புதன், பிப்ரவரி 26, 2014

கவிதைகள்இப்படியாகத்தான் நான் ஆண்களை
வெறுக்கத் துவங்கியது!

என் அழகை அவன் கூச்சப்படாமல்
வர்ணிக்கும்போது நான் தடுமாறிவிடுகிறேன்!
இந்த அழகான கொங்கைகள்
என்னுடையவைகள் தானே நீலாவதி?
என்பவன் அவற்றைப் பற்றிக் கொள்ளும் சமயம்
இல்லை அது வேறொருவருக்குச் சொந்தமானவை
என்று விளையாட்டுக்குக் கூட
என்னால் சொல்ல முடிவதில்லை!
கையை எடுடா பன்னி! இப்படி வலிப்பது
மாதிரியா பிழிவார்கள்? நாய்! என்றால்
உடனே கைகளை எடுத்து விட்டு சோகமாய்
விரல்களை மண்ணில் பதித்து கிறுக்கிக்
கொண்டே அமர்ந்து விடுகிறான்! அப்போது
நீங்கள் பார்க்க வேண்டுமே அவன் முகத்தை!
கிளம்புகையில் என்னை முன்னே நடக்க விட்டு
பின்னால் வருபவன் என் பிருஷ்டங்களை
தர்பூசணிப்பழங்கள் என்பான்! வெட்கப்பட்டு
அதே இடத்தில் உட்கார்ந்து கொள்வேன்!
கண்ணுல பார்க்கக் கூட உரிமையில்லியா?
என்பவன் மீண்டும் சோகவடிவமெடுத்து விடுவான்!
இந்த வெட்கத்தையும், கூச்சத்தையும்
வைத்துக் கொண்டு இன்னும் எத்தனை நாளைக்கு
இவனை தக்க வைத்துக் கொள்ள முடியும்
என்று தெரியவில்லை எனக்கு! நல்ல குடும்பம்
நல்ல பையன் என்று தோழி துப்பறிந்து சொன்ன
பிறகு தான் அவன் காதலுக்கு சம்மதம் சொன்னேன்!
இப்படி எல்லா காதலர்களும் உடல்மீது தான்
குறியாய் இருக்கிறார்களா? என்றும் தெரியவில்லை!
இவனுக்கு எந்த அளவுக்கு என் உடல்மீது
அனுமதி கொடுப்பது என்பதை தோழி சொல்லவில்லை!
எத்தனை காதலர்கள் கல்யாணம் கட்டி சுகமாய்
வாழ்கிறார்கள் என்ற கணக்கும் தெரியவில்லை!
எங்கள் வீதியில் தட்டம் சூப்பர் என்று சிலர் சாலையில்
பயணிக்கையில் சொல்கிறார்கள்! தட்டம் என்றால்
என்னவென்று இவனிடம் கேட்டபோது
அவன் கைவைத்த இடம் எனக்கு கோபத்தையும்
எரிச்சலையும் கூட்டி விட்டது! அன்று நான்
அழத்துவங்கிய போதும் மண்ணை விரலால்
கீறிக்கொண்டிருந்தான்! - இப்படி தொட்டுத் தடவிக்
கொண்டே இருப்பது தான் காதல் என்றால்...
இவனை தடவ விட்டால் தான் காதலிப்பான்
என்றால்.. நான் நாசமாய் போக நாள் குறித்துக்
கொண்டிருக்கிறேன் என்றுதான் அர்த்தம்!
அப்படித்தான் முடிவெடுத்து மண்ணைக்
கீறிக்கொண்டிருந்த அவனிடம் சொன்னேன்!
இப்படி தர்பூசணி, மாம்பழம்னு பேசுறதும்,தடவுறதுமா
நீ இருந்தா இனிமே நாம சந்திக்க வேண்டாம்!
அவன் அன்றிலிருந்து என்னை பார்க்க வருவதில்லை!
இப்படியாகத்தான் நான் ஆண்களை
வெறுக்கத் துவங்கியது!சரித்திரக் கவிதை

புரவி வீரன் கடிவளத்தைப் பிடித்து இழுத்து
புரவியை நிறுத்த இளவரசி தேவிசித்திராவின்
காந்தவிழிகளின் ஈர்ப்பே என்று நம்பினான்.
தனைக்கண்டதும் புரவியிலிருந்து குதித்திறங்கிய
வீரனின் உள்கோவணத்தை சட்டெனப் பார்த்து
வெட்கமுற்று தாமரை பூத்த தடாகத்தில் வீழ்ந்தாள்!
தவறி விழுந்த தேவிசித்திராவின் வெளீரிட்ட
தொடைகளின் வெம்மையை கண்டவன் இவள்
வாள்வீச்சுக் கலையில் வல்லவள் என்றெண்ணினான்!
கனைத்த குதிரையின் குறி நீண்டிருந்ததை கவனித்த
புரவி வீரன் சமிக்கை ஒன்றை காட்ட அது
முனகிக் கொண்டே எட்டச் சென்றது! - பிர்ரென 
வாயில் நீர் பீச்சிய இளவரசி, யாரடா நீ கோமணம்
கிழிந்த பயலே? என்றாள்! 
உன்னை அரண்மனையின் அந்தப்புரத்தில் நடுநிசியில்
புணர சாண்டில்யனால் அனுப்பப்பட்ட சோழநாட்டின்
காவல்ப்படைத் தலைவன் பராக்கிரமன்! என்றான்.
அதுசரி பாரசீகத்திலிருந்து உன் நாட்டுக்கு பனியன்
ஜட்டிகள் கூட இன்னம் வந்து சேரவில்லையா? எங்கள்
நாட்டை கைப்பற்ற எந்த சூழ்ச்சிக்காரர்களும் இல்லை! நீ
ஒரு டப்பாத்தலையன்,, எங்கள் நாட்டை காப்பாற்ற குதிரையேறி
வந்திருக்கிறாய் என்னையும் குனிய வைக்க! நான் மேலேறி
வருவதற்குள் கிளம்பி விடு! இல்லையேல் உன் சிரசு மண்ணில்
கிடக்கும் தம்பி உன் கோவணம் உறுவப்பட்ட பிறகு!
நாகரிகம் வளர்ந்த நாட்டில் அவனுக்கு வேலையில்லயென
வா.மு.கோமுவாகிய நான் கவிதையில் நுழைந்து 
பராக்கிரமனை அனுப்பி வைப்பதற்குள்
போதும் போதுமென்றாகி விட்டது!


மழைநாள் ஒன்றில் யாருமற்ற வீதியில்
குடை பிடித்தபடி வரும் அவளை
மழை நாளொன்றில் யாருமற்ற வீதியில்
குடை பிடித்தபடி சென்ற இவன் ஓரக்கண்ணில் 
பார்த்தபடி கடந்தான்! அவளும்
ஓரக்கண்ணில் இவனைப் பார்த்தபடிதான்
கடந்து சென்றாள்! மற்றபடி அங்கு எதுவும்
நிகழாது போனதற்காய் வருத்தம் கொள்வதற்கு
முற்றிலும் நனைந்த நாய் ஒன்றிற்கு நேரமில்லை!

00000000000000000000

மாமாவிற்கு ஆறு வயதாயிருக்கையில்
படுக்கையில் மூத்திரம் பெய்து விடுவாராம்!
அதற்காக ராமச்சந்திர அப்பிச்சி மாமாவின் குஞ்சில்
தவளை கட்டி விடுவதாய் சொன்ன அன்றிலிருந்து
மாமா படுக்கையில் மூத்திரம் பெய்வதை
நிப்பாட்டினாரென்று அம்மா 50 வயதில் என்னிடம்
சொல்லிக் கொண்டிருந்தபோது 54 வயது மாமா
சுவர்ப்புறம் முகம் திருப்பி வெட்கப்பட்டுக் கொண்டிருந்தார்!

00000000000000000000000

Post Comment

கருத்துகள் இல்லை: