செவ்வாய், செப்டம்பர் 23, 2014

வாசித்த 2 புத்தகங்கள்


லக்‌ஷ்மி சரவணகுமாரின் இரண்டாவது நாவல்கானகன்வாசித்து முடிக்க எனக்கு ஏழு மணிநேரங்களானது! நான் அவ்வளவு சீக்கிரம் வாசிக்கவோ, எழுதவோ அமர்ந்து விடுபவன் அல்ல! அடுத்து எந்த புத்தகத்தை என் அடுக்கிலிருந்து எடுத்து வாசிப்பேன் என்பதும் தெரியாது. நடுகல் பணிகள் என்னை முழுமையாக 2 மாதங்கள் முடக்கி விட்டது. இருந்தும் பல விசங்களுக்கு வருத்தப்பட்டுக்கொண்டிருக்கக் கூட எனக்கு அவகாசமில்லை!

கானகன் முதல் அத்தியாயத்தை வாசிக்கத் துவங்கியதுமே எனக்கு தெழுங்கு மொழிபெயர்ப்பு நாவலை படிக்கிறோமோ என்ற எண்ணம் வந்து விட்டது. வாசகனை காட்டினுள் அழைத்துச் சென்று துப்பாக்கி பிடித்து அவனை வேட்டையாடப் பழக்கி விடும் எழுத்து லக்‌ஷ்மிக்கு கைவந்திருக்கிறது.

மனிதன் வனங்களை தன் தேவைகளுக்காக ஆக்கிரமிக்கிறான், அதை அழிக்க முற்படுகிறான் என்கிற விசயத்தை சா. கந்தசாமியிலிருந்து ஏனைய எழுத்தர்கள் சிலர் தமிழ் அறிவு ஜீவிகளுக்கு சுட்டிக்காட்ட தங்கள் எழுத்தால் முயற்சித்திருக்கிறார்கள். அந்த புத்தகங்கள் பாராட்டு பத்திரங்களையும் பெற்றிருக்கின்றன. மேய்ச்சல்நில விலங்குகளை ஓநாய்கள் வேட்டையாடுவதையும், ஓநாய்களை மனிதர்கள் வேட்டையாடுவதையும் சமீபத்தில்ஓநாய்குலச் சின்னம்மொழிபெயர்ப்பு நாவலில் வாசித்திருந்தேன். முன்பாக புலிவேட்டை பற்றியான மொழிபெயர்ப்பு பத்தகங்கள் இரண்டு படித்தது மட்டுமே என் அறிவு. மற்றபடி வேடிக்கை காட்சி சாலைகளில் கூட புலியை நான் பார்த்ததில்லை. எல்லாம் டிஸ்கவரி சேனலில் மட்டும் தான். அதிலும் குரங்குகள் சேனலில் திரிந்தன என்றால், துரையரசு டிவில உன்னை காட்டறாங்கடா! என்று குரல் கொடுத்தால் பையன் ஓடிவந்து புன்னகைத்தபடி பார்ப்பான்.

பெரும் காடுகளினுள் வசிக்கும் சிறுகுழுக்கள் தங்கள் வாழ்வாதரமாக காட்டையே நம்பி வாழ்கின்றனர். காலமாற்றத்தில் அவர்கள் காட்டை கட்டிக் காப்பதற்கு மாறாக காட்டிக் கொடுக்கத் துணிவதால் நேரிடும் இடறுகளை இந்த நாவல் சுட்டிக் காட்டுகிறது. பழிவாங்கும் உணர்வு விலங்கினங்களுக்கு உண்டு என்பதை இந்த நாவல் சொல்கிறது. காடும், விலங்கினங்களும் என்றுமே நமக்கு பிரமாண்டங்கள் தான். உப்பு நாய்களுக்கு பிறகு நகரம் சார்ந்த பகுதியிலிருந்து காட்டுப்புறத்திற்கு தாவியிருக்கும் லக்‌ஷ்மி சரவணகுமாருக்கு என் வாழ்த்துக்கள்.
எழுத்தானது வாசிக்க சுகமளித்தால் போதுமானது என்கிற வகையில் மட்டுமே ஒரு புத்தகத்தை நான் பார்ப்பேன். அந்தப்புத்தகம் எதைச் சொன்னாலும்!!

-விலை 200 மலைச்சொல் பதிப்பகம். புத்தகம் வேண்டுவோர் பேச : 85080 80809


ஆணும் பெண்ணும் தர்க்க ரீதியாக நாவல் முழுக்க பேசிக் கொண்டேயிருக்கிறார்கள். வொய்ன், பீர் என்று கண்ணாடி டம்ளர்கள் ஐஸ் கட்டிகளோடு மிதக்கின்றன. குளிரும் மழையும் காதலும் உங்களை போர்வைக்குள் சுருண்டு கொள்ள அழைக்கும்! நவீன காலத்தில் பெண் எல்லா விசயங்களையும் தன் நண்பனோடு பகிர்ந்து கொள்வது சாதாரணம் என்றாலும் இந்நாவல் வெளியிடப்பட்ட ஆண்டு 1987. ஆனாலும் தமிழ் வாசகர்கள் வாசிக்கையில் எப்படி இப்படி? என்ற கேள்வி நிச்சயம் தோன்றும்.

வாட்டனபி நாவல் முழுக்க தன் சரிதத்தை சொல்லும் வகையில் இருக்கிறது. அவனது காதலியாக வந்து ஒருமுறை பாலியல் வேட்கையை அனுபவித்து விட்டு நாவலின் இறுதிக் கட்டத்தில் இறந்து போகிறாள் நவோகோ. தோழியாக வரும் மிடோரி நாவலில் நுழைந்த பிறகு அற்புத வடிவமெடுக்கிறது. “என்னை ஒருநாளேனும் நினைத்து சுயமைதுனம் செய்திருக்கிறாயா? அப்படியில்லையெனில் ஒருமுறை முயற்சித்துப் பார். அந்த அனுபவத்தை என்னிடம் சொல்!” என்கிறாள்.

()()()()()()()()()

இப்ப நான் என்ன செய்ய விரும்புறேன்னு தெரியுமா?”
நீ என்ன யோசிச்சுட்டு இருக்கேன்னு கொஞ்சமும் எனக்கு யோசனை இல்ல
கடல் கொள்ளையர்கள் என்னையும் உன்னையும் பிடிக்கணும்னு விரும்புறேன். அப்புறம் அவங்க நம்மோட ஆடைகளை உருவி இரண்டுபேரையும் முகத்தோட முகம் பாக்குற மாதிரி நிர்வாணமா கயிறால கட்டுறாங்க
அவங்க ஏன் அப்படியொரு விஷயத்தை பண்ணனும்?”
வக்கிரம் பிடிச்ச கொள்ளையர்கள்என்றாள் அவள்.
நீதான் வக்கிரம் பிடிச்சவநான் சொன்னேன்.
அப்புறம் அவங்க நம்மை ஒரு அறையில தள்ளி இன்னும் ஒரு மணி நேரத்துல நாங்க உங்களை கடல்ல தள்ளப்போறோம். அதனால அதுவரைக்கும் நல்லா அனுபவிங்கன்னு சொல்றாங்க
அப்புறம்?”
அதனால நாம ஒருத்தரையொருத்தர் பின்னிக்கிட்டு ஒரு மணி நேரம் அந்த இடமெல்லாம் உருண்டும் புரண்டும் அனுபவிக்கிறோம்
இப்ப நீ செய்ய நினைக்கிற முக்கியமான விஷயம் இதுதான் இல்லையா?”
அதே தான்

()()()_()()()()()()

நான் உண்மையிலேயே அழகிங்கறது மூலமா நீ என்ன சொல்ல வர்றே?”
மலைகள் நொறுங்கிப் பொடியாகவும் சமுத்திரங்கள் வற்றிப்போகும்படியான அளவுக்கு அத்தனை அழகி
வார்த்தைகளை நீ தனியொரு விதமா பயன்படுத்துறே. இதை விடவும் இனிமையா ஏதாச்சும் சொல்லு
எனக்கு உண்மையிலேயே உன்னைப்பிடிக்கும் மிடோரி. நிறைய்ய
நிறையனா எவ்வளவு?’
ஒரு இளவேனிற்கால கரடியைப்போல
()()()()()()()()()()
எதிர்வெளியீடு- விலை -350

*****************************************************************************
நான் வாசித்த புத்தகங்கள் பற்றி முகநூலில் மட்டும் சிறிதாக சொல்வது வழக்கம்! நாவல்களில் இருக்கும் அரசியல் பற்றி நான் என் பார்வை என்ன என்பது பற்றி எங்கும் பேசுவதில்லை! வாசிக்க உகந்த புத்தகங்களை மட்டும் நான் குறிப்பிடுகிறேன். நான் தேர்ந்த விமர்சகன் அல்ல! தேர்ந்த விமர்சகர்களின் பார்வை ஒருவேளை ஒரு நாவலைப்பற்றி கருத்து வேறானதாக இருக்கலாம். இவனென்ன இந்த புத்தகத்தை இப்படி சிறப்புன்னு எழுதியிருக்கான் என்றும் நினைக்கலாம். அதுபற்றி எனக்கு கவலைகள் இல்லை!
************************************************************************************* 

Post Comment

1 கருத்து:

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாசித்த புத்தகங்கள் பற்றிய பகிர்வு அருமை சார்...
வாழ்த்துக்கள்.