சனி, ஜனவரி 25, 2014

உடைபடும் புனிதங்கள் -ஓடை.பொ.துரையரசன்

வா.மு.கோமுவின்கள்ளிநாவலை முன்வைத்து..........
உடைபடும் புனிதங்கள்” --ஓடை.பொ.துரையரசன்

மாலைச்சூரியன் அரசனாமலைக்கு மேற்கே கீழே இறங்கிக் கொண்டிருந்தான்.” என வழக்கமான பாணியில் வா.மு.கோமுவின்கள்ளிநாவல் தொடங்குகிறது. ஆனால், “எல்லோருக்குமே நமஸ்காரம்என்று நம்மோடு வா.மு.கோமு பேசத் துவங்குவதிலிருந்து தூக்கி வீசுவான் கவலப்படாம நட.. என முடிக்கும் வரை எங்கும் தேங்காத ஒரு தொடர்ச்சியான வேகத்தை நாம் பார்க்க முடிகிறது.

கள்ளிதொடங்குகிற முறை அரமாலுமே பழையதாய் இருந்தாலும் நாவலின் களம், வாழ்வு என்பதெல்லாம் புதியன. பொதுவாக நாவல் என்ற இலக்கிய வடிவத்திற்குரியதாகச் சொல்லப்படுகிற வரைவிலக்கணங்களையெல்லாம் ஏற்கனவே சுந்தரராமசாமி, ஜி.நாகராஜன், தமிழவன் ஆகியோர் தங்களது படைப்புகள் மூலம் நிர்மூலமாக்கி விட்டார்கள். கடந்த சுமார் ஒன்றரை நூற்றாண்டு காலமாக பொதுப்புத்தியில் நாவல் என்று பதிவு செய்யப்பட்டுள்ள கருத்தமைப்புகளுக்கு முற்றிலும் கள்ளி மாறானது.

நாவலுக்கான மையம் என்று பார்த்தால்கள்ளியில் எதுவுமில்லை. இரு தனிப்பட்ட மனிதனைப் பற்றியோ குறிப்பிட்ட சூழல் பற்றியோ பேசுவதில்லை. நாவலின் கதைத் தலைவன் என்றோ கரு என்றோ சாதாரணமாக எல்லா நாவல்களிலும் உள்ளதைப்போல சுட்டிக் காட்ட முடியாது. மேய்ச்சல் காட்டில் காணாமல் போனசுந்தரிஆட்டைத் தேடுவதில் தொடங்கி இறுதியாக சரக்கு வாத்தியார் சாவு வரை சொல்லப்படுகிற செய்திகல் ரத்தமும் சதையுமாக வந்து செல்கிற மனிதர்கள் எல்லாம் புதியன. நாவலில் சாதாரணமாக நடைபெறும் உரையாடல்கள் கூட சமூக ஒழுங்கமைவுகளுக்கு எதிரானதாக, அவற்றை தகர்க்கக்கூடியதாக உள்ளது.

கள்ளி” - வா.மு.கோமு வாழ்கிற செம்மண் புழுதிக்காடுகளாக இருக்கும் கொங்கு மண்டலத்தின் மத்தியப் பகுதிவாழ் மக்களைப் பற்றிய நாவல். எனவே தான் தனக்கு முன்னோடிகளாக ஆர்.சண்முகசுந்தரம், சி.ஆர்.ரவீந்தரன் ஆகியோரை குறிப்பிடுகிறார். சண்முகசுந்தரம் நாவல்கள் பற்றி எஸ்.தோதாத்ரி அவர்கள்... அவரது படைப்புகளில் மையமாக விளங்குவது நிலம். கிராமங்களில் நிலம்தான் உற்பத்திச் சாதனம். கிராம மக்களின் சிந்தனை, உயிர், மூச்சு எல்லாம் நிலத்தில் அடங்கி உள்ளது. நிலத் தகராறு அவரது சிந்தனையில் மையம் கொண்டுள்ளது. அவரது நாவல்களில் நிலத் தகராறும், பாகப்பிரிவினையும் முக்கியக் கருத்தாக விளங்குகின்றன.. எனச் சொல்வார். (ஆராய்ச்சி, மலர் 3, இதழ் 2, பக்கம் 166)

ஆனால் வா.மு.கோமுவின் கள்ளி சண்முகசுந்தரம் படைப்புகளில் இருந்து முற்றிலும் மாறுபட்டுள்ளது. நிலமும், நிலம் சார்ந்த உறவுகள், பிரச்சனைகள் பற்றி கள்ளி நாவலில் ஏதும் இல்லை. ஆனால் கொங்கு மண்ணின் மையப்பகுதி, அதில் வாழ்கிற விளிம்புநிலை மக்கள், பேசுகிற மொழி ஆகியவற்றினூடே கள்ளி நாவல் உருவாக்கப்பட்டுள்ளது.
கள்ளியில் முத்தாக்கவுண்டர் பண்ணையத்தில் இருக்கிற மல்லி, எப்போதும் குடியில் மூழ்கியிருக்கும் சரக்கு வாத்தியார், அப்பாவின் ஓய்வூதிய பணத்தில் இருவரும் ஒன்றாக குடிக்கும் சுரேந்திரன் எனப்பல கதைகள் சொல்லப்படுகின்றன

இவைகளோடு நிலையாக ஒரு தொழில் செய்யாத, ஊருக்குள் பெரிதாகமானம் மருவாதிஇல்லாத எவ்வளவு வேண்டுமானாலும் நிதானமாக கம்மங்கூழு குடிக்கிற மாதிரி சாராயமும், கோட்டரும் குடிக்கிற சமூகத்தில் எந்தவிதமான பொறுப்புகளும் இல்லாத பழனிச்சாமியின் பாலுறவுகள் சற்றே மிகையாகச் சொல்லப்படுகின்றன. நாவலின்படி பழனிச்சாமி இன்னும் முப்பது வயது தாண்டாத ஒரு இளைஞன். அவனது தகப்பன் தேடி வைத்துள்ள சொத்தில் வாழ்பவன்.

பழனிச்சாமிக்கு வாழ்க்கையே குடிப்பதிலும் பாலுறவிலும் தான் அர்த்தம் பெறுகிறது. இந்த சமூகத்தின் ஒழுக்க ஒழுக்க நியதிகள், நீதிகள் எதையும் அவன் கண்டுகொள்வதில்லை சிறைக்குப் போவது நிலவுகிற சமூகத்தில் கேவலமானது. ஆனால் பழனிச்சாமிக்கு அது அனுபவம். வாழ்க்கையினை எல்லாவற்றையும் கடந்து, அதன் பல்வேறுபட்ட பரிணாமங்களுடன் வாழ்ந்து பார்க்கிற, சிறிதும் உடைமை மனோபாவங்கள் இல்லாதவன் பழனிச்சாமி. வர்க்க கண்ணோட்டத்தில் உதிரியாய் இருந்தாலும் பழனிச்சாமி சோமு முதலியாருடனும், ஹென்றியுடனும் வைத்துப் பேசப்பட வேண்டியவன். கெட்டிப்பட்டு இறுக்கமாகிவரும் போலியான நீதி நியதிகளை நிராகரிக்கும் ஆளுமைகள் சிதைந்துபோன பழனிச்சாமி கவனிக்கப்பட வேண்டியவன்.

ரேட் கடுப்பன்ன நாட்படு தேறலைத்தொன்று தொட்டு குடித்து வந்த சமூகத்தில் குடிப்பது என்பது சமூகக் கேடானது எனச் சமூகநீதி நியதிகள் சொல்கின்றன. பாலுறவு என்பது மனிதனின் அடிப்படை உணர்ச்சி என்றும் தாகமெடுத்தால் தண்ணீர் குடிப்பது மாதிரி என்றும் சொல்லப்பட்டாலும் பாலுறவுக்கென வரையறுக்கப்பட்டுள்ள நீதி நியதிகள்  இருக்கின்றன. இந்த நீதி நியதிகள் உடைமை வர்க்கத்தினரால் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. இந்த நியதிகள் எதுவுமே விளிம்பு நிலை மக்களிடம் இல்லை. இவைகளை அவர்கள் ஒருபோதும் மதிப்பதில்லை. சமூகத்தில் உடைமையாளர் சிந்தனை மேலோங்கியிருப்பதால், எழுத்தில் அவைகள் வரையறைகளாக நீடிக்கின்றன. ஆனால் இந்த எழுத்துகள் எதையும் பார்த்திராத விளிம்புநிலை மக்களின் வாழ்வில் இந்த ஒழுக்க மதிப்பீடுகள் எந்தவகையிலும் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை.

தனியாக குடிப்பது, குடும்பத்தாரோடு குடிப்பது, கும்பலாக குடிப்பது என கள்ளியில் பல நிகழ்ச்சிகள். குடியும் குடிப்பது தொடர்பான நண்பர்கள் - அவர்கள் சந்திப்பும் உரையாடல்களும் நாவலின் ஒருபுறம் என்றால் இன்னொருபுறம் பாலுறவு பற்றியது.

பாலுறவு குறித்து தி.ஜானகிராமன், கு..ரா, ஜி,நாகராஜன், அஷ்வகோஸ் எனப்பலர் எழுதி உள்ளார்கள். தி.ஜானகிராமன் நாவல்களில் ஆண்பெண் உறவுகள் பற்றிச் சொல்லவரும் தி.சு.நடராஜன்... ‘..இந்நாவல்களிலே பொதுவாக இழையோடும் பிரச்சனை ஆண்-பெண் உறவுகள் பற்றியதாகும். இப்பிரச்சனை சிதறிக் கொண்டிருக்கும் நிலவுடமைச் சமுதாயத்தின் மத்தியிலிருந்தே எடுக்கப்படுகிறது. அந்த நிலக்களன் கெடாமல், இந்த உறவு நிலைகளிலோ உண்மையாக காணப்படுகின்ற பல்வேறு சிக்கல்களை மிக உணர்வுபூர்வமாகப் புறச்சூழல்களின் தகுந்த பொருத்தங்களோடு சித்தரிக்கப்படுகின்றன.” எனச் சொல்வார் (ஆராய்ச்சி, மலர் 3, இதழ் 4, பக்கம் 457)

வா.மு.கோமுவின் பாலுறவு பற்றிய சித்தரிப்புகள் தி.ஜானகிராமன் போன்றவர்களின் கருத்தமைப்புகளில் இருந்து மாறுபட்டவை. கோமுவின் பழனிச்சாமி-சுந்தரி, சுரேந்திரன் சிகாமணி, சுரேந்திரன் சுமதி என எந்த இணையின் உறவானாலும் எந்த சமூகப் பின்புலமும் இல்லை. வெறுமனே பாலுறவு தான். இவர்கள் எந்தவித தயக்கமோ, நாசுக்கோ இல்லாமல் வெளிப்படையாக இயங்குகிறார்கள். பாசாங்கோ, பாவனையோ, வெளிவேசமோ இல்லாமல் இருக்கிறார்கள். இவர்களின் பாலுறவு உரையாடல்கள் நம் அந்தரங்க முகத்தை திறந்து காட்டுவது, ஒரு போதும் நாசூக்குகளின் வழியே எதையும் மூடி மறைக்காதது. இதுவரை சித்தரிக்கப்பட்டுள்ள பாலுறவுகளில்,

ரெண்டு தடக்கா செஸ்சு போட்டீங்க. இன்னொருக்காவும் போட்டு இழுக்கறீங்க.. ஐய்யோ சாமி போதும் இனி எம்படது தாங்காது..”

ஐய்யோ இன்னொருவாட்டியா? போது போதும் இதுக்கே மூச்சு வாங்கிப் போச்சு நடங்க..”

“..கலியாணங்கட்டி ஒரே நாள்ல ஓடி வந்தவ சாமான் அப்படி ரூசாவா இருக்கும்? கெணத்துக்குள்ளார சேந்து கவுத்தெ போட்டு தண்ணி சேந்துனாப்புல

“..இதென்ன உங்குளுது நீட்டமா இருக்குது? எம்பட ஊட்டுக்காரனுது குண்டா இருக்கும்

இப்படிப்பட்ட நேரடியான உரையாடல்களைக் காண முடிகிறது.
பாலுறவு குறித்து சமூகத்தில் நிலவுகிற போலி மதிப்பீடுகளை வா.மு.கோமு கேள்விக்கு உட்படுத்தினாலும் கள்ளி நாவலில் வரும் பாலுறவுகள் எல்லாவற்றிலும் பெண் என்பவள் ஆணை மகிழ்விக்கிற பாலுறுப்புகள் கொண்ட ஜடப்பொருள் தான். பாலுறவில் சரிபாதியாக இருக்கும் அவர்களுக்கு சக உயிரி என்ற வகையிலோ, எவ்விதமான முக்கியத்துவமும் இல்லை. உறவில் விருப்பு வெறுப்பு என்பதெல்லாம் ஆணின் மனதைப் பொருத்தே. ஆண் தான் ஆதிக்கம் செய்கிறான். பாலுறவில் ஆதிக்கம் செய்வது ஆணாக இருந்தாலும் சுந்தரி, சிகாமணி, வெள்ளைச் சீலக்காரி, விஜயா, சுமதி, கமலா எல்லோரையும் புணர்ச்சிக்காக அலைகிறவர்களாக, ஏங்குகிறவர்களாக புணர்வது தவிர வேறு ஏதுமற்றவர்களாக ஒற்றைப்பரிணாமத்தில் தட்டையாக படைக்கப் பட்டுள்ள பார்வை ஆரோக்கியமானதல்ல!

கள்ளி நாவலின் முதன்மை நோக்கம் ஒழுங்கமைக்கப்பட்டுள்ள நீதி நியதிகளை உடைத்து நொறுக்குவதே என்றாலும் வேறு சில செய்திகளையும் சொல்கிறார்.

வளர்ச்சி என்ற பெயரில் அரசு அமைக்கும் சிப்காட் தொழில் பகுதிகளால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதையும், கோவை நூல் துணி உற்பத்தி நிறுவனம் தன் கம்பெனி பேருந்தை சுற்றுப்புற கிராமங்களுக்கு ஓட விட்டு குறைந்த கூலிக்கு பெண்களைக் கவ்விக் கொண்டு போய் வேலை வாங்கித் துப்புவதையும் கதையோடு நெருடல் இல்லாமல் பதிவு செய்கிறார்.
நாவலில் தலித்தியப் பிரச்சனைகள் உள்ளார வருவதற்கு காரணமாக வா.மு.கோமுவின் திட்டமிடல் ஒருபுறம் இருந்தாலும் நிகழ்ச்சிகள் பிரச்சனைகள் வெகு எளிமையாக இயல்பாகச் சொல்லப்பட்டுள்ளன. மல்லி-குஞ்சாள்-சண்முகன் மல்லிகா என அந்தக் குடும்பம் அவர்களின் விருப்பு, வெறுப்புகள் நேர்த்தியாகச் சொல்லப்பட்டுள்ளன. கவுண்டர் வீட்டு தட்ட்ப்போருக்கு உரிய இடம் பாசாங்கின்றி உரையாடலில் வெளிப்படுகிறது.

“.. எத்தனை மாதாரிச்சிகளை எம்பட கட்டல்ல நீ படுக்க வெச்சிருப்பே. எல்லாத்துக்கும் சேர்த்து உம்புள்ள இப்ப ஆட்டங்காட்டறா

“ .. இழுத்தாங்கடா இந்திராவை நம்ம வீட்டுக்கு

“..அப்படின்னா அவனை புடிச்சுக் கொண்டாந்து போட்டு ஊம்புங்க அவனோடதெ

என ஆதிக்க சாதியினருக்கு எதிராக தலித்துகள் முழக்கமிட்டாலும் யதார்த்தம் வேறாக இருப்பதை,
காலையில் சின்னத்தம்பி கவுண்டர் வீட்டில் ஒரு பிணம் சாய்ந்தது. தூக்குப்போட்டு செத்துப் போனதாகத்தான் இழவுக்குப் போய்வந்தவர்கள் பேசிக் கொண்டு சென்றார்கள்என வேதனை நிறைந்த வலியோடு பதிவு செய்கிறார்.

கள்ளி நாவல் மீண்டும் ஒருமுறை வாசிக்கும்போது இன்னும் முற்றுப்பெறாத கதையாகவே தோன்றுகிறது. சண்முகன்  கலையரசி என்னவானார்கள்? இப்படியான கேள்விகளூக்கு வா.மு.கோமுதான் பதில் சொல்ல வேண்டும்.

8888888888888888888888
எதிர் வெளியீடு, பொள்ளாச்சி
விலை-190-00Post Comment

கருத்துகள் இல்லை: