வியாழன், டிசம்பர் 17, 2015

டிசம்பர் கவிதைகள் 5வெள்ளம் வடிந்த பிறகு
இறந்த உடல்களை
அப்புறப்படுத்தும் பணியில்
பணியாளர்கள் இருந்தார்கள்!
தனக்கு மனப்பிறழ்வு உண்டென
அறியாத ஒருவர் ஒரு குழந்தையின்
உடலை கையில் வைத்தபடி
உங்கொம்மா யாரு சாமி? என்று

கேட்டபடி இருந்தார்.

000

வளைந்து செல்லும் அந்த நதி
தன் போக்கில் சப்தமேதுமின்றி
ஓடிக் கொண்டிருக்கிறது! -அது
உங்களை எப்போதும் பின்தொடர்வதில்லை!
எப்போதேனும் சில மனித உடல்களை
இழுத்து வரும் அந்நதி அவற்றில்
சிலவற்றை ஓரம் ஒதுக்கி விட்டு
தன் வழி போய்க் கொண்டிருக்கிறது!
எங்க அம்மாவுக்கு எப்பப்பாரு
கொள்ளுப்பருப்பும் அதுல தண்ணியெடுத்து
ரசம் வெக்கிறதுமே தெனமும்
வேலையாப் போச்சு!

000

அப்புறமேத்திக்கி அப்புறமேத்திக்கின்னே
சொல்றீங்களே.. அப்புறமேத்திக்கி மட்டு
என்னா பண்டுவீங்க? எனக்கு தெரியாதா
நீங்கொ பண்டுறதைப் பத்தி!

000

Post Comment

கருத்துகள் இல்லை: