வெள்ளி, மார்ச் 14, 2014

பழமொழிகள் இருபது


பழமொழிகள்
1. போன மாட்டை தேடுவாரும் இல்லை, வந்த மாட்டை கட்டுவாரும் இல்லை
2. விசுவாச பூனை கருவாட்டை தூக்கிட்டு போவுதாம்
3. வெளவால் வீட்டுக்கு வெளவால் வந்தால் நீயும் தொங்கு நானும் தொங்கு.
4. பூனை உள்ள இடத்தில் எலி பேரன் பேத்தி எடுக்கிறது.
5. நீர் மோருக்கு கதியற்ற வீட்டில் ஓமத்திற்கு பசு நெய் கேட்டது போல!
6. தேளுக்கு மணியம் கொடுத்தால் ஜாம ஜாமத்தில் கொட்டும்.
7. செத்த பாம்பை ஆட்டுவாளாம் வித்தைக்காரன் பொண்டாட்டி!
8. ஸ்ரீரங்கத்து காக்காயின்னா கோவிந்தம் பாடுமா?
9. குண்டு பட்டு சாகாதவன் வண்டு கடித்து செத்தானாம்.

10. கடல் வத்தினா கருவாடு தின்னலாம்னு உடல் வத்தி செத்ததாம் கொக்கு!

1. என்னெப்போல குரலும், எங்கக்காளப்போல ஒயிலும் இல்லைன்னுதாம் கழுதை!
2. இரும்பை கரையான் அரித்தால் பிள்ளையை பருந்து கொண்டு போகாதா?
3. எறும்பின் கண்ணுக்கு எருமை மூத்திரம் ஏகப்பெரு வெள்ளம்!
4. எல்லாரும் நெல் உலத்துறாங்கன்னு எலியும் வாலை உலர்த்துச்சாம்!
5. இரண்டு வீட்டு கல்யாணம் இடையில் ஓடி செத்த்தாம் நாய்!
6. யானைக்கு வேகுற வீட்டில் பூனைக்கு சோறில்லியாம்!
7. காலக்கிரகத்துக்கு பெருச்சாளி காவிடி எடுத்து ஆடுச்சாம்!
8. கடப்பாறைய முழுங்கீட்டு சுக்கு கசாயம் குடிச்சா தீருமா?
9. மலந்திங்க வந்த நாயி மானியக் கடிச்சாப்ல!
10. அவ ஏண்டி சிரிக்கிறா சந்தையிலெ பேனு கடிக்குதாம் கொண்டையிலே!

                     000000000000000000

என் நண்பர் பூனைகளின் மீது அதீத அன்பு கொண்டவர். பூனைகள் பற்றி மூனாயிரம் பக்கம் மியாவென கத்திக் கொண்டே எழுதக்கூடியவர். அவர் வீட்டில் எந்தப்பூனைகளும் இதுகாலம் வரை வளர்ந்ததில்லை. பூனைகளின் புசுபுசுவென்ற முடிகளுக்காக பெண்களைப் போல தடவி மகிழ்பவரல்ல அவர். நண்பர் சாக்னா கடையில் நண்பர்களுடம் அமர்ந்து சரக்கை போட்டுக்கொண்டிருந்த போது ஒரு குட்டிப்பூனை இவர் தின்னாமல் வீசும் சிக்கன் துண்டுகளுக்காக பாசத்தை நடித்துக் காட்டியிருக்கிறது. போதையில் இவருக்கும் பூனையின் மீது பாசமானது பொத்துக் கொண்டு வந்து விட்டது. கடையில் அதைப்போன்றே மேலும் சில பூனைகள் உலாத்திக் கொண்டுதான் இருந்தன என்றாலும் இது ஒன்றுதான் இந்த வடபக்கத்து டேபிளை காண்ட்ரேக்ட் எடுத்துள்ளது. நண்பர் தன் பட்டாளத்துடன் போரை முடித்துக் கொண்டு கிளம்புகையில் பாசமுடன் பூனையை (சாரி.. வாஞ்சையுடன்) தூக்கிக் கொண்டு சப்ளையரிடம், இதை நான் தூக்கிட்டு போயி வீட்டுல வளர்த்துறேன் நண்பா! நாங்க ரெண்டு பேரும் பாசமோட ஒட்டிக்கிட்டோம், என்றார். சப்ளையர் ஓகே! பாஸ்! சொல்லி விட்டார். கடையை தாண்டியதுமே நண்பரின் கையில் நறுக்கென ஒரு கடி வைத்து விட்டு குதித்து மீண்டும் சாக்னா கடைக்குள்ளேயே ஓடு விட்டார் பூனையார். “ஏன் தல?” என்றார் என்னிடம். அதுக்கு தெரியுமுங்க ஒவ்வொரு குடிகாரர்களை பத்தியும். இங்க இருந்தா சீச்சி சாப்டுட்டு நிம்மதியா தூங்கிட்டு இருக்கும். உங்க வீட்டுல தினமும் சீச்சி போட்டு வளத்துவீங்ளா நண்பா? அதனால அறிவாளிகள் என்னிக்குமே அவங்கவங்க எடத்துல இருந்து தான் அறிவப்பத்தி பேசுவாங்க! நாம புரிஞ்சிக்கணும்! (நன்றி: வால்பையன்)
                                                          000000000000000


புருசன்னா எங்க வேணாலும் கைய வெப்பானாமா? அவனென்ன சாமத்துல அங்கிம் இங்கிம் புடிக்கான்? சேலைய அவுருங்கான்? ஆளும் அவனும்! இந்த ஊசப்பையங்கூட எவளாச்சிம் இருப்பாளான்னு போட்டு வந்துட்டேன் எங்கம்மா ஊட்டுக்கே!
(நாவல் எழுதினால் பத்தினிப்பெண் பேசுவதாக ஒரு சம்பவம் கண்டிப்பாக இடம்பெறும்.. இது கொங்கு ஒரிஜனல்)

                           0000000000000


Post Comment

கருத்துகள் இல்லை: