சனி, ஜூன் 27, 2015

KAVITHAI ஒன்று


குக்கிராமத்தில் எல்லா குடும்பங்களும்
எதையேனும் ஒன்றை செல்லப்பிராணிகளாக
வளர்த்திக் கொண்டேயிருக்கிறார்கள்!
கோழி வளர்ப்பவர்கள் இரவில் அதைத் தேடி
பாம்பு வருவது பற்றி அலட்டிக் கொள்வதில்லை!
ஆடு வளர்ப்பவர்கள் ஒருசேர சோகை நோயில்
கூட்டமாய் இறப்பது பற்றி அலட்டிக் கொள்வதில்லை!
நாய் வளர்ப்பவர்கள் சாலையில் வாகனமொன்றில்
அடிபட்டு இறந்து விடுவது பற்றி அலட்டிக் கொள்வதில்லை!
பூனை வளர்ப்பவர்கள் உயிரோடு பாம்பை கவ்விக்
கொண்டு வீடு வருவது பற்றி அலட்டிக் கொள்வதில்லை!
கோழியை அடுத்த வீட்டு வளர்ப்பு நாய் கவ்விச்
செல்வதைக் கண்டால் நாயை வளர்ப்பவரிடம்
அதை கட்டி வைத்து வளர்த்தச் சொல்லி விட்டு
சண்டையை ஒன்றுமில்லாமல் ஆக்கிச் செல்கிறார்கள்!
இப்படியான ஊரில் முதலாக ஒரு சிறுத்தையை
கொண்டு வந்து வளர்த்தது ஒரு குடும்பம்!
எல்லோரும் தங்கள் வளர்ப்புப் பிராணிகளில் ஒன்றை
சிறுத்தையின் தீனிக்கு கொண்டு சென்று கொடுத்தார்கள்.
பின்பாக வேறொரு குடும்பம் ஒரு யானையைக்
கொண்டு வந்து வீட்டின் முன் கட்டி வளர்த்திற்று!
எல்லோரும் யானை பார்க்க அவர் வீட்டின் முன்
குவிந்து அதை பிளிறச் சொன்னார்கள்! யானை
சமய சந்தர்ப்பமில்லாமல் பிளிறிற்று! –பக்கத்து வீட்டாரின்
விருப்பத்திற்காக சிறுத்தையை குறைந்த விலைக்கு
கொடுத்த குடும்பம் ஆஸ்திரேலியா சென்று கங்காரு
ஒன்றை குட்டியோடு கொண்டு வந்தது வீட்டுக்கு!
குட்டி அதன் பையில் அமர்ந்து ஊராரை வேடிக்கை பார்த்தது!
தன் வளர்ப்பு மிருகமான யானையை பக்கத்து வீட்டாருக்கு
குறைந்த விலைக்கு கொடுத்த குடும்பம் ஒரு நாள்
ஒட்டகச் சிவிங்கியை கொண்டு வந்து வீட்டின் முன் நிறுத்திற்று!
சிறுத்தை பசி பொறுக்காமல் ஒரு நாள் ஆட்டுப்பட்டி
ஒன்றில் நுழைந்து ஆடுகளை கவ்வி ருசித்தது! –பட்டிக்காரர்
சிறுத்தையை கட்டி வைத்து வளர்க்கும் படி அன்பாக
அவருக்கு உத்திரவிட்டார்! –ஏமார்ந்த சமயத்தில் புலி
கங்காருவை அடித்துச் சாப்பிட்டதும் தான் பெரிய
கம்லெய்ண்டை அவர் ஊராட்சித் தலைவரிடம்
கொண்டு சென்றார். –ஊர்த்தலைவர் ஊருக்குள் இனி
யாரும் வளர்ப்பு மிருகங்களை வளர்த்தல் கூடாது!
என்று உத்திரவிட்டார். யாரேனும் வளர்த்துவது
தெரிந்தால் மேலிடத்துக்கு தகவல் அனுப்புவேன், என்றார்!
ஊரார் அவர் பேச்சுக்கு மதிப்பளித்து விவசாயத்தில்

இறங்கி பயிர்களை வளர்த்த கண்ணும் கருத்துமாக இறங்கினார்கள்!

000Post Comment

1 கருத்து:

பரிவை சே.குமார் சொன்னது…

கவிதை அருமை.
வாழ்த்துக்கள்.