சனி, மார்ச் 08, 2014

முகநூல் பதிவுகள் மார்ச் 2014


-நா ஜோதிட சிகாமணி முனிரத்தனம் பேசுறேன். இப்ப இலவசமா உங்களுக்கு சிம்ப்ளா ஜோதிடம் சொல்லப் போறேன்! உங்க ராசி என்னனு சொல்ல முடியுமா? (இயல்பாகவே கொஞ்சம் கேப்)

-நா மூர்த்தி பேசுறேனுங்! எம்பட ராசி சிம்ம ராசிங்!

-உங்க நட்சத்திரம் சொல்ல முடியுங்ளா? (கேப்)

-மகம்முங்க! எம் பேரு ராசேந்திரனுங்க!

-உங்க கூரு மயிரெல்லாம் எங்க கம்ப்யூட்டர்ல சேவ் ஆயிடுச்சுங்க! ஏண்டா நீ இன்னம் எப்படிடா ஊருக்குள்ள உசுரோட திரியிறே? நாயி எத்தனவாட்டிடா கடிச்சுது உன்னை? ரோட்டுல போற மஞ்ச சட்டைக்காரனும், செவப்பு சட்டைக்காரனும் உன்னை பார்த்த்திம் மிதிப்பாங்களேடா!

-டேய் யாரு கிட்ட பேசுறே? வாடா நேர்ல.. பரதேசிப்…  யாரு நீ ஏன் என்னை இப்படி பேசுறே?

மாப்ள டென்சனாவாத மாப்ள! அது சும்மா வெளையாட்டு.. போனை ஒடைக்கப் போறியே!

-இல்ல நீங்க சிரிச்சீங்களா.. சும்மா பேசுனேன்!
ooooooooooooooooooooo

மார்ச் மாத குமுதம் தீராநதி இதழில் நாயுருவி நாவலுக்கு அண்ணன் ந,முருகேசபாண்டியன் எழுதிய இரண்டு பக்க விமர்சனம் வந்துள்ளது, இம்மாதிரியான் இதழ்களில் என் புத்தகங்களுக்கு விமர்சனம் வருவது இதுவே முதல்முறை! புத்தகத்தை பிடிப்பது பெரும்பாடாகி விட்டது! 14 கிலோமீட்டர் பெருந்துறை சென்றுதான் விகடன் இதழையே பிடிப்பேன். தீராநதி பெருந்துறைக்கு 5 பிரதிகள் தான் வருகிறதாம், அது எந்த கடையில் தொங்கும் என தெரியாது என்றார் நண்பர். நிஜந்தன் தோழன் கவிதை வந்திருப்பதாக முகநூலில் கண்டேன். அவரும் தகவல் எதும் போடவில்லை! அவர் எண்ணிருந்தால் பேசி அனுப்பச் சொல்லியிருக்கலாம். மூன்றாம் தேதி ஈரோடு சித்திக் சேலத்தில் பிடித்துவிட்டார் ஒரு பிரதியை. அது வீடு வந்து சேர ஒரு மாதம் கூட ஆகலாம். பல்லடத்தில் ராசு பிடித்து கொரியர் அனுப்ப இப்போது கைக்கு கிடைத்து விட்டது. கையில் பெற்றதும் முருகேசபண்டியனிடமிருந்து அழைப்பு! இப்போது தான் கையில் பிடித்திருக்கிறேன் என்றேன். இன்னமும் அப்படியான ஊரில் தான் வாழ்கிறீர்கள் போல! என்றார்.

புலியூர் முருகேசன் என்கிற புலி கூத்தனோடு இணைந்து விஜயமங்கலத்தில் வேட்டையாட வந்ததால் அதை வாசித்த்தும் அண்ணன் முருகேசபண்டியனிடம் 3 நிமிடம் கதைத்தார். என்ன கதைத்தார் என்பது எனக்கு நினைவில்லை! வளைச்சு வளைச்சு இருட்டில் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த கூத்தன் தன் அலைபேசியில் காட்டிய படங்கள் பூதங்களை பார்ப்பது போல இருந்தன! இடையில் என் பொள்ளாச்சி மேனேஜர் அலைபேசியில் வந்திருக்கிறார். அவரிடம் என்ன பேசினேன்?

அதுசரி! ஹாட் அடிக்காதவன் வண்டிக்கவரில் எதற்கு கோட்டர் பாட்டில்? ஏனுங்கோவ்! மருந்து பாட்டலாட்ட ஒன்னு கிடக்குதா… இருமல் மருந்து வாங்கனீங்களா? இல்லத்தரசியின் கேள்வியில் மல்லிகாவுக்கு வாங்கிய கோட்டர் வாய்ப்பாடி வந்தது புரிந்தது! இன்றோ நாளையோ மல்லிகாவுக்கு அதை ஸ்பான்சர் செய்ய வேண்டும். மல்லிகா ராவாவாக குடித்து பழகியிருக்கிறாள்! பழகிப்போச்சுங்க! என்கிறாள்!

உயிர்மையில் ஏனுங்க உங்க புத்தகங்களுக்கு விமர்சனம்னு ஒரு பக்கம் கூட வந்ததில்லியே? என்றார் நண்பர். அதுங்களா.. அவிங்க விக்காத புத்தகங்களுக்கு தான் விமர்சனம் போடுவாங்க! விக்கிற புத்தகத்துக்கு வேண்டியதில்லீன்னு உட்டுருவாங்க! என்றேன். நண்பர் கப்சிப்! oooooooooooooooo

.
-வால் மணி என்னாச்சி?
-ஆறு மணி ஆச்சி தல! ஆறும் பத்தாச்சி தல! ஆறு இருபது ஆச்சி தல! வாச்சி கட்டியிருக்கன் தல! மணி ஆறரை ஆச்சி தல! 
வாச்ச புடுங்கிட்டான் தல! மணி எவ்ளோ ஆச்சி?

000000000000000000000000000

கடவுளின் விருந்தொன்றுக்கு அழைப்பு வந்தமையால் நாலுகால் பாய்ச்சலில் சாலையில் ஓடிக்கொண்டிருந்தேன். யாரேனும் மனிதர் தட்டுப்பட்டால் இரண்டுகால் பாய்ச்சலில் மாற்றிக் கொள்வேன் ஓட்டத்தை!
oooooooooooooooooooooo

Post Comment

1 கருத்து:

சே. குமார் சொன்னது…

முகநூல் பதிவுகள் அருமை...