செவ்வாய், நவம்பர் 18, 2014

முகநூல் பதிவுகள் 2இது குங்குமத்துல வந்ததுங்களாமா! நண்பர் அனுப்பிச்சாரு!

000000000

வெற்றி சாலை வழியே வந்து கதை தட்டுறப்ப தடால்னு நீக்கி புடிச்சுக்கலாம்னு தான் ராமசாமி ஊட்டை சாத்தி குக்கியிருந்தான்! கொடுக்கிற சாமி கூரைய பிச்சுட்டு தான் குடுக்குமுன்னு ஒரு வருசம் மிந்தி கூரையை பார்த்துட்டே ஊட்டுக்குள்ள கிடந்தான்! அம்மிணி சமையலைறயில இருக்கப்ப வெங்காயம் தொழிச்சு குடுக்க போனவன் அங்கியே கண்ணுல தண்ணி வர உக்காந்துட்டான் தொழிச்சுட்டு! லேசா கதவு தட்ற சத்தம் கேட்டு ஓடியாந்து நீக்கிப் பார்த்தா... வெற்றி பக்கத்து வீட்டு கதவை நீக்கி உள்ளார போயிடுச்சு!

00000000

கெட்ட வார்த்தைகள் கூட சில ஆட்கள் உச்சரிப்பில் தான் அழகாக இருக்கிறது கேட்க! சிலபேர் இருக்காங்களே சாமி! கெட்ட வார்த்தைகளுக்குன்னு இருக்குற மரியாதையை பேசிப் பேசி தரம் தாழ்த்திடறாங்க! ஆகவே - கெட்ட வார்த்தைகளுக்கு மரியாதை குறைச்சலாக எதுவும் நடந்து விடாமல் அழகாக உச்சரிக்க (ஆர்டர் போட முடியாதுங்க)

0000000

மூக்கு இருக்குற வரைக்கும் சளி தான்னு பழமொழி சொன்னாலும் சொன்னாங்க அது உண்மைதான் போல! திருப்பூர்ல இனி மீட்டிங்குன்னா இங்கிருந்தே தண்ணிக்கேனோட தான் போவணும்! திருப்பூர் வாட்டர்ல லுக்கோமியா டோமியா கலந்துடுச்சு போல! நொண்டிக்குதிரைக்கி சருக்குனதே சாக்காடுன்னு சாய்ஞ்சிட்டேன்! சாச்சுப்புட்டியே பங்காளி!

00000000

-ஒரு பாட்டு படீறி!
-என்ன பாட்டு படிக்க?

-நம்ம பாட்டுதான்!

-நம்ம பாட்டுதான் ஊரே கேளு நாடே கேளுன்னு ஆயிப்போச்சே!

-அப்ப நம்ம குடும்ப பாட்டை மாத்தணுமாடி?
-மாத்திட்டேன் படிக்கவா?
-
பாட்டே வேணாம்டி!

000000000

கோழிக்கொழம்புன்னா மறுபேச்சு பேசாம ஊத்தி சாப்பிட வேண்டியது தானே? அதென்ன பக்கத்தூட்டுல என்ன கொழம்புன்னு கேள்வி? அவிங்க கெடக்கறி கொழம்புன்னு சொன்னா செரின்னுட்டு உட்டுப்போட்டு போறத உட்டுப்போட்டு டவராசெட் எடுத்துட்டு போயி துளி சாறு வாங்கிட்டு வான்னா என்ன அர்த்தமுன்னு வேண்டாம்? நாயிக்கி ஊத்துறதுக்கு காத்தால மிச்சம் வெச்சிருப்பாங்க அவுங்க! வேணா காத்தாலிக்கி போயி வாங்கியாறேன்!

00000000

அலைபேசியில் இறந்து போன நண்பர்களின் எண்களையும் பெயரையும் நிரந்திரமாய் நீக்குகையில் ஒரு நொடி அவர்கள் புன்னகைத்து விடை பெறுகிறார்கள்! (மூன்று நண்பர்களை இன்று தான் டிலைட்டினேன்)

00000000

தோழர் பல்லடம் ராசுவுடன் வெற்றிலை மென்றபடி!


யக்கா! பஸ்டாண்டுல கூட்டுற பொம்பளக எல்லாரும் பெரிய இவளுகளான்னு அந்தா கடை போட்டு உக்காந்திருக்கான்ல அவன் சொன்னான்க்கா! நான் பொய் சொல்லுவனா? ஏக்கா உங்கிட்ட எத்தினி நாளு நான் பொய் சொல்லியிருக்கேனக்கா? இந்தா இவ கேக்கறா நீ ஆம்புளையா? இல்ல டூப்ளிகேட்டான்னு! நீயே சொல்லீருக்கா நான் டூப்பிளிகேட்டான்னு! அந்தா உக்காந்திருக்கானே எடுபட்ட காசி! அவஞ்சொல்றான் தண்ணியப் போட்டா ஒரு மாதிரி நான் பேசுவனாம்! தண்ணி போடலின்னா ஒரு மாதிரி பேசுவனாம்! இது எந்தூரு நாயமக்கா?
(ராசு திருப்பூர் பழைய பேருந்து நிலையம் வந்து சேரும் வரை அடியேன் கேட்ட வஜனம்கள்)

000000000Post Comment

1 கருத்து:

-'பரிவை' சே.குமார் சொன்னது…

நல்ல பகிர்வு...
வாழ்த்துக்கள்.