செவ்வாய், ஏப்ரல் 14, 2009

பேச்சு

சிலகாலம் வரை
ஏதாவது பேசுவோம்.
பேசியதை பற்றி
சிலகாலம் ஏதாவது
பேசுவோம்.
பேசியன போதுமென‌
ஏதாவது பேசுவோம்.
பின் ‍
பேசியதை தொலைப்போம்.

..

Post Comment

சுதந்திரம்.


(பி.கு)
ஒன்றுமில்லை (அ) ஏதுமில்லை
எனக்கொள்ளலாம்.


..

Post Comment

நான்

ஒரு சில நாட்களைப் போல்
ஒரு சில நாட்கள்
இருப்பதில்லையாதலால்
ஒரு சில நாட்களைப் போல்
ஒரு சில நாட்கள்
இருப்பதில்லை நான்.

- ராஜமைந்தன்.

(செந்தூரம். மே 92).

Post Comment

கவிதைகள்

தலை நிமிர்ந்தே நட‌
குனிந்து பார்த்தேன்
காலடி மண்

***

ஒற்றை மேகத்துள்
ஒளிந்த இதயம்
நிலா

***

தேர்ந்த படைவீர அணிவகுப்பு
சர்க்கரை மூட்டை செல்லும்
எறும்புகள்.

***

தீடீரென வீசிய காற்று
குழந்தை பொம்மைக்கு
அழும் குழந்தை

***

(சுகன் .மார்ச் 93)

Post Comment

மேட் பார் ஈச் அதர்
உதைத்த பந்து
திரும்பி விடுகிறது
முகத்தில் மோத !
சாரி பார் தி
டிஸ்டர்ப்பென்ஸ்.
*
சட்டையோடு சேர்த்து
துக்கங்களையும்
ஹேங்கரில் மாட்டப்
பழகிக்கணும் ..
நாளை முதல்.
*
நூல் முனையை
நோக்கிய பயணம்
முடிவுதான் தெரியுமே
அந்த
ஜன்னல் கம்பிகளுக்குள்.

(மவ்னம் ஜுலை 93).

..

Post Comment

முகத்துக்கு முகம்.

பக்கம் பார்த்துப்போ,
பேசித்தீர்வதில்லை பிரச்சினை
பேசியன கிடக்கட்டும்
பேசுவன கிடக்கின்றன‌
கொடு முதுகை !
தின்று வெடிக்காதே
படித்து வெடி
சிரித்த பின் அழு
அழுத பின் சிரி
ஈக்வல் பாயிண்ட்
தட் ஈஸ் லைப்.
அருகிலிருப்பன அத்துப்படி எனில்
அடுத்த கிளை தாவு.
மனதினுள் இருக்கு ஏகாந்தம்
தேடலை முடி
யோசனை சரிதான்
யோசித்துப்பார்.
யோசித்தனவற்றை விட்டுவிடேன்.
ஆக்ரோசம் மருட்சியினால்
கவிதைகளில் ஆடைகளை அழி
சுதந்திரத்தைப் போடு
மக்கள் உன் பக்கம் ?
நம் பக்கமா?
அவரவர் பக்கம்.
அது அது அதுஅது பாட்டுக்கு.
வழக்கத்தை மாற்று
பழையன கழியும்.
May be ...
குடைகளின் கீழ் நிழல் !
முகத்துக்கு முகம்
ஸ்மைல் ப்ளீஸ்.

கவிதா சரண் (வா.மு.கோமு)
(அக் '1994.)

..

Post Comment

இன்றைய இந்தியா

அற்புதம் போங்கள் !
கோவணக் குழந்தைகளை
மேய்க்கப் பழகிய ஆடுகளா ?
அப்படியா விசயம் !
அதென்ன‌
நரி நாக்கில்
வடியும் ஜல நீரோடு
யாரைக் கவனிக்கிறது ?
ஆட்டையா ?
கோவணக் குழந்தைகளை ?
அங்குதானே சந்தேகம்
இருக்கட்டும் பார்க்கலாம்
என்னதான்
நடக்கிறதென்று ...

(கிரீடம் செப் 93.)

..

Post Comment

முற்பகுதிக்கவிதைகள்

***

கவலை கவலை
பட்டுப்பார்த்தேன்
கவலை கவலை

******

அவளை எட்டிப் பிடிக்க‌
கைகொடுத்தான்
கஜீனி முகமது

******

பகவத்கீதைக்குள்
மௌனம் காக்கும்
மூட்டைப்பூச்சிகள்

********
கதவைத்தாளிடு
கனவில் சிரிப்பாள்
கார்த்தியாயினி.

********

நடுகல் ‍‍‍ 91.

..

Post Comment

திங்கள், ஏப்ரல் 13, 2009

நம்ம ஊரும், வாய்ப்பாடி குமாராகிய நானும்


அண்ணாரின் எழுத்துப்பணிக்கிடையே சிறு விளம்பர இடைவேளை
என்னைக் காட்டிக்கொள்கிறேன் .


Post Comment

வெள்ளி, ஏப்ரல் 03, 2009

wELCOMEபடங்கள் தெளிவாக பார்க்க சைடில் உள்ள வா மு கோமுவின்
போட்டோ மேல் மவுசை கிளுக்கவும் .

Post Comment