சனி, ஏப்ரல் 11, 2015

நொங்கு வேர்க்குருவுக்கு மருந்து!


நொங்கு தின்னவன் ஒருத்தன் போயே போயிட்டான்! நோண்டித் தின்னவன் கடைசியில் அகப்பட்டுட்டான்! –பழமொழி ஒரு காலத்தில்.
பனைகளின் அழிவுக்குப் பிறகும் ஆங்காங்கே நொங்கு விற்பனை சாலையோரங்களில் நடந்து கொண்டுதான் இருக்கிறது. நான் நினைக்கிறேன் இவைகளை என்ன கேரளத்திலிருந்தா இறக்குமதி செய்து கொண்டு வந்து சாலையில் போட்டு விற்கிறார்கள்? பனங்கிழங்கு ஒரு காலத்தில் இசிபட்டுக் கிடந்தது. இருக்கும் கொஞ்சம் மரத்திலிருந்து நொங்கு வேண்டுமென நொங்கிய பிறகு கிழங்குக்கு வழியில்லை!

வீட்டின் சட்டகங்களுக்கு பனைமரக்கைகள் ஒரு காலத்தில் பயன்படுத்தப்பட்டன. அவைகளில் கரையான்கள் ஏறுகின்றன என்று இரும்புக் குழாய்களுக்கு வந்து விட்டோம்.

தோட்டங்களில் இருந்த கிணறுகளில் தண்ணீர் இல்லாமல் போனதால் தென்னைகளை இழந்தவர்கள் தங்களிடமிருந்த நிலத்தை ஏக்கராவுக்கு இவ்வளவு என்று விற்றும் விட்டார்கள்.

ஆகவே சீக்கிரம் உங்கள் குழந்தைகளுக்கு நொங்கு வாங்கிக் கொடுங்கள்! அப்படின்னா என்ன டாடி? என்று கேட்காமல் இருக்க!
Post Comment

கருத்துகள் இல்லை: