செவ்வாய், ஜூன் 30, 2009

வானில் ஓர் ஆச்சரியம்.
இன்று காலை 30.06.09 ,7.00 மணி அளவில் ஈரோடு மாவட்டம்,
கோவை மாவட்ட பதிவர்கள் வானத்தை அன்னாந்து பார்த்து இருந்தீர்களேயானால்
வானில் மேகக்கூட்டங்களை விதவிதமாக பார்த்திருப்பீர்கள்.
அருமையான நிகழ்வு.கேமரா வெறும் சோனி மொபைல் என்பதால் சிறிது
தெளிவு கம்மிதான்.வேண்டுமானால் படங்களின் மேல் கிளிக்கிப் பார்த்தால்
தெளிவு கிடைக்கும்.


மற்றுமொரு அறிவிப்பு :

இந்திய பதிவுலக வரலாற்றில் முதன்முறையாககவிஞி கமலாவின் பேட்டி ராசமைந்தன் காண்பது வாமுகோமு வலையில் வரும் வெள்ளியன்றுவெளிவருகிறது.

..

Post Comment

திங்கள், ஜூன் 15, 2009

வாழ்க்கை

என்னைப் பார்த்து நீ கேட்ட அந்தக் கேள்விக்கு நான் பதில் சொல்லாமல்
போனது உன்மீது எனக்குப் பிரியமில்லை என்பதல்ல. திரும்ப ஒரு முறை கேட்க வேண்டும் நீ என்ற ஆசையினால்தான். ஆனால் நீயோ இவ்வளவு காலம்
பேசாமல் இருந்துவிட்டாய்.இப்போது நான் கேட்கிறேன்...உன்னுடன் வாழ்க்கையை பகிர்ந்து கொள்ளவா ?

..இராசமைந்தன் - மணல்வீடு

.

Post Comment

வியாழன், ஜூன் 11, 2009

கொத்துப்புரோட்டா

அவனை எனக்குப் பிடிப்பதில்லை.. அவன் மூக்கும் முழியும்.ஒரு வேளை அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பது நிசம்தானோ என்னவோ! நனைந்த பனை மர நிறத்தில் தோல், பாறையில் பேண்ட பூனை போல கண்... இலக்கியமாம் அதில் மேலை,கீழை பாகுபாடாம்.மேலை இலக்கியத்தில் உப்புச்சத்துக்கூடவாம். பூக்கோவினோட உடம்பை எறும்புகள் இழுத்துட்டுப்போச்சாம்.போர்ஹேன்னு ஒரு லைப்பேரேரியனாம்.எழுத்தே பூராம் புதுசாம், நோகடிக்கிறியேடா... இதையெல்லாம் என்கிட்டே ஏன் பேசுறே? நானே
குமுதம் , ஆனந்தவிகடன் மேயறவன்.இருந்தும் நண்பா‍ முனியாண்டி விலாஸில்
கொத்துப்புரோட்டா வாங்கிக்கொடுத்தாய் பார்...சுவையோ சுவை.மன்னிக்கிறேன்
உன்னை.

......இராசமைந்தன் - மணல்வீடு


....

Post Comment

புதன், ஜூன் 10, 2009

Top 10 Young Writters 2009 ஜூன் 10 ‍‍‍ ‍- ஜூலை 10.

1.எஸ். ராமகிருஷ்ணன்
(காட்டின் உருவம் சிறுகதை தொகுப்பிற்க்காகவும்,ஒருவேளை இவர்கள்
எல்லாரும் இறந்துவிட்டார்களோ,இவைகள் அஞ்சலிக்கட்டுரைகளோ என்று
எண்ணத் தகுந்த விதமாக உயிர்மை மாத இதழில் தொடர்ந்து ஒவ்வொரு
எழுத்தாளர்களைப் பற்றியும் இவர் எழுதிவரும் வாசகபர்வம் தொடருக்காகவும்.)


2.ஜெயமோகன்
(உயிர்மை இதழில் வந்த ஊமைச்செந்நாய் சிறுகதைக்காகவும், எல்லாருமே சொல்கிறார்கள் என்பதற்காக காடு நாவலுக்காகவும்.)

3.மனுஷ்யபுத்திரன்
(உயிர்மை மே,ஜூன் இதழ்களில் இவர் எழுதிய கவிதைகளுக்காக)

4.ஷாராஜ்.
(உயிர்மையிலிருந்து வெளிவராமல் இருக்கும் ஜீன்ஸ் ஆண்டாள் கவிதை தொகுப்பிற்காக)

5.மு.ஹரிகிருஷ்ணன்
(எனது சிஷ்யன் என்பதற்காகவும் ,மணல் வீடு என்கிற இலக்கிய இதழ் நடத்தி இலக்கியத்தைக்காப்பாற்றுவதற்க்காகவும்.)

6.வால்பையன்
(சனி, ஞாயிறு மட்டுமே குடிப்பதை வழக்கமாக கொண்டு இருப்பதற்க்காகவும்,திடீரென குடியை விட்டுடலாமுன்னு பாக்குறேன் தலைவா
என்பதற்க்காகவும்.)


7.பொள்ளாச்சி கனகராஜன்
(பழைய சோறு கவிதை தொகுப்பிற்க்காகவும், இவரது இதழ்களில் எப்போதுமிருக்கும்புன்னகைக்காகவும்)

8.சுகிர்தராணி
(எதையுமே எழுதாமல் இருப்பதற்க்காகவும், இந்த வரிசையில் பெண்ணே
இல்லை என்பதற்க்காகவும்)


9.பாக்கியம் சங்கர்
(சென்னையை பத்திரமாக பார்த்துக்கொள்ள சொல்லி வந்த பிறகு இன்று
வரை பத்திரமாக பார்த்து வைத்திருப்பற்க்கும், ஏய் நாஷ்க்கரோ,துஷ் மூக்கா நாஷ்கரோ என்கிற உச்சரிப்பிற்க்கும்.)


10.கண்ணாயிரம் பெருமாள்
(என்னைக் கொன்று விடுவதாக கூறிக்கொண்டிருப்பற்க்கும் , " நானே ஒரு
ஒம்போது .... நான் எந்த பெண்ணைக் கெடுக்க முடியும் ? என்று கா.ரூ,கதை
பொஸ்தவத்தில் 349ம் பக்கம் ஒத்துக்கொண்டதிற்க்கும் ,இனிமேல் யாரையும்
வாரிசு என அறிவிக்கமாட்டேன் என்பதற்க்கும் ,சாவு பயம் வந்து ஜல்லியடிப்பதற்க்கும் ,இன்னும் 10 வருடத்தில் பெருமாளின் எழுத்துகள் அழிந்து விடும் என்பதற்க்கும்.)


********************

சமீபத்திய இறப்புகளுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்

1. சி.மணி
2. அப்பாஸ்
3. சுகந்தி சுப்பிரமணியம்.
4. ராஜமார்த்தாண்டன்.

********************

விரைவில் ,


முனியாண்டி,பெருமாள்,முனியாண்டி,பெருமாள்.....
என்றும் அன்புடன் வாமுகோமு..


...

Post Comment