சனி, அக்டோபர் 18, 2014

நம்ம கவிதைகள் தான்!


யாரோ என் வீட்டினுள் நுழைந்து
எல்லாவற்றையும் இடம் மாற்றி வைத்து
விட்டுப் போய் விட்டார்கள்!
தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த மனைவி
கிச்சன் ரூமில் குப்புறக் கிடக்கிறாள்.
வடக்கு பார்த்து நின்றிருந்த பீரோக்கள் இரண்டும்
கிழக்குப் பார்த்து நிற்கின்றன! முட்டாப்பயல்கள்
பாத்ரூமில் கொண்டு போய் என் கட்டிலை
கிடத்தியிருக்கிறார்கள்! வந்திருந்தவர்களுக்கு
அறிவு என்பதே கிடையாது போல! எதை எங்கே
வைக்க வேண்டுமென்ற அறிவு இந்த வீட்டுக்கு
வந்த காலம் தொட்டு மனைவிக்கும் கிடையாது!
எனது படிப்பறை காலியாகக் கிடந்தது! அதன் மூலையில்
தரையில் ஒரு சிறிய கதவொன்று திறந்திருக்க
அதனுள் படிகளில் இறங்கினேன். கதவு மூடிக்கொண்டது!
இருட்டு! இருட்டைத் தவிர அங்கெதுவுமில்லை!

000000000000 


அவன் புத்தி ஸ்வாதீனம் இல்லாதிருந்த போது
உலகம் சரியாய் இயங்கிக் கொண்டிருந்தது!
கோடைக்காலம் ஒரு முடிவுக்கு வந்திருந்தபோது
அவனுக்கு சில வெங்காயங்கள் உண்ணக் கிடைத்தன!
தன்னைச் சுற்றிலும் எந்த நேரமும் பறக்கும்
கருவண்டுகளை விரட்டுவதற்கு யாரோ ஒருத்தியின்
பாவாடை கையில் இருந்தது! இரவு நேரங்களில்
அது இவன் தூங்கிப்போனாலும் கருவண்டுகளை
விரட்டிக் கொண்டேயிருந்தது! மகிழ்ச்சியை
என்னவென உணரத்தெரியாத அவன் விடியல்
துவங்கும் காலை நேரத்தில் அந்த பாவாடைக்கு
சில வெங்காயங்களை நீட்டி சாப்பிடச் சொல்லி
கெட்ட வார்த்தைகளை உச்சரித்துக் கொண்டிருந்தான்!

000000000000

கொட்டாவி

கொட்டாவி விட்டுக் கொண்டிருந்தவன்
வாயினுள் எட்டிப்பார்த்த சொன்னது
இவன் ஒன்னுமெ சாப்பிடல போல!’

00000000
தூக்கம் வருகிறதெனெ கொஞ்சம் நேரமாய்
சொல்லிக் கொண்டிருந்தவன் கொட்டாவி விட்டான்!
எதிரே இருந்த மலை சற்று தள்ளிப்போனது!

000000000
நீ பெரிய இவன்னா இப்ப ஒரு
கொட்டாவி போடறா பாக்கலாம்!
தாதாவை மிரட்டிக் கொண்டிருந்தான் நாயகன்!

0000000000
கனம் கோர்ட்டார் அவர்களே! ஆகவே எனது
கட்சிக்காரர் மாலினிக்கு டைவர்ஸ் வழங்குமாறும்
கணவரின் கொட்டாவிகளில் இருந்து காக்கும்படியும்
தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்!

00000000000
மலைகள் பார்க்க டாட் காம் பக்கம் போனவன்
கடலைக் கண்டு குளித்தெழுந்து
நண்டு சுட்டு சாப்பிட்டு கொட்டாவியுடன்
சாய்ந்தான் மணலில்!
000000000

என் உயிரே என்று இந்த வரியை
நான் துவங்கலாம்! –நீ என்னிடம் சிவந்த
ரோஜாவை மண்டியிட்டு நீட்டி உன்
காதலைச் சொன்ன போது என் குடும்பத்தாருக்கு
பயந்து நான் வாங்க மறுத்து ஓடினேன்!
இருந்தும் நீ என்னை விடாமல் துறத்தி வந்து
எல்லா வகையிலும் என்னை உன்னுடயவளாக்கிக் கொள்ள
முயற்சித்தாய்! உனக்காக தூது வந்தவர்கள்
யாரிடமும் நீ இப்படி பித்தாய் இருந்ததேயில்லை
என்றார்கள்! நிஜமாகவே எனக்காக நீ
என்னவேண்டுமானாலும் செய்வாய்
போலத்தான் இருந்தது! உன் இவ்வளவு காதலையும்
கையகப்படுத்திக் கொள்ள எனக்கும் ஆசை
வந்து உன்னை ஏற்றுக் கொண்ட போது
கட்டியணைத்து என் முகமெல்லாம்
எச்சிலாக்கினாய்! என்னுள் பெண்மையை
உணரச் செய்தாய்! நான் இவ்வளவு காதலுக்கும்
உரிமையானவள் என்கிற போது கர்வமாய் இருந்தது!
போகப்போக உன் குறியெல்லாம் என்
உடல்மீது என்று புரிந்து போனதும் கொஞ்சம்
உன்னிடமிருந்து விலகத் துவங்கினேன்!
உடலை விரும்பாதவன் இந்த உலகில் யார்?”
நீ கடைசியாய் என்னிடம் கேட்டுவிட்டு ஒன்றுமே
நடவாதது போல் சென்று விட்டாய்!
எனக்கும் திருமணம் என்று ஒன்று நடந்தது!
எனக்கு வாய்த்தவனும் உடலைத்தான் விரும்பினான்.
எனக்கு இப்போது தான் தெரிகிறது..
வெளியில் கிளம்பி வந்தாலும் என் உடம்பைத்தான்
எல்லாரும் விரும்புகிறார்கள் என்று!
நீ சொன்னது சரிதான் உயிரே! உடலை
விரும்பாதவன் எவனுமில்லை! என்னை
அவ்வளவுதூரம் விரும்பிய உனக்கே நீ
விரும்பிய உடலைக்கொடுத்து உன்னை
கையகப்படுத்தியிருக்கலாம்! என் உயிரே என்று
இந்த வரிகளை முடிப்பதும் சரிதான்!

0000000000000

Post Comment

2 கருத்துகள்:

'பரிவை' சே.குமார் சொன்னது…

கவிதைகள் அருமை...
வாழ்த்துக்கள் சார்.

'பரிவை' சே.குமார் சொன்னது…

கவிதைகள் அருமை...
வாழ்த்துக்கள் சார்.