செவ்வாய், பிப்ரவரி 17, 2015

இரண்டு பழைய புத்தகங்கள்!


கலைக்க முடியாத ஒப்பனைகள் என்கிற சிறுகதை தொகுப்பு வண்ணதாசனின் முதல் சிறுகதை தொகுப்பு. இது எப்படி எடைக்கு போடாமல் விட்டேன் என்றால் இதன் தயாரிப்புக்காக! பிருந்தாவனம் அச்சகம் சேலத்தில் பரந்தாமன் அவர்களால் வெகு சிரமத்திற்கிடையில் நடத்தப்பட்டு வந்தது  எழுபதுகளில். அவர் ஃ என்கிற சிற்றிதழை கொண்டு வந்தவர். லினோ கட், வுட் கட் என்கிற வகைகளில் ஓவியங்களை கீறி ட்ரெடில் மிஷினில் அச்சடித்து புது விதமாக அவர் தன் இதழ்களை கலை நயத்துடன் கொண்டு வந்தார். அக் பிரதிகள் எடைக்கு போட்டாகி விட்டது. இருந்தும் அதன் கடைசி இதழ் அவரது துக்ககரமான இலக்கிய தாகத்தை பேசி வந்த இதழ் கைவசம் கிடக்கும். பஞ்சம் பிழைக்க போகிறேன் என்று அதில் கடைசியாக குறிப்பிட்டிருந்தார். ஃபரந்தாமன் என்றே அழைக்கப்பட்டவர். எனது நடுகல் இதழில் லாரி டியூப்பை கீறி வெட்டி ஓவியமாக்கி அதை ட்ரெடில் மிஷினில் ஏற்றி சில ஓவியங்கள் செய்து ஓட்டி கொண்டு வந்தேன். அக்காலகட்டத்தில் ப்ளாக் தயாரிப்பு செலவுகள் அதிகம் என்பதால் இப்படியான முயற்சிகள் சிற்றிதழ்களில் நடந்தேறின. அஃ இதழ் இவைகளுக்கெல்லாம் ஒரு வழிகாட்டி!


கலைக்க முடியாத ஒப்பனைகள் 1976 பிப்ரவரியில் வந்த புத்தகம். இந்த தயாரிப்புக்கு பரந்தாமன் டெல்லியில் பரிசு பெற்றார்வண்ணதாசன் இந்த புத்தகத்தை கண்ணில் பார்ப்பதற்குள் பொறந்த நாள் கண்டு விட்டதாக (அப்படித்தான்) கூறுகிறார் தன் கடிதங்கள் வாயிலாக! இருவருக்குமான கடிதப் போக்குவரத்து பெருந்தன்மையாக நடந்திருக்கிறது புத்தகம் கைக்கு வரும் காலம் வரை. தயாரிப்புக்கு 2 வருட காலங்கள் ஆகியிருக்கிறதுபரந்தாமனின் ஒரு வார்த்தை.. “எனக்கு பசித்துக் கொண்டே இருக்கிறது’’.  ஒன்றை இப்போது கவனிக்கிறேன். புத்தகத்தில் பக்க எண்களே இல்லை! இருந்தும் அப்போதைக்கு இது பெரிய விசயம் தான்

000


ரமேஷ் : பிரேம் என்ற பெயருக்கு அவர்கள் தாவும் முன்பாக ப்ரேதன் : பிரேதா என்கிற பெயரில் எழுதிய முதல் நாவல். கிரணம் வெளியீடு 1992. சமயத்தில் கிரணம் சிற்றிதழ் வாசகர்களை மிரட்டிக் கொண்டே வந்ததுவிசயம் என்னவென்றால் உள்நுழைந்து வாசிக்க இன்னமும் தடுமாறிக் கொண்டிருக்கிறேன் என்பது தான். ஆனால் ஒரு கவர்ச்சி இருக்கிறது இந்தப் புத்தகத்தில். அதாவது வாசிக்க முயற்சி எடுக்கச் சொல்லி கூப்பிட்டுக் கொண்டேயிருக்கிறதுநாவலில் வரும் கவிதைகள் தான் எனக்கு ஒரு வித ஒவ்வாமையை தந்து கொண்டே இருக்கிறதுகபாலம், பிரக்ஞை, மூர்ச்சை, கருதிரவம், சூன்யம், அரூபம்,ஜீவ நிணம், பிம்பங்கள், சூன்யக் குமிழிகள், ஆதி புலம்பல், அணுவின் உட்சிதை, உருவுகளின் உலகில், இப்படி வார்த்தைகள் வார்த்தைகள் வார்த்தைகள்!! இதன் இரண்டாவது பதிப்பு வந்ததா?

1985ல் ஆக்கம் செய்யப்பட்டு மறு ஆக்கம் 90ல் ஒருமுறை என்ற குறிப்பு காணக்கிடைக்கிறது!

000

Post Comment

கருத்துகள் இல்லை: