சனி, மே 30, 2009

நான் தமிழன்...

பதுங்குகுழிக்குள் இருந்துகொண்டு கைக்குண்டுகளை எதிரி மீது வீச வேண்டும். எதிரியின் துப்பாக்கிச்சூட்டில் செத்துப்போன அப்பாவின் படத்தைப்பார்த்து அம்மா தினம் தினம் கண்ணீர் சிந்தவேண்டும்.

அம்மா! உனைக்காக்க நான் இருக்கேன் அம்மா!அழாதே! அப்பனைக் கொன்ற அந்த கயவர்களின் மென்னியை முறிக்கிறேன் என்று உள் நாட்டுப்படையின் பச்சை யூனிபார்மை அணிந்து அம்மா காலில் விழுந்து ஆசி பெற்று போருக்கு புறப்பட வேண்டும். துப்பாக்கியின் சப்தங்கள் , பீரங்கியின் வேட்டுக்கள் இந்த நகரமெங்கும் ஒலிக்க‌
வேண்டும்.

இடையில் எதிரினாட்டுப் பெண்ணுடன் மரத்தைச் சுற்றி பாடவேண்டும்.
எதிரிகள் என்னைப்பிடித்து தம் கொட்டடியில் சங்கிலியில் கட்டவேண்டும்,
என் காதலியின் பிற்ப்புறுப்பில் சப்பாத்துக்கால்களால் அவர்கள் என் முன் மிதிக்க வேண்டும்.எனது அம்மாவைக் கடத்தி வந்து க.....வேண்டும். எனக்கு அதன் ஞாபகம் வரும் கோபத்தில் சங்கிலியைப் பிய்த்து, மனித வெடிகுண்டாய் மாறி எதிரிகள் கூட்டத்தில் நுழைந்து வெடித்துச் சாக வேண்டும்.

இத்தனைக்கும் இந்த படத்தின் நாயகனாக நானிருக்கவேண்டும்.


......இராசமைந்தன் - மணல்வீடு


.

Post Comment

மழை நாட்கள்..

அன்புத்தோழி..மழையில் நனைவது பிடித்தமான விசயந்தான்.என்னோடு நீ
நனைகிறாயே என்ற விருப்பத்தில். நான் நனைகிறேன் என்ற வேதனையில் நீ
நனைந்திருப்பாய்,இருந்தும் இடையிலேயே விடைபெற்று தொப்பலாய் போய்விட்டாய்.வெடவெடத்து நான் தவிக்கையில் உன் ஞாபகமென்னைச் சூடுபடுத்திப்போயிற்று. இருந்தும் நீ உன் வீட்டுக்கதவை வெடவெடத்துத் திறந்திருப்பாய்.. என் ஞாபகம் உன்னைச் சூடுபடுத்தாமலா போய்விடும்?
நம்பிக்கையில் உடைகளைந்து போர்வைக்குள் இருந்திருப்பாய்.

...இராசமைந்தன் - மணல்வீடு

.

Post Comment

புதன், மே 20, 2009

சூரிய உதயம்


சூரிய உதயம் பார்த்தீர்களா..!!

.

Post Comment

செவ்வாய், மே 12, 2009

மலையும்,மலைசார்ந்த இடமும் (வெள்ளியங்கிரி)

மேலும் படங்களுக்கு வாமுகோமுவின் படம் மேல் கிளுக்கவும்
..

Post Comment

Followers

சில காரணங்களால் பின்தொடர்பவர்களைக் கட்ட இயலவில்லை .

நமக்கு மட்டும் தான் சோதனை என காட்டப்படுகிறது..Post Comment