎன்றார்.

ஐயா பரமேஷ்வர்! நான் தலித். எங்கம்மா ஒரு தலித்தி, என் அக்கா ஓடுகாலி, (இப்ப அந்த வார்த்தை தப்புங்கறா அவ! பின்நவீனவாதிங்றா!) இப்படி எனக்கு சாப்பிட பழக்கிவிட்டது சித்தலிங்க தாத்தன்.” என்றேன். எதைச்சொன்னாலும் மனிதர் அசரவே இல்லை. என்னை எழுந்து நிற்கச் சொன்னார்.

நானும் தலித் வகையறா தான் கோழிச்சாறு! உன் விரைகளை நான் தொட்டுப் பார்க்க அனுமதி உண்டா?” என்றார். விரை என்ற வார்த்தை ஆங்கிலத்தில் இல்லையே! என்று குழம்பிப் போய் நின்றபோது கிட்னி! என்றார். பேஷாய்! சம்மதித்தேன். பிடித்துப் பார்த்தவர் ஒன்றும் சொல்லாமல் சோபாவில் அமர்ந்தார்.
சற்று பெரிதாய் தெரிந்தது! விரை வீக்கமோ என்று தான் ஐய்யப்பட்டேன். நான் லண்டனில் கிட்னி ஸ்பெசலிஸ்டும் கூடஎன்றார். டமிழ் எழுத்தாளனின் கொட்டயைப் பிடிக்கவே லண்டனில் இருந்து வந்திருப்பாரோ என்ற ஐயப்பாடு தான் இன்னமும்!

************************************************************************************************

எனக்கு ஒரு கெட்ட பழக்கம் ரொம்ப காலமாய்! எப்போதிருந்து இது தொற்றிக் கொண்டது என்று யோசிக்கையில் ஒரு தலித்தாக என்னை உணர்ந்ததிலிருந்து இப்படி! ஒரு நாவலையோ, கட்டுரையையோ படித்துக் கொண்டிருக்கையில் பிடிக்காத பக்கங்களை  கிழித்து வாயில் போட்டு மென்று விழுங்கி விடுவது. மின்சாரம் அடிக்கடி கூறுவாள், போன ஜென்மத்தில் நீ கழுதையாய் இருந்திருப்பாய்! என்று. எனது டாக்டரிடம் இதுபற்றி ஆலோசிக்க சென்ற போது அவரோ தன் முன் இருந்த லெட்டர்பேடு காகிதங்களை கிழித்து மென்றார். “ஜீரணசக்தி இருக்கும் வரை எதை வேண்டுமானாலும் விழுங்கு போஎன்று சொல்லி அனுப்பி விட்டார்.

************************************************************************************************

கழுதைக்கு அது வாய்த்தது போல் எனக்கு வெங்கிட்டு! மனுசனுக்கு என் மீது என்ன கோபம் என்றே தெரியவில்லை கடிதம் போட்டிருந்தார். “ஊட்டுக்குள்ளார மட்டும் இனிமே வாந்தி எடு! புத்தகத்துல எடுக்காதே! ஒமட்டுதுஎன்று.

ஒரு நாள் எனக்குப் பிடித்த சிவப்பு நிறச் சட்டை, சிவப்பு நிற சாக்ஸ், சிவப்பு சூ சகிதம் பஸ் நிறுத்தத்தில் ஒரு டிவி நிகழ்ச்சிக்கு செல்வதற்காக நின்றிருந்தேன். எதேச்சையாக அங்கு வந்த நண்பர் கதிர், கோழிச்சாறு எங்க இப்படி காத்து வாங்கவா? என்றார். இல்ல பென்சன் வாங்க போறேன்! என்றேன்.

அடக் கடவுளே! அதுக்காக இப்படியா கோவணத்தோட கிளம்பி வர்றது?” என்றதும் என்னையே குனிந்து பார்த்தேன்.

பென்சன் வாங்கப் போகிறவர்கள் எல்லாம் ஒரு காலத்தில் லீ ஜீன்ஸ், சூ, டை சகிதம் போவார்கள்னு கேள்விப் பட்டிருக்கேன். இப்ப காலம் மாறிடுச்சு போலஎன்றார்.

தர்மத்தின் தலைவன் படத்தில் ரஜினிக்கும் ஞாபக மறதி. அதுகூட சினிமா! ரெண்டு டேக் மூனு டேக்கில் எடுத்து முடித்ததும் காட்சி ஓவர். இதில் மானம் மட்டுமே ஓவர். என் புத்தியை எதால் அடிப்பது?
************************************************************************************************

வாழ்த்துரையின்னு போட்டு இறக்கையை பத்தி பேசச் சொல்லி இருக்காங்க! நான் இறக்கை என்ற சிற்றிதழ் பத்தி பேசவே போறதில்லை. கூத்து பத்தி வேணா நாம பேசலாம். எத்தியோப்பியாவுல இங்க மாதிரியெல்லாம் கூத்து நிகழ்ச்சியே கிடையாது. கூத்துக்குன்னே தனியா ஏஸி அரங்குகள் இருக்கும். அங்க கூத்துல ஸ்பெசல் என்னன்னா கத்தி சுத்துறது. கத்தின்னா இப்படி.. ம்.. என்ன சொல்வாங்க தமிழ்லவாள். அந்தக்காலத்துல போருக்கு போனவங்க எல்லாரும் வச்சிருந்தாங்கள்ல அது.

கூத்துல கடைசியாத்தான் வாள் சுழற்றுவதை வச்சிருப்பாங்க. ஏசியை புல்லா வச்சு உட்டுடுவாங்க. எனக்குத்தான் குளிருன்னாலே ஜாலியாச்சே! பார்த்தா என் முன்னாடி சீட்டுல இருந்தவங்க எல்லாரும் கிடுக் கிடுன்னு நடுங்கீட்டு உட்கார்ந்திருந்தாங்க! பக்கத்து சீட்டுல இருந்த எத்தியோப்பிய பெண் சார் உங்களுக்கு குளிரலையா? அப்படின்னாள். T@$&OJ#^)H என்றேன் எத்தியோப்பிய மொழியில். மேடையில் அத்தனை கலஞர்களும் சர்ர்ர்னு வாளை சுத்துறாங்க! பார்க்க பயங்கரமா இருக்கும். அதுக்கு இணையா தமிழ்நாட்டுல ஒருபயல் கூத்து பண்ணவே முடியாது. என்னோட நாவல்ல பார்த்தீங்கன்னா செக்கோஸ்லோவியாவில பாட்டில் மூடியை எதால பெண்கள் திறக்குறாங்கன்னு எழுதியிருப்பேன்.

ஜெர்மனியில எப்படிங்கறீங்க? பம்பரம் சுத்துறதை பார்த்திருப்பீங்க. அது மாதிரி மேடையில ஒரு ஆள் தன் ஆண்குறியை ஊணி சுத்துவாரு! பம்பரம் சுத்த ஆணி தான் வலுன்னா இங்க ஆண்குறி...

*******************************************************************************************
நன்றி இறக்கை இதழ் எண் 49Post Comment

2 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

டாக்டர் ஆலோசனை (ஹா... ஹா...) உட்பட அனைத்தும் உங்கள் பாணியில் கலகல கலக்கல்...!

பெயரில்லா சொன்னது…

yeppa saami mudiyala kannula thanni vanthu potuthu..... athu sari ... originalukku link kuduthuruntha innum shokka irukkume..