செவ்வாய், பிப்ரவரி 25, 2014

புதிய கவிதைகள் பிப்ரவரி 2014
உலகக்கவிதை

இந்தக் கவிதையை நீங்கள் திருட்டுத் தனமாகத்தான்
வாசிக்க வேண்டுமென இதை எழுதியவன் 
விருப்பப்படுகிறான்! ஏற்கனவே கவிஞன் ஒருவனால் எழுதப்பட்ட
வாசகங்களை பல இடங்களில் பயன்படுத்திக் கொண்டேன்
என இதை எழுதியவன் தன் முகவுரையில்
எழுதியிருக்கிறான். இவை திருட்டுத்தனமாக 
வாசிக்கப்பட வேண்டிய கவிதை இல்லை என்றும்
எழுதியவனின் பம்மாத்து எனவும் வாசித்தவர்கள் 
அந்தக் கவிதையை நான்காக மடித்து 
தனிச்சுற்றுக்கு விட்டு நன்கொடை வசூலிக்கத் துவங்கினார்கள்!
ஆன்லைனில் வெளிதேசங்களுக்கும் அந்தக்கவிதை
றெக்கை முளைத்துப் பறந்தது! - எந்தத் தகவலும்
அறியாத கவிஞன் டாஸ்மார்க் பாரில் பக்கத்து
மேசைக்காரனிடம்.......
யார்கிட்ட பேசீட்டு இருக்கே தெரியுமா?
என்னை யார்னு நெனச்சே படுவா! நானு 
உலவத்துலயே பெரிய கல்ட்டி! என்று 
வசனம் பேசிக் கொண்டிருந்தான்.

கவிதை சமைப்பது இப்படி

என் முன்னிருக்கும் காலிக் கோப்பைகளை
நிரப்பி யாருக்கும் பகிர்ந்து 
கொடுத்துக் கொண்டேயிருந்தேன் அன்று!
அன்பு செலுத்துவதில் உங்களுக்கு நிகர் யாருமில்லையென
அந்தப் புதியவர்கள் வாழ்த்திச் சென்றார்கள்!
நீங்கள் நீடூழி வாழவேண்டும் சாமியோவ்! என்றொருவன்
குனிந்து எஸ் வடிவத்தில் நின்று மடக்கிட்டுவிட்டு
சென்றான்! -கடைசியாக கடைச் சிப்பந்திகள் 
சல்யூட் ஒன்றைப் போட்டு கோப்பைகளை
காலிசெய்தபின் கடை சாத்தும் நேரம் இதுவென்றும்
இதற்கும் மேல் இருந்தால் காக்கிகளுக்கு தண்டம் அழுக
வேண்டும் என்றும் என்னை அன்பொழுக கூட்டி வந்து 
சாலையில் விட்டார்கள்!
மறுதினமும் வாருங்கள் சாரே! சப்தம் தூரத்தில்
எங்கோ கேட்டவாறு இருந்தது!
அடுத்த நாள் என் முன்னிருந்த காலிக் கோப்பை
நிரப்பப்படாமலே இருந்தது! முன்தினம் சுவைத்தவர்களுக்கு
முகம் முதுகுப் புறத்திற்கு ஒரே நாளில்
திரும்பியிருந்தது! கடைச் சிப்பந்தியொருவன்
அன்புடன் கூறினான்.. சும்மா இந்த இடத்துல
எல்லாம் உக்காந்திருக்கக் கூடாதுங்க சாரே!
கடலை பாக்கெட், கொய்யாத் துண்டுகளுக்கு ஆர்டர்
கொடுத்து விட்டு ஒரே நாளில் முதுகுப்புறம் முகம் 
மாறினவர்களின் மது நிரப்பப்பட்ட கிண்ணங்களை
உற்று நோக்கினேன். அவைகள் மிதந்து வந்து என்
தொண்டைக்குழியை நிரப்பிக் கொண்டேயிருந்தன!
பின் அங்கு நடந்த களேபாரத்தின்போது அங்கு நான்
இல்லை என்பது கடை சூரையாடப்பட்டபின் கலவரக்காரர்கள்
உணர்ந்தார்கள் என்றார்கள்! -இன்று வரை என் கணக்கான
கடலைப்பாக்கெட்,கொய்யாத்துண்டுகளுக்கான
தொகையை கொடுத்து நேர் செய்ய முடியாமல்
கவிதை எழுதிக் கொண்டிருக்கிறேன்!


அவனுக்கு செந்தில்குமார் என்று பெயர்!

அவனது தொழில் கட்டிடம் அமைப்பது.
அவன் எனக்கான அறை ஒன்றை
கட்டி முடிக்க ஐந்து நாள் ஒப்பந்தத்தில் வந்திருந்தான்!
அவனது வேறு தொழில் காதலிப்பது!
அவனை காதலிப்பவள் அலைபேசி ஒன்றை
வைத்திருக்கிறாள்! மாலை ஆறு என்றதும் அழைப்பொன்று
அவளிடமிருந்து வந்து சேரும்! அதுவரை ஒட்டன் வீட்டிலிருக்கும் நாய்
அதற்காய் காத்திருப்பது போல இவன்
காத்திருப்பான்! அது ஒரு மிஸ்டு கால்!அது இவனையும்
இவனைப்போன்ற காதலன்களையும்
ஒரே புள்ளியில் ஏமாற்றுவது!
செந்தில் என்னிடம் கவிதை ஒன்றை
காதலிக்குத் தர காதலோடு கேட்டான்! ஒனக்கு இல்லாத
கவிதையா? என்று ஒன்பது கவிதைகள் 
எழுதிக் கொடுத்தேன்! ஒன்பதும் காதலிக்கு
காதலன் தரும் முத்தங்கள் போல! அடுத்த நாளிலிருந்து 
அவள் என்னைக் காதலிக்கத் துவங்கி விட்டாள்
மிக உண்மையாய்! நான் மிஸ்டு கால் 
கொடுக்கத் துவங்கி விட்டேன்! அவள் என்னை இரவு ஒன்பது
மணிக்குத் தான் அழைக்க வேண்டும் என்று
கட்டேன்ரைட்டாக சொல்லி விட்டேன்! என் காதல் முத்தத்தில்
ஆரம்பித்து மெதுவாய் முடிகிறது இரவு 
பதினொரு மணியைப் போல! 
செந்திகுமாருக்கு அவள் நேரம் ஒதுக்கி
இருக்கிறாள் என்பதை வாசிப்பவர்கள்
யாரும் மறந்து விட வேண்டாம்!


ooooooooooooooooooooooooooooooo
சாலையில் அடிபட்டு அரைமணி நேரம்
கழித்து இறக்கும் ஒரு 
நாய்க்குட்டிக்கும், ஒரு குழந்தைக்கும்
வேறு வேறாய் வருத்தப்படுபவர்கள்
வாழும் உலகில் நானும் வாழ்கிறேன்!
ooooooooooooooooooooooooooooo

தோட்டத்தில் பூத்திருக்கும் பூச்செடிகள்
பற்றியும், காய்கறிகள் செழித்திருக்கும்
அழகுபற்றியும் 
அவற்றை பாதுகாக்கும்
திறமைபற்றியும் முகநூலில் 
ஒரு ஸ்டேட்டஸ்
போட்டாள் அவள்! 
உள்பொட்டியில் ஒருவன்
உடனே வந்தான். 
என்னையும் திறமையாய்
கவனித்துக் கொள்வீர்களா
இந்தக் கவிதை
இத்துடன் முடிகிறது!

0000000000000000000000000000ஞாபகச்சிதறல்

மிகத் தந்திரமாய் என் கடிதங்களை பெண்களிடம் கொடுத்து 
பதில் கடிதம் பெற்று வந்து கொடுத்துக் கொண்டிருந்த
என் கொள்ளுப்பாட்டிக்கு நான் வெற்றிலை, பாக்கு,
புகையிலை என்று கொடுப்பது தவறாது என்றும்! சுந்தரிக்கு
கொடுக்க வேண்டிய கடிதத்தை சுமதிக்கு கொடுத்து விட்டு
வந்த பாட்டியை கொஞ்சம் திட்டிய அன்று நாள் முழுக்க
அழுது கொண்டிருந்தது பாட்டி!
யாராச்சிம் காதுல கேட்டா சிரிப்பாங்கடா! உங்கொப்பிச்சியும்
இப்புடித்தான் முன்ன பண்ணீட்டு திரிஞ்சான்! சரஸாவை
கட்டி வச்சதிம் அடங்கிட்டான்! யாராச்சிம் காதுல
கேட்டா பின்னாடி சிரிப்பாங்கடா! என்றே சொல்லும். 
பாட்டி இறந்த அன்று காலையில் பேராண்டி வந்தா
குடுத்துடுங்க என்று முடிந்து வைத்திருந்த முன்னூத்தி 
அம்பதை அம்மச்சி கையில் கொடுத்திருக்கிறது!
அந்த பைசா சுந்தரி கொடுத்தது என்று
எனக்கு இரவத்திஃபைவ் வருசம் கழிச்சு சுமதி 
சொன்னபோது தெரிந்தது! அந்த பாட்டி
இருந்தப்பெல்லாம் ஊரு நல்லா இருந்துது..
இப்பப் பாரு ஊருக்குள்ள வெளியூரு ஆட்களா
சுத்துறாங்க! எம்புள்ளைய வேலைக்கு அனுப்பவே
பயமா இருக்குது! என்றாள் சுமதி.
ஊட்டுக்காரர் என்ன பண்ணுறார் சுமதி? என்றேன்.
அவுரு போயி இப்ப நாலு வருசம் ஆச்சில்ல! என்றாள்!
அன்று அவள் கொடுத்த காபி உப்புக் கரித்தது!
000000000000000000
காதல் 2014

ஒரு பூவ எட்த்துனு வந்து நீட்டினு 
ஐ லவ் யூன்னு சொல்லினெ இருக்கியே
கஸ்மாலம் நீ நீட்னதும் வாங்கி தலயில சொருவினு
பல்லை காட்னுமா? பொறந்தாப்லர்ந்து
எத்தினி பேஜார் பார்டிங்கள தாண்டி வந்திருக்கேன்!
அப்டியே நீட்ன பூவ வாங்கி சொருவிக்னாலும் 
இப்ப இங்க என்னா மாயம் மந்ரம் நடந்துடும்?
சூரியன் வடக்கில இருந்து உதிச்சுடுவானா?
ஒரு ஸாப்பிங் மாலுக்கோ, சில்க் பேலசுக்கோ,
ஜூவல்லர்சுக்கோ இஸ்துனு போவப் போறீயா?
போனு நெம்பர வாங்கி சாப்டியா செல்லம்னு கேட்டு
கரைச்சல் குடுப்பே! சாமத்துல போனப்போட்டு
தூங்கிட்டியா செல்லம்? உம்படது சைசு என்னன்னு
கேட்டு டார்ச்சரு குடுப்பே! அப்பிடியே மீறிப் போனா
காதலர் ஸ்பாட்டுனு பூங்காவுல இஸ்துனு போயி
ஜிப்ப கழட்டி அடிச்சுடும்பே! அதையிம் போனுல எடுத்து
நெட்டுல போடுவே! அதுக்கு டைட்டிலு வேற கஸ்மாலம்!
சென்னை லேடி சக்கிங்அண்டு கெட்டிங் கம் இன் பப்ளிக் பார்க்!
பேமானி! பொறந்தவன் இருக்கான் பெத்தவன் இருக்கான்னு
சொந்த ஊட்டுள்ளாரயே பயந்துனு போறோம்! 
இதுல பூவ எட்த்துனு வந்து நீட்டினு ரோட்ல நீவேற!

00000000000000000000000000

Post Comment

கருத்துகள் இல்லை: