வியாழன், ஜூலை 28, 2016

மூஞ்சிப் புத்தக பதிவுகள்

மூஞ்சி புத்தக பதிவுகள்

-டேய் கண்ணாளா! நான் தான்..வீட்டை விட்டு வெளிய வந்து பேசுடா பேமாணி! இன்னிக்கி நைட் நாம ஓடிப்போறோம். காத்து போறது தெரியாம தூங்கிடாதடா! 12 மணி! பஸ் ஸ்டாப்பு!

-ஏண்டி இத்தன தடக்கா சொல்றே? ஆனா உங்கொப்பன நெனச்சா தன் பயமா இருக்குடி! மிதிப்பானே! ஒரு வருச காதல்ல ஒம்போதுவாட்டி என்னை அட்டாக் பண்ணிட்டான்.

-இனி முடியாதில்ல! பயந்துட்டு படுத்துக்காதடா பாவி! அப்புறம் யாரு கூட வர்றே? சுந்தரேசன் கூடவா? அவனுக்கு இருக்குற தைரியங்கூட உனக்கில்லடா..அவனையே கூட்டிட்டு ஓடப்போறேன் நான்! நீ வடை போச்சேன்னு உக்காந்துக்கப் போறேடா!

-அப்ப அவனை கூட்டிட்டு ஓடுடி கழுதை! உங்கொப்பன் மிதிக்கெல்லாம் அவந்தான் தாங்குவான்! ஆனா ஒன்னு நீ சொல்றதை ஒரு நாளும் கேக்க மாட்டான்!


000

சென்னையிலிருந்து நண்பன் சுந்தர் 8 மணி போல போன் செய்தான்! ரொம்ப சந்தோசத்தில் இருப்பதாக கூறினான்! சரி சந்தோசம் தானே வாழ்க்கை! மேட்டருக்கு வாடி, என்றேன்!

-என் ஆபீஸ்ல சுந்தரி பத்தி சொன்னன்ல பாஸ், அவ இன்னிக்கி முகநூல்ல நான் போடற என் போட்டாக்கள் அத்தனையும் அழகுன்னு சொல்லிட்டா! போக சினிமாக்கு முயற்சி பண்ணு, போட்ட்டா செசன்ல நீ ஜெயிச்சிடுவே! எங்கம்மாட்ட கூட உன்னை முக நூல்ல காட்டினேன்.. பையன் அழகா இருக்காண்டின்னு சொன்னாங்க! அப்படின்னா பாஸ்!

-நீ காது வரை சிரிப்பாணி காட்டிட்டு வந்துட்டிய? அட கெடுத்தியே கதையை! பதிலுக்கு நீயும் சென்னையிலயே பூராம் அட்டு பிகருக! நீ தான் அழகு! உன் போட்டோவ என் அம்மா கிட்ட, பாரும்மான்னு சொன்னேன்.. என் மருமவ என்ன விட அழகுடான்னு எங்கம்மா சொல்லுச்சுன்னு ஓட்டலியா?

-உங்கள மாதிரி டைமிங் சென்ஸ் என்கிட்ட இல்ல பாஸ்.. நாளைக்கி சொல்லவா?

-தீபாவளி அன்னிக்கி தான் பட்டாஸ் போடணும்டி!!!

000

-ஹலோ, இன்னிக்கி ரிங் ஆனதீம் எடுத்துட்டீங்க போல! வழக்கமா ரெண்டு மூனு விசுக்கா கூப்பிட்டாத்தான் எடுப்பீங்க?

-எடுக்கலீன்னாலும் குத்தஞ் சொல்றே, எடுத்தாலும் குத்தஞ் சொல்றே! ஏண்டி நீ இப்புடி?

-சரி விடுங்க, என்ன பண்ணிட்டு இருக்கீங்க?

-சேவிங் பண்ணிட்டு இருந்தண்டி!

-நான்னதும் உடனே எடுத்துட்டீங்க? அவ்ளோ ஆசையா எம்மேல?

-தாவாங்கட்டையில பிளேடு கீறீடக்கூடாதில்லியா! அதான் ரேசரை வச்சுட்டு பேசுறேன்.. ஹலோ..கட் பண்ணிட்டா.. கொய்யாலே.. நேரங்காலமில்லாம கொஞ்சோனுமின்னா யாருனால முடியும்??????

000

Post Comment

1 கருத்து:

பரிவை சே.குமார் சொன்னது…

அருமையான தொகுப்பு...