சனி, நவம்பர் 15, 2014

முகநூல் பதிவுகள் நவம்பர் 2014


சமீபத்திய திரைப்படங்கள்!

யான், தெரியாம உன்னை காதலிச்சிட்டேன், அமர காவியம் போன்ற படங்கள் எல்லாமே அவர்கள் உழைப்பிற்கு உண்டான பலனை கொடுத்ததா? அமர காவியம் காதலை மட்டுமே நேர்கோட்டில் சொல்கிறது! தெ.உன்னை காதலிச்சிட்டேன் படத் தலைப்பே கதையை சொல்லி விடுகிறது! குழந்தைத்தனம் கொண்ட காதலியை வைத்துக்கொண்டு நாயகன் படும் சிரமங்களை அழகாக சொல்லியிருந்தார்கள். யான் படம் பிலிம் காட்டி விட்டார்கள்.

தீபாவளிக்கு கத்தி வந்தது. வெற்றிப்படம் என்கிறார்கள். விஜய் படத்தின் சுறுசுறுப்புகள் இல்லாமல் தான் இருந்தது. பூஜை படம் சண்டை மாஸ்டருக்கு எழுதப்பட்ட கதை!


ஜீவா என்கிற படம் மோசமில்லை என்கிற தரத்தில் தெளிவான காட்சி அமைப்புகளுடன் இருந்தது! யாரு எக்கேடு கெட்டாலும் நாயகன் கிரிக்கெட்டில் வெற்றிப்படி ஏறினால் சரி என்கிற நிம்மதி பார்த்து முடிக்கையில் இருந்தது. .கி.பாண்டியா படம் டாப்! சிரிப்பு! சிரிப்பு! சிரிப்பொன்றே குறிக்கோள். இவை எல்லாவற்றையும் விட மெட்ராஸ் படம் சுவற்றுப்பிரச்சனை பேசியது அருமை! (சொன்ன விதமும்)

000000000000

யக்கா! பஸ்டாண்டுல கூட்டுற பொம்பளக எல்லாரும் பெரிய இவளுகளான்னு அந்தா கடை போட்டு உக்காந்திருக்கான்ல அவன் சொன்னான்க்கா! நான் பொய் சொல்லுவனா? ஏக்கா உங்கிட்ட எத்தினி நாளு நான் பொய் சொல்லியிருக்கேனக்கா? இந்தா இவ கேக்கறா நீ ஆம்புளையா? இல்ல டூப்ளிகேட்டான்னு! நீயே சொல்லீருக்கா நான் டூப்பிளிகேட்டான்னு! அந்தா உக்காந்திருக்கானே எடுபட்ட காசி

அவஞ்சொல்றான் தண்ணியப் போட்டா ஒரு மாதிரி நான் பேசுவனாம்! தண்ணி போடலின்னா ஒரு மாதிரி பேசுவனாம்! இது எந்தூரு நாயமக்கா?

(ராசு திருப்பூர் பழைய பேருந்து நிலையம் வந்து சேரும் வரை அடியேன் கேட்ட வஜனம்கள்)

000000000000

-நீங்க இங்க நிலம் வாங்குறது எதனாலன்னு டீட்டெய்லா சொல்ல முடியும்ங்ளா? மைக்கி கிட்ட வந்து சொல்லுங்க!

-அது வந்து பக்கத்துலயே மளிகை கடை இருக்குது! நிலம் வாங்குன அன்னிக்கே மூனு சாரப்பாம்பு புடிச்சேன். என் சம்சாரத்துக்கு சரவாங்கி இருக்குது. அதுக்கு சாரப்பாம்பு நல்ல உணவு. எப்பிடியும் நாலன்னம் கெடைக்கும் இங்க! சம்சாரம் நோவு சரியாயிடும்!

-! அப்படிங்களா?

-பாத்தீங்கன்னா சைட்ட ஒட்டியே சுடுகாடு இருக்குது! செத்தா வசதி பாருங்க! ஜம்முன்னு போயி படுத்துக்கலாம்! டவுன்ல மின்மாயானம் இருக்கு! அது சுடும்னு பயம் தான்!

0000000000000

-அவங்க கவிதை தொகுப்பு போடணும்னா இப்பிடி நல்ல கவிதை எழுதினா சுத்தப்படாதுங்க! போட மாட்டாங்க!

-ஐய்யோ! என்ன இப்டி மூஞ்சில அடிச்ச மாதிரி சொல்றீங்க? அப்ப இலக்கியம் இல்லீங்ளா நான் எழுதின கவிதைகள்?

-ஐய்யோ உங்களுக்கு எப்டி புரிய வெக்கிறதுன்னு தெரில! நீங்க எழுதினது கவிதைகள். அவங்க போடறது விதைகள்! உதாரணமாநீங்கள் வைத்திருக்கும் கோப்பையில் உள்ள மது காலை வேலையில் ஏன் மஞ்சள் வர்ணத்தில் இருக்கிறது? நீங்கள் வைத்திருக்கும் கோப்பையில் உள்ள மது மதியம் நெருங்குகையில் ஏன் கறுப்பு வர்ணத்தில் தெரிகிறது? நீங்கள் வைத்திருக்கும் கோப்பையில் உள்ள மது மாலை நேரத்தில் ஏன் மயிரு மாதிரி தெரிகிறது? என்று தொடர்ந்து எழுதி ரெண்டு பக்கமாச்சிம் டென் பாய்ண்ட்ல போடற மாதிரி வரணும்! கவிதையை எப்பயும் நீங்க செஞ்சே பழவிக்கணும்!

-அப்ப கவிதைகளை நான் கோணவாய்க்கால் பள்ளத்துல குக்கி எழுதுறதை மொதல்ல விடணும் போல இருக்கே!

-ஆமா! பொதுக்கழிப்பறையில குக்கி எழுதுங்க!


00000000000

வார்த்தைகளை வடைச்சட்டியில் கொட்டிக்குவித்து கொஞ்சமாய்
தேங்காய்த் துருவல் சேர்த்து கவிதைகளை சமைத்துக் கொண்டிருக்கிறேன்இந்த மூத்திரப்பை வேறு அடிக்கடி நிரம்பிக் கொள்கிறது இந்த மழையீரத்தில்மாடியிலிருந்து பார்க்கையில் சில இருசக்கர வாகனங்கள் தூறலிலும் சென்று கொண்டுதானிருக்கின்றன! கணவனை கட்டிக்கொண்டு காரிய நிமித்தமாய் செல்லும் மனைவிகள்! காடு மேடுகளில் கேளான் தேடும் சிறுவார்கள்! சேற்றில் சிக்கி முக்கிக் கொண்டிருக்கும் அம்பாசிடர்! குளிருக்கு மூலையில் சுருண்டே கிடக்கும் டைகர்! பள்ளி இல்லையென்றானதும் போரடிப்பதாக சொல்லும் இவன்! மூக்கைச் சிந்திக் கொண்டேயிருக்கும் மம்மி! எப்போதும் போல சலிப்பாய் பச்சைப்பயிறு கொழம்பு இறுத்த ரசம்திட்டம் தீட்ட வேண்டும் சீக்கிரம்! கருவாடு வறுத்து போசியில் போட்டு மழையீரத்தில் பியர் குடிக்க தெற்கே எட்றா வண்டியெ கைப்புள்ளே! வேறு வழியேதுமில்லை ராசு! வெறு சந்தே இல்லை வெளங்கு!

0000000000000

Post Comment

1 கருத்து:

'பரிவை' சே.குமார் சொன்னது…

அனைத்தும் அருமை...