செவ்வாய், ஏப்ரல் 15, 2014

வாசிப்புஆதிக்கம்

அவள் பெயர் எதுவாகவோ இருக்கட்டும்
அவள் குடும்பத் தலைவி.
ஐந்து மணியிலிருந்து ஜெயா டிவியில்
சுப்ரபாதம் கேட்டு மகிழ்ந்து
புருசனுக்கு முத்தமிட்டு அனுப்பிதனது
பட்டு வண்ண மேனியை குளியலறைக்குள்
குளிப்பாட்டி, பிங்கி ஆடையுடுத்தி
பிரார்த்தனைக் கூட்டம் சென்று
இறைவனின் ஆசி பெற்று, நேரே
மாதர் சங்க கூட்டமொன்றில்
மைக் பிடித்து, ஆடவர் கொட்டமடக்கும்
அருமை வசனங்கள் பேசி கைதட்டல் பெற்று
கொக்கோ கோலாவை உதடுமீது
பட்டும் படாமல் குடித்து விடை பெற்று
ரிஸ்ட் வாட்ச்சில் மணி பார்த்து
தேவி அபிராமியில் தளபதி விவிஜயின்
திருமலை பார்த்து, கெனடிக் ஹோண்டாவை
வீட்டினுள் தள்ளி, தனதறையில்
நைட்டிக்குள் நுழைந்து வேலைக்காரனை
ஜாடையாய் அழைக்க, ஆடை அவிழ்த்து
ஆசையாய் வந்தவனிடம் சொன்னாள்
நான் தான் மேல! என.

(சொல்லக்கூசும் கவிதை தொகுப்பிலிருந்து)


சூரியனின் கடைசி கிரணத்திலிருந்து சூரியனின் முதல் கிரணம் வரை
நாடகம் ஹிந்தி மூலம் சுரேந்திரவர்மா

1978ல் கிரியா 7 ரூவாயில் போட்ட சின்ன புத்தகத்தை இவ்வளவு காலமும் ஏதோ சரித்திர கதை போல என்று நினைத்து படிக்காமல் விட்டு ரொம்ப தாமதமாகி விட்டது. பார்த்தால் பட்டாஸ் கிளப்பும் அரண்மனைக்கதை இது. சமீபமாக என் ஆசை சரித்திர நாவல் ஒன்று எழுதுவது என்பது. என் கதையில் சரித்திரமாவது ஒன்றாவது? அதை பிறகு பார்ப்போம்.

ஓக்காக் மல்ல நாட்டின் அரசன். அவன் ஆண்மை குறைபாடு உடையவன். அவன் மனைவி சீலவதி. 5 வருடங்களாக குழந்தையில்லை என்பதால் ராஜகுரு, சேனாதிபதி ஆகியோரின் முடிவில் தண்டோரா போடப்படுகிறது.பெளர்ணமி மாலை பட்டத்தரசி சீலவதி அரச மண்டபத்தில் கடமைப்பாவையாகி பவனி வருவார்கள். அச்சமயம் மல்ல நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் வருகை தந்து அரசி யாரையேனும் ஒருவனைத் தேர்ந்தெடுத்து ஒரு இரவு மாற்றுக் கணவனாக தேர்ந்தெடுத்துக் கொள்வார்கள்!

சீலவதி அப்படி ஒரு இரவு தன் பழைய காதலனுடன் இரவு தங்கி வருகிறாள். அவள் பேசும் வசனங்கள் இந்த நாடகத்தில் முக்கியமானவைகளாக இருக்கின்றன. அசத்தும் புத்தகம். இப்போது கிடைக்கிறதா என்று தெரியவில்லை! கடைசியாக நம்மெல்லாம் சும்மா போல ஆகிவிட்டது எனக்கு! இதை வாசித்ததும் நல்லது தான். இதற்கும் மேலாக எழுதினால் செய்ய விருப்பபடுவேன்!


நாவல்களில் பயணப்படுவது என்பது குறிப்பிட்ட தூரம் சென்றபிறகு தான் என்பதை நாவல் வாசிப்பாளர்கள் உணருவார்கள். முன்பு 89-ல் மிருகயா, நாயர்சாப் என்கிற மலையாள திரைப்பட வரிசைகளில் மோகன்லால், மம்முட்டி நடித்த படங்களில் அவர்கள் கால தாமதாமாகவே வருவார்கள். அவர்கள் வந்தபின் திரைப்படம் சூடு பிடிப்பதைப் போல என்று வைத்துக் கொள்ளலாம்.

மணற்குன்று பெண் வாசித்து முடித்தாகி விட்டது. 1962 ல் எழுதப்பட்ட நாவல் என்று முகப்பு சொல்கிறது. இது ஒரு வரலாற்றுப்பதிவாக அமைந்திருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. ஜி. விஜயபத்மாவின் மொழிபெயர்ப்பு மிக அற்புதமாக தமிழில் விரிந்திருக்கிறது. அதுவும் மணல்குன்றிலிருந்து நாயகன் தப்பி சென்ற இடத்திலிருந்து திசைமாறி மீண்டும் அவர்களிடம் சிக்கி ஓட்டம் பிடித்து புதை மணலில் சிக்கும் வரை அவன் உயிர் பிழைப்பானா? மாட்டானா? என்று கேள்வி எழச்செய்யும் எழுத்து! அதைவிட அவரின் மொழிபெயர்ப்பு நம்மை கூட்டிச் செல்லும் லாவகம் என்று தான் சொல்ல வேண்டும்!

  ஆரம்பத்தில் விடுமுறை நாளைக்கழிக்க அரைநாள் ரயில் பயணம் செய்து கடற்கரையோரம் சென்ற மனிதன் காணாமல் போய்விட்டான் என்று நாவல் ஆரம்பமாகிறது. தவிர புலனாய்வு செய்தும் அவனைப்பற்றியான தகவலெதுவும் இல்லை. பூச்சிகள் சேகரிப்பாளனான அவன் மணல்தீவில் அகப்பட்டுக் கொள்கிறான். இரவு தங்குவதற்காக அந்த சிற்றூரின் வீடொன்றில் ஒரு பெரியவரால் தங்க வைக்கப்படுகிறான். ஒரு ஏணி மூலம் இறங்கிச் சென்று தங்கும் வீட்டில் கணவனையும் பிள்ளையையும் மணல்புயலில் பலிகொடுத்த ஒரு பெண்ணுடன் தங்குகிறான்.

  இரவில் அவள் மணலை சேகரித்து குன்றின் மேலிருந்து இறங்கும் கூடையில் மணலை நிறப்புகிறாள். விடிகாலை வரை அவள் பணி செய்கிறாள். விடிந்து தூங்கியெழுந்தவன் அவள் நிர்வாணமாக படுத்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியுருகிறான். இவன் உடை முழுதும் மணல் துகள்கள் நிரம்பியிருக்க அதை உதறுகிறான். வெளிவந்து பார்க்கையில் ஏணி இல்லை. ஒரு அடிமை போல அங்கு சிக்கிவிடுகிறான். என்று செல்லும் இந்த நாவலில் பயணப்பட நீங்கள் விரும்பினால் வாசிக்கலாம்

Post Comment

1 கருத்து:

சே. குமார் சொன்னது…

கவிதை நன்று...

இரண்டு வாசிப்புக்களை இனிமையாகச் சொல்லியிருக்கிறீர்கள்.