ஞாயிறு, ஜூலை 06, 2014

கவிதைகள்


       சந்தைக்குள் போன பெண்களெல்லாம்
    வெறுங்கையாக திரும்புவதில்லை!
000

எனது புருசனின் வாயைப்பற்றி நான்
பேசத்துவங்கினால் ஒருபாடு பேசுவேன்!
இந்த ஊருக்கு அவன் வாயைப்பற்றி
ஏதோ கொஞ்சம் தான் தெரியும்!

என் புருசனின் வாய் சற்று அகலமானது!
வாயினுள் இரண்டு முன்பற்கள் குடியால்
குப்புற விழுந்து தெரித்துப் போய்விட்டது!
அவன் நாக்கால் முதல்ராத்திரியில் மூக்கு
நுனியை சாமார்த்தியமாய் தொட்டுக் காட்டினான்!
இருந்தும் அது சற்று நீளம் தான்!

அவன் வாயில் வண்டை வண்டையாய்
வார்த்தைகள் வந்து கொண்டிருக்கும்!
அது என் பிறப்புறுப்பு பற்றியும் எனக்குப்
பிறந்த குழந்தைகள் பற்றியும் கேவலம் பேசும்!

என் புருசனின் வாய் மலம் தின்ற
நாயின் வாயாக இருக்க வேண்டும்! அதை
கோணுச்சியால் தைப்பது பற்றியான கனவில்
நான் எப்போதுமிருப்பேன்!
வாய்களில் பல வகைகள் உள்ளனவாம்!
நாறவாய்! ஊத்தவாய்! கோணவாய்! தொறந்தவாய்
என்று வகைப்படுத்தப்பட்டு உள்ளனவாம்!
அனைத்தும் ஒருசேரக் கலந்த வாய் ஒன்று
உண்டென்றால் அது என் புருசன் வாய்!

என் புருசனின் வாய் பற்றி ஓரளவு உங்களுக்கு
தெளிவுபடுத்தி விட்டேனென நினைக்கிறேன்!
அந்த வாயில் நான் கொள்ளிக்கட்டை திணிக்கும்
நாள் வெகுதூரத்தில் இல்லையென்பதையும்
இப்போதே சொல்லி விடுகிறேன்!

000000000000000000000

இன்று அதிகாலையில்
கடற்கரை மணலில் கிடந்தவனுக்கு
வாழ்க்கை பற்றியான தெளிவுகள் ஏதுமில்லை!
அதன் மீது எந்த விமர்சனங்களுமில்லை!
வாழ்க்கை அவனை பயமுறுத்தப் போவதுமில்லை!
அவனை வெறுத்தொதுக்கிய பெண்ணின்
நினைவுகளும் இருக்கப்போவதில்லை!
அவனைச் சுற்றிலும் சில ஈக்கள்
மொய்த்திருப்பதும் அவனுக்கு

00000000000000

வீட்டினுள் அவளின் அழுகையும்
விசும்பலும் தொடரவே சலிப்பாய்
அந்த இரவில் வெளியேறினேன்!
நிலவும், நட்சத்திரங்களும் அன்று
அசிங்கமாய் இருந்தன!

00000000000

Post Comment

கருத்துகள் இல்லை: