புதன், மார்ச் 26, 2014

எழுதிக்கொண்டிருக்கும் கிராமிய நாவலில்


 “எங்கடா மணியனைக் காணோம்?” எந்த நேரமும் கால்களுக்குள்ளேயே சுற்றும் நாயை ஞாபகம் வந்தவர் போலக் கேட்டார் கவுண்டர்.
நீங்க போனதுக்கும் அடுத்த நாளு வெசம் தொட்டுப் போடுச்சுங்க அதை.

அடப்பாவத்தே!

காத்தால வந்து பாத்தேன் வாசல்ல வெறச்சிக்கெடந்துச்சு. பக்கத்துல விரியன் செத்துக் கெடந்துச்சு ஒடம்பே துண்டாப்போயி. அப்புறம் தூக்கிட்டு போயி பொதச்சிட்டேனுங் கவுண்டரே.

நாயொன்னு இனி சொல்லி வெச்சு புடிக்கோணுமா! ஆனா குட்டில வெடுகு புடுச்சு தின்னுட்டு திரிஞ்சுது அது. பன்னண்டு நகம் இருந்துச்சாக்கோ. எடுத்துட்டு வர்றப்பவே சொன்னாங்க. ஊட்டுக்கிட்ட எதையும் அண்ட உடாதுன்னு.
புதுசா யாரு வந்தாலும் சள்ளு சள்ளுன்னு நிக்குமே! நாம சத்தம் போட்டத்தான் அடங்கும்என்றவன் தொட்டி நீரில் கை விட்டு அள்ளி டம்ளரை கழுவி கொண்டி பழைய இடத்தில் கமுத்தி விட்டு சென்றான் ஆடுகளைபார்த்து.

00000000000000000

யோவ் மாமா நீயெல்லாம் மனுசனாய்யா! எம்பங்காளி தான் போதையில இருந்தான், என்ன சொல்லிய்யா அவனை மாப்பிள்ளையாக்கிட்டே? இதை இந்த கேனக்கூதிகளும் வேடிக்கை மயிறு பார்த்துட்டு இருந்திருக்கானுக! ஏண்டா உங்க பசங்களை அவளுக்கு கட்டிக் குடுத்துட்டு இப்படி பொம்மைகளாட்ட வேடிக்கை பாக்க வேண்டியது தான. கேட்டா கலியாணங்கிறது ஆயிரங்காலத்து சூத்தும்பீங்க! பங்காளி எறங்குடா கீழஎன்றான். பங்காளி எதுக்கு வந்து சத்தம் போடுறான் என்று புரியாத வேலுச்சாமி மணமகள் மயிலாத்தாவுடன் மணமேடை சுத்துவதை நிறுத்தி விட்டு இவனைப்பார்த்து, ”ஏம் பங்காளி எறங்கச் சொல்றே?” என்றான்.

உங்கொய்யங்கிட்ட போயி நானு என்னன்னுடா சொல்லுவேன்? அடப்பாப்புரு நாலு மாசம் லோடான புள்ளைக்கி தாலி கட்டித் தொலஞ்சிட்டியேடா! ஏண்டா மாப்பிள்ளை ஊட்டுக்காரனே பிச்சுட்டு போயிட்டான் காறித்துப்பீட்டு. இந்த கருமம் புடிச்சவன் உங்கிட்ட என்னத்தடா சொல்லி தாலி கட்ட வெச்சான். ஏண்டா ஒரு சார்மினார் சிகரெட் குடிச்சுட்டு வர்றதுக்குள்ள கூத்து கட்டிட்டியேடா! உங்கொய்யன் இனி என்னைத்தானடா குத்தம் சொல்லும். பங்காளி பழியெடுப்பான்னு சொல்றது நிசம்டாங்குமே! நானுல்லடா உங்க ஊடு வந்து இந்த கருமம் புடிச்சவன் கலியாணத்துக்கு போலாமுன்னு உங்கொய்யங்கிட்ட சொல்லி இழுத்துட்டு வந்தேன். காதுல இப்படின்னு கேட்டா உசுரோட இருக்குமாடா உங்கொய்யன்?” ஐய்யோ ஐயொ! என தலையில் அடித்துக் கொண்டான் சின்னச்சாமி.

00000000000000000000000

அவனுக்கு கல்யாணமென்றால் பிள்ளை பிறக்கும், சோத்துக்கு சம்பாதிக்க வேலைக்கு போக வேண்டுமென்பதெல்லாம் அதன் பிறகு தான் தெரிந்தது. சினிமா நடிகனாகி உச்ச நட்சத்திரமாகி தமிழ்நாட்டுக்கு முதல்வராக மாறவேண்டியவன் கவுண்டர் பெண்ணைக் கட்டிக்கொண்டு வரிசையாய் குட்டிகள் போட்டு சீக்கிரம் கிழவாடியாவதை வெறுத்து ஓடினான். மயிலாத்தா காதலில் சென்னிமலைக் கரட்டில் எட்டு மாதம் முன்பு பூப்பறிக்கும் விழா அன்று ஓலையக்கா கொண்டையிலே! பாட்டுப் பாடி கும்மியடிக்கும் போது விழுந்தவள் அல்லவா! அவளுக்கு ஒரே நம்பிக்கை சிவலிங்கன் வந்து விடுவான். அவனின் கையே இரண்டு மாதங்களாகப் படாத மார்பகங்களில் இவளாக ஒன்றில் வைத்து அழுத்திக் கொண்டே கவலைபடாதீங்க கன்னுக் குட்டிகளா! என்றே நினைத்துக் கொண்டாள்.

0000000000000000000000000

காதல் யார்மீது எப்போது வந்து சேரும் என்பது என்பது காதலிப்பவர்களுக்குமே தெரியாது. பாக்கெட்டில் பத்துப்பைசா இருந்தால் கோழிகூப்பிடவே பாட்டுப்பாடத் தோன்றும் என்பார்கள். ஆனால் பாக்கெட்டில் எதுவுமே இல்லாதவன் கூட காதலில் விழத்தான் செய்கிறான். ஊர்ச்சனம் கேள்விப்பட்டால் கூட, அட! என்னடா இந்த கொளத்துப்பாளையத்துக்கு வந்த சோதனை! என்றே ஆச்சரியப்படுவார்கள். டார்ச் விளக்கை பிடித்துக் கொண்டே போய் சிலபேர் வறண்ட கிணற்றில் விழுவார்கள். யாரும் பார்க்கவில்லை என்றால் சூத்து மண்ணைத் தட்டிக்கொண்டு மேலேறி வந்து, நானொன்னும் விழலியாக்கும்! என்று கூட போய் விடுவார்கள்.
00000000000000000000
அட பிள்ளைங்களுக்கெல்லாம் கழுத்துல வட்ட வட்டமா மாட்டி உட்டிருக்காங்களே நமக்கும் மாட்டி உடுவாங்கன்னு பார்த்தேன். கூப்பிடவே இல்லியா தமாசுக்கு போட்டி வெச்சிருக்காங்கன்னு நானா நெனச்சிட்டேன். ஆனாப்பாருங்க கடேசில எனக்கும் பரிசு குடுத்துட்டாங்க! எம்புள்ள வேற ரெண்டு பரிசு வாங்கியிருக்கா இந்தப் பள்ளிக்கூடத்துல மொதவாட்டியா! அடுத்த வருசம் ஊத்துக்குளியில சேர்த்தலாமுன்னு இருக்கேன்.

இத்தன நாளு ஊருக்குள்ள பொழச்சிருக்கோம் இந்தூரு பள்ளிக்கூடத்துல இப்படி சுதந்திர தினம் கொண்டாடி இன்னிக்கித் தான் பாக்கேன். தலைவருங்க எல்லாம் ஏற்பாடு பண்டுனா சீக்கிரம் ஒரு எட்டாவது வரைக்குமாவது நம்ம ஊர்லயே கொழந்தைங்க படிக்க ஏற்பாடு செய்யுங்க! எந்த பேப்பர்ல எவத்திக்கி கையெழுத்து போடச் சொல்றீங்களோ நான் போடறேன். படிப்பு அரமாலுமே இல்லாமப் போனதாலதான் காடு கரைய வெச்சுட்டு மழை பெய்யுமான்னு மானத்தை பாத்துட்டு இருக்கோம். 

இப்ப என்னடான்னா ரோட்டோரத்துல வறக்காடு வெச்சிருக்குறவிங்கெல்லாம் நாலு பணத்துக்கு வித்துப்போடறாங்க. வாங்குனவிங்க கலரு கலரு கொடிய நெட்டி ஒரு சாலையப் போட்டு உக்காந்துக்கறாங்க. சங்கு நகர்ன்னு எதோ ஒரு பேரை போர்டுல எழுதி குறைந்த விலையில் வீட்டுமனை விற்பனைக்குன்னு போட்டுக்கறாங்க! இப்ப எல்லக்காடு போற வழியில பூராம் டில்லிமுள்ளா கெடந்த எடத்த புல்டோசரை உட்டு நெரவி சவுனாப்பண்டி கொடிய நெட்டீட்டாங்க! நல்லவேளை எனக்கு ரோட்டோரத்துல காடு இல்ல! இந்த மழையப் பாத்துட்டு இருக்குற நேரம் இத்தினிக்கா வித்துக் கொண்டி பேங்குல போட்டிருப்பேன். எல்லாரும் நல்லா இருங்க!என்று கும்பிடு ஒன்றை கிட்டுச்சாமி வைத்தார். கீழே கைதட்டல் அதிகமாக இருந்தது.

மாப்பிள்ளே நல்லாத்தான பேசுறே, இன்னம் ரெண்டு வார்த்தை பேசுஎன்று கீழிருந்து குரல் வந்தது. எதுக்கு டீச்சரம்மா வெளாருல என்னை அடிக்கவா?” என்று சொல்லிக் கொண்டு கிட்டுச்சாமி மேடையிலிருந்து இறங்கினார்.

00000000000000000

ஏண்டா அவனவன் காதலிக்கறப்ப என்னென்ன பண்டறான். ஊட்டுமேல ஏறி ஓட்டை பிரிச்சு உள்ளார எறங்கி சோலி பாத்துட்டு வர்றான் தெரியுமா! ஏண்டா யாரு கிட்ட நீ போயி நிக்கே? உனக்கு சம்சாரம் ஆகப்போறவ கிட்டத்தான! நாளைக்கி கலியாணமாயிடுச்சுன்னா அவ சொல்லுவாள்ல. என்ன தைரியமா ஊட்டுக்கே வந்தீங்கன்னு! பொம்பளைங்களுக்கு என்னிக்குமே தைரியமா நடந்துக்குற ஆம்பிள்ளைகளைத்தான் பிடிக்கும் தெரியுமா! அவளும் இப்ப உன் நெனப்பாவேதான் பாயில கிடப்பாடா. சினிமாவுல பாத்ததில்லியா நீ! நீ கிட்ட கிடந்தீன்னா அம்சமா இருக்குமுன்னு நெனச்சுட்டு தலகாணிய கட்டிப்புடிச்சுட்டு கிடப்பா! வெட்டியா உனக்கு கிடைக்கிற முத்தமெல்லாம் தலகாணி வாங்கிட்டு இருக்கும். கலியா கலியான்னு முத்தம் குடுத்துட்டு கிடப்பா தலகாணிக்கி. போடா போயி முத்தம் வாங்கிட்டு வா


0000000000000000000000

Post Comment

கருத்துகள் இல்லை: