திங்கள், ஜனவரி 11, 2016

இது தாண்டா போலீஸ்திரைப்படத்தை ஜனங்கள் நிறைந்த அரங்கில் மகிழ்ச்சி வெள்ளத்தில் காண வேண்டும். அப்படித்தான் இருக்குமென மகேஷின், இது தாண்டா போலீஸ்! படத்தை மை சன்னுடன் சென்னிமலை அன்னமார் திரையரங்குக்குச் சென்றேன். போக இன்று சனிக்கிழமை! என்னைப்போல ஏகப்பட்ட மகேஷ் ரசிகர்கள் இருந்து விட்டால் பையன் கூட்டத்தில் நசுங்கி விடுவானே! ஆனால் வண்டியை ஸ்டேண்டில் போட்ட போது என்னுது தான் முதல் வண்டி! (பின்பாக நான் வண்டியை எடுக்க வருகையில் ஏழு வண்டிஉள்ளே சென்று திருப்தியாக அமருகையில் நபர்களின் மொத்த எண்ணிக்கை 15. சன் வேறு, என்னப்பா சனத்தையையே காணம்? என்றான். நான் மகேஷ்பாபு படங்களை முன்பாக தட்டுக்களில் தான் பார்ப்பேன். பையனும் அதுபோலவே மகேஷ் ரசிகன். முதலாக மகேஷ் படத்தை தியேட்டரில் பார்க்க ஆசைப்பட்டவனை அழைத்துச் சென்று எனக்கும் கூட்டமில்லாதது வருத்தம் தான்!
 
இது தாண்டா போலீஸ்! (இந்த மூனு சுழி டைட்டில் போட்ட போதும் வந்தது) மகேஷ் அறிமுக காட்சி சண்டை ஒன்றே போதும்டா போலாம்னு இருந்தது! மாமன் வேற படத்தை ரிலீஸ் அப்பவே (வியாழன்) பாத்துட்டாரே!

-மாப்ளே உங்காளு படத்தை பாத்தன் மாப்ளே! பையன் நல்லா ஒரு அடி கூட படாம ஆட்களை சாத்துறான் மாப்ளே!

-அது தெலுங்கு டப்பிங் படம் மாமா.. சண்டெ பாட்டு பாட்டு சண்டென்னு தான் இருக்கும்!

-ஆமா மாப்ள.. கமல் ராசு புள்ள கூட இடுப்பை பயங்கரமா ஆட்டி ஆட்டி அந்தப் பய கூட ஆடுச்சு! வயசாயி போச்சேன்னு கவலெ கூட வந்துடுச்சு மாப்ளே!

-அவ்ளோதானா மாமா.. நான் நாளைக்கி தான் போகலாம்னு இருக்கேன்!

-போயி பாரு மாப்ள! அடி ஒன்னொன்னும் இடி மாதிரி இறக்குது அந்த தம்பி! ஆட்டம் பாட்டமெல்லாம் பயங்கரம்! இனிமேட்டு அந்தப்பய படம் வருதுன்னா ஒரு தகவலெ சொல்லிப்போடு மாப்ளே!

இடைவேளைக்கு பிற்பாடு கொஞ்சம் நாடகத் தன்மை தட்டுப்பட்டாலும் ஒன் மேன் ஆர்மியாக மகேஷ் இருக்க கவலை ஏன்? ஒரே அடியில மைண்டு ப்ளாக் ஆயிடணும்! மகேஷ் படங்கள்ல அது தொடர்ந்துட்டே இருக்கு!


000

Post Comment

கருத்துகள் இல்லை: