சனி, பிப்ரவரி 21, 2009

இசையையும் ரசிக்க ஒரு முகவரி

சூரியன் எப்.எம் நிகழ்ச்சியில் வருகின்ற ஒரு நிகழ்ச்சியான
இரவின் மடியில் நிகழ்ச்சியின் பதிவை நண்பர் ஒருவர்

(http://thenkinnam.blogspot.com/2009/02/975.html)

பதிவில் கொடுத்துள்ளார்.

அதனை நாமும் மீள்பதிவாக அளித்துள்ளோம்.

Get this widget | Track details | eSnips Social DNA
....

Post Comment

வியாழன், பிப்ரவரி 12, 2009

மண் பூதம்

Book Name : மண் பூதம்
Author Name : வா.மு. கோமு
Language : தமிழ்
Price : Rs:90.00
+7.5% payment gateway charges
(Shipping charges free inside India)
Price Outside India : Rs:180.00
(Including Shipping charges)
+7.5% payment gateway charges
ISBNNumber : 81-88641-83-9
PublishedYear : Dec.2006
Description
வா.மு.கோமு தன்னுடைய வித்தியாசமான, துணிச்சலான சிறுகதை மற்றும் கவிதை முயற்சிகளுக்காகப் பெரிதும் கவனம் பெற்று வருபவர். கலாச்சாரரீதியான மனத் தடைகளை, மொழியின் குதூகலமும் அங்கதமும் கொண்ட இவரது மொழி வெகு இயல்பாகத் தாண்டிச் சென்றுவிடுகிறது. எதார்த்த உலகின் அழுத்தமான காட்சிப்படுத்தல்கள் சட்டென அதீதப் புனைவுகளுக்குள் கரைந்து ஒரு புதிய அனுபவத்தை இக்கதைகள் உருவாக்குகின்றன.

Post Comment

கள்ளி

Book Name : கள்ளி
Author Name : வா.மு. கோமு
Language : தமிழ்
Price : Rs:120.00
+7.5% payment gateway charges
(Shipping charges free inside India)
Price Outside India : Rs:200.00
(Including Shipping charges)
+7.5% payment gateway charges
ISBNNumber : 978-81-89912-39-0
PublishedYear : Dec.2007
Description
வா.மு. கோமுவின் எழுத்துகள் குதூக்கலமும் துணிச்சலும் கொண்ட மொழியால் வாழ்வை எதிர்க்கொள்பவை. அவரது முதல் நாவலான கள்ளியில் விளிம்புநிலை மனிதர்களின் வாழ்வும் மதிப்பீடு களும் கனவுகளும் வெகு இயல்பாகத் தோற்றம் கொள்கின்றன. மத்திய தரக் கலாச்சார மதிப்பீடுகளையும் ஒழுங்குபடுத்தப்பட்ட மொழியினையும் கடந்து, தமிழ் வாழ்வின் அறியப்படாத எதார்த்தம் ஒன்றினை வா.மு.கோமு சித்தரிக்கிறார். இந்த எதார்த்தம் சில நேரம் அதிர்ச்சி அளிப்பது; சில நேரம் நம் அந்தரங்க முகத்தைத் திறந்து காட்டுவது; ஒருபோதும் நாசூக்குகளின் வழியே எதையும் மூடி மறைக்காதது.

Post Comment

செவ்வாய், பிப்ரவரி 10, 2009

வனக்கவிதைஉன் ஊருக்குச் செல்ல
இது தான் குறுக்கு வழி.
எப்போதும் போல்
போய்க்கொண்டிரு.
நெடுவே செல்கிறது
ஒற்றையடிப்பாதை.
முண்டியடித்துப் போக
ஜன நெரிசலுமில்லை.
தூரத்தில் யாருமில்லை.
அரவம் கேட்டு
பய ந்து போகும் சில
அணில்களும், பெயர்
தெரியா பறவைகளும் .
பயந்துதான் செல்லவேண்டி
இருக்கிறது இந்த பாதையில்.
ஆனாலும்‍‍‍‍ உன் ஊருக்கு
இது ஒன்றுதான் குறுக்கு வழி.
உனைப் பி்ன்தொடர்ந்து வரும்
ஊழிக்காற்று
உனைப்பற்றிய கவிதையை
வனத்தினுள் எழுதிப்பார்க்கிறது !
...

Post Comment

திருட்டு மாங்கா

உனக்கு போன் செய்வதில்
இப்போது சிக்கல் இருக்கிறது.
உனது கணவன் இரவுப் பணிக்கு
சென்றிருப்பானா அல்லது
பகல் நேரப் பணி முடித்து
திரும்பி விட்டானா தெரியவில்லை..
இரு ந்தாலும் இது ஒன்றும்
பெரிய பிரச்சினை இல்லைதான்..
உன்னைப்பொருத்தவரை!
ஆமாண்டி,தெரியலடி,ஆவாதடி
என உனது தோழியிடம்
பேசுவதுபோல, நான் ஒன்றுபேச
நீ ஒன்று பேசி வைத்துவிடுவாய்.
உனக்கு போன் செய்வதிலான சிக்கல்
"மனைவியின் கள்ளக்காதலனை
வெட்டிக்கொன்ற கணவன் "
என்கிற செய்தியை தினசரி ஒன்றில்
படித்ததிலிருந்துதான் !
இதற்க்கெல்லாம் போயா பயம் ?
உள் மனது அவ்வப்போது
தட்டிக்கொடுத்தாலும்
திருட்டு மாங்காய்க்கு ருசி
தனிதான் கண்மணி.
எப்படியோ மனதை திடப்படுத்தி
உனக்கு ரிங் அடித்தேன்.
"இன்னிக்குத்தான் குளித்தேன்
நாலு நாளு போவட்டும் "
என்கிறாய் !
போச்சாது போ!
....

Post Comment

விபத்து

புயல் வீசிய இரவொன்றில்
அவனாசி என்.எச்.47 ல்
ஸ்கூட்டர் ஒன்று சாலையில்
படுத்த வாக்கில் உறுமியபடி
ஓட்டுனரைத் தேடுகையில்
இரண்டு அறு ந்து போன
ஹவாய் மிதியடிகளையும்
சிவப்பு நிற திரவத்தையும்
மட்டுமே
முகப்பொளியில் பார்க்கிறது.


....

Post Comment

அப்பாரு ஞாபகம்

அப்பாரு அவரை
மிகக்கவனமாக எடுத்து
தோளில் சாத்திக்கொண்டு
"மங்காங்காடு வரை ஒரு எட்டு
போயிட்டு வ ந்துடலாம் வா" என்றார்
கம்மம் புளுதண்ணி போசியை
தலையில் வைத்தபடி அப்பாரு பின்னால்
நானும் போனேன் சும்மாடு
இல்லாத வெறும் தலையோடு
"செமக்கனம் செமக்கனம் "
அப்பாரு சொல்லிச்சென்றார்.
சோளக்காட்டின் நடுவில்
அப்பாரு தோளில் இருந்தவரை
நட்டுவித்து நிப்பாட்டினார்.
காட்டின் நடுவில் மூங்கக் கோலில்
நின்றவர் எங்கப்பனின் பழைய
சிவப்பு முழுக்கைசட்டை அணிந்திருந்தார்.
அப்பாரு அவர்கையில் ஒரு
கம்பை செருவி விட்டு
"மீசை இன்னம் பெருசா
இருந்திருந்தா நல்லாயிருந்திருக்கும்"
என்றார். சோளக்காட்டின்
நடுவில் நின்றவர் தட்டறுப்பு வரை
காக்கா, குருவி விரட்டியபடி நின்றார்......

Post Comment

குறிப்பு

வேப்பை உச்சியில் தவிட்டுக் குருவி
ஒன்று எதற்க்கோ கத்தியதிற்க்கு
நீதான் கூறினாய் அம்மணி..
அதற்க்குதான் கத்துகிறது என!
உன் காமத்தைக் கூறுவதில் கூட‌
உன் வெளிப்பாட்டு உத்தி உத்தமம் !


.....

Post Comment

நீ சௌக்கியமா ?

ஒரு நாள் சாவுகாசமாய்
உன்னோடு உட்கார் ந்து
பேச திட்டமிருக்கிறது என்னுள்.
சமயம்தான் வாய்க்கவில்லை.
ஊர் மாரியம்மன் திருவிழாவிற்க்கு
உனது ஊட்டுக்காரரோடு வ ந்து
சாமி கும்பிட்டு போனதாய்
சின்னமுத்து கூறினான்.

மேலும் அவன் கூறுகையில்
பழைய உனது தேஜஸ் இல்லையெனவும்
உனது ஊட்டுக்காரர் பொறத்தே
நீ ஒரு பெட்டிப்பாம்பு மாதிரிதான்
காட்சியளித்தாய் எனவும், வயிறு
புடைக்கவில்லை, தப்பட்டையாகத்தான்
இருந்ததெனவும் கூறினான்.

மழைக்குகூட பள்ளிக்கூடப்பக்கம்
ஒதுங்கியிராத எனது ஊட்டுக்காரி
எனது துடையிலிருக்கும் சாந்தி என்கிற‌
உனது பெயர் பற்றி எதுவும் கதைப்பதில்லை.
உனது ஊட்டுக்காரர் உனது
துடையிலிருக்கும் முருகசாமி என்கிற‌
எனது பெயர் பற்றி
உனையொன்றும் வினவவில்லையா ?....

Post Comment

சொல்லக்கூசும் கவிதைகள்

சொல்லக்கூசும் கவிதைகளில் இரு ந்து சிலவற்றை
இங்கே அளிக்கிறோம்.


பொதுமைப்படுத்தப்பட்ட கலாச்சார நீரோட்டத்தை கடுமையாக‌
மறுதலிப்பவை வா.மு.கோமுவின் கவிதைகள். இவை அன்றாட‌
வாழ்வின் பிறழ்வுகளையும் உணர்ச்சிகளின் விசித்திரங்களையும்
வாழ்வின் அசலான மொழியிலேயே பேச முற்படுகின்றன.
வா,மு.கோமுவின் கவிதைகள் தரும் அதிர்ச்சி என்பது வெறும்
அதிர்ச்சி மதிப்பிற்க்காக உருவாக்கப்பட்டவை அல்ல. அவை எதார்த்தமென‌
அறியப்படும் ஒன்றிற்க்குள் மறை ந்திருக்கும் வேறொரு எதார்த்தை நம்மிடம்
கொண்டுவருகின்றன.

பதிப்பகம் : உயிர்மை

விலை : ரூ 90.(http://vaamukomu.blogspot.com/)

மேலே செல்லவும்
....Post Comment

செவ்வாய், பிப்ரவரி 03, 2009

சாருவின் பாராட்டு


வேலி முட்டியும் வாரிசுகளும்

( சும்மா எதுகை மோனைக்காக இப்படித் தலைப்பு கொடுத்திருக்கிறேன். மற்றபடி சீரியஸாக எடுத்துக் கொள்ள வேண்டாம்).

வா.மு. கோமு , மனோஜ் இருவரையும் எனது எழுத்துலக வாரிசுகளாக முன்பே அறிவித்திருந்தேன். வா.மு. கோமு இளைஞர் என்றாலும் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக எழுதி வருபவர். எங்கோ ஈரோட்டுக்குப் பக்கத்தில் வாய்ப்பாடி என்ற சிறு கிராமத்தில் வாழ்பவர் என்பதால் கணினி அறிமுகமெல்லாம் இல்லை. ஆனால் இன்றைய தமிழில் என்னை வெகுவாகக் கவர்ந்த எழுத்தாளர் என்றால் வா.மு. கோமுதான். அவருடைய பல சிறுகதைத் தொகுப்புகள் , கவிதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. ஒரு சிறுகதைத் தொகுப்பும் , ஒரு நாவலும் உயிர்மை வெளியீடாகவும் வந்துள்ளது. ஏராளமாக எழுதுபவர். தமிழில் அடியேனுக்கு அடுத்த படியாக தணிக்கை செய்யாமல் எழுதும் ஒரே எழுத்தாளர் வா.மு. கோமு மட்டும் தான் என்பது என் கருத்து. (உடனே , ' குட்டிக் கதைகளில் தணிக்கை செய்யப் பட்டது என்று போட்டிருக்கிறாயே ? என்று கேட்கக் கூடாது. இந்த இணைய தளத்தை குழந்தைகளும் படிக்கிறார்கள் என்பதால் அதைச் செய்ய வேண்டி வந்தது. குட்டிக் கதைகள் புத்தகமாக வரும் போது எந்தத் தணிக்கையும் இருக்காது). ஆனால் வா.மு. கோமுவின் ' கள்ளி ' என்ற நாவல் எனக்குப் பிடிக்கவில்லை.

( நாவல் என்ற வடிவம் அவ்வளவு சுலபமானது அல்ல ; சிறுகதைகளில் சாதனை படைத்திருப்பவர்கள் கூட நாவலில் தோற்று விடுகிறார்கள். உடனடியாக நினைவுக்கு வருவது ஷோபா சக்தி. அவரது சிறுகதைகள் ஒவ்வொன்றும் தமிழின் பொக்கிஷம் ; ஆனால் நாவல் இரண்டுமே தேறாது).

அடுத்து , மனோஜ். எப்போதாவதுதான் எழுதுவார். நாவல் எழுதவில்லை. சிறுகதைகளும் கட்டுரைகளும்தான். இவருடைய சிறுகதைகளை தமிழில் எழுதும் ஒவ்வொருவரும் பாடமாகப் பயில வேண்டும் என்று சொல்லுவேன். வா.மு. கோமு , ஷோபா சக்தி , மனோஜ் என்ற இந்த மூவரின் சிறுகதைகளும் உலகத்தரமானவை. ஆனால் இப்போது பல்வேறு வலைப்பதிவுகளையும் பார்க்க்கும் போது எனக்கு வா.மு. கோமு , மனோஜ் தவிரவும் ஏராளமான வாரிசுகள் இருக்கிறார்கள் என்று தெரிந்து பூரித்துப் போனேன். அப்படி சமீபத்தில் பூரித்தது கென்னின் எழுத்துக்களைப் படித்து.

மேலும் படிக்க http://charuonline.com/june08/pp8.html


Post Comment

கள்ளி

கள்ளி Rs.120.00

வா.மு.கோமு

பதிப்பாளர்: உயிர்மை

பக்கங்கள்: 200

கிடைக்குமிடம்: உலகெங்கும்

Post Comment

தவளைகள் குதிக்கும் வயிறு

தவளைகள் குதிக்கும் வயிறு Rs.150.00

வா.மு.கோமு

பதிப்பாளர்: உயிர் எழுத்து

பக்கங்கள்: 237

கிடைக்குமிடம்: உலகெங்கும்

சிறுகதைத் தொகுப்பு

Post Comment


Post Comment

Post Comment