செவ்வாய், ஜூன் 23, 2015

முகநூல பதிவுகள் 3
கண்டங்கத்திரி செடி வாழ்நாள் காலம் பற்றி தெரியாது. ஆனால் நான்கு வருடங்களில் நான்கு செடிகள் என் வீட்டின் முன்பாக வந்திருக்கிறது வெவ்வேறு இடங்களில். வயிற்றிலிருக்கும் புழு பூச்சிகளை கொன்று விடுவதாக இதன் காய்களுக்கு மருத்துவ குணம் இருக்கிறது. காய்ந்து போன காய் விதைகளை தீயிலிட்டு வாயினுள் புகை பிடித்தால் பற்களில் உள்ள புழுக்கள் கொட்டி விடுகின்றன என்கிறார்கள்.

இப்போது வந்திருக்கும் செடியில் வாரம் ஒருமுறை 8 காய்கள் பறிக்கலாம். இதை வீட்டில் யாரும் தொடுவதில்லை. வளர்த்தியே ஆகவேண்டுமென்று காட்டில் வைத்தால் வருவதில்லை. அதுவாக வந்தால் மட்டுமே உயிர் பிழைத்து நிற்கிறது! சாப்பிடுகையில் உலகக் கசப்பு என்றால் என்ன என்பதை அறிந்து கொள்ளலாம்!


000

மாம்ஸ் : என்னா மாப்ளே சூனு ஒன்னாந்தேதில இருந்து மண்டையில சட்டி கமுத்தீட்டு தான் வண்டியோட்டோணுமுன்னு சொல்றாங்க!

மாப்ஸ் : ஆமா மாமா, வாங்குனது அட்டாரில கெடக்குது.. இனி தேடி எடுத்து மாட்டிட்டு போவணும்!

மாம்ஸ் : இனி நானு குடுச்சுட்டு மண்டைல மாட்டீட்டு தைரீமா போலாம்னு நினைக்கேன்! மண்டையில சட்டி இருக்கான்னு தான அவிங்க பாப்பாங்கெ! நிறுத்தி கழட்டச் சொல்லி ஊதியா காட்ட சொல்லுவாங்க?

மாப்ஸ் : ஏம் மாமா குசும்மு உங்க கூடயே பொறந்ததா? இல்ல இடையில தானா? பொறவுக்கு வர்ற வண்டி கிட்ட வந்து ஆரனடிச்சாதான் இனிமே தெரியுமேன்னு நான் கவலையில கெடக்கேன்.. உனக்கு உம்பாடு!

000


மாம்ஸ் : மாப்ளே! இனிமே எல்லாரும் கையில சட்டி வச்சிட்டு தான் லிப்ட்டு கேப்பாங்க போல!

மாப்ஸ் : என்ன மாம்சு புதுசா இப்ப ஒன்னு அவுத்து உடறீங்க?

மாம்ஸ் : ஆமா மாபள! எங்கிட்ட சாக்னா கடையில ஒருத்தன் சொல்றான்.. அம்பதாயிரம் குடுத்து வண்டி வாங்க நான் என்ன முட்டாளா? ஆயிரம் ரூவா குடுத்து ஒரு சாட்டி வாங்கிட்டன்னா யாரை லிப்ட்டு கேட்டாலும் நிறுத்துவாங்க! அப்படின்னு தெளிவா பேசுறான்!

மாப்ஸ் ; அதுக்கு நீங்க என்ன முடுவு பண்டியிருக்கீங்க?

மாம்ஸ் ; சட்டிக்கி ஆர்டர் போட்டுட்டேன்!

மாப்ஸ் : ஆமா, சட்டி சட்டின்றீங்களே அது என்ன?

மாம்ஸ் : அதான் மாப்ள எலிமண்டு!

000


Post Comment

கருத்துகள் இல்லை: