செவ்வாய், டிசம்பர் 15, 2015

2015 டிசம்பர் கவிதைகள்!


அவிங்கெ பாத்துட்டே தா இருப்பாக!
நாமளா பாத்துத்தான் பண்டிக்கோணும்!
அவிய ஆரம்பத்துல இருந்தே அப்பிடித்தான்!
கொஞ்சம் வெக்கப்படுவாக! அப்புறமேட்டு
பாத்துக்கக்கா.. காஞ்ச மாடு நிதுல
பூந்த மாதிரி பூந்து பொழந்துடுவாக!
நாந்தா சொல்றனில்ல... அதது

அததுக்குதா உபயோகப்படுமுன்னு!

000

காட்டுக்குள்ள ஆயிரத்தெட்டு பேரோட 
குருவிக சுத்துறதை
கவிஞன் கவிதையா வடிக்கிறானே.. 
டேய்! நீ எங்கடா ஏசில
க்கோந்துட்டு காடை, கெளதாரிய 
அதனோட புத்திய தெரிஞ்சிக்கிட்டே?
காடை புடிக்கிற வித்தைய எவஞ் 
சொன்னான்னு கவிதெ பண்றே?
காடைக்கி வெங்கச்சாங்கல்ல 
டொக்கு டொக்குனு தட்டுற வித்தெ தெரியுமா
மழை ஓஞ்ச நேரத்துல செம்பூத்து புடிக்கலாம்னு தெரியுமா?
றெக்க நனைஞ்சா அது ஐயோன்னு ஆயிடும்
அள்ளி எடுத்துட்டு வரலாம்!
அணிலை எப்டி புடிக்க?
காரோட்டு தெரியுமா? காரோட்டுனா காதல்
ஒருத்திக்கி ஒம்போது பேரு!
வலைய கட்டி வச்சம்னா 
அதுக தானா வலையில வந்து வுழும்!
வுடுப்பா! ஒரு கண்மணிய வரச்சொல்லி 
செலவு பண்டி பெலுந்துறை பஸ் ஏறி வந்துட்டு .. 
ஐ ஆம் வெய்ட்டிங் ஃபார் யூ?
அப்படினு சொன்னவளை தாட்டி உட காங்கேயம் 
போயிட்டேன்னு சொல்லவும் ஒரு நிந்த நிது வேணும்னு ரகுக்கு தெரியு.. வால்பையனுக்கு தெரியு!
ஐ ழாவ் யூ நட்பூஸ்!

000

நாந்தா சொல்றேனுங்களே... ஏம் புரிஞ்சுக்க மாண்டீன்றீங்கொ?
எனக்கு அதுன்னாவே புடிக்காது
எப்பாச்சிம் ஒரு விசுக்கான்னா
.கே! ஒன்னும் பிரச்சனெ இல்ல
எப்பயுமே அதுன்னா
எனக்கு வாந்தி தா வருதுங்கொ
நீங்கொ தா ஊட்டுல
ஆளு வச்சிருக்கீங்கள்ளோ! அப்புறம் ஏன் 
என்னெய போனு போட்டு தும்பம் பண்ரீங்கொ?
எதுக்கு நாளைக்கி 500 ரூவா 
எடுத்துட்டு பத்தைரைக்காட்ட கூப்புடுங்கொ!
வர்றப்ப ஓல்டு மங்கு ஒரு கோட்டரு 
கடெ நீக்குன ஒடனே
வாங்கீட்டு வந்துருங்கொ
500 எதுக்குன்னா.. இந்த மாசம் சீட்டு
வேற வருதுங்கொ

000

எல்லாரும் டாஸ்மாக் தான் சென்று
கரேச்சாக சில்லரை கொடுத்து வாங்குகிறார்கள்!
எல்லாரும் தான் பக்கத்து வீட்டு மேல
கண்ணு வச்சிருக்காங்கள்!
எல்லாருக்கு தான் நய்ன்ல இருந்து மூனுஷா வரிக்கும்
முட்டிக்குது! பக்கத்தால கூட சொல்ல மாண்டீங்றாங்க!
காதலு எல்லாருக்குள்ளவும் இருக்கு! அழகான பொண்ணப் பாத்தா
முட்டிக்குது! ஆனா பொது மனிதனா நடிக்குறாங்க!
உம்மையச் சொல்லணும்னா நீ எத்தினி வாட்டி
கைவச்சிருக்கே உம்படதுல? நண்பன்ட்டயாச்சிம்
உம்மையா இருங்கப்போவ்! ஐ ழாவ் பிரேமா! ஐ ழாவ் மல்லிகா!

000

என்னா பீப்புக்கு லவ் பண்றோ?
என்னா பீப்புக்கு லவ் பண்றோ?
செவுடாடா நீ? கண்ணு தா உனுக்கு
போச்சீன்னு நெனச்சேன்! இப்ப காதும் போச்சா?

000

அப்பூஞ் சொன்னேங் கேட்டியா?
ரவ்வு பண்ணாதடா.. ரவ்வு பண்ணாதடான்னு!
இப்பப் பாரு தாவாங்கடைக்கி கீழ முடி மொழைக்குது!

000

வாங்க மாமா சித்தெ தாயக்கரம் ஆடுவோம்!
நீங்க தோத்தா வரிசியா கழட்டிக்கோணும்!
நாந் தோத்தன்னா வரிசியா கழடிக்குவேன்
டீலா நோ டீலா!
டீலு தாண்டி! அதுக்கேன் தாயக்கரம் ஆடணும்?

000

எங்காத்தாவுக்கு எம்மேல ரொம்ப் பிரியொ!
எங்க அப்பிச்சிக்கி எம்மேல ரொம்ப பிரியொ!
எங்காத்தா அழகா சொல்லுவா தண்ணி பைப்பு கிட்ட
கோந்திருக்கப்ப! நீ இவளையு கட்டிக்க! அவளையு கட்டிக்க!
ரெண்டு பேரு உனக்கு சம்பாரிச்சு கொணாந்து
ஊட்டி உடுவாளுகொ! அவ்ளோ பிரியம் இவளுகளுக்கு
உம்மேல பாத்துக்க! அத நா கண்ணுல பாத்துட்டு செத்துடறேன்டா!
ஆத்தோவ்! நீ கண்ணுல பாக்காமயே போயிட்டே!

அப்பிச்சி தா என்னிய கூட்டிப்போயி வெள்ளப்படங்காட்டுனாரு!
அப்பிச்சி இதெ ஏன் காத்தால மட்டுலு காட்டுறாங்க?
மத்தியான ஷோ வுக்கு எமுச்சியாரு படங்காடுறாங்க?
ஏன்னா நாம காத்தால மட்லுதா இதப்பாக்கோணூம்!
மத்தியானத்திக்கி பொழுதோடத்திக்கி நல்லவங்க வந்து
க்கோந்து பாப்பாங்க! படம் முடிஞ்சுது நாம போலாம்!
அந்தக்காவ அந்தண்ணன் என்னா பண்ணாரு?
பண்ணிட்டாரு உடு.. உனுக்கு புரோட்டா கட்டிக்கலாம்
மத்தியானச் சோத்துக்கு!
அப்பிச்சி ஐ ழாவ் யூ! மேல இருந்து என்னெ பாத்துட்டு இருக்கியா?

000

தொவைக்கிறக்கு வந்தனுங்கொ!
முட்டுத்துணி இருந்தா இவத்திக்கிகாலிக்கி கல்லு மேல
கொணாந்து போடுங்கொ! தொவச்சி காய வச்சிட்டு போயிடறேன்!
பழைய சோறு எதாச்சிம் இருக்குமுங்களா?
அந்த எழவெடுத்தவன் தான் கோவிச்சுட்டு
ஊட்ட உட்டு போயிடுதுங்களே நாயி! நானு ரெண்டு
பொடுசுங்கள வெச்சுட்டு எப்பிடித்தா பொழப்பெ
ஓட்டுவனேன்னே ஒன்னு நெகா சிக்கல போங்க!
அவிய ஊட்டுல இல்லியாட்ட இருக்குதுங்கொ?
இருந்தா ரெண்டு டமாசு பேசுவாங்கொ!
துளி மோரு இருந்தா ஊத்துங்களே! குடிச்சிப்போட்டு
எம்பட சோலியப் பாக்கேன்!

000

கம்முனு பொட்டாட்ட உக்கோருங்க சாமி!
இல்லீன்னா கத்தி காதை வெட்டிப் போடும்!
உங்கொப்பாரு இருந்திருந்தா இந்த நேரம்
சோக்கா எம்பட பேரனுக்கு கிருதா வுட்டு
ஜம்முனு வெட்டி உடு அப்புக்குட்டின்னு சொல்லுவாங்கொ!
அவுருதான் போயிச் சேந்துட்டாருங்களே!
அடக் கம்முனு கோருங்க! தலைய அப்பிடியு இப்பிடியு
ஆட்டாதீங்கொ! இதென்ன எழவா இருக்குது இவுரோட?
கம்முன்னு உக்கோருங்க சாமி! இன்னம் பத்து ஊட்டுக்கு
நான் போயி செறச்சு உட்டுட்டு பொழுதுக்குள்ள வரோணும்!
வயசாயிப் போச்சுங்களா.. அதான் கண்ணு கொஞ்சம்
மங்கலா தெரியுது! டாக்குட்டரு கிட்ட போனேஞ்சாமி
போனவாரம் நானு! அவுரு வேண்டீதில்ல போடான்னு
சொல்லிட்டாருங்க! சேவிங்கி பண்டுறப்ப கத்திக் காயம்
வுழுதுடான்னு சொல்றாங்க! என்ன பண்றதுங்க சாமி!
இப்ப டவுனுக்கு போயி செறச்சீங்கன்ன முழு
நோட்டை எடுத்துக் குடுத்துட்டு தான வரோணும் நீங்க!
வருசம் ஒருக்கா 20 படி அரிசி குடுக்கீங்க! செறச்சா
அஞ்சும் பத்தும் குடுத்தா.. சாமீன்னுட்டு வாங்கிட்டு
போயிடறேன். அவ்ளோதானுங்க உங்குளுக்கு!
நீங்க உக்கோர்றீங்களா எசமான்?

000

குத்தடி குத்தடி ஜெயிலக்கா..
பந்தலிலே பாவக்கா..
தொங்குதடி லோலாக்கு...
உங்கொக்காக்கு வேற வேற வேலையே
இல்லியா ஜெயிலக்கா? பாத்து
பொழைக்கிற வழிய சொல்லிக் குடுங்க்கா!

000

எங்க மாமனாரு இன்னம் மரமெறுராரு!
வேண்டாம்னு தான் சகளை சொல்றாரு.
பனங்கருப்பட்டி கெடைக்கிறதே இல்ல!
கள்ளு குடிக்க அப்பப்ப ஆசெ வந்தா
வேலந்தாவளம் போவேண்டிதா இருக்கு!
அங்கியு மாத்திரை போட்டு ஊத்துறாய்ங்கெ!
வவுத்துல பீச்சுது! நல்லதுன்னு நெனச்சு நாசமாப் போறேன்!
மாமனாருக்கு ஒடம்பு செரியில்லன்னா
ஐய்யோன்னு காப்பாத்த ஓடிர்றேன்!
காரணமெல்லா இப்ப உங்களுக்கு தெரிஞ்சிருக்குமே!

000

அம்மாக்கு ஓட்டு போட்ட நான்
ஆசையாச் சொல்றேன்...
ஐ லவ் யூமா!

000Post Comment

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

நிந்த நிது இருக்கே நிந்த நிது ...அதாம் ச்சு கொளுப்பு...மம்மானியா இருக்குங்கோ உங்குளுக்கு