சனி, பிப்ரவரி 14, 2015

சும்மா இரண்டு போட்டாக்கள்.


பிரச்சனைகள் புதுப் புது விதமாய் ஊருக்குள் நடந்து கொண்டே தான் இருக்கும்! நேற்றிரவு இவன் மாடியில் கிடந்தான் காவலுக்கு கீழே இராமல். சரி செயினை மீண்டும் அத்து விட்டு ஆடுகளை துரத்த ஓடி விட்டானோ? என்று தான் நினைத்தேன். அப்படியல்ல ஊருக்குள் மசை பிடித்த நாய் சிலரின் நாய்களை மண்டைக்கவ்வு கவ்வி விட்டதாம். ‘நாம் பிரச்சனைய பாத்துக்கறேன் தள்ளி அக்கட்டால போங்கடா!’ என்று முன்னால் செல்வான் இவன்! அதனால் தான் இவன் டைகர். இன்னமும் அந்த நாயின் நடமாட்டமிருப்பதால் பாதுகாப்பான பகுதியில் இப்போதைக்கு இவன் இருக்கிறான். எட்டு போட்டு லைசன்ஸ் வாங்கிடலாம்னா ராஸ்கல் எட்டு போட முழிக்கிறான். சொல்லிக் கொடுக்கையில் சரியாக பின்னால் ஓடி வந்து எட்டு போடுகிறான். அதிகாரி முன்பாக சொதப்புகிறான். லைசென்ஸ் இல்லாமல் நான் படும் வேதனை…!!!!
000

விசயமங்கலம் சந்தைக்கடுவு வாரம் ஒரு முறை செவ்வாக்கெழமை கூடுவது. அன்று மாலை ஐந்தரை மணியளவில் அருகிலிருக்கும் ஏரி மேல் நான் ஏன் சென்றேன் என்பதை சொல்லமாட்டேன். போக என் செல்போன் இப்படி அழகாய் எடுக்கும் என்பது அப்போது தான் தெரியும். சந்தை இன்னும் உள்ளே இருக்கிறது. இது வெளிப்புறம். அடுத்த படம் நூலகம் அருகில் நின்று சும்மா ஒரு தட்டு!

0000

Post Comment

1 கருத்து:

பரிவை சே.குமார் சொன்னது…

போட்டோக்களும் விஷயமும் நன்று.