உங்கள்
அறைக்குள் பேய் இருந்ததென்றால்
முதலாக
அது பேய் தானா? என்பதை உறுதி
செய்து
கொள்ள வீட்டிலுள்ள புகைப்படங்களை
நீங்கள்
கழற்றிவிட வேண்டும்! சுவற்றில்
முகம்
பார்க்கும் கண்ணாடி கூட இருத்தலாகாது!
பேய்களுக்கு
தங்கும் வசதியை நீங்கள் உடனே
ஏற்படுத்திக்
கொடுக்கும் முன்பாக அது என்ன
காரணம்
முன்னிட்டு வீட்டில் இருக்கிறது?
என்பதை
தெளிவுபடுத்திக்
கொள்ள வேண்டும்.
பேய்களால்
உங்களை கொல்ல முடியாது
என்பதால்
உயிருக்கு பயப்பட வேண்டியதில்லை!
உங்களிடம்
விளையாட வந்த பேய் என்றால்
அதற்கெல்லாம்
நேரமில்லை என்பதை உறுதியாக
நீங்கள்
தெரிவித்து விட வேண்டும்! வீட்டினுள்
நுழைந்தவுடன்
உங்களுக்கு ஊளை
சப்தம்
கேட்டால் அது ஒரு நாயின் ஆவியாக
இருக்கலாம்!
இரண்டு எலும்புத்துண்டுகள் போதுமதுக்கு!
பெண்ணின்
அழுகை சப்தம் கேட்டால் அது என்னவோ
சேதியை
உங்களுக்கு சொல்லப்போகிறது என்றே அர்த்தம்!
அது
பழிவாங்கச் சொல்ல்லாம் பலரையும் உங்களிடம்!
அது
வீண் வேலை என்று சொல்லி நீங்கள்
ஒதுங்கி
விடுவது தான் உசிதம்! அல்லது வீட்டை காலி
செய்து
விட்டு வேறு வீடு பார்த்து சென்று விடுவது
அதை
விட உசிதம்! பேய்களுக்கு தாங்கள் பேய்கள் தான்
என்று
தெரிந்து கொண்டே உங்களை மிரட்டப் பார்த்தால்..
பீரோவை
நகர்த்தினால், கட்டிலை அந்தரத்தில் மிதக்க விட்டால்
அதைக்
கண்டு கொள்ளாதீர்கள்! அவற்றைப் பார்த்துச் சிரிக்க
ஒரு
குழந்தையை அந்த அறைக்குள் அனுப்பினால் போதும்!
பேய்கள்
என்று தங்களை அறியாத பேய்கள் தான் இந்த
உலகில்
பாவம் செய்தவை! அவைகளுக்கு பார்ப்பன எல்லாமும்
பயம்!
பயம்! பயம்! அவைகள் இருண்ட அறைகளில்
எந்த
நேரமும் மூழ்கிக் கிடக்கின்றன! அவைகளின் கையில்
ஒரு
சிலுவையையோ அல்லது எலுமிச்சை கனியையோ
கொடுத்து
அவற்றின் பயத்தை நாம் எப்போது வேண்டுமானாலும்
போக்கி
அவற்றின் கைப்பிடித்து வெளி உலகிற்கு கூட்டி வந்து
ஷாப்பிங்
கூட்டிச் செல்லலாம்! – ஆகவே
உங்கள்
அறைகளில் பேய்களின் நடமாட்டம் இருப்பதை
சப்தங்களைக்
கொண்டு நீங்கள் உணர்ந்தீர்கள் என்றால்
மந்திரித்த
கயிறு இருந்தால் அதை அதன் கையில் கட்டி
அமைதியாய்
இருக்கச் செய்யுங்கள்! ஏனெனில் பேய்கள்
பாவப்பட்ட
சீவன்கள்!
00000000000
முதன்
முதலாக செல்வி ஆபீஸில்
சரஸ்வதி
பூஜைக்காக நாற்காலி மீது
ஏறி
நின்று செல்ப்பிலுள்ள பழைய
புத்தகக்
கட்டுகளை தூசி தட்டிய போது
முதல்
தும்மலை போட்டார்.
அலர்ஜியோ
என்று பயந்து நிற்கையில்
அவர்
இருமவும் செய்யவே ஆபீஸ்
பணியாட்கள்
அவரை வீடு சென்று
ஓய்வெடுத்துக் கொள்ளவும்
நகரில்
பிரபலமான
வைத்தியரை சந்தித்து
உடலை
காட்டவும் அனுப்பி வைத்தனர்.
செல்வி
தன் ஸ்கூட்டியில் நகர வீதியில்
பயணப்படுகையில் இருமி
இருமிச் சென்றார்!
செல்விக்கும்
இருமல் வரும் என்பதை
முதலாக
உணர்ந்த ஆபீஸ் பணியாளர்கள்
தங்களுக்கு
மாத மாதம் சம்பளம் தரும்
செல்வியம்மா
சீக்கிரமே உடல் நலம் பெற்று
ஆபீஸுக்கு
திரும்ப வேணுமென்று கடவுள்
கிருபையை
வேண்டினர்!
000