திங்கள், ஜூன் 06, 2016

கவிதைகள் சிலநா எதாச்சி பண்டீட்டன்னா..
ஏம் பண்டுனீன்னு மட்டுலு 
கடேசியா கேக்கப்புடாது!
அப்புறம் எனக்கு மசக்கோவம்
வந்துருமாமா! 
அன்னாவரிக்கு கம்முனு
இருந்துட்டு அதென்ன கடேசில
ஏம் பண்டுனீன்னு கேள்வி?

00


திடீருன்னு போனு வந்துச்சு சாமத்துல!
யாரு என்னான்னு தெரியாமயே
தூக்க கலக்கத்துல யார்ங்க மேடம்?’ன்னேன்!
நானு மாரியாத்தா பேசுறேன்னாங்க!
சாமி சாமி சொல்லுங்க சாமின்னேன்!
என்ன தூக்கமா? ஓடியாடி விளையாட
வந்திருகேண்டா!ன்னாங்க!
ஊருக்குள்ள போயி ஆடுங்க!
அப்படினுபோட்டு ஆப்பண்னிட்டேன்!

000

ரெண்டு பொடுசு பெத்த சந்திரிகா
போனப்போட்டுப் பேசினா!
ஊட்டுக்காரனோட நேத்தீல
இருந்து சண்டெ! உங்ககிட்ட
ராயல் அக்காடு இருக்கா?
இருக்குடி எடுத்தாறேன்!
அப்படின்னா முன்னாடி
லைட்டெ ஆப் பண்டிக்கிறேன்
சீக்கிரம் கொண்டாங்க!
சியர்ஸ் போடுவீல்ல?
-
நானு என்ன நெலமைல
இருக்கேன், புரிஞ்சிக்காமப்
பேசிறீங்களே!
சரிக் கொண்டாறேன்! -என்று
சுவிட்ச் ஆப் பண்ணிட்டு 
தூங்குற சுகமிருக்கே!
(தன் வினை மீண்டும் எப்போதாவது திருப்பி சுடும்)

000

பயங்கர கவிதை!
என் கவிதையை நீ எழுது!
உன் கவிதையை பத்து
மாசம் கழித்து பிரசவிக்கிறேன்!

000

பயங்கர கவிதை 2.
என்னதான் சொல்லு..
உன்னியாட்ட எதும் வராது!


000

பயங்கர கவிதை 3.
நீங்கள் டயல் செய்த பெண்
இப்போது கசமுசா என்றிருக்கிறார்!

000

பயங்கர கவிதை 4.
பாத்து பாத்து மெதுவா!
நிறுத்தி நெதானமா..
பாரு இப்பத்தான சொன்னேன்
அதுக்குள்ள மறந்துட்டியா?

000

பயங்கர கவிதை 5.
அவுரு இருக்காரு
அப்புறம் கூப்பிடு!

000

Post Comment

கருத்துகள் இல்லை: