திங்கள், டிசம்பர் 20, 2010

புதிய வீர்யம் - சாருவின் தேகம்தமிழில் இதுவரை ரெண்டே ரெண்டு நாவல்கள் தான் எழுதப்பட்டு வந்துள்ளது. ஒன்று அது இன்னொன்று இது, என்று ஒரு பிநவாண்டர் பல வருசங்களுக்கு முன்பாக அறிவித்தார். ரொம்ப வேடிக்கையாக இருந்தது. ஆனால் அது தான் துவக்கம். அதன் பின்பாகத்தான் இலக்கியத்தில் இப்படியெல்லாம் பேசுவதும் எழுதுவதும் கூட பொறுப்பான விசயங்கள், பொறுத்துக் கொள்ளக்கூடிய விசயங்கள் என்றே உருவானது.

சாரு அந்த பிநவாண்டவருக்கு முன்பிருந்தே தமிழ் இலக்கியத்தில் இருபத்திநாலு பக்க குற்றிதழ்களில் குசு,கிரிக்கெட் என்று தூள் பறத்திக் கொண்டிருந்தார். ஜீன்ஸ் பேண்ட், டீ சர்ட் என்று கூட்டங்களில் தென்பட்ட உருவத்தைக் கண்டு பழமை இலக்கியவாதிகள் மிரண்டனர். அந்தக் காலகட்டத்திலிருந்தே சாருவிற்கு காதல் என்பது ஒரு தீராத மோகமாகவே இருந்தது. அழகான யுவதி மீது மோகம் தோன்றுவது இயற்கையானது தான். ஆனால் அது தீராத வேதனை தரக் கூடியது என்பதை உணர்ந்து கொண்ட நேரம் இதுதான் அவருக்கு என்று உணர்கிறேன்.

வாசகனை தன் கதைப் பரப்பினுள் இழுத்துக் கொண்டு செல்லும் லாவகம் சாருவிற்கு அவர் எழுத ஆரம்பித்த காலத்திலிருந்தே உண்டு.அந்த ஆரம்ப நேரத்தில், தான் தோன்றித்தனமான எழுத்தை இந்த இலக்கிய உலகு அறிந்ததே இல்லை. இதை எல்லாமா எழுதுவார்கள்? யார் இந்த முனியாண்டி என்று இங்கு பேசினார்கள்.

கட்டுரை வடிவில் அவரது எழுத்தை முதலில் நான் படித்தது ஜேஜே சில குறிப்புகளுக்காக அவர் வெளியிட்ட சிறு நூல்தான். அதில் அவர் ஜே ஜேவை அவர் பிட்டு பிட்டு வைத்திருந்தார். இப்படியான சிறுநூல் கொண்டு வரும் பழக்கம் இன்று வரை அவரை விடவில்லை இந்த நவீண சூழலிலும்.

வாசிப்புத் தன்மை இல்லாத எழுத்தும் எழுத்தே அல்ல.தமிழில் சூப்பர் என்று இலக்கிய நபர்கள் குறிப்பிடும் புத்தகங்களை என்னால் வாசிக்க முடிவதில்லை. கோவேறு கழுதைகள் என்ற புத்தகத்தை இன்றுவரை பத்து பக்கம் தாண்ட முடியவில்லை. ஒருவேளை என்னிடம் கோளாறு என்று பல முக்கிய நாவல்களை எடைக்கு போட்டுவிட்டேன்.சமீபமாக நான் படிப்பது பட்டுக்கோட்டை பிரபாகர், பாலகுமாரன்,சுஜாதா.(சுஜாதா என்றதும் அவரது மூன்றாவது சிறுகதை தொகுப்பு உயிர்மையில் கேட்டு ஒரு வருடமானது நியாபகம் வருகிறது....படிக்க வேண்டும்)

எனது ”ஆயிரம் சிறகுள்ள காமம்” நாவலை உயிர்மைக்கு கொடுத்த கையோடு மூன்றுமாத காலமாக புத்தகம், எழுத்து என்று யாருடனும் பேசவும் இல்லை, தொடவும் இல்லை. நண்பர்கள், தோழிகள் அனுப்பிய புத்தகங்களும் தொடப்படாமலேயே கிடக்கின்றன. தோழி கீதாஞ்சலி பிரியதர்சினி சாருவின் வெளியீடு விழாவில் பத்தாவது ஆளாக இறங்கிய மறுகணமே என்னை தொடர்பு கொண்டார். ”தேகம்” நாவல் வேண்டுமென கேட்டு கொண்டேன். வாங்கியதும் ”அன்பு நண்பர் வா.மு.கோமுவிற்கு” என்று முதல் பக்கத்தில் எழுதிவிடுங்கள் என்றேன். பார்க்க வாங்கிய நண்பர்களும் என் பெயரை கண்டதும் அவரிடமே திரும்ப தந்துவிட்டதாக கூறினார். ஆனால் எனக்கு வந்து சேர்ந்த புத்தகம் அவர் கையெழுத்திட்ட புத்தகம் அல்ல.
அவசரத்தில் அது அவர் வீட்டிலேயே தங்கிவிட்டதாம். ஓ.கே. அவர் வீட்டில் நுழைந்து யாரும் அதை கேட்ச் செய்து போக முடியாது.

தமிழில் இதுவரை வந்த நாவல்களை பட்டியலிட்டால் முதலில் தஞ்சை ப்ரகாஷின் மீனின் சிறகுகள்”.அடுத்து இரண்டாவது சாருவின் தேகம்”. மிச்சம் 8 நாவல்களை நான் மேலே போய் சேர்வதற்குள் யாராவது சிலர் எழுதலாம். நிச்சயம் இந்த லிஸ்டில் நான் இல்லை. நாவலே எழுதத் தெரியாதவன் நல்ல நாவலை எப்படி எழுதுவது? சாருவைப் போல சளைக்காமல் எழுதிக் குவித்தால் நானும் தேகம் போல ஒரு நாவலை ஐந்தாறு வருடங்களுக்குள் எழுதலாம். ஆனால் அதற்கும் வாய்ப்பில்லை. சாருவிற்கே இத்தனை காலம் தேவைப்பட்டிருக்கிறதே!

உயிர்மை பதிப்பகம் துவங்கப்பட்டு வருடங்கள் பல ஆயிற்று. பிரபலங்களை வைத்துக் கொண்டு புத்தக வெளியீடு செய்வது இனியும் தேவையில்லை என்று என் சென்னை நண்பர் அலைபேசியில் கதைத்தார். அட! ஒரு நல்ல வாசகனை புத்தக வெளியீட்டில் உயிர்மை அப்படிச் செய்யும் காலம் வரவேண்டும். ஒரு கூத்தாடிக்கு கூத்தாட்டம் பற்றித்தான் பேசத்தெரியும். பிணவறை காப்பாளனுக்கு பிணங்களின் அழகு பற்றித்தான் பேசத்தெரியும். குப்பி அடிப்பவனுக்கு குப்பி அடிப்பதில் உள்ள நுணுக்கங்கள் பற்றித்தான் பேசத்தெரியும், என்பது போல வாசகனால் தான் புத்தகம் பற்றி பேசமுடியும். சக எழுத்தாளரை பேச வைத்தால் கூட பிரச்சனை வருகிறது. பக்குவம் இல்லாதவர் பக்குவம் இல்லாதவர்களைப் பற்றிப் பேச போக இது தொடர்கிறது.


சாரு நந்தலாலா என்கிற தமிழ்படத்தை சிறந்த பத்து படங்களில் ஒன்று என்று வேடிக்கை காட்டினார். அது சிறந்த 1000 படங்களில் ஒன்றாகக்கூட வருவதற்கு வாய்ப்பே இல்லை. தமிழ் திரைப்பட ரசிகர்கள் என்றுமே புத்திசாலிகள். சகலகலாவல்லவனும், வசந்த மாளிகையும், கரகாட்டக்காரனும் இன்றும் டிவி பொட்டியில் ஓடினால் உட்கார்ந்து விடுவார்கள்.

ஆரம்பத்திலிருந்தே இளையராஜாவை ஏன் சாரு குற்றம் சொல்கிறார் என்று புரியாமல் இருந்தேன். எனது ரிங்டோன் கூட இளையராஜா குரல்தான்(என்ன என்ன கனவு கண்டாயோ சாமிஈஈஈ) ஆனால் நந்தலாலாவை பார்க்கையில் அது புரிந்து போனது. பாலிமர் சேனல் நிகழ்ச்சியில் இளையராஜா தெளிவாக சொல்லிவிட்டார், தியேட்டரில் இருக்கிறவனுக்காக நான் போட்டது என்று!.

மற்றவர்கள் நினைத்துப் பார்க்க முடியாத, சொல்லாத, சொல்லத் தயங்கும் விசயங்களை சொல்வதே சாருவின் எழுத்துக்கள். வதைத்தல், வதைபடுதல் என்கிற விசயத்தை இந்த நாவலின் சாரமாக கையில் எடுத்துள்ளார். இப்படியான சித்திரவதைகளை வதைமுகாம்களில் நடப்பதாக நாம் படித்திருக்கிறோம் செய்திகளில் சில உலகப் படங்களிலும் கூட. அடடா! என்று அப்போதைக்கு பேசிவிட்டு நழுவுகிறோம். ஆனால் நாவலில் அவைகள் தான் நம் கண்முன் திரைப்படம் பார்பது போல் நடக்கிறது.

உயிரினங்களை டார்ச்சர் செய்யும் பழக்கம் இல்லாத மனிதனால் இந்த நாவலை எழுத முடியாது அல்லது கடினமான தாக்குதலுக்கு மனதளவிலேனும் பட்ட மனிதனால் நிச்சயமாக எழுத முடியும்.

மனித வதை ஏன் நடக்கிறது என்பதை உளவியல் ரீதியாக புரிந்து கொள்வதே இந்த நாவலின் நோக்கம் என்பதால் அதில் வெற்றி பெற்றிருக்கிறது இந்த நாவல். செலின் தர்மாவிற்கு எழுதிய கவிதைகள், நேஹாவின் கடிதங்கள் எல்லாமே குறைவாக இருப்பதாலேயே நிறைவாக இருக்கின்றன.

உலக நாவல்களில் பேசப்பட்ட நாவல்கள் எல்லாமே குருநாவல் அளாவில்தான் உள்ளன என்பது வாசகர்களுக்கு தெரியும். எதையும் பொட்டில் அடித்தாற்போல் சுருக்கமாக சொல்வதன் மூலமாக வெற்றியை எளிதாக அடைய முடிகிறது. சாரு திட்டம் போட்டு பொட்டில் அடித்திருக்கிறார். நல்ல நாவல் பற்றி அதிகம் பேசுதல் கூடாது என்று இப்போது நகருகிறேன்.

சாருவிற்கான குறிப்பு:-

மேற்கொண்டு நீங்கள் எழுதும் நாவல்களிலாவது நீலவர்ணத்தில் அவதார் படத்தில் தோன்றிய கடவுளைப் போல கிருஷ்ணா என்றும், ஆழ்வார் என்றும், சாரு என்றும் கேரக்டர்கள் உள் நுழைவதை தவிர்க்க முயற்சியுங்கள். அவைகள் தொடர்வது சலிப்பை தருகிறது. இந்த கேரக்டர்களை ஒதுக்கிவிட்டு எழுதிய நாவலை மறுமுறை வாசித்துப் பாருங்கள்.. நாவல் வேறு தளத்தில் நின்று ஒளிரும். நான் அப்படித்தான் வாசித்தேன்.

நூல் விவரம்:
தேகம்
சாரு நிவேதிதா
உயிர்மை பதிப்பகம்
விலை: 90ரூ

நன்றி : மயில் இராவணன்
(http://mayilravanan.blogspot.com/2010/12/blog-post_18.html)
.

இவரது தளத்திற்க்கான முகவரி இடது புறத்தில் உள்ளது.


.....

Post Comment

திங்கள், டிசம்பர் 06, 2010

ஆயிரம் சிறகுள்ள காமம் - வா.மு.கோமு

இந்த ஆண்டு புத்தக திருவிழாவில் வாமுகோவின் படைப்பாக வரும் புத்தகம் ‘ஆயிரம் சிறகுள்ள காமம்’.

வா.மு.கோமு ”இது ஒரு வித்தியாசமான ஆகச்சிறந்த பாலியல் படைப்பாக இருக்கும்” என்கிறார். இந்த மாசக் கடைசியில் வெளியீடு இருக்குமாம். உயிர்மை வெளியிடுகிறது. சென்ற வருடம் ‘சாந்தாமணியும் இன்னபிற காதல் கதைகளும்’ விற்பனையில் சாதனை படைத்தது, பரவலான வாசகர்களையும் சென்றடைந்தது. போலவே இந்த நாவலும் வெற்றியடைய வாழ்த்துக்கள். அல்லாரும் இருநூற்று இருபது ரூபாய் தனியா எடுத்து வெச்சுக்குங்க :)

வாமுகோமுவின் இந்த புத்தகவெளியீட்டுக்குப் பிறகு வாமுகோமுவை நீங்கள் வெள்ளித்திரையிலும் இரசிக்கலாம் என்பதும் ஒரு கூடுதல் தகவல்

..

Post Comment

வியாழன், அக்டோபர் 14, 2010

மனதை பாதித்த சம்பவம்

இந்த வார ஆனந்தவிகடனில் 38 ஆன் பக்கத்தில் எட்டெட்டு பக்கத்தில் பிரபலங்களின் ஸ்பெசல் நிகழ்வுகள் வந்துள்ளது. அதில் வாமுகோமுவின் நிகழ்வாக " மனதை பாதித்த சம்பவம் " வந்துள்ளது. படித்துப்பாருங்க.

.

Post Comment

புதன், செப்டம்பர் 22, 2010

சொற்கப்பல் தக்கை கடைசிப் பதிவு

வீடியோ லிங்க் :http://www.youtube.com/watch?v=Z5YooZlxXAY

லைலா புயல் மையம்கொண்டிருந்த காலையில் மின்சாரம் தடைப்பட்டுவிடுமோ என்ற அச்சுறுத்தலுடன் இந்தக் கட்டுரையை மனதுக்குள் மழை நிரம்ப எழுதத் தலைப்படுகிறேன். சேலத்தில் கடைசிப்பொழுதில் தொக்கி நின்றபோது வாமுகோமுவின் காமக்கதை குறித்தும் தமிழ்மகனின் வெட்டுப்புலி குறித்தும் பேசும் முறை வந்தது. இவ்விசயங்களை பேசுபவர்களின் பட்டியலை நான் நடந்ததுமாதிரியாய்ப் பதிவுசெய்யவில்லை. அவர்கள் பேசியது அனைத்தையும் எழுதவுமில்லை. என்ன காதில் விழுந்ததோ அதை மட்டுமே எழுதியுள்ளேன். அதற்குக் காரணம் சிலர் எழுதிவந்து சுதியில்லாமல் கடகடவென்று எவ்வித உணர்ச்சி பெருக்குமற்று கடமையைச் வெகு சிறப்பாக செய்ததுதான் என்று சொல்லவேண்டும். ஒரு படைப்பைப் படித்து அது மோசமானது சிறப்பானதோ அதை உண்மையான உள் உணர்ச்சிகளிலிருந்து பேசியிருக்க வேண்டும். கவிஞர் நேசன் அவ்வாறு பேசினாரென்றால் அது மிகையாகாது.

மூளைப்பதிவுகள் அவ்வளவு நேர்த்தியானதாக அமையவில்லை என நினைக்கிறேன். பேசியவர்களின் வரிசைமுறையை கலைத்துப்போட்டிருக்கிறேன்.

வாமுகோமுவின் காமமும் காதலும் ஊற்றெடுத்த நீண்ட கதையைக் கடைசியாய் எழுதவேண்டுமென்று தோன்றியது. கோமு நல்ல சிறுகதைகளும் நல்லாயில்லாத சிறுகதைகளும் எழுதியிருக்கிறார் என்கிறார்கள். ....... மையில் வந்த சிறுகதையொன்றைத்தான் நீண்ட கதையாகத் திரித்ததாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் அது சிறுகதையாக இருந்தபோது நன்றாக இருந்ததாகவும் நீண்ட கதையாக மாற்றப்பட்டபோது வெறும் காமச்சரக்காய் மட்டுமே மாறிவிட்டதாயும் ஒரு நண்பன் சொல்லக் கேள்விப்பட்டேன். அந்தப் பதிப்பகத்தாரும் எழுத்தாளரும் ஒன்று கூடி அமர்ந்து சின்னக்கதையைப் பேசிப் பேசி பெரிதாக ஊதினார்களென்றும் கூறுகிறார்கள். அமோக விற்பனையை மட்டுமே ஒரு சில பதிப்பாளர்கள் மனதில் ஆழப்பதித்துக்கொண்டு ஆபாசங்களை நூல்களின் வாயிலாய் அள்ளி இறைக்கின்றார்கள். ஆபாசம் மட்டுமே இலக்கியமாகிவிடாதென்று தெரிந்திருந்தும் இலக்கியமென்ற பெயரில் பொறுப்பற்ற நெறியற்ற செயல்களை செய்வதில் அவர்களுக்கு அளப்பரிய ஆனந்தம் கிடைக்கின்றதுபோலும். சந்தோச வானில் நீந்திக் களிக்கட்டும்.

தக்கையின் ஆசிரியர் சாகிப் கிரான் வாமுகோமுவின் நாவலைப் பற்றி சத்தமற்ற குரலில் படித்தார். அவர் பேசியதைவிட கவிஞர் தமிழ்நதியும் எழுத்தாளர் சந்திராவும் வாமுவின் பெண்களை விகாரப்படுத்தும் அந்த நாவலை நாவலே இல்லையெனவும் பெண்கள் மட்டுமே காமத்திற்காய் அலைவதாய்ச் சித்தரித்து பெண்களைக் கொச்சைப்படுத்திவிட்டாரெனவும் அதிக சூட்டில் கொத்திதெழுந்த நீராவியின் மூடியைப் போல ஆகி அமைதியடைந்தார்கள் குளிர்ந்த காற்று பட்டதும். வாமு முன்வரிசையில் பாக்கைப் போட்டபடி நிதானமாய் உள்ளுக்குள் புகைந்தவராய் உட்கார்ந்திருந்ததைப் பார்த்துக்கொண்டிருந்தேன். எப்படியெல்லாம் புகைந்தாரோ இல்லை புகைவில்லையோ தெரியாது. சின்ன கலக்கமிருந்திருக்கலாமில்லையா

தமிழ்நதி மேடையின் முன் நின்று நாவலின் ஊடாய் வரும் கதாபாத்திரங்களை விவரித்து அப்படி எப்படி ஒரு பெண்ணிருப்பாளென்று கேட்டார். இதெல்லாம் அதிகப்படியானதென்றார். சந்திராவும் இது வெற்று போர்னோ இலக்கியமென்று அடித்துக் கத்திக் கூறினார். இப்படியே வாமுகோமு சொற்களில் பந்தாடப்பட்டார். இந்தப் பேச்சுக்கு என்ன மறுமொழி பேசுவாரென்று ஆவல் எழுந்தது. இந்தச் சத்தங்கள் ஒருவழியாய் ஒழிந்தபின் வாமு மேடைக்கு வந்து நாவலை இப்படி எழுதிக்கொண்டுவருவோமென்று அவரும் பதிப்பாளரும் முடிவுசெய்து திட்டமிட்டுக் கொண்டுவந்ததாக உண்மையைச் சொன்னார். இந்த உண்மையைச் சொல்வதில் வாமு எந்தத் தடையையும் கொண்டிருக்கவில்லையென்பது புரிந்தது.

வாமுகோமு 15 நாட்களில் ஒரு நாவலை எழுதிவிடுவதாக ஒரு இலக்கிய நண்பர் சொல்லி பொறாமைப் பட்டுக்கொண்டார் அல்லது அவரால் எழுத முடியவில்லையே என்ற ஆதங்கத்தில் சொன்னாராவென்று தெரியவில்லை. ஏன் இவ்வளவு அடிதடியாய் வாமு எழுதவேண்டுமென்று தெரியவில்லை. அதற்கான சிறப்புக்காரணங்கள் எதாவது இருக்கிறதா என்று தெரியவில்லை. வாமுவிடமிருந்து இன்னும் நல்ல நாவல்களையும் சிறுகதைகளையும் நிறுத்தி நிதானமாக எதிர்பார்க்கலாம்.

படைப்பாளியை இப்படி எழுது அப்படி எழுது என்று யாரும் சொல்வதற்கில்லை. எழுதுவது எதுவாகினும் அது கலையாய் மாறவேண்டுமென்பதுதான் முக்கியமேதவிர எழுத்தாளரை கட்டளையிடும் வேளை நம்முடையதல்ல என்றே எனக்குச் சொல்லத் தோன்றுகிறது. எழுதி வெளியிடுவது இலக்கியமாகவில்லையெனில் அதை விமர்சித்தோ விமர்சிக்காமலோ குப்பையில் எறிந்துவிடலாம்தான். அந்த உரிமை வாசகனுக்கு உள்ளதென்பதை ஆணித்தரமாய்ச் சொல்வேன். அதைப்பற்றி எழுத்தாளன் என்ன செய்யவியலும். இலக்கியம் வரவில்லையெனில் வேறு எதாவது பணி செய்து காலத்தை கடந்து மரணத்தை அடையலாம்.

வாமு நாவலின் பெயர் கனகாம்பரமும் இன்ன பிற காதல் கதைகளும் என்று நினைக்கிறேன். சரியாய்ச் சொல்கிறேனா என்று தெரியவில்லை. தமிழ்மகனின் வெட்டுப்புலி நாவல் பற்றி சிவராமன் கட்டுரை ஒன்றை எழுதி அனுப்பியிருந்தார். அதை தக்கைபாபு வாசிக்க கூட்டம் அத்துடன் முடிந்ததென்று நினைக்கிறேன். நாட்கள் ஆகிவிட்டதால் நினைவிலிந்ததை இதுவரை உங்களுடன் பகிர்ந்துகொண்டேன்.

சேலத்திலிருந்து கிளம்பும் நேரம் வாய்க்கப்பெற்று தக்கைபாபுவை நச்சரித்து இரண்டு பயண இருக்கைகளை கே.பி.என் பேருந்தில் முன்பதிவு செய்துவிட்டேன். சிவா வாடகை அறையில் அங்கங்கு இலக்கியவாதிகள் கூடி கூடி உரையாற்றிக்கொண்டிருந்தனர். நானும் பால்நிலவனும் நேசனும் அங்கிருந்து கிளம்ப ஆயத்தமானோம். பேருந்திற்குள் ஏறுவதற்கு முன் நன்றாக சாப்பிட்டோம் சாலையோர வண்டிக்கடையில். வண்டிக்கடைக்காரன் இலக்கியம் தெரியாதவன். இட்லிகளை தோசைகளைச் சுட்டு சுட்டு ஒழுங்காய் குடும்பதை ஓட்டிக்கொண்டிருக்கிறான்போலும். இலக்கியம் இந்த ஊரில் சின்ன சின்ன உதவிகள் செய்யுமே ஒழிய வாழ்வின் ஆதாரங்களை ஒரு போதும் தந்துவிடப் போவதில்லை என்பதை அறிந்தவனாகவும் இருக்கிறேன். ஆனால் அவற்றின் போதைக்குள் குதித்துவிட்ட நான் மீள்வதற்கெல்லாம் வழியொன்றமில்லையென்றே தோன்றிவிட்டது. வாழ்வோ சாவோ எழுத்தாளனாய் மரித்துவிடுவோமென்றாகிவிட்டது.


Wednesday, May 19, 2010

..

Post Comment

செவ்வாய், செப்டம்பர் 21, 2010

நாங்கள் சோம்பேறிகள்- கல்கி பேட்டி

கல்கியில் 15.03.2009 ல் வந்த பேட்டியின் தொகுப்பில் இருந்து,

எப்படி எழுத ஆரம்பித்தீர்கள் ?
குமுதம், விகடன்,கல்கி என்று படிக்க ஆரம்பித்தேன். இந்தக் காலகட்டத்தில் புஷ்பா தங்கதுரை, ராஜேந்திரகுமார்,அறிமுகமானார்கள்,ராஜேந்திர குமாரின் 'ஙே'வை இன்னும் மறக்க முடியவில்லை .அப்பாவின் மேஜையில் இருந்த கசடதபற , விழிகள்,தீபம்,மல்லிகை, போன்ற சிற்றிதழ்கள் என்னை எழுதிப்பார்க்கத் தூண்டின. எழுதி எழுதி எல்லாவற்றையும் தூக்கிக் கடாசிவிட்டு ' இதோ வந்துட்டேன் பார்' என 'நான் கடவுள்' ஆர்யா கைக்கு கட்டை கொடுத்து அமர்ந்திருப்பது மாதிரி வந்து அமர்ந்திருக்கிறேன்.

உங்கள் எழுத்து பாலியல் சார்ந்தே இருக்கின்றது , அதன் அவசியம் என்ன?
தாகம், பசி மாதிரி இயல்பான உணர்ச்சிதான் பாலியியலும். இயல்பான இந்த உணர்ச்சிகள் மீதுதான் சமூகத்தின் நீதி, நியதிகள் கட்டமைக்கப்பட்டுள்ளன. இவை கேள்விக்கு உள்ளாக்கப்படவேண்டாமா?

பாலியல் உறவுகளை மட்டும் வைச்சுகிட்டு நீதி, நியதிகளை நிர்ணயம் செய்யக்கூடாது . வாழ்வியல் அறம் என்பதை பாலியல் உறவை மட்டும் வைத்து தீர்மானிக்க முடியாது. அதைத் தாண்டியும் பல விசயங்கள் உள்ளன. இந்த நிலை நீடிக்கற வரைக்கும் என் படைப்புகள் அப்படித்தான் இருக்கும். எதைப் புனிதம் , தூய்மை என்கிறீர்களோ அதை உடைப்பதுதான் என் வேலை,

பெண் பெயரில் பாலியல் கவிதைகள் எழுதிகிறீர்கள் . ஏன் பெண் அடையாளத்தை தேர்ந்தெடுத்தீர்கள் ...?
ஆண்கள் பாலியல் பற்றி எழுதினால் சமூகம் வரவேற்கிறது. ரசிக்கிறது. பெண் எழுதினால் ஒழுக்கம் கெட்டு விட்டதாய்ப் பேசுகிறார்கள். அதை உடைப்பதற்காகச் செய்த சிறு பணி அது. பெண் எழுத்தில் இன்னும் நிறைய போதாமைகள் இருக்கு. வெளீப்படையா " தூள் கிளப்பிட்டு வாங்களேன்" என்கிற அழைப்பாக, அந்தக் கவிதைகளை நீங்கள் பார்க்கலாம்.

சாரு நிவேதிதா தம் இலக்கிய வாரிசாக உங்களை அறிவித்தார். அவரை எப்படி திருப்திப்படுத்தினீர்கள்?
சாருதான் வாரிசென அறிவித்தார். ஆனாலும் நான் அவரோட வாரிசு அல்ல. பாலியல் சம்பந்தப்பட்ட கட்டமைப்புகளை உடைக்கிற பணியை அவருடைய எழுத்து செய்வதில்லை. பாலியல் வக்கிரம் மட்டும்தான் அவர் செய்வது. ஏறக்குறைய எழுத்தில் வன்புணர்ச்சி. என்னுடைய எழுத்துகள் விளிம்பு நிலை மக்களின் பாலியல் உறவுகள் சார்ந்தவை. இரண்டு பேருடைய பயணமும் வேறு வேறு பாதையில். அப்புறம் எப்படி நான் அவருடைய வாரிச்சுங்கிறது? எனக்கு இத்தனை நாள் கழிச்சும் புரியலை.

இதைவிடப் பெரிய கொடுமை சாரு நிவேதிதான்னா சூப்பர் பிகரா இருக்குமின்னு ரொம்ப நாளா நினைச்சுகிட்டு இருந்தேன். என்னோட "மண் பூதம்" சிறுகதைத் தொகுதி வெளியீட்டுக்கு சென்னை வந்தப்ப " இதுதான் சாரு நிவேதிதா"ன்னு ஒரு பெரியவரைக் காட்டினாங்க. என் காதல், காமம் எல்லாம் மளார்ன்னு ஸ்பாட்டிலேயே செத்துடுச்சு. தவிர , கோமுன்னா ஏதோ மாமின்னு நெனைச்சேன்னு பெருசு என்கிட்டேசொல்ல , தானிக்கும் தீனிக்கும் சரியாப்போச்சு.

சிறு பத்திரிக்கையில் எழுதும்போதுகுறைவான நபர்களையே சென்றடைகிறது. அதிகமான வாசகப் பரப்பை ஏன் புறக்கணிக்கிறீர்கள்?
நாங்கள் யாரும் பெரும் வாசகப் பரப்பை புறக்கணீக்கவில்லை. இயல்பாகவே நாங்கள் சோம்பேறிகள். சற்று தாமதமாக வருகிறோம். அதுவரை அந்தப் பெருவாசகப் பரப்பு காத்திருக்கட்டும்.

சிறு பத்திரிக்கையிலிருந்து திரைப்படத்துக்கு நகர்வதுதான் ஆகச் சிறந்ததென இலக்கியவாதிகள் கருதுகிறீர்களா??
இனி ஒரு கட்டட வேலைக்குப்போயி கல்லு, மண்ணு சுமந்து என் வீட்டு அங்கத்தினர்களுக்கு புவ்வா போட முடியாது. படைப்பு எழுதியும் புவ்வாக்கு வழி பண்ண முடியலை. மண்டையில் கொஞ்சூண்டு விசயம் இருந்தாப்போதும். யார் வேணாலும் திரைப்படத்துறைக்கு போயி புவ்வாக்கு வழி பண்ணிட‌முடியும். அதனால திரைப்படம் நோக்கி நகர்வதுதான் ஆகச்சிறந்த, எளிய வழி.

பேட்டி ஜானகிராமன்
நன்றி -கல்கி 15.03.2009.

..

Post Comment

திங்கள், ஆகஸ்ட் 30, 2010

இது கவிதை

அம்மா அவர்தான்
காதல் இளவரசர்
என்று சொன்ன
மகளைப் பார்த்து
தாய் சொன்னாள்
“தள்ளியே நட”
**********************************


இப்படி ஒன்றும்
செய்யாமல்
சும்மா கிடப்பதற்கு
பேசாமல்
காவடியாவது தூக்கலாம்.
***********************************


ஊர் மாரியம்மா
கனவில் வந்து புலம்பினாள்
பூசாரிகிட்ட எடுத்துச் சொல்
நானொருத்தி இங்க
குத்துக்கல்லாட்ட
இருக்கச்சே
சபரிமலைக்கு ஏன் மாலை போட்டேன்னு!
***********************************


தேடி வந்தவன்
திரும்ப போய் விட்டானாம்.
தேடிப் போனவன்
திரும்பி வந்துவிட்டேன்.
************************************


இப்படி பரிகாசமாய்
சிரிப்பது உனக்கு
வேடிக்கையென்றால்
இப்படி பரிகாசமாய்
எழுதுவது
எனக்கு டபுள் வேடிக்கை!
************************************


விடியலின் அழைப்பு கோழியின்
கொக்கரக்கோவில்!
நடந்து போன கொலுசொலி
என் பார்வைக்குத் தப்பி!
ஒரு நிமிரலில்
சாணி வண்டின் பர்ர்ர்ரிடல்!
நிமிடத்தில் வாசலில்
மறைந்த வாலில்லா நாய்!
பல்பொடி காகிதம் காலி!
வேப்பை குச்சியில் காக்கை எச்சம்.
இன்று தீர்வதில்லை இப்பிரச்சனை.
வட்டலில் இட்லி சட்னியுடன்.
அடுத்ததாக அடுப்பில் தோசைக்கல்!
நாளையே பார்த்துக் கொள்வோம் பல்லை!
**********************************************

Post Comment

திங்கள், ஆகஸ்ட் 23, 2010

ட்விட்டர்!!! அப்படின்னா ஆப்ரேஷனா?

2010 ஆகஸ்ட் 14.சனி 1:55 PMஉயர்ந்த மனிதன் தன் ஆத்மவை மிதிக்கிறான்.பாகிஸ்தான்வாசிகளுக்கு சுதந்திர தின வாழ்த்துக்கள்.ஸ்வாமி,அம்பாள் பூத, அன்ன வாகனங்களில் திருவீதி எழுந்தருளல்


ஆணை என்றொரு திரைப்படத்தை சன் டிவியில் மதியம் ஒரு மணி செய்தி வரை காட்டினார்கள்.ஆ என்று திறந்த வாய் மூடாமல் பார்த்தேன்.அர்ஜூன் பறந்து பறந்து நிறையப் பேரை சுட்டு வீழ்த்தினார்.வாயிற்குள் மூன்று ஈக்கள் நுழைந்து பார்த்து விட்டு குகை
மூடப்பட்டு விடுமோ என்ற பயத்தில் வெளியேறின.அர்ஜூன் குழந்தையை காப்பாற்றி அதன் தாயிடம் ஒப்படைத்த பிறகு படம் இனிதே நிறைவுற்றது! நான் ஜெண்டுபாம் தேடினேன்.


1:63 AM
“நீ தின்னுட்டு இருக்கிற ஊறுகாயில துளி பிதுக்கி நக்கத் தருவியா?”
“நான் ஏன் என் ஊறுகாயை உனக்கு நக்கத் தரணும்?”
“இல்ல அம்மா சொல்லியிருக்காங்க...எந்த ஒரு நல்ல காரியம் செய்யுறாதுக்கு முன்னாடி ஊறுகாய் நக்கிக்கோணும்னு”
“சரி இந்தா....நக்கிக்கோ,ஆமா இப்போ என்ன நல்ல காரியம் பண்ண யோசிச்சிருக்கே?”
“உன்னை தூக்கிட்டு ஒதுக்கமான ஒரு பகுதிக்கு போலாம்னு”
எந்த ஒரு நல்ல காரியம் செய்வதற்கும் முன்னால் ஜனனி ஊறுகாய் நக்கிட்டு காரியத்த ஆரம்பிங்க.
1:73 PM
பெருந்துறை சிப்காட் தொழிற்பேட்டை கழிவுநீரால் நிலத்தடி நீர், மற்றும் மண் பாதிப்பு.மக்கள் பரிதவிப்பு.நிலம் வைத்திருப்போர் எல்லோரும் மூங்கில் பயிர் செய்யுங்கள். மூங்கில் ஐந்து வருடங்களில் மண்ணை நச்சுத்தன்மையிலிருந்து காப்பாற்ருகிறது. இது அரிவியல் உண்மை.ஈரோடு மாவட்ட ஆட்சியர் வரப்பாளையம் மனுநீதி நாளில் அறிவிப்பு.
1:82 PM
ஈரோடு மாவட்டம் பெருந்துறை சிப்காட் வளாகத்தில் 8 மாவட்டங்களைச் சேர்ந்த 575 பல்வேறு தொழிற்சாலைகள் உள்ளன.இதிலிருந்து வெளியேற்றப்படும் நச்சுக்கழிவுகள் சுமார் 50ஏக்கர் நிலத்தில் குழி தோண்டி புதைத்தும்,சிலவற்றை எரித்தும் நச்சுக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.Deep Blue Sea.


1:90 PM
நச்சுக்கழிவுகள் குழி தோண்டி புதைக்கும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்தக் கூடாது என்று கலெக்டர் சுடலைக்கண்ணனிடம் மனு கொடுத்தார் MLA பொன்னுத்துரை. இத்திட்டத்தினால் சென்னிமலை பகுதியில் நிலத்தடிநீர் பாதிப்படையும். சுற்றுப்புற சூழல்
கெடும்.சுமார் 2லட்சம் மக்கள் பாதிப்படைவர்.எனவே மக்கள் நலம் கருதி திட்டத்தை கைவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.No Mans Land.


1:99 PM
ஈரோடு புத்தக கண்காட்சியில் புத்தகங்களை பொட்டணம் கட்டி வெளிவந்தபின் நானும் நண்பரும் கம்மங்கூல் சாப்பிட தீர்மானித்தோம்.நண்பர் மயிலுக்கு அல்சர்.மிளகாய் கடித்து கூல் சாப்பிடாமல் அன்னாசி கடித்து குடித்தார். நானோ உப்பு,மோர் கலந்த பச்சை மிளகாய் கடித்து குடித்தேன்.வவுறு புண்ணாப் போயிடுங்க என்றார்.யதேச்சையாய் ஒரு கருநாய் எங்கள் அருகே வந்தது முகம்பார்த்தது.”அப்புறம் ரெண்டு பேரும் எங்கே இந்தப் பக்கம்” என்றது!Enter the dragon.


1:103 PM
பட்டுக்கோட்டை பிரபாகரின் வல்லமை தாரோயோ,தொட்டால் தொடரும்,ஆரம்பத்தில் அப்படித்தான்,பிரியா கல்யாணாராமனின் ப்ளஸ் 1, ஜாக்கிரதை வயது 16 என்று நண்பர் பிரதீப்பிடம் வாங்கினவற்றை வரிசைப்படுத்தினேன்.தூரமாப் போய்யா என்றார்.உபரியாக
வா.மு.கோமு இலக்கியத்திற்கு குட்பை சொல்லிவிட்டார் என்று அவர் வலைதளத்தில் எழுதுவேன் என்றார்.தேங்க்யூ தோழா! Return of the dragon.


1:110 PM
உயிர்மை ஸ்டாலில் உயிர்மை எஜமானரை தரிசிக்க முடிந்தது.அவருக்கு அலைபேசி வந்து கொண்டே இருந்தது! அலைபேசியை வாய் அருகே வைத்துப் பேசியும் பின்னர் காதுக்கும் ”எந்ந்ந்ந்தீராஆ” போல் செய்தார்.இப்படி பேசுஅவர்களில் எனக்கு தெரிந்து இவர் 937வது நபர்.


1:121 PM
உன்னதம் ஸ்டாலில் கொவ்தமசித்தார்த்தன் தன் வழக்கமான சிரிப்பலைகளோடு இருந்தார். வாங்க தோழர் என்றார்.எனக்கு உடனே ஓடிவிடலாமா என்றிருந்தது! தோழர் என்ற ஒற்றை சொல் சாகும்வரை என்னை பேய் போல் மிரட்டுகிறது(ம்)!The Entity -தொடரும்.....

தேங்க்ஸ் டு மயில் ராவணன் .

Post Comment

வியாழன், ஆகஸ்ட் 05, 2010

காதல் டைரியின் சில பக்கங்கள்.

வாமுகோமுவின் மற்றுமொரு சிறுகதை இந்த வார (11.08.10)'ஆனந்த விகடனில்' பக்கம் எண் 70 ல் வந்துள்ளது . இந்தக் மூன்று பக்க அளவில் வந்துள்ள கதையை படிக்கும் ,படித்த அன்பர்கள் , நண்பர்கள் விமர்சனங்களை நமது மெயிலுக்கு அனுப்பி வைக்கவும். விமர்சனங்கள் இடுகைகளாக பதியப்படும்.


..

நண்பர் சிவராமகிருஷ்னணின் மடல்

Hi, Vaamukomu,

Today I have read your story in Vikatan. It was excellent and felt like short movie after reading. Becoz kathaikkalam has been designed in such a way.Good keep it up. Am ready conversant with your blog thro vikatan.

Regards,

Sivaramakrishnan K

Post Comment

வியாழன், ஜூலை 22, 2010

"அந்தக் கேள்விக்கு வயது 98"

இரா. எட்வின் அவர்களின் "அந்தக் கேள்விக்கு வயது 98" கட்டுரைத் தொகுப்பு
சாளரம் பதிப்பக வெளியீடாக வந்துள்ளது. விலை 60.

முகவரி :2/1758. சாரதி நகர் , என்பீல்டு அவென்யூ,சென்னை ‍ 91.
Post Comment

"ஊடாடும் வாழ்வு"

கவியோவியத்தமிழன் அவர்களீன் "ஊடாடும் வாழ்வு" என்னும் கதைத் தொகுப்பில் வாமுகோமு எழுதிய முன்னுரை அப்படியே ஸ்கேன் செய்யப்பட்டு இங்கு தரப்பட்டுள்ளது.

இதனை படத்தின் மீது கிளுக்கிப் படித்துக்கொள்ளலாம். ஏதேனும் இடர்ப்பாடுகள் இருப்பின் நமக்கு மெயில் அனுப்பவும்.

இந்த சிறுகதை தொகுப்பு வெளியீடு : தீக்குச்சி வெளியீட்டகம். திண்டுக்கல்.
வெளியீட்டாளர் : இரா. தமிழ்தாசன். விற்பனை தொடர்புக்கு அலைபேசி : 90031 83822.98420 98002. விலை ரூ 80.00

Post Comment

செவ்வாய், ஜூலை 20, 2010

கூப்பிடுவது எமனாக இருக்கலாம்

வாமுகோமுவிற்க்கு "" நூலைப் படித்தவுடன்
கி. இளங்கோ , சீல நாயக்கன் பட்டி , சேலத்திலிருந்து வரைந்த மடல் அவர்கள் கையெழுத்திலே இங்கு வழங்கப்படுகிறது.Post Comment

எடுத்துட்டுப்போ !


நண்பா !
எனது பூனை அழகாயும்
மிருதுவாயும் வெண்மை
நிறத்தில் இருக்கிறது என்கிறாய்!
அதை நீயே எடுத்துட்டுப்போ!
எனக்கு பால் செலவு மிச்சம்!
எனது பேனா நன்றாகவே
எழுதுகிறதா ? அதை நீ
அபேஸ் செய்ததை என்னிடம்
சொல்லவே வேண்டாம்.
அந்த புத்தகத்தை நீ
இன்னும் படிக்கவில்லையா?
எடுத்து போ !
நான் படிச்சாச்சு
என் காதலி வேறு
அழகாய் இருப்பதாய்
அன்றொரு நாள் கூறினாய்
அவளையும் கூட்டிக்கொண்டு ஓடு!
அட ! ஏன் தனித்தனியாய்
நீ எடுத்துப்போக நானும்
ஒன்ணொன்னுக்கும்
விளக்கம் சொல்லிகிட்டு?
எடுத்துப்போ!
எல்லாத்தையும்.
கடைசியில் என்னையும்
நிர்வாணமாக்கி விட்டு !

(மு ஹரிகிருஷ்ணனுக்கு).

Post Comment

இருந்துட்டு போச்சாறேன் !


புவனேசுவரி
சித்ரகலா
மல்லிகா
தெய்வானை
ஷாலினி ரன்சித்பெல்லா
விஜி
சாந்தி
இவங்கெல்லாம் என்னோட‌
சோளக்காடு
வண்ணாம்பாறை
துண்டுக்காடு
பாத்ரூம்
சொந்தவீடு
சுடுகாடுன்னு எல்லாம்
பார்க்காமத் தேடிவந்து
சுகம் கொடுத்துட்டும்
சுகத்தை வாங்கிவிட்டும்
சாமம் ஏமம் பார்க்காம
வந்து போனாங்க சார்!
இதனால உங்களுக்கு
ஒண்ணும் சங்கடமில்லீங்களே ...
இல்ல பொறாமை கிறாமை ?
ஒண்ணுமில்லீங்கள்ல சார்
அப்புறமென்ன பின்ன உடுங்க!
இப்படியே
இருந்துட்டுப் போச்சாறேன் !

..

Post Comment

சிக்கன்குனியா

நான் சிக்கன்குனியாவில் அவதியுற்ற
இந்த ஒரு வார காலம் முழுதும் கண்மணி
உன் நினைவாலேயே நொந்து நூடுல்ஸாகி
எனது ஒற்றை விரிப்பில் கிடந்தேன்.
உனது அழைப்பு எனது அலைபேசியில்
சிணுங்கவேயில்லை ! போன் வழியாகவா
சிக்கன்குனியா பரவுகிறது ?‍ யார்
அழைப்பாக இருந்தாலும் அது உன்
அழைப்பாக இருக்குமே என்று ஆவலாய்
புரண்டு வலிக்கும் விரல்களால்
அழுத்திப் பேச அது நீயில்லை! நீயில்லை!
இதோ இன்று நோயின் பிடியிலிருந்து
மீண்டெழுந்து குளியல் போட்ட பிறகு
பார் உன் அழைப்பு!
ராவணன் போகலாமா இன்று மதியம்
என்று! வருகிறேன் கண்மணி !
ஆனால் இன்று என் கோபமெல்லாம்
திரையரங்கினுள் உன்
கொங்கைகள் மீதுதான் !
இருடி வர்றேன்
கூமாச்சி பண்ணீட்டு....

Post Comment

புதன், ஜூலை 07, 2010

மயிலும் கோமுவும்

சென்னையில் ஒரு மகிழ்ச்சியான வேளையில்Post Comment

வெள்ளி, ஜூன் 18, 2010

மேரேஜ்க்கு முன் லோடு பண்ணு

ஜே.பி.சாணக்யா இப்போது எங்கே ஓடி ஒளிந்து மறைந்து திரிகிறார் என்று அதையும் காட்டும் என் பூத கண்ணாடிகூட ஆளைக் காட்ட மறுக்கிறது. சரி நமக்கு ஆள் ஒரு பிரச்சனையும் இல்லை. அவரது இரண்டு தொகுதிகள் உள்ளன.

முதல் தொகுதி என் வீட்டின் வரைப்படம்.வாங்கி வைத்து ஐந்து வருடங்களாக அடுக்கில் தூங்கிக் கொண்டிருந்த புத்தகத்தை சமீபத்தில்தான் வாசிக்க முடிந்தது. முழுத்தொகுதியைப் பற்றி ஆஹா ஓஹோ என்று பேசப் போவதில்லை நான்.

மொத்தமே பத்துக் கதைகள் கொண்ட தொகுப்பில் ஒன்பதாவது கதையாக ஆட்டத்தின் விதிமுறைகள் என்ற கதை உள்ளது. தொகுப்பின் ஆகச் சிறந்த கதையாகவும் இதுவே உள்ளது. சிறுகதை எழுத வருபவர்கள் முதலில் மனிதனைப் படிக்கத்தெரிந்திருக்க வேண்டும். மக்களோடு மக்களாய் கலந்து புழங்க வேண்டும்.அந்தந்த மனிதர்களின்துக்கங்களின்,சந்தோசங்களையும் அறிந்திருக்க வேண்டும்.

ஜே.பி.சாணக்யா எதையும் இட்டுக்கட்டி எழுதுவதில்லை.அவரின் ஆண்களின் படித்துறையே தூற்றியும்,போற்றியும் . சாணக்யா என்றால் படித்துறை கதைதான் என்ற நிலைக்கு தள்ளிவிட்டார்கள். ஜே.பி. தனக்கு தெரிந்த மனிதர்களின் வாழ்க்கையை மட்டுமே ஆரவாரமின்றி நிதானமாக தன் கதைகளில் விவரித்துச் சென்றுள்ளார். அவரது பாத்திரங்கள் கற்பனைகளில் பிறந்து வரவில்லை.இவரது ஒவ்வொரு சிறுகதைகளும் நாவலுக்குண்டான விசயங்களை தன்னுள் கொண்டுள்ளன.

ஜோசியன் கலியன் கதையின் துவக்கத்தில் தன் சைக்கிள் அருகில் நிற்க வற்றிய ஏரியின் ஓரத்தில் காலைவெய்யிலில் கிடக்கிறான். ஜோசியனுக்கு நான்கு பிள்ளைகள். மூன்று ஆண்கள் ஜோசிய தொழிலை விட்டு வெளியூர் சென்றுவிட்டதாக கூறுகிறார். மறுபடி கதைக்குள் இந்த மூவரும் வருவதே இல்லை.பெண் கன்னியம்மாள் தான் கணவன்வீட்டிலிருந்து வந்து விட்டதாக கதை ஆரம்பிக்கப்படுகிறது. பின் திருப்புக்காட்சிக்கு செல்கிறது.

ஆசிரியரின் நான்கு பையன்களுக்கு ஜோசியம் பார்த்துவிட்டு அவர் தான் கிளம்புகையில் டவுனில் டெய்லரிங் கடை வைத்திருக்கும் பையனை கன்னியம்மாளுக்கு வயது 30 ஆகிவிட்டது பையனின் ஜாதகம் கிடைத்தால் போட்டு பார்த்து விடுவதாக ஆசிரியரிடம் கூறுகிறார் கலியன்.

படிப்பு ஏறாத கன்னியம்மாள் கறுப்பு அழகி. உள்ளூரில் இவளை அரைப் பொம்பளை அரை ஆம்பளை என்கிறார்கள். நாலும் மூணும் ஏழு என்பாள். மூணும் நாலும் எவ்ளோ? என்றால் அது என்ன கணக்கோ என்பாள்.

அந்த வார வெள்ளிக்கிழமை ஜோசியர் வீட்டில் கள்ளு வாடை! கன்னியம்மாள் நிச்சயம் செய்து போகிறார்கள். கன்னியம்மாளை கட்டிக் கொள்கிறான். இவர்கள் ஊருக்கும் இவள் புகுந்த ஊருக்கும் இடையில் ஐந்து ஊர்களே உள்ளதால் வாரம் ஒருமுறை கலியன் மகளை வந்து பார்த்துப் போகிறார். மாமியாருக்கும் பிடித்த மருமகளாக கன்னியம்மாள் மாறிப் போகிறாள்.

கன்னியம்மாளுக்கு குழந்தை பாக்கியம் தள்ளிப் போகிறது. குழந்தை பிறக்காததற்கு காரணம் தெய்வக்குற்றம் தான் என்று மாமியார் நம்புகிறார். அய்யனார் சாமிக்கும்,அய்யப்பன் சாமிக்கும் மாரியம்மனுக்கும் மூன்றுவித பிரார்த்தனைகள் நிறைவேற்றுகிறாள் கன்னியம்மாள்.

மணியனோடு டவுனில் சினிமா பார்க்கும் ஆசை கன்னியம்மாளுக்கு உண்டு. தொலைக்காட்சிப் படங்களை துண்டு துண்டாக பார்ப்பவள்.மணியனும் அழைத்துப் போவதாக சொல்லி ஒரு ஞாயிறு அன்று கன்னியம்மாளை அழைத்து கொண்டு புறப்படுகிறான். அம்மா பத்திரமாக சென்று வரும்படி அறிவுறுத்துகிறாள். அவர்கள் பேருந்து நிறுத்தம் வந்தபோது அன்று பஸ் ஓடவில்லை.ஜாதி தலைவரை கைது செய்ததால் பேருந்துகள் இல்லை.வருத்தமாக வீடு திரும்புகிறார்கள்.தெருவில் அவர்கள் திரும்பி வந்ததற்கான காரணத்தை சொல்லியே அலுத்துவிட்டது!

அன்று ஆறு மணிக்கு மேல் பேருந்துகள் ஓடும் என்றும் வானொலி செய்தி கேட்டதாகவும் மணியன் கன்னியம்மாளிடம் கூறுகிறான்.அன்று மாலையே அவளை இழுத்துக் கொண்டு மணியன் புறப்படுகிறான். இவர்கள் தியேட்டருக்கு செல்கையில் ஆறு மணிக்கே படம் போட்டுவிட்டதாகச் சொல்கிறார்கள். ஒரு நாளுமில்லாத திருநாளா திருவிழாவுக்கு போனானாம்..திருநாளும் வெறும் நாளாய் போச்சாம்.. அந்தக் கதையா இருக்கு என்று கூறி சிரிக்கிறாள்.

இருவரும் ஹோட்டலுக்கு சென்று சாப்பிடுகிறார்கள்.

இரண்டாம் ஆட்டம் பார்த்து கடைசி பஸ்சுக்கு காத்திருக்கிறார்கள்.கூட்டம் இல்லை என்றால் ஒவ்வொரு நாள் பஸ் ஊருக்குச் செல்லாது!நடக்க ஆரம்பிக்கிறார்கள்.அத்தைக்கு நீங்களே பதில் சொல்ல வேண்டும் என்கிறார்கள்.பாலம் ஒன்றை கடக்கையில் நான்கு பேர் வருகிறார்கள். கன்னியம்மாளை தூக்கிப் போய் காரியம் பார்க்கிறார்கள். மணியன் வாயில்
துண்டுத்துணி திணித்து கை கால் கட்டப்படுகிறான்.முடிவாக அவளுக்கு நல்ல மார்பகங்கள் என்று பேசிக்கொள்ள அவர்கள் கார் உறுமுகிறது.

இருவரும் விசயத்தை வீட்டில் மறைக்கிறார்கள்.இரவுகளில் அவளை கட்டிக்கொண்டு மணியன் அழுகிறான்.அந்த மாதம் அவளுக்கு நாள் தள்ளிப் போகிறது வீட்டிலும் அனைவர் முகத்திலும் பிரகாசம். கன்னியம்மாள் இயல்பு வாழ்க்கைக்கு மாறிவிட்டாள். மணியனுக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. அவள் செத்துப் போவாள் என்றும், தான் அழுவோம் என்றும் நாட்கள் கழித்து தனக்கு வேறு பெண்ணை கட்டி வைப்பார்கள் என்று நினைத்திருந்தான். மெதுவாக தாயிடம் விசயத்தை உடைக்கிறான். தாய் ஊருக்கெல்லாம் உடைக்கிறாள்.வீட்டில் ஆமை புகுந்து விட்டதாகவும் இந்த வீடு உருப்படாமல் போகப் போவதாகவும் .... பேச கன்னியம்மாள் திகைக்கிறாள். மணியனுடன் பேசுவதை நிறுத்திக் கொண்டான்.

மணியன் அம்மாவின் சொல்லிற்கேற்ப கன்னியம்மாளை அவள் ஊருக்கே வந்து விட்டுப் போகிறான்.கன்னியம்மாள் நடந்த விசயங்களை கலியனிடம் சொல்லி அழுகிறாள்.அவர் கடவுளை திட்டுகிறார்.ஆசிரியர் பஞ்சாயத்து பேசுகிறார். மணியன் வருவதில்லை.கன்னியம்மாள் குழந்தை பெற்றெடுக்கிறாள். யாருக்கோ பிறந்த பிள்ளையை என் மகன் ஏன் பார்க்கணும்? என்று மணியன் கூவுகிறார்.

ஆசிரியர் மற்றொருவருடன் மனியனை கடையில் சந்தித்து பேசுகிறார்கள்.அவன் இசைவது தெரிந்ததும் கடைக்கு அருகிலேயே வீடு பிடித்து குடும்பத்தைமாற்றும் எண்ணத்தில் துரிதமாக செயல்படுகிறார்கள். ஆனால் கன்னியம்மாள் அதற்கு ஒத்துவராமல் நானாச்சு என் பிள்ளையாச்சு என்கிறாள். கிராமிய சூழலில் இதில் தோன்றும் ஒவ்வொரு கதாபாத்திரங்களும் தன்னளவில் குறுங்கிப் போய்த்தான் உள்ளனர்.தனக்குத் தெரிந்த நியாயங்களோடே அவர்கள் வாழவும் பிடிவாதமாய் உள்ளனர்.கன்னியம்மாவும் இந்த சிறுகதையில் அப்படி ஒன்றும் பிரமாதமான முடிவாய் ஒன்றும் எடுக்கவில்லை. கிராமிய சூழலில் உள்ள எனக்கு இது சாதாரண அன்றாட
நிகழ்வு போன்று தான் என்றாலும் சொல்லும் முறையில் ஜே.பி. நிமிர்ந்து நிற்கிறார். கன்னியம்மாளுக்கு வாழ்வதற்கான பிடிமானம் கிட்டிவிட்டது!அவள் வாழ்வில் கணவன் தேவையில்லை தான்.

இதேபோன்று கவியோவியத்தமிழனின் சிறுகதை ஒன்றில் கர்ப்பம் தரிக்காத பெண் கோவிலுக்கு செல்வார். துணையாக உள்ளூர் பெண்களும் செல்வார்கள். இராக்காலங்களில் கோவிலின் ஒதுக்குப்புறத்தில் செடிகள் ஆள் உயரம் வளர்ந்திருக்கும் பகுதிக்கு தோழி ஒருத்தி இவளை கூட்டிப் போவாள்.அங்கே ஆண்கள் இருப்பர்.ஒரு கை இருட்டில் இவளைப் பிடித்து தூக்கிப் போகும்.எதுவுமே நடவாதது போல வீடு வந்து விடலாம்.

7.6.10 நக்கீரன் இதழில் வந்த விசயம் அதிர்ச்சிகரமாக உள்ளது. திருமணம் நிச்சயிக்கப்பட்ட புதுமாப்பிள்ளை சலீம் தற்கொலைசெய்து கொண்டார்.

நிகராபேகம் டிகிரி படித்த பெண்.அப்பா வெளிநாட்டில் இருக்கிறார். அம்மா ரசியாபேகம் தான் பொண்ணை வளர்த்துள்ளார்.ரசியா பேகத்துக்கு ஒரு பையனும் உண்டு.டிசம்பர் 16ல் மங்னா செய்தார்களாம்.மூன்றாவது நாளில் ரசியா பேகம் நிச்சயதார்த்த சிடி பார்க்க சலீமை அழைத்திருக்கிறார். சலீம் அண்ணன் நிஜாமிடம் சொல்ல... அப்படியே இன்னொரு காப்பி வாங்கிட்டு வா என்று தாட்டி விட்டிருக்கிறார். போனவர் மூன்று மாதம் பெண் வீட்டிலேயே தங்கிவிட்டிருக்கிறாராம்.(இந்த இடம்தான் எனக்கே உதைக்கிறது)மார்ச் 25ம் தேதி நிஜாமிற்கு போன் வருகிறதாம். மாப்பிள்ளையை பிடிக்கலை.நிச்சயதார்த்தை கேன்சல் பண்ணனும் என்று!

சலீம் எழுதிய மரணவாக்குமூலம்:
“நிச்சயிக்கப்பட்டதிலிருந்து நிகராவும் நானும் காதலித்தோம்... சுற்றினோம்.. படம் பார்த்தோம்.ரசியா பேகம் என்னை நிகரா ரூமில் தள்ளி கதவை சாத்திக் கொண்டார். நாங்கள் உல்லாசமாக இருந்தோம். ரசியாபேகம் சொன்னது என்ன என்றால் என் மகள் திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாக வேண்டும். சொந்தத்தில் நிறையப் பேருக்கு திருமணமாகியும் குழந்தைகள் இல்லை.

என் மகளுக்கும் குழந்தையில்லாமல் போய்விடக் கூடாது! அதனால் குழந்தை முதலில் பிறகு திருமணம் என்றார்.அவர்கள் வீட்டிலேயே நான் இருந்தால் என் சொத்தில் சிலவற்றை விற்றுத்தர சொல்லி பணத்தையும் வாங்கிக் கொண்டார்கள்...

எப்போது ரிட்டன் பண்ணுவீர்கள்? என்று கேட்க என் மகள் உன்னோடு இருந்ததற்கு சரியாய் போய்விட்டது என்றார்கள்.

நிகராவும் எனக்கு குழந்தை உருவாக வேண்டும்..அது இல்லை என்றால் உன்னை திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்றாள். இதனால் அடியேன் தற்கொலை செய்து கொள்கிறேன்... என்னை போல யாரும் பாதிப்படக்கூடாது”

ஒவ்வொருவரும் விதம் விதமாய்தான் யோசிக்கிறார்கள். விதவிதமாய் முடிவும் எடுக்கிறார்கள். இந்த விசயத்தில் காதல் என்ற ஒன்று இல்லவே இல்லை.எல்லாமே கேப்மாரித்தனங்கள் தான். இந்த மாதிரி விசயங்களும் இதைவிட பயங்கரமான விசயங்களும் நம்மை எந்த விதத்திலும் அதிர்ச்சிக்குள்ளாக்குவதோ... பாதிக்கச் செய்வதோ இல்லை.

என்னைப் போல யாரும் பாதிக்கப்படக்கூடாது என்று சலீம் எழுதியிருக்கிறார்! உன்னைப் போல யார் தான் இந்த உலகத்தில் பாதிப்படைவார் சலீம்?

குழந்தை இல்லை! குழந்தை இல்லை! என்கிற பிரச்சனை வரும் காலத்தில் இன்னமும் அதிகமாகும்தான்.

அப்போது இதைவிட மேலான ஒழுக்கக் கேடுகள் நிகழவும் செய்யும் தான்! இதற்கெல்லாம் நம்கையில் எந்ததீர்வுகளும் இல்லை! வெறும் பார்வையாளர்கள் தான் நாம்.============================================================================

டைப்பிங் உதவி
மயில்ராவணன்.
..

Post Comment

செவ்வாய், ஜூன் 15, 2010

வானில் பறக்கும் ஆணுறை

வானில் பறக்கும் ஆணுறை

விந்துத் துளிகளை
உள் வாங்கிய
ஆணுறை ஒன்று
திருவனந்தபுரத்திலிருந்து
சென்னை வரும் விரைவு
வண்டியின் கழிவறையில்
பயணித்து வந்தது.
மிகச்சரியாய் யாரோ
பீச்சிய மூத்திரத்தின்
வேகம் அதை துளி
துளியாய் நகர்த்தி விட
மலக்குழியில் துளை வழியே
ரயில்வே ட்ராக்கில் வீழ்ந்து
துடித்தது சிங்காநல்லூர் அருகே!
வெறுமனே வெய்யிலில்
கிடந்த அந்த ஆணுறை
சற்றைக்கெல்லாம்
சிறகு முளைத்து
வானில் பறந்தது!


களவு போகும் நட்சத்திரங்கள்

நட்சத்திரங்கள் திருடு போவது பற்றி
விசாரணைகளை துரிதப்படுத்தும்படி
அரசாங்கம் கேட்டுக் கொண்டது!
எனக்கென்னவோ கவிஞர்கள்
மீதுதான் முதலில் சந்தேகமிருந்தது
திருடு போவதை நேரில் காணும் வரை!
பிரேமாதான்.
இராக்காலங்களில் விண்ணில்
றெக்கை கட்டிப் பறந்து பூப்பறிப்பதுபோல
நட்சத்திரங்களை கிள்ளி எடுத்து
மடியில் மறைத்து இறங்கி விடுகிறாள்.
உங்கள் ஊரில் நட்சத்திரங்கள்
களவு போனால் என்னிடம் தெரிவியுங்கள்.
பிரேமாவை மிரட்டி வைக்கிறேன்.

..

Post Comment

வியாழன், ஜூன் 10, 2010

வா. மு. கோமுவின் ‘சாந்தாமணியும் இன்ன பிற காதல் கதைகளும்’


-சாகிப்கிரான்விரிவுபடுத்தி எழுதப்பட்ட புனைவு ஒன்றே நாவல். அது பொதுவாக உரைநடை வடிவில் இருக்கும். இதுவே நாவலுக்கான மிக எளிய வரையறையாக இருக்கிறது. இந்த குறைந்த அளவு வரையறைக்குஎந்த அளவு ஒரு எழுத்து உடன்பட்டிருக்கிறது. அப்படி அது ஒரு புனைவின் வழியாகத் தன்னை எப்படிநாவல் என்ற எல்லைக்குக் கொண்டு செல்கிறது முதலிய கவனங்கள் வா. மு. கோமுவின் நாவலைவிமர்சனத்திற்கு உட்படுத்தும்போது நம்முன் எழும் ஒருவகையான சவால்

கவிதையைப் போலல்லாமல் நாவலுக்கு மிகக் குறைந்த வரலாற்றையே நாம் கொண்டுள்ளோம். பிரதாப முதலியார் சரிதம் தொடங்கி வா. மு. கோமுவின் சாந்தாமணியும் இன்னபிற காதல் கதைகள் வரை ஒரு பயணத்தை அடைந்திருக்கின்றோம். இந்தப் பயணம் எத்தகைய முடிவுகளைமுன்வைக்கிறது? நாவலானது தனது வடிவம், உத்தி, உள்ளடக்கம், அழகியல், இயல்புநிலைமுதலியவற்றைத் தாண்டி எப்படி தன்னை ஒரு எழுத்துப் பிரதியிலிருந்து அல்லது ஒரு தகவல்அல்லது கருத்து நிலையிலிருந்து இலக்கியமாமாக்கிக் கொள்கிறது. அந்த புள்ளி எந்த நிலையைஅத்தகைய ஒரு பிரதியில் செயல்படுத்துகிறது? இதுதான் நாவல் தனது பாதையில் கொண்டிருக்கும்படிநிலை உயரமா என்று சந்தேகம் எழுகிறது. எத்தகைய கூறுகள் ஓர் எழுத்தைஇலக்கியமாக்குகின்றன. அது இலக்கியத்தில் பேசப்படும் இசங்களால் நிர்ணயிக்கப்படுகின்றதா என்றகேள்வியும் தொடர்கிறது.

இசங்கள் ஒன்றை ஒன்று கடந்து ஒரு வகையான எளிய நிலைக்குத் திரும்பிவிட்டன. அல்லதுஎளிமையைத் தன்னுள் மிகைப்படுத்தி வருகின்றன. அத்தகைய ஒரு வடிவமாகச் செவ்வியல்தன்மையைச் சொலல்லாம். செவ்வியல் தன்மையானது இயல்புணர்வின் நேரடியாகச் செயல்படும்ஒரு தன்மையைக் கொண்டிருப்பதால் என்றைக்குமான இலக்கிய ஒழுங்கை அது அடைகிறது. இந்தநாவலானது முதல் பாகத்தில் செவ்வியல் ஒழுங்குடைய ஒரு நாவலாகத் தொடங்கி இரண்டாம்பாகத்தில் செவ்வியல் ஒழுங்கை மிக எளிய வடிவில் பின்நவீனத் தன்மையை அடையாளப்படுத்தும்ஒருவகை உத்தியாக்க முயன்றிருக்கிறது. தீவிர உட்சிக்கல்களுக்கு உருக்கொடுத்தல், முரண்பாட்டு இறுக்கம், தெளிவின்மை, இந்த வகையில் இவை தங்களுடன் தொடர்புடைமை ஆகிய இவற்றை முன்னெப்போதும் கையாளாத சொல்லல் முறையில் தன்னைத்தானே எள்ளல் செய்வதை வெளிப்படுத்துவது என்பது ஒரு வகையில் பின்நவீனத்துவத்தைவரையறைப் படுத்துவதாகும். இதில் இரண்டாம் பாகமானது தீவிர உட்சிக்கள்களுக்கோ, முரண்பாட்டு இறுக்கத்திற்கோ இடம் தருவதில்லை. ஆனால், தெளிவின்மையும் அவை எவ்வளவுஎளிய வடிவைக் கொண்டிருந்தாலும் அவற்றிற்கான தொடர்பு குறித்த ஒரு அபத்தமும் தொடர்பற்றதன்மையையும் கொண்டிருக்கின்றன. அதேபோல அந்தத் தொடர்பானது ஒரு வகை பாலியல்தன்மையிலான வெற்று காம செய்கைகளின் ஒரு கூட்டாக அமைவதும் அதன் இயங்கியல்தளமானது அதாவது அது நடப்பதாகக் காண்பிக்கப்படும் அல்லது சொல்லப்படும் சமூக வாழிடம்அது வெகு சாதாரணமாகப் பாவிக்கப்படும் ஒரு சிதைவுற்ற பண்பாட்டு மக்கள் வாழும் நிலப்பரப்பு. அது நகரியமும் அதனால் தொடர்ந்து மேம்பட்டுக் கொண்டே இருக்கும் அறிவியல் தொழில்நுட்பத்தால் உருவாக்கும் தாக்கத்தையும் அதன் சிதைவுகளையும் தொகுப்பதன் மூலம் ஒருதொடர்பின்மையில் தொடர்புடமையை உருவாக்கி, பின்நவீனத் தன்மையை சாயலாக்கமுயலுகிறது.

366 பக்கங்களைக் கொண்ட இந்த நாவலை வாசகனால் ஒரே மூச்சில் மிக எளிதில் வாசித்துவிடமுடியும் என்றே நம்புகிறேன். முதல்பாகம் சாந்தாமணி. இரண்டாம் பாகம் இன்னபிற காதல் கதைகள்.

முதல் பாகம் ஒரு கிராமத்துப் பள்ளியில் நடக்கும் மாணவப் பருவ காதலைப் பேசுகிறது. பழனிச்சாமிதான் அந்தக் காதல் கதையின் கதாநாயகன். அவனது காதலிதான் சாந்தாமணி. பழனிச்சாமி பள்ளி மாணவர்த் தேர்த்லில் நின்று ஏழு ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்றுப்போனவன். அவனது உயிர் நண்பன் சக்தி. இந்தக் காதல் கதையின் இடையில் வரும் கதாபாத்திரங்கள் பூங்கொடி, ஜான்ஸி, சுகந்தி இன்னும் சிலர். பூங்கொடி சக்தியின் காதலி. வழக்கமான நாம் அன்றாடம்கேள்விப்படும் ஒரு காதல் கதையாக இருந்தாலும் வா. மு. கோமு தனது கை வண்ணத்தால்கதாபாத்திரங்களின் விருப்பங்களை மொழிகிறார். அது நமது இயல்பு வாழ்வில் எத்தகையஅறமுமற்ற சில பிம்பங்களை நினைவுபடுத்துகிறது. என்றாலும் பள்ளியில் படிக்கும் அதாவதுபன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களான அவர்கள் தங்களது இயல்பில் சற்றே மிகைப்படவடிவமாகவே தெரிகின்றனர்.

இரண்டாம் பாகத்தில் தனித்தனி அத்தியாயங்களில், வெவ்வேறு விதமான உரையாடல்களை, கடிதங்களை, கவிதைகளை, விவரிப்புகளை காதல் கதையாக்க மாற்ற முயன்றிருக்கிறார். குறிப்பாகஒவ்வொரு அத்தியாயமும் ஒரு பெண் பெயரைக் கொண்டிருக்கிறது. இப்படி அமைக்கப்பட்டிருக்கும்இரண்டாம் பாகமானது முதல் பாகத்தில் வரும் எந்தக் கதாபாத்திரத்தையும் தன்னுள்கொண்டிருப்பதில்லை. அதாவது கதாநாயகன் பழனிச்சாமியைத் தவிர. அல்லது போர்ஹேகதைகளில் வருவதுபோல இந்த பழனிச்சாமி ஒரு கூட்டுமனத்தின் கால நீட்சியா என்றும் எண்ணவைக்கிறது. இரண்டாம் பாகம் கிட்ட்த்தட்ட உடலுறவு பற்றிய மிகப்பெரிய உரையாடலுடன்நீள்கிறது.

நாவலின் அட்டை குறிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் வாசகமானது, ‘பாலின்பத்தின் வேட்கைகளும் வெளிப்பாடுகளும் ஒரு கலாச்சார வெளியில் எவ்வாறு நிகழ்கின்றன என்பதன் சாட்சியமே வா.மு. கோமுவின் இந்தப் புதிய நாவல். ஆபாசமென்றும் மிகை என்றும் சொல்லக் கூடாதவை என்றும் சொல்லப்பட்டவற்றை சொல்வதன் மூலம் நம் அசலான இருப்பை மிகவும் நெருங்கி வருகிறார் வா.மு. கோமு. நம்முடைய ஆசாபாசங்களும் இரகசியங்களும் நம்மை எந்த அளவிற்கு இன்பமூட்டுமோ அந்த அளவிற்கு இந்த நாவலும் இன்பமூட்டுகிறது. எந்த அளவிற்கு அது நம்மை பயப்பட வைக்குமோ அதே அளவுக்கு பயப்படவும் வைக்கிறது. நகரங்கள், கிராமங்கள், சமூக, பொருளாதார வித்யாசங்கள் என சகலத்தையும் கடந்து இன்று உருவாகும் ஒரு பொதுப் பண்பாடு எவ்வாறு எல்ல இடங்களிலும் நீக்கமற நிறைகிறது என்பதை மிகத் துல்லியமான மொழியில் இந்த நாவல் சித்தரிக்கிறது.’

முதல் பாகமானது மேலே சொல்லப்பட்ட்து போல பாலின்பத்தின் வேட்கைகளும்வெளிப்பாடுகளும்தான் என்றாலும் ஆசிரியர் காண்பிக்கும் பண்பாட்டு வெளியானது இயல்புநிலையிலிருந்து வெகு அந்நியப்பட்ட ஒன்றாகவே இருக்கிறது.

அதாவது அவர் சித்தரிக்கும் பள்ளியானது ஒரு கல்லூரிக்கு இணையாகக் காட்டப்படுகிறது. மாணவர்கள் தங்களது குடும்பம், சூழல், பள்ளியின் கட்டுப்பாடுகள் போன்ற எதையும்எதிர்கொள்வதாகவோ அல்லது அத்தகைய ஒன்று இருப்பதையோ நினைவுபடுத்துவதோ இல்லை. அல்லது அந்தக் கதையானது கதாசிரியனின் மன உலகில் நடக்கும் ஒரு புனைவைப் போல தோற்றம்கொள்கின்றது. கதாபாத்திரங்களின் மனநிலையானது ஒற்றைத் தன்மையுடன் ஒருஇனக்குழுவிலிருந்தோ அல்லது பொதுவான ஒரு மனித சமூகத்திலிருந்தோ தருவித்துக்கொள்ளாமல் இருப்பதால் அது கதாசரியனின் வக்கரமான மனநிலையைப் பிரதிபலிப்பதாவேஅமைவதாக நினைக்கத் தோன்றுகிறது..

பள்ளி என்பது அரசு பள்ளியாக இருந்தாலும் தனியார் பள்ளியாக இருந்தாலும் அது மிகப் பெரியநிறுவனம். அதன் கட்டமைப்புகள் மதிய உணவு வழங்குவது வரை தனக்கான அதிகாரங்களைக்கொண்டிருக்கும்போது அறிவியல் துறையில் படிக்கும் மாணவர்களால் எத்தகைய கட்டுப்பாடும்இல்லாமல் சுதந்தரமாக இயங்க முடிவதும் ஆசிரியரை மன்னிப்பு கேட்க வைப்பதும், வகுப்பறைகளில் சல்லாபம் கொள்வதும், எப்போதும் வகுப்புகளைப் புறக்கணித்துவெளியேருவதும், பள்ளியிலேயே மது அருந்துவதும் கலவியின்பம் காண முயல்வதும்கட்டுப்பாடான பள்ளிகளில் படித்து ஒழுக்கமான குடும்பங்களில் வாழ்ந்த நமக்கு பெரியவியப்பாகவும் சாத்தியமற்ற ஒரு புனைவுமாகவே தெரிகின்றன.

ஆனால் நாவலில் காட்டப்படும் பாத்திரப் படைப்பானது ஒரு தேர்ந்த கதாசிரியரின் ஆளுமையைக்காட்டவே செய்கிறது. சாந்தாமணியின் காதலுக்காக உருகி நிற்கும் பழனிச்சாமி எந்த சிறுஉறுத்தலுமில்லாமல் ஜான்ஸியிடம் சல்லாபம் கொள்கிறான். ஆனால் சாந்தாமணியைத் தொடவும்தயங்கும் அவன் அவளது தங்கையின் விருப்பப்படி அவளை சாந்தாமணி இருக்கும்போதேஅவளுக்குத் தெரியாத்தைப்போல சல்லாபிக்கிறான். அதேபோல தனது காதலியான பூங்கொடியைசினிமா தியேட்டரிலேயே உறவுக்கு அழைக்கும் சக்தி அவனது வீட்டில் குடியிருக்கும் கலைவாணிஅவனை சல்லாபிக்க அனுமதிப்பதில்லை. சுகந்தி
(சாந்தாமணியின் தங்கை) வேட்கையில் அலையும் ஒரு பிஞ்சில் பழுத்த பழம், அந்தப் பிஞ்சைப் பழுக்க வைத்தது சக்திக்கு தியேட்டரில் இணங்க மறுத்த பூங்கொடி. அந்த பூங்கொடிதான் லெஸ்பியனாக சுகந்தியைப் பழக்கப்படுத்தியவள். இத்தகைய மன அமைப்பானது நுணுக்கமாக மனித மனத்தின் மிகப் பிரமாண்டமான சிக்கல் முடிச்சிகளின் வெளிப்பாடுகள். இவை இயல்பான மனோநிலைக்கு புரிபடாத ஒரு மனோதத்துவ ரகசியம். ஆனால் இதை செம்மையாகக் கையாளத் தவறிய ஒரு நாவலாகத்தான் எண்ணத் தோன்றுகிறது.

அன்னா கரினா, மேடம் பொவாரி போல எத்தகைய வலுவான கதையமைப்பையோ, அதற்கானஇயங்குதளத்தையோ கொண்டிருப்பதில்லை. மாற்றாக மிக எளிய கதையானது மிக அதீத பாலியல்வேட்கையை, அல்லது அத்தகைய சிதைவுற்ற மனநிலைகளை எத்தகைய நிர்பந்தமுமற்றநாவலின் சூழலுக்குள் மிகைப்படித்திய வண்ணமே எந்த உணர்வொழுங்கும்தனதியல்பிலில்லாதபடிக்கு நிற்கிறது.

பாத்திரங்களின் மனோபாவமானது விடலைப் பருவத்தைப் பற்றியதாக இருந்தாலும்விவரிக்கப்படும் அந்த மனோபாவமானது அத்தகைய விடலைப் பருவத்தைக்கடந்தவர்களைப்போல தோற்றம் கொள்கிறது. அல்லது போதிய வலுவில்லாமல் அமைக்கப்பட்டதிரைக்கதைபோல ஆளுமைகள் சிதறடிக்கப்பட்டிருக்கின்றன. இது நாவலை இலக்கியமாகும்தன்மையற்ற ஒன்றாக மாற்றிவிடுகிறது. அத்தகைய ஒரு பழுதை உணர்ந்த கதாசிரியர் அதற்கானமாற்றாக பாலியல் வேட்கைகளை முன்னிருத்துவதாக எண்ணத் தோன்றுகிறது. தீவிர இலக்கியவாசகன் முதல் வாசிப்பிலேயே இதை உணர்ந்து கொள்வான்.

பாலின்பத்தின் வேட்கைகளும் வெளிப்பாடுகளும் ஒரு குறிப்பிட்ட நிலம்சார்ந்தபண்பாட்டுவெளியில் எவ்வாறு நிகழ்கின்றன என்பதற்கான எந்தத் தடையமும் நாவலில்விவரிக்கப்படுவதே இல்லை. அல்லது அதற்கான வெளியில் நாவல் இயங்குவதே இல்லை என்றுகூறிவிடலாம். ஏனென்றால் நாவலானது நாம் பேசிக்கொண்டிருக்கும் பண்பாட்டிற்கு வெளியில்அதற்கு எதிரான ஒரு கதியில் அதாவது புனைவைப் போன்ற ஒரு திரிசங்கு சொர்க நாவல்போலவோ, சரோஜா தேவி நாவலில் இயங்கும் சாத்தியமில்லாத ஒரு பிரதிமையைக்கொண்டியங்குவதால் அத்தகைய ஒரு பயன்பாடு அல்லது கூற்றானது சாத்தியமில்லாமலும்போய்விடுகிறது.

இரண்டாம் பாகமானது முதல் பாகத்தைப் போல ஒரு தொடர்ந்த கதையமைப்பில் இயங்காமல், தனித்தனி பின்னங்களாக காட்டப்பட்டிருப்பது, அத்தகைய பிம்பங்களின் ஒட்டுமொத்த சாயலானதுமுதல் பாகத்தின் தீவிரத்தன்மையோடு ஒப்பு நோக்கப்பட்டு, அதற்கான ஒரு சுவடில் மீண்டும்மற்றொரு பயணத்தைத் தொடர்வதற்காக செய்யப்பட்டிருக்கிறது. இந்த உத்தியானது முழுவதுமாகவெற்றியடையாமல் போனதற்குக் காரணம் அது எத்தகைய வலுவுமில்லாத பாலியல்செயல்பாடுகளாக அல்லது அத்தகைய உரையாடல்களை வெற்று நீட்சிகளாகக் கொண்டிருப்பதே.

இதை இப்படியும் சொல்லலாம். நடிகர் ராஜேஸும் வடிவுக்கரசியும் நடித்த படம் கன்னிப்பருவத்திலே. பாக்கியராஜ் வில்லனாக அதாவது
anti hero வாக வருவார். படத்தில்படுக்கையறை காட்சியும் உடலுறவு காட்சியும் காட்டப்படும். அதை சென்சார் செய்யவே முடியாதஅளவிற்கு கதைக்கான ஒரு வலுவாக, கதையை தீர்மானிக்கும் முக்கிய கூறாக வைத்திருப்பார்கள். கதை இதுதான். கதாநாயகன் ஒரு ஜல்லிக்கட்டு வீரன். ஊர் பெண்களுக்கெல்லாம் அவன் ஒரு கனவு. கதாநாயகியைக் காதலித்து கல்யாணம் செய்து கொள்கிறான். பிரச்சனை வருவதேமுதலிரவில்தான். உடலுறவு ஆரம்பிப்ப்தைக் காண்பிப்பார்கள். ஆனால் தொடரமுடியாமல் அவன்தோற்றூப்போகிறான். சரி. மற்றொரு நாள் பார்க்கல்லாம் என்றால் மீண்டும் தோல்விதான். காரணம்ஜல்லிக்க்ட்டில் ஒருமுறை மாடு முட்டித் தள்ளிவிட அவனது ஆண்மை சீர்படுத்த முடியாதபடிகுறைபட்டுவிடுகிறது. மருத்துவர் சொல்வதை யாரிடமும் சொல்ல முடியாமல் சுகமும்கிடைக்காமல் தவித்துக் கொண்டிருக்கும்போதுதான் கதாநாயகனின் தம்பிக்கு இந்த விஷயம்தெரியவர, நாயகியை மிரட்டுகிறான். அவளது கணவணின் ஆண்மையற்ற தன்மையை ஊரில்எல்லோரிடமும் சொல்லிவிடுவேன் என்கிறான். தனது ஆசைக்கு அவளை இணங்கச் சொல்கிறான். கதை இவ்வாறு போகிறது. இங்கே அத்தகைய காட்சி வலுவை நாம் உணருகிறோம். அப்படிப்படவலுவான எந்த அத்தியாயமும் இரண்டாம் பாகத்தில் இருப்பதாகக் காணமுடிவதில்லை.

முதல் பாகத்தின் முடிவில் பழனிச்சாமியும் சக்தியும் பேசிக்கொள்ளும் ஒரு காட்சி. ‘ரொம்ப தப்பு பண்றோம்டா. யாரோ பெத்து வளர்த்துன ஒரு பெண்ணை காதல்னு சொல்லிட்டு இழுத்துட்டுப் போய் முத்தம் குடுக்கறதும், முலை கசக்கறதும் எனக்குப் பாவமாப்படுது. அதில்லாம எதிர்பார்ட்டிக்கு நம்ம மேல விருப்பம் இருக்கா இல்லையான்னு தெரிஞ்சுக்காமலே, நம்ப ஆசைக்கு எல்லாமே நடந்தே ஆகணும்னு விருப்ப்ப்படறோம். பாவம்டா . . . எல்லாமே பாவம்.’ இது சக்தியின் வார்த்தைகளாக இருக்கின்றன. ஆனால்பழனிச்சாமி இந்தக் கருத்தை ஆதரிப்பதுமில்லை. மறுப்பதுமில்லை. நாவல் உருவாக்கும்கட்டமைப்பிற்கு முற்றிலும் முரணான ஒரு விஷயமாக இருக்கிறது. இத்தகைய ஒருகருத்துநிலையை ஆசிரியர் தனது ஆபாச மனவிகாரங்களை சரிகட்டும் உத்தியாக்க்கமுயன்றிருக்கிறார். இதே போலவே சக்தி மற்றொரு கதையைச் சொல்கிறான். ‘அண்ணன் செத்த உடனே தம்பி, அண்ணிக்காரிக்கு ரூட் விட்டுட்டே இருந்தானாம். அட அண்ணின்னா அம்மா மாதிரிதான கிட்ட்த்தட்ட. டார்ச்சர் குடுத்து குடுத்து அண்ணிக்கு விருப்பமில்லாமயே வம்புல புடிச்சி மாட்டிக்கிட்டு இருந்திருக்கான். இது அவன் சம்சாரத்திற்கும் தெரிந்தேதான் நடந்துட்டு இருந்திருக்கு. முன்னத்த நாள் சாயந்திரம் இப்படி பாம்பு கடிச்சு நுரை தள்ளிட்டு கெடக்கான்னு காட்டுக்கு ஓடி நாலஞ்சு பேரு தூக்கிக்கிட்டு வரவரவே உசுரு போயிடுச்சாம். விரியன் பாம்புதான் கடிச்சிருக்கோணும்னு பேசிக்கிட்டாங்க. கொண்டு வந்தவங்க, பாடிய வாசல்ல வச்சிருக்காங்க. வாசல் படியில உட்கார்ந்திருந்த அண்ணிகாரி தப்புறு குப்புறுன்னு பொணத்துக்கிட்ட ஓடிப்போய் வேட்டியை அவுத்துட்டு விரையோட சேத்து அவன் குஞ்சுமணியை வாயில கடிச்சு வாசல்ல துப்பிபோட்டு போய் மறுபடியும் வாசப்படியில உட்கார்ந்து அழ ஆரம்பிச்சிடுச்சாம்.’ என்ன மாதிரியான மனதின் உணர்வதிர்வை ஆசிரியர் நிறுவவருகிறார்?

நாவலில் விவரிக்கப்படும் உரையாடல்கள் இத்தகைய ஒரு பாலியல் தினவை வெகு சாதாரணமாகஎதிரானிடம் வெளிப்படுத்தும் அளவிற்கு நமது சமூகம் தயாராகிவிட்டதா என்பதே. உள்ளபடியேபார்க்கப்போனால் இத்தகைய நாவல் அதாவது தனது குறிகளை எந்நேரமும் திறப்பதற்குத் தயாராகஇருக்கும் பெண்களை கற்பிக்கும் கதாசிரியன்தான் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

இரண்டாம்பாகமான பழனிச்சாமி முதல்பாகத்தில் சாந்தாமணியால் காதலின்மேல் வெறுப்புற்றுவேட்கைகளை முன்மொழிபவனாகவே மாறிவிடுகிறான். இது ஜான்ஸி அவனுக்குத் தந்த ஒருஅறம். ஆனால் நாவலின் இறுதியில் பழனிச்சாமி தன் மனைவி ஜெயாவை அணைத்தபடி தனதுசெல்போன் காதலி மீனாவிற்கு குட்நைட் சொல்கிறான். மீனாக்குட்டி இவனது செல்போன் துணை. ஒரு நண்பனின் தங்கை. அத்தகைய வேட்கைகளின் தினவுகளைப் பகிர்ந்து கொள்வதற்கான ஒருதுணை. இங்கே இரண்டாவது பாகத்தில் ஒருசில கடிதங்களை, கவிதைகளை வைத்திருந்தாலும்செல்பேசி உரையாடல்கள்தான் அதிக பக்கங்களைப் பிடித்திருக்கின்றன. அது மனிதவாழ்முறையானது தொலைத் தொடர்பு தகவல் பரிமாற்ற முன்னேற்றங்களால் எத்தகையசாதகங்களை, பாதகங்களைக் கொண்டிருக்கின்றன என்பதைக் காட்டி நிற்கவே செய்கின்றது.

மிக மிகச் சொற்பமான நாவல் தன்மைகளையும் மிக அதிக அளவில் பாலியல்இட்டுகட்டல்களையும் வெகு சாதாரணமான புனைவையும் கொண்டிருக்கும் இந்தப் பிரதியைவாசித்தவுடன் எழுந்த சில கேள்விகளே இத்தகைய ஒரு படைப்பிற்கான விமர்சனத்தை முடித்துவைக்கும். அந்தக் கேள்விகள் . . .

  1. பெண்கள் லெஸ்பினாக மாறுவதைக் காட்டும் அதே சமயம், ஒரு ஹோமோவுக்கான எந்தத் தடையத்தையும் நாவல் கொண்டிருப்பதில்லை.
  2. விருப்பங்களை மொழிவதை எடுத்துக் கொண்டால், பெண்களின் விருப்பங்களாகக் காட்டப்படும் பாலியல் வேட்கைகள் ஒரு சிலவற்றைத் தவிர மற்றவை ஒரு ஆணிய மனம் வரிந்துகொண்ட பெண் விருப்பங்களாகத்தான் தெரிகின்றன.
  3. நாவலின் மையம் ஆணாதிக்கப் பரப்பிலிருந்து விரிவதாகவே இருக்கிறது. சாந்தாமணியை அவளது பிடிவாத குணத்துடன் மைய கதாநாயகனும் சரி, துணைக் கதாநாயகனும் சரி ஏற்றுக் கொள்ள மறுத்து காதலையே துறந்துவிடுகின்றனர்.
  4. கதாபாத்திரங்கள் வாழ்க்கைத் தேவைகள் எதற்கும் முனைப்பில்லாத வெறும் பாலியல் முனைப்புடனே நிற்கின்றன. இது இலக்கியத் தரத்தில் நாவலை எங்கே கொண்டு செல்கிறது? அல்லது இது எப்படி ஒரு நாவலாகிறது?
  5. சில சிறுகதைகளில் மிகச் சிறப்பாக, குறிப்பாக உலக இலக்கிய அளவில் பாலியல் விஷயங்களையும், மனித மனதின் விசித்திர செயல்பாட்டையும் சாதாரணமாகச் சொல்லிச் சென்ற வா. மு. கோமுவின் சிறுகதைகளுக்கிடையே நாவலின் வடிவம் அல்லது புனைவு ஏன் வெற்றியடையவில்லை?
  6. பாலியல் விஷயங்களை வெறும் பாலியல் நடைமுறையாகப் பார்க்காமல், அதன் பல்வேறுபட்ட சமூகக் சிக்கல்களாகவும் தனிமனித சிதைவுகளாகவும் ஏன் வெளிப்படுத்தக் கூடாது? அதற்கான புனைவுகளும் உத்திகளும் நாவலில் எத்தகைய சாத்தியங்களைக் கொண்டிருக்கின்றன?
  7. இத்தகைய தமிழ் நாவல்கள் உலக இலக்கியங்களுடன் ஒப்பு நோக்கும்போது அதன் கடைக்கோடி நிலையானது ஏன் மேம்படுவதில்லை?
  8. Ingmar Bergman - ன் Persona என்ற படத்தில் இரண்டு பெண் கதாபாத்திரங்கள் தங்களது உடலுறவு அணுபவங்களை பேசிக்கொள்வதாக இருக்கும். அந்தப் படத்தில் அது காட்சி வழியாக்க் காண்பிக்கப்படாமல் உரையாடல் வழியாக நிகழ்த்தப்படுவதால் அதன் வலுவானது sexual erection க்குப் பதிலாக mental and social distortion னாக பூடகமான ஒரு மன ஒழுங்கில் விளக்கப்படுகிறது. அத்தகைய சாத்தியங்களை ஏன் நம்மால் பயன்படுத்த முடிவதில்லை. அல்லது அதன் மீள் தன்மையானது நமது பொது புத்திநிலைக்கு தயாரான ஒன்றாக இல்லையோ என்று எண்ணத்தோன்றுகிறது.
  9. எப்போது நாம் வணிக நோக்கமற்ற அல்லது அதுவே பிரதானமான ஒரு நிலையிலிருந்து வெளியேறி தீவிர இலக்கியத்தை மக்கள் முன் வைக்கப்போகிறோம்?
  10. இத்தகைய நாவலுக்கான தேவை என்ன என்று புரியவில்லை. ஜி. நாகராஜனையும் சத் ஹசன் மாண்டோவையும் நாம் எவ்வாறு புரிந்து கொள்கிறோம்? அவர்களுக்கான இடம் எதுவாக நம்மிடையே இருக்கிறது? அதாவது இந்த நாவலின் பிரதிகள் யாவும் விற்றுத் தீர்ந்துவிட்டது என்ற ஒரு செய்தியானது எதைக் காட்டுகிறது?

பின்குறிப்பு : நல்ல படைப்பொன்றே ஆழமானதும் கவனிக்கத்தக்கதுமான ஒரு விமர்சனத்திற்கு இடம் தருவதாக இருக்கிறது.

(சொற்கப்பலும் தக்கை காலாண்டிதழும் இணைந்து 08-05-2010 அன்று நடத்திய நாவல் விமர்சன அரங்கில் வா. மு. கோமுவின் சந்தாமணியும் இன்னபிற காதல் கதைகளும் என்ற நாவலுக்கு வாசிக்கப்பட்ட கட்டுரையின் திருத்தப்பட்ட வடிவம்


நன்றி : லும்பினி.காம்... அவர்களது தளத்தில் படிக்க தலைப்பைக் கிளுக்கவும் .Post Comment

சனி, ஜூன் 05, 2010

காரணமின்றி அடித்துத் துவைப்பவன்

அவன் என்னை எங்கு கண்டாலும்
அடித்துக் கொண்டேயிருக்கிறான்
இத்தனைக்கும் அவனுடன் எனக்கு
முன் விரோதம் ஒன்றுமில்லை
காரணம் இன்றியே அடிக்கிறான்
தெரியாமல் கேட்கப்போய்த்தான்
உன்னை அடிப்பதற்க்கு காரணம் வேண்டுமா
என்று தனியாக துவைத்து எடுத்தான்.
வேறு வேலையென்று உனக்கு
ஒன்றுமில்லையா ? என்றேன் ஒரு நாள்.
என்னை என்ன பிழைப்பு இல்லாதவன்
என்றா நினைத்தாய் ராஸ்கல் !என்கிறான்
சும்மா அடிப்பதற்கு உனக்கு பிராந்தா?
என்று கேட்கப்போய் முட்டுச்சந்தில்
வைத்துத் துவைத்தான்.
சும்மா அடிக்கவில்லை தோன்றியதைச்
செய்கிறேன் அவ்வளவுதான் என்றான்
அவன் நடமாடாத தெருக்களில்
அவனுக்கு பயந்து வேறு வேறு
தெருக்களில் மாறு வேடம் பூண்டு
அலைகிறேன். மந்திரம் மாயம் என்று
கற்றிருப்பானோ என்னவோ எந்த‌
தெருவில் சென்றாலும் அங்கே எதிர்க்கே
அவதரித்து அடிக்கிறான். என்னிடம்
உதைபடவே உன் பிறப்பு
என்று வேறு முனகிப் போகிறான்
தொல்லையே வேண்டாம் என்று நகரம்
மாறிச்சென்றாலும் மோப்பம் பிடித்து
வந்து கனமாய் விளாசுகிறான்.
அவனுக்கு உறுதியான கைகள் இருந்தும்
வலி எடுக்கிறது என்று தடியோடு
இப்போது வருகிறான்
சலிக்காமல் அடிப்பதையே குறியாய்
கொண்டு திரிபவன் உங்களுக்கு
அடையாலம் காட்டவும் முடியாது
என்னால்! அவனுக்கு முகம் இல்லை.
எனக்கோ முகவரி இல்லை.(தமாஸ்காரர் வடிவேலுக்கு.)

..

Post Comment

சனி, மே 29, 2010

இம்சை.

சிந்துநதி எப்போதும் என்னை
கதைத்தே இம்சிக்கிறாள்.
என்னை இம்சிப்பது தவிர‌
அவளுக்கு வேறு வேலை எதுவும்
இருப்பதாய் தெரியவில்லை.
தொங்கட்டானும் , கால் கொலுசும்
மாட்டிக்கொண்டு வந்து நின்று
நன்றாக உள்ளதா ?
அழகாய் இருக்கேனா ?என்கிறாள்
இன்று என் கூட்டில் பிரயாணி
செய்தேன்.. சூப்பர்!
இஞ்சேறுங்கோ..
மின்சார தடைபாட்டால்
ஏசி வேறு த்ரீடேய்ஸ் வொர்க்
செய்வதில்லை.. நானேதும் சிறிது
கறுத்துவிட்டேனா ? என்
வடிவான முகம் பார்த்து
சொல்லுங்களேன், என்கிறாள்
இந்த இதழோடு சந்தா முடிந்தே
போய்விட்டதாகவும் , புதிப்பித்துக்
கொள்ளும்படியும் உயிர் எழுத்து
காகிதம் ஒட்டி வந்துள்ளது என்கிறேன்.
உனக்கு என் மீது பாசம் இல்லை
என்று மூன்று நாட்கள் மலம்
கழிக்காமல் கோபித்துக்கொண்டாய்
பாசம் உள்ளதாக சொன்னால்தான்
மலம் கழிப்பேனென்றும் இம்சித்தாள்.
காதலே இருப்பதாக சொன்னதும்
பொதுக்கழிப்பிடம் சென்று
இரண்டு ரூபாய் கொடுத்து மலம்
கழித்து புத்தொளியுடன் பிரகாசமாய்
வந்தவள் , இஞ்சேறுங்கோ என்றாள்.
என்னைக் காதலிப்பது பெரிதா?
சந்தா கட்டுவது பெரிதா?
சிந்துநதி மறுபடியும்
இம்சையைத் துவக்கிவிட்டாள்.

(மச்சான் நீ கேளேன்
மாப்ளே நீ கேளேன்..)

**********************

Post Comment

வியாழன், மே 27, 2010

""பாலுறவை உணர்வுப் பூர்வமாக எழுதினால் அது இலக்கியம்!''


- வா.மு. கோமு நேர்காணல்

(நன்றி : நக்கீரன் , இனிய உதயம் .
அவர்களுடைய‌ வலைத்தொடர்புக்கு மேலே தலைப்பைக் அமுத்தவும்
)
வா.மு. கோமு என்கிற பெயரில் எழுதிவரும் வா.மு. கோமகன், ஈரோடு மாவட்டம், விஜயமங்கலத்திற்கு அருகிலிருக்கும் வாய்ப்பாடி என்னும் சின்னஞ்சிறு கிராமத்தைச் சேர்ந்தவர். கடந்த பதினைந்து ஆண்டுகளாகப் பல்வேறு சிற்றிதழ்களில் இருநூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியிருக்கும் இவர், மண்ணின் மக்கள் பேசும் மொழியுடன் நவீன மொழியைக் கலந்து, தனக்கேயுரிய பகடி மூலம் படைப்பின் உன்னதத்தைக் கண்டடைகிறார். கோமு நவீனக் கவிதைகளிலும் ஈடுபாடு கொண்டு எழுதினாலும், சிக்கனமான வடிவத்தில் எழுதும் சிறுகதைகளில் இவர் பேசும் விளிம்புநிலை மக்களின் அந்தரங்க யதார்த்தம் ஜி. நாகராஜனை நினைவூட்டக் கூடியது. எனினும் தனக்கேயுரிய இலக்கியச் செயல்பாட் டில் பிடிவாதமாக இருக்கும் இந்த இளம் படைப்பாளி, தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் "நடுகல்' என்ற சிற்றிதழை யும், பின்னர் "இறக்கை' என்ற சிற்றிதழையும் நடத்தியவர். "அழுவாச்சி வருதுங் சாமி', "மண்பூதம்', "அருக்காணிக்கு சொந்த ஊர் விஜயமங்கலம்', "தவளைகள் குதிக்கும் வயிறு' ஆகிய நான்கு சிறுகதைத் தொகுதிகள் வெளிவந்து கவனத்தைப் பெற்றிருக்கின்றன. தற்போது "உயிர்மை' வெளியீடாக வெளிவந்திருக்கும் இவரது முதல் நாவலான "கள்ளி' பரவலான கவனத்தையும் சர்ச்சையையும் உருவாக்கியிருக்கிறது. தற்போது "கூப்பிடுவது எமனாகவும் இருக்கலாம்' என்ற நாவலை எழுதி வரும் அவரை "இனிய உதயம்' இதழுக்காகச் சந்தித்ததிலிருந்து...

உங்கள் கதைகளை வாசிக்கிறபோது இசங்களின் பால் ஈர்ப்பு கொண்டு பல கதைகளை எழுதியிருக் கிறீர்கள் என்பதை அறிய முடிகிறது. ஆனால் கூடிய விரைவிலேயே இசங்களை முற்றாக நிராகரித்து விட்டு நீங்கள் எழுதியிருக்கும் கதைகள், உத்திகளால் சிதைந்து விடாத படைப்புகளாக வெளிப்பட்டிருக்கின்றன. உண்மையில் இசங்களும் உத்திகளும் படைப்பிலக் கியத்திற்கு வலு சேர்க்கக் கூடியதா? அல்லது படைப்பை பலவீனப்படுத்தக் கூடியதா? உங்கள் எழுத்தனுபவம் வழியாக இதற்கான பதிலைச் சொல்லுங்கள்.

""தொண்ணூறுகளில்தான் இசங்கள் பரவலாகப் பேசப்பட்டது. ஆனால் அதுபற்றியான தெளிவு என்னிடம் இல்லை. ஆரம்பம் கொண்டே கட்டுரைகளை நான் வாசிப்பதில்லை. கட்டுரைகள் படிப்பது என்பது எனக்கு ஒவ்வாமையாகி விடுகிறது. எனது தந்தையாரின் சேகரிப்பில் இருந்த "சர்ரியலிசம் ஒரு அறிமுகம்', "எக்ஸிஸ்டென்சியலிசம் ஒரு அறிமுகம்' ஆகிய கனமான தொகுதிகள் இன்னும் என்னிடம் உள்ளன. இன்றுவரை பத்து பக்கங்களுக்கு மேல் படித்ததில்லை. தமிழில் மொழிபெயர்ப்பில் வந்த போர்ஹே, மார்குவஸ் சிறுகதைகளைச் சற்று ஆழமாக வாசித்த அனுபவத்தில், நாமும் எழுதிப் பார்க்கலாமே என்ற ஆர்வத்தில் சோதனை முயற்சியாக எழுதி வெற்றியடைந்த படைப்பு களாக அவை மாறிவிட்டன. அதற்குக் காரணம் நமது மண்ணில் எனக்குத் தெரிந்த மனிதர்களையும் நிலத்தையும் வைத்து மாஜிக்கல் ரியலிசத்தைக் கரைத்துக் குடித்துவிட்டவன்போல எழுதிக்காட்டி... குறிப்பிட்ட வாசகர்களிடம் பாராட்டுகளையும் பெற்றுவிட்டேன். மிகச் சிரமப்பட்டு எழுதும் கதைகள் பரவலான கவனத்தைப் பெறுவதில்லை என்பதை மிகத் தாமதமாக உணர்ந்தேன். இருந்தும் இன்றும் அந்த ஆசை விடுவதில்லை. பத்து கதைகளுக்கு ஒரு கதையை எனக்கே புரியாமல் எழுதிக் கொண்டிருக்கிறேன். தீவிர வாசகர்கள் எதையோ ஒன்றைக் கண்டுபிடித்து அதைத்தானே சொல்றீங்க என்று விளக்கினால் ஆமாம் என்று கூறிவிடுவேன்.

இசங்கள், உத்திகள் ஆகியவற்றைப் பெருமைக்கு வேண்டுமானால் சிறுகதைகளில் பயன்படுத்தலாம். பெருமைக்கு காக்கா இசி சாப்பிடப் போய், றெக்கையெல்லாம் இசி அப்பிக் கொண்டு வந்ததுபோல் ஆகிவிடாமல் சாமர்த்தியம் செய்வதன் அவசியம் இருக்கிறது! நவீன முயற்சியில் வெற்றி- தோல்வி பற்றிப் பிரச்சினை இல்லை. எப்படியாகினும் தமிழுக்கு லாபம்தான். புரியாத மொழியில் எழுதி மக்களிடமிருந்து ரொம்ப தூரம் விலகி வந்துவிட்டேனோ என்று போர்ஹே கவலைப்பட்டாராம். எனக்கு அந்தக் கவலை இல்லை.''

தமிழ் இலக்கியப் பரப்பில் வட்டார இலக்கியம் என்பதாகப் பிரித்து வகைப்படுத்துவதில் உங்களுக்கு உடன்பாடு உண்டா? கொங்கு வட்டார வாழ்வியலை இலக்கிய வழியில் பதிவு செய்த படைப்பாளிகளின் வரிசையில் உங்களுக்கான இடம் எதுவென்று நினைக்கிறீர்கள்?

""வட்டார இலக்கியம் என்று வகைப்படுத்துவதில் எனக்கு உடன் பாடு இல்லை. வட்டார இலக்கியம் என்று நகரத்தில் அமர்ந்துகொண்டு வட்டார மொழியைத் தங்களது படைப்புகளில் சிலர் உருவாக்குகிறார்கள். பேச்சு மொழியையும் உருவாக்கு கிறார்கள். இன்றுவரை நான் கிராமத்தில்தான் இருக்கிறேன். கிராம மக்களோடுதான் உறவாடுகிறேன். அது என் சில கதைகளில் இயல்பாகவே வந்துவிடும். இது எனது வட்டார பழக்க- வழக்கங்களை எனது கதைகள் வழியாக அறிந்துகொள்ளும் வாய்ப்பாகத் தெரிந்து கொள்கிறார்கள். நான் இங்குள்ள கோவில் விஷேசங்கள், இழவு காரியங்கள், திருமணச் சடங்குகள் என்று எழுதுகையில், கொங்கு வட்டார நிகழ்வுகளைத்தான் பதிவு செய்கிறேன் என்கிற எண்ணத்திலெல்லாம் எழுதுவதேயில்லை.

எனக்கு முன்பாக ஆர். சண்முகசுந்தரம் தனது நாவல்களில் இவற்றைப் பதிவு செய்தார். சாதிப் படிநிலையில் உயர்ந்த சாதிகளான கவுண்டர், முதலியார் இனமக்கள் கொங்கு மண்ணில் எப்படி வாழ்ந்தார்கள் என்பதை மட்டுமே நாவல்களில் பதிவாக்கினார். நான் தினமும் உறவாடுவது விளிம்புநிலை மக்களிடம் மட்டுமே. என் எழுத்துகள் விளிம்புநிலை மக்களை மட்டுமே பேசுவது இயல்பான விஷயமாகி விட்டது. இந்த மக்களைப் பற்றி என்னைத் தவிர யாரும் இங்கு பேசவில்லை.

கொங்கு மண் விரிந்து படர்ந்திருக்கிறது. கோவையில் ஒரு மாதிரியாகவும் ஈரோட்டில் ஒரு மாதிரியாகவும் நாமக்கல்லில் ஒரு மாதிரியாகவும் பேசுவார்கள். ஏரியாவிற்கு ஏரியா பேச்சு வழக்கு மாறுபடுகிறது. சேலம் மாவட்டத்தில் ஏர்வாடி என்கிற கிராமத்தைச் சேர்ந்த மு. ஹரிகிருஷ்ணன் கிராம மக்களின் பேச்சுமொழியை அப்படியே சுவீகரித்து எழுத்தில் வார்த்துவிடுவார். கொங்கு மண்ணைப் பதிவு செய்பவர்களில் என். ஸ்ரீராமும், க.சீ. சிவகுமாரும் முக்கியமான வர்கள். இவர்கள் நாவல் எழுத வருகையில் இதுவரை பதிவாகாத விஷயங்கள் வெளிப்படலாம். எனது "கள்ளி' நாவல் வட்டார நாவல் என்கிற வட்டத்துக்குள் சிக்கிவிட்டது. வட்டாரம் என்கிற கிணற்றினுள் இனியும் நீந்த எனக்கு விருப்பமில்லை.''

வட்டார பேச்சுமொழியின் சாரத்தை மட்டும் எடுத்துக் கொண்டு கட்டமைப்பிற்குள் சிக்காத எளிய சொல் அடுக்குகளால் பின்னப்படும் உங்களது நவீன மொழி என்பது, விளிம்புநிலை வாழ்வியலைப் பேசுவதற்கென்றே உருக்கொண்டதுபோல் தோற்றம் கொள்கிறது. இந்த மதிப்பீடு சரிதானா?

""கடந்த மூன்று வருடங்களாக நான் எழுதியவை அனைத்துமே விளிம்புநிலை வாழ்வியல் கதைகளே! வட்டார மொழி என்பது ஒரு உபகரணம் மட்டுமே. அது நம்பகத் தன்மையைக் கதைக்குள் உயர்த்துகிறது.

வட்டாரப் பேச்சுமொழி என்பது குறிப்பிட்ட நிலப்பகுதியில் வாழ்கின்ற மக்கள் பேசுகின்ற மொழியை மட்டுமே பிரதானமாகக் கொண்டு வகைப்படுத்தப்படுகிறது. இதை மட்டுமே வைத்து தீர்மானிக்க முடியாது. இலக்கியம் தீர்மானிப்பது பேச்சுமொழி, உரையாடல் மட்டுமே அல்ல.

இன்னமும் சொல்வதற்கு எனக்கு ஏராளமான விஷயங்கள் உள்ளன. இதைத்தான் மதுரை நண்பர் கூறுவார்- சாதாரண கதைகளை சாதாரண மனிதர்களைப் பற்றி மட்டுமே எழுதி, அதெப்படி அற்புதமாய் வார்த்தெடுக்க முடிகிறது என்று. அதுதான் சாமர்த்தியம். எத்தனையோ பண்ணிட்டோம். இதைப் பண்ண மாட்டோமா?

வட்டாரப் பேச்சுமொழியை என் கதைகளில் வலிந்து நான் திணிப்பதில்லை. அதுவாக வரும்போது மட்டும் பயன்படுத்துகிறேன். "உயிர் எழுத்து' வெளியீடாக வந்த "தவளைகள் குதிக்கும் வயிறு' சிறுகதைத் தொகுதியில், ஒரு ஐந்தாறு சிறுகதைகள் நீங்கள் குறிப்பிட்டது போல் அழகான வடிவத்தில் கச்சிதமாகப் பொருந்தி என்னையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. "போதை ஏறிப்போச்சு', "அவிங்கவிங்களுக்கு அவிங்கவிங்க தும்பம்', "இந்த தடத்தில் உள்ள அனைத்து இணைப்பு களும் உபயோகத்தில் உள்ளன' போன்றவை அவை.''

கிராமிய வாழ்வைக் களமாகக் கொண்ட உங்கள் கதைகளை மொத்தமாகப் படிக்கிறபோது, ஒரு நாவலைப் படித்த அனுபவம் ஏற்படுகிறது. எனினும் உங்களது "கள்ளி' நாவல் என்று வருகிறபோது கிராமிய அந்தரங்க வாழ்வின் முகத்தை அதிர்ச்சிகரமாக முன் வைக்கிறது. நவீன தமிழ் நாவல் என்பதில் புனைவு முக்கிய செயல் முறையாக மையம் கொள்ளும் காலகட்டத்தில், புனைவை உதறிவிட்டு அந்தரங்க யதார்த்தம் பேசும் எழுத்து என்பது எந்த வகையில் அடங்குகிறது?

""பாலுறவு தொடர்பான உறுப்புகள் பற்றியெல்லாம் சாதாரண மாகப் பேசுவதையே பாவமாகவும் ஒழுங்கீனமாகவும் கட்டமைத்துள்ள நீதி நியதிகள் நிலவுகின்ற சமூகத்தில், நான் வைக்கின்ற பாத்திரங்களின் உறவுகள் அதிர்ச்சிகரமானதாகத்தான் இருக்கும்.

அந்தரங்க யதார்த்தம் பேசும் எழுத்து புனைவோடு சம்பந்தப் பட்டதுதான். நான் காட்டிய மனிதர்கள் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள். புனைவை உதறிவிட்டு அந்தரங்கம் பேசும் எழுத்து இல்லை. "கள்ளி' நாவலின் முதன்மையான நோக்கமே ஒழுங்கமைக்கப் பட்டுள்ள நீதி, நியதிகளை உடைத்து நொறுக்குவதுதான்.

ஒவ்வொரு எழுத்தாளனின் முதல் நாவலும் அவனது சொந்த விஷயங்களையே பேசும் என்று குறிப்பிடுகிறார்கள். ஏற்கெனவே எனது சொந்த விஷயங்கள் பல சிறுகதைகளாக எழுதப்பட்டுவிட்டன. நாவல் என்கிற களம் எனக்கு அறிமுகமில்லாதது. எனது தஞ்சை நண்பன் நட்சத்ரன்தான், "எது வருகிறதோ அதை மட்டும் செய்' என்றான். "சிறுகதை உனக்குப் பிடிபட்ட பிற்பாடு ஏன் அப்படி ஒரு முயற்சி? இருந்தும் கவனமய்யா கவனம்' என்று எச்சரிக்கை பெல் அடித்தான். தலித்தியம் பேசப்பட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில் அதையும் பேசியாக வேண்டும் என்ற திட்டம் மனதில் இருந்தது.

எனக்கும் முந்தைய படைப்புகளை ஒரு படியேனும் தாண்டிய எழுத்தைத்தான் தமிழுக்குத் தரவேண்டும். பத்து வருடத்திற்கும் முன்பாக இம்மாதிரியான விஷயங்களை அச்சேற்றுவது என்பது சிரமமான காரியம். பாலியலில் எனக்கு நேர்ந்த அனுபவங்களையும் நண்பர்களின் அனுபவங்களையும் சொல்ல வேண்டிய அவசியம் வந்தது. பாலியலைப் பேச வேண்டுமென்ற காலகட்டத்தில்தான் நாம் இருக்கிறோம்.

பெயர் கெட்டுவிடும் என்ற எண்ணத்தில் எழுத்தாளர்கள் எழுதத் துணிவதில்லை. அவர்களுக்குப் பாலியலில் சொல்ல வேண்டிய விஷயங்கள் பல இருக்கலாம். தனக்கென்று உள்ள பெயரைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லாதவர்கள் அதைத் தொடரலாம். இதற்கும் பாலியல் பயிற்சி வேண்டும். அவன் எழுதுறான்; பார், நானும் எழுதுறேன் என்று பயிற்சியின்றி எழுதினால் போர்னோ வாகிவிடும். அதாவது நாய்மேல் ஏறி இசி மேல் விழுந்ததுபோல! நாய் மேல் ஏறுவானேன்; இசிமேல் விழுவானேன்?

எனது எழுத்தில் பகடி, கிண்டல் அதிகம் என்று படிப்போர் அனைவருமே கூறுகிறார்கள். அதுவும் திட்டமிட்டு அமைவதல்ல; என் இயல்பே அப்படி என்கிறபோது அதுவே எழுத்திலும் பதிவாகி விடுகிறது! வாசகர்கள் எனது நாவலோ, சிறுகதையோ பாலியலைப் பேசுகிறது என்று குறிப்பிட்டாலும், உள்ளூரத் தென்படும் வேதனை களையும் குறிப்பிடுகிறார்கள். பகடிகளுக்கும் கிண்டல்களுக்கும் பின்னால் வேதனைகளை மறைத்து வைத்தே எழுதுகிறேன். உதாரண மாக, இரண்டு வருடங்களுக்கு முன்பாக எனது ஊரின் தொலை விலுள்ள பள்ளி ஒன்றின் ஆசிரியர், தனது மாணவியிடம் பாலியல் நடத்தையில் இறங்கி இப்போது கடுங்காவலில் இருக்கிறார். அப்போது அது வெறும் பேப்பர் செய்தி. அது மறைந்து விட்டது. அப்படி ஒரு சம்பவம் நடந்ததை யாரும் நினைவில் வைத்திருக்கவில்லை. அதை இப்போது சிறுகதையில் பதிவு செய்திருக்கிறேன். இப்படி எனக்குத் தென்படும் விஷயங்களை மட்டும் நான் எனது மொழியில் பேசுகிறேன்.''

மனித வாழ்வின் அந்தரங்கத்தைப் படைப்பிலக்கியம் ஆக்குவதில் இருக்கக்கூடிய ஆபத்துகள் என்ன? அந்தரங்க இலக்கியம் எப்போது போர்னோவாகி விடுகிறது?

""ஆபத்துகளே இல்லை. அந்தரங்கம் என்பது பொது புத்தியில் பாலுறவாக மட்டும் குறிப்பிடப்படுகிறது. அந்தரங்கம் என்பது பாலுறவு மட்டுமே அல்ல. இருந்தபோதிலும் இலக்கியத்தில் பாலுறவை சித்திரிப்ப தென்பது, உணர்வுகளுக்கு அப்பாற்பட்டு உறுப்புகளை மட்டுமே குறிப்பிடுகிறபோது அது போர்னோவாகிவிடுகிறது. பாலுறவை உணர்வுப்பூர்வமாக- இயல்பாகச் சித்திரிக்கும்போது இலக்கியமாகி விடுகிறது.''

உங்களுக்குப் படைப்பூக்கமாக அமைந்த எழுத்துகளில் ஜி. நாகராஜன், கு.ப.ரா., தஞ்சை ப்ரகாஷ், சாருநிவேதிதா ஆகியோரின் எழுத்துகளுக்கு எத்தகைய பங்கு உண்டு? இவர்களின் தொடர்ச்சியாக உங்களைச் சொல்லலாமா?

""நான் எழுதத் துவங்கி நான்கைந்து வருடங்கள் கழித்துதான் ஜி. நாகராஜனையும் சாருநிவேதிதாவையும் படித்தேன். நான் எழுதத் துவங்கிய சமயத்தில் மந்திரவாதி மாண்ட்ரெக், பாலகுமாரன், சுஜாதா, இந்துநேசன், சரோஜாதேவி என்று கலந்துகட்டிப் படித்துக் கொண்டி ருந்தேன். ஜி. நாகராஜனை உணர்ந்து படிக்க மேலும் இரண்டு வருடங் கள் ஆகிவிட்டன. பின்னர்தான் கு.ப.ரா. இவரது எழுத்துக்களைப் படித் திருக்கிறேன் என்றாலும், என்னுள் எந்த பாதிப்பையும் நிகழ்த்தவில்லை. தஞ்சை ப்ரகாஷ் தொண்ணூறுகளில் கடிதத் தொடர்பு கொண்டி ருந்தார். அந்தச் சமயத்தில் அவரது சிறுகதைகள் ஆங்காங்கு வாசித்த தோடு சரி. ப்ரகாஷிடம் எனது "நடுகல்' பிரதியைக் கொண்டு சென்றவர் சுகன். வாங்கி வாசித்தவர்... "அருவருப்பை சிறுகதையாக்கி இருக்கிறான். இதை வரவேற்க வேண்டும். அருவருப்பும் ஒரு சுவை என்பதை நம்ம எழுத்தாளனுக ஒத்துக்க மாட்டானுக. எத்தனுக மூக்கப் பொத்திக்கிட்டு அந்தப் பக்கமே போக மாட்டாதவனுகளாட்ட நடிப்பானுக' "என்று சுகனிடம் கூறியவர், பின்பு என் எழுத்தை உற்சாகப்படுத்திக் கடிதங்கள் எழுதியிருக்கிறார்.

ப்ரகாஷின் நாவல்கள் மூன்றையும் மூன்று வருடங்களுக்கு முன்னர்தான் படித்தேன். அவரது "மீனின் சிறகுகள்' தமிழில் சிறப்பான நாவல். எனது நண்பர்களுக்கு முதலில் பரிந்துரை செய்யும் நாவல் அதுதான். சாருநிவேதிதாவின் "பேன்ஸி பனியன்' நாவலின் முன்னுரை, இலக்கியம் எப்படி இருக்கணும்? அழகாக- அப்படின்னு இலக்கணமா சொல்லப்பட்டது! உள்ளார நாவல் முன்னுரைல சொன்ன மாதிரி எதுவுமில்ல... முயற்சிதான் தெரிஞ்சுது. மறுவாசிப்பு செஞ்சா பத்து பக்கத்துக்கும் மேல போக முடியல. இப்ப "பேன்ஸி பனியன்' போகி பண்டிகையைக் கொண்டாடப் பயன்படும்.
இவங்களுக்குப் பின்னால நான் எழுத வந்ததால தொடர்ச்சின்னு சொல்லலாம். ஆனா அவுங்களோட களமும் எழுத்தும் வேறு வேறு; என்னுடையது வேறு.

வருங்காலத் தமிழ் இலக்கியத்தை முன்னெடுத்துச் செல்லும் படைப்பாளியா நாம் இருக்கோணும். ஈழத்தமிழர்கள்தான், புலம் பெயர்ந்த படைப்பாளிகள்தான் அதைச் செய்வார்கள் என்றால், நாம் ஒன்றுக்கும் உதவாத படைப்பாளிகள் ஆகிவிடுவோம். ""உலக இலக்கியத்தின் வால் நுனியைக்கூடப் பிடிக்க முடியவில்லை- நம் எழுத்தாளர்களின் எழுத்துக்கள்'' என்று கூவிக் கொண்டு திரிவதைக் காட்டிலும், நம் எழுத்துக்களின் போதாமையை உணர்ந்து படைப்பைப் படைக்க வேண்டும்.''
சாரு நிவேதிதா தன் எழுத்து வாரிசாக உங்களைக் குறிப்பிட்டி ருப்பது பற்றி...!

""பேன்ஸி பனியன்', "ஜீரோ டிகிரி' என்று குப்பைகளை எழுதிப் பழகி "ராஸலீலா' என்கிற நல்ல நாவலைக் கொடுத்தவர், தனது வலைதளத்தில் என்னை வாரிசாக அறிவித்துள்ளதாக நண்பர்கள் பலர் அலைபேசியில் கூறினார்கள். எழுதுகிறவனுக்குக் கூச்சம் வராமல் போனாலும் அவன் எழுதும் பேனாவிற்குக் கூச்சம் வந்துவிடும் நிலையில் எழுதும் எழுத்தாளர்கள் மத்தியில், எதைப் பற்றிய சிந்தனையுமின்றி பேனாவில் சாக்கடை நீர் ஊற்றி எழுதும் என்னை அவர் வாரிசாக அறிவித்ததில் வியப்பதற்கு ஒன்றுமில்லை. சாருவின் "தினமலர்- வாரமலர்' கதைகளின் ரசிகன் நான். இனி 16 அடி பாய வேண்டியது மட்டும் என்னுடைய பணி. "உயிர் எழுத்து' வெளியீடாக வரவிருக்கும் "கூப்பிடுவது எமனாக இருக்கலாம்' என்கிற எனது இரண்டாவது நாவல் பத்தடி பாயும் வாய்ப்பு இருக்கிறது! எப்படிப் பார்த்தாலும் இன்றைக்கு நான் வாரிசுதான். நாளைக்கு யாரோ வந்துவிட்டுப் போகட்டும். அன்று நானும் இதேபோல் அறிவித்துக் கொண்டிருக்கலாம்.''
இன்றைய நவீன கவிதை, கதை குறித்தான சொல்லாடல்களை எப்படிப் பார்க்கிறீர்கள்? ஆரோக்கியமான சூழலா? நீங்கள் குறிப்பிட்டுச் சொல்ல விரும்பும் எழுத்தாளர்கள் யார்?

""தமிழில் இதுவரை எழுதப்படாத வாழ்க்கையும் மொழியும் தற்போது எழுதப்பட்டு வருகிறது. ஆக தமிழ் இலக்கியம் செழிப்பாகவே இருக்கிறது. பழைய பேர்வழிகள் சிலர்தான் இளையவர்களுடன் போட்டியிட இயலாமல், தானும் இருக்க வேண்டுமே என்று இதழ் களின் பக்கங்களை சிறுகதை என்ற பெயரிலும் கட்டுரை என்ற பெயரிலும் நுழைந்து தடி ஊன்றித் தடுமாறி ஊர்கிறார்கள். கங்குலி மாதிரி ரிட்டயர்டு அறிவிக்கும் யோசனை அவர்களுக்கு வருவதில்லை. அவர்கள் பெயர்களுக்காக இதழாளர்கள் போடவேண்டிய நிர்பந்தம் வேறு. நல்ல கவிஞனைப் பற்றியோ, நல்ல படைப்பாளியைப் பற்றியோ எந்த இடத்திலும் பெயர் குறிப்பிடாமல், செத்துப் போன எழுத்தாளர் செய்யத் தவறிய பணியைச் சுட்டிக்காட்டி, தன்னையே மீண்டும் மீண்டும் முன்னிலைப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்; எழுதிக் கொண்டிருக்கிறார்கள். மூத்த படைப்பாளிகளின் சமீபத்திய படைப்பு களை வாசிக்கையில் எனக்கு அவர்கள்மீது பரிதாபமே மிஞ்சுகிறது! "எப்டி இருந்த நான் இப்டி ஆயிட்டேன்' என்பது மாதிரி.

ஒரு இதழில் வெளிவந்திருக்கும் ஒட்டு மொத்தக் கவிதைகளையும் ஒரே மூச்சில் வாசித்தால், ஒரே எழுத்தாளர்தான் வேறு வேறு புனைப்பெயர்களில் எழுதியுள்ளாரோ என்கிற யோசனையைத் தோற்றுவிக்கும் விதமாக கவிதைகள் கூட்டம் கூட்டமாய் தென்படு கின்றன. இங்கு பெயர்களைத்தான் பிரித்தறிய வேண்டியிருக்கிறது! கவிஞர்களில் சிநேகிதன், சிறி. நான். மணிகண்டன், ஷாராஜ் போன்றோர் தீவிரமாக நவீன கவிதை எழுதி வருகிறார்கள். முந்தைய இருவருக்கும் தொகுப்புகள் ஏற்கெனவே வந்துவிட்டன. ஷாராஜின் "ஜீன்ஸ் ஆண்டாள்' தொகுதி "உயிர்மை' வெளியீடாக இந்த ஆண்டு வருகிறது. தொண்ணூறுகளிலிருந்து என்னோடு இணைந்து எழுதி வந்த ஷாராஜின் கவிதைகள் தொகுக்கப்பட்டு 2008-ல் வருவது என்பது... நான் தாமதமாகத் தொகுப்பு வாயிலாக வந்தது போலத்தான். சுகிர்தராணி மற்றும் தமிழச்சி தங்கபாண்டியன் கவிதைகள் என்னை குதூகலப் படுத்துபவை.

படைப்பிலக்கியத்தில் இன்று தீவிரமாக இருப்பவன் கீரனூர் ஜாகீர் ராஜா ஒருவன் மட்டுமே. குறைவாக எழுதினாலும் நிறைவாக எழுதுபவர் கள் என். ஸ்ரீராமும் மு. ஹரிகிருஷ்ணனும் லஷ்மி சரவணக்குமாரும் தான்.''
நீங்கள் எழுதத் துவங்கியது எப்போது? உங்கள் பின்னணி பற்றிக் கூறுங்கள்?

""85-லேயே நான் எழுதிப் பழக ஆரம்பித்துவிட்டேன். எழுதிய முதல் சிறுகதை இன்றும் ஞாபகம் இருக்கிறது. கடைவீதியில் கூரான கத்தியை பதம் பார்த்து வாங்கிச் செல்வான் ஒருவன். படிப்போருக்கு வீடு சென்றவுடன் மனைவியைக் கொன்று விடுவானோ என்று தோன்றும் விதமாக நகர்த்திச் சென்று, அவன் வீடு சென்று பொம்மை ஒன்றைக் குத்திக் கிழித்து வீசுவான்- குழந்தை ஆசையில் மனைவி பொம்மை வைத்துக்கொண்டு முத்தம் கொடுத்தபடி இருப்பது இவனுக்குப் பிடிக்காததால்! நண்பர்கள் அருமை என்றார்கள்.

அப்பா முத்துப்பொருநன் கவிஞர். ஏராளமான புத்தகங்கள் அவர் சேமிப்பில் இருந்தன. டேபிள்மீது கிடக்கும் "பிரக்ஞை', "கசடதபற', "ஃ' இதழ்களைப் புரட்ட ஆரம்பித்தேன்- 88-ல். ஒன்றும் புரியாது. கதைகள் தென்பட்டால் வாசித்து விடுவேன். கல்லூரி சென்ற சமயம் "ஆனந்த விகடன்' வாசகன். பட்டுக்கோட்டை பிரபாகரின் "தொட்டால் தொடரும்' தொடரைக் கிழித்து பைண்டு செய்தேன். எனது முதலும் கடைசியுமான பைண்டிங் அது.

தொல் படிப்பை உதறிவிட்டு கோவை சென்று விட்டேன். அங்கு "ஊன்றுகோல்' என்கிற கையெழுத்துப் பிரதி ஆரம்பித்து சைக்ளோ ஸ்டைலில் கொண்டு வந்து, பின் அச்சுக்குக் கொண்டு போனேன். அச்சகத்தில் தொழிலையும் கற்றுக் கொண்டேன். உள்ளூர் விளம்பரங் கள் அந்த இதழுக்குத் துணை நின்றன. "தாய்' வார இதழ் அந்த இதழை அறிமுகம் செய்திருந்தது. பரிமாற்றுப் பிரதியாக வந்த ஒரே இதழ் "முன்றில்' - முதல் இரண்டு இதழ்கள்.

அச்சமயத்தில்தான் அப்பா எனக்குத் தனது சேகரிப்பிலிருந்து புதுமைப்பித்தன், அஸ்வகோஷ், அசோகமித்ரன், இந்திரா பார்த்தசாரதி என்று வாசிக்கக் கொடுத்தார். "அன்பு நண்பர் முத்துப் பொருநனுக்கு' என்று அசோகமித்திரன் கையெழுத்திட்டு அவரது "இன்னும் சில நாட்கள்' தொகுதியை அனுப்பியுள்ளார். அச்சமயத்தில் ஒரே இரவில் மூன்று கதைகள் எழுதுவேன்.

பின்னர் தமிழ்ச் செல்வனின் "வெயிலோடு போய்,' கோணங்கியின் "மதினிமார்கள் கதை', ஜீ, நாகராஜனின் "நாளை மற்றுமொரு நாளே' ஆகியவற்றைப் படித்த பிறகு, என் எழுத்துமுறை தன்னையே மாற்றிக் கொண்டது நிகழ்ந்தது. முன்பாக "மாலைமுரசு' கோவைப் பதிப்பில் 15 ரூபாய் பரிசுக்காக மாதம் ஒருமுறை காதலர்களை ஆள்மாற்றி ஆள் கொன்று, இடங்களையும் மாற்றிக் கொன்று குவித்துக் கொண்டிருந்தேன்.

தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் திருப்பூர் வந்துவிட்டேன். நண்பர்கள் கூட்டாக இணைந்து "நடுகல்' என்கிற இதழை ஆரம்பித்தோம். இச்சமயத்தில்தான் "பேன்ஸி பனியன்' ஏற்கெனவே சொல்லப்பட்ட மனிதர்கள், "கர்நாடக முரசும் அமைப்பியல் ஆய்வும்' போன்றவற்றை வாசித்தேன். "நடுகல் ஆறு' இதழ்கள் நண்பர்கள் உதவியோடு வந்து நின்று போனது. பின் தனித்து நானே அதை 21 இதழ்கள் கொண்டு வந்தேன். அச்சக வேலையில் இருந்ததால் கூலியை பிடித்துக் கொள்ளச் சொல்லிவிடுவேன். இதை உங்களுக்காக எழுதுவதில் பழைய நினைவுகள் என்னை மகிழ்ச்சி கொள்ள வைக்கிறது. நாமும் என்னமோ பண்ணிப் போட்டுத் தான் வந்திருக்கமாட்டம்ன்னு!

எழுதுவதற்கான விஷயங்கள் ஆரம்பத்தில் எல்லாமே கற்பனையில் உதித்தவைதான். தொண்ணூறுகளில்தான் நடைபெற்ற சம்பவங்களை எழுதத் துவங்கினேன். தஞ்சையிலிருந்து வந்து கொண்டிருக்கும் "சௌந்தரசுகன்' என்கிற சிற்றிதழ் எனது ஐம்பது சிறுகதைகளை வெளி யிட்டு மகிழ்ச்சி கொண்டிருக்கிறது. எனது முதல் தொகுதி "அழுவாச்சு வருதுங் சாமி' தொகுப்பையும் அந்த இதழே கொண்டு வந்தது.

எல்லாரும் எழுதுகிறார்கள், நாமும் எழுதுவோம் என்று எழுதுகையில், ஓரளவு படிப்பறிவு கொண்ட நண்பர்கள் ஊக்குவிப்பால் சரமாரியாக கொலைக்கதை, காதல் கதை, பேய்க்கதை என்று எழுதியவனின் இன்றைய எழுத்தை அவர்களால் புரிந்துகொள்ள முடிவதில்லை. இந்த விஷயத்தையெல்லாமா எழுதுகிறாய் என்கிறார்கள்.

என் பெயரில்லாமல் ஒரு கதையோ கவிதையோ ஒரு இதழில் வெளிவந்திருந்தால், இவன்தான் எழுதியவன் என்று குறைந்தபட்சம் ஐம்பது பேராவது இலக்கியத்தில் என் எழுத்தைக் கண்டறிந்து சொல்லிவிடுவார்கள். அப்படியான ஒரு எழுத்திற்கு வரவே இத்தனை வருடங்கள் ஆகியிருக்கிறது.''
நவீன எழுத்தாளர்கள் பலரும் வெகுஜன இதழ்களுக்கு எழுத வந்துவிட்டார்கள். உங்களுக்கு எழுத வாய்ப்பு கிடைக்கவில்லையா அல்லது ஒதுக்கிவிட்டார்களா?

""வணிக இதழ்களில் எழுதுவதற்கு எந்தத் தடைகளும் என்னிடம் இல்லை. இப்போதுதான் "குங்கும'த்தில் எனது சிறுகதைகள் வெளி வந்துள்ளன. மற்ற பத்திரிகைகளிலும் இனி என் எழுத்தைத் தொடர்ந்து பார்க்கலாம். வணிக இதழோ சிற்றிதழோ எங்கு எழுதினாலும் அது என்னுடைய எழுத்தாகவே இருக்கும்.''
சிற்றிதழ்களில் அரசியல் நுழைந்துவிட்டதாக இன்று திடீரென்று பேசுகிறார்களே? சிற்றிதழ்களுக்கு குழு மனப்பான்மையும் அரசியலும் புதிதா என்ன?

""சிற்றிதழ் என்பதே நிலவுகிற அரசியல், பண்பாட்டுச் சூழல்களுக்கு எதிரானதுதான். அதில் அரசு, அரசு அதிகாரமும் அடக்கம். அரசியல் தவிர்த்த சிற்றிதழ் என்பதே இல்லை. தெரிந்தோ தெரியாமலோ ஏதோ ஒரு அரசியலை சிற்றிதழ் முன்னிலைப்படுத்துகிறது. பண்பாட்டுத் தளத்தில் காத்திரமாக இயங்குபவர்களே இப்படிப் பேசுகிறார்கள் என்பது ஆச்சரியம்தான்.''
தொண்ணூறுகளில் "நடுகல்' சிற்றிதழ் நடத்தினீர்கள்... 2000-ல் "இறக்கை'. எழுத்தாளன் சிற்றிதழ் நடத்த வேண்டிய சூழ்நிலை ஏன் ஏற்படுகிறது?

"" "நடுகல்' ஆரம்பித்தபோது புதுமையின் பிடியில் சிக்கியிருந்தேன். தமிழில் ஏதாவது புதுமையைச் செய்துவிட வேண்டுமென்ற விடலைத் தனமான ஆசை. ஆனால் அந்த இதழில் பங்குபெற்ற படைப்பாளிகள் இன்றும் அதில் படைப்புகள் எழுதியதைப் பெருமையாகக் கூறுகிறார்கள். எனக்கு வெட்கம் பிடுங்கித் தின்கிறது. "இறக்கை' ஆரம்பிக்கப்பட்டபோது ஜெராக்ஸ் பிரதியாகத்தான் வந்தது. மற்ற எழுத்தாளர்களிடமும் வாசகர்களிடமும் தொடர்பில் இருப்பதற்காக மட்டுமே துவங்கப்பட்டது. அதன் 39 இதழ்கள் வரை ஜெராக்ஸ் பிரதி தான். என்னிடம் தேடிவந்து இணைந்த ஹரிகிருஷ்ணன் "இறக்கை'யில் துணை ஆசிரியனாகப் பங்கேற்று அச்சில் கொண்டு வந்தான்.

எழுத்தாளன் ஏன் சிற்றிதழ் நடத்துகிறான் என்றால் படைப்புகளை எழுத மட்டுமே. "இறக்கை' இதழில் வெளிவந்த எனது கதைகள் வேறு இதழ்களில் வெளிவந்திருக்க வாய்ப்பிருக்காது. எழுதி வீட்டில் வைத்துக்கொள்ள வேண்டியதுதான். அவற்றை வெளியிட மற்ற சிற்றிதழாளர்கள் தயக்கம் காட்டி, சால்ஜாப்பு சொல்வர். "இறக்கை' நின்று போனது பலபேருக்கு நட்டம்தான். ஆக்டோபஸ் கவிஞன் ஷாராஜ் தனது முந்தைய குறுங்கவிதைகளைக் கடாசிவிட்டு, வீரியத்தோடு நீள் கவிதைகளை "இறக்கை'யில் எழுதி சக படைப்பாளிகளை மிரள வைத்தான்.
இனி என் வாழ்நாளில் சிற்றிதழ் துவங்கி நடத்தும் ஆசை இல்லை. "இறக்கை' முழுத் தொகுதியாக "உயிர்மை' வெளியீடாக வரவிருக்கிறது.''

ராசமைந்தன் என்கிற புனைப்பெயரில்தான் "இறக்கை' என்கிற- எங்கு வேண்டுமானாலும் பறக்கும் இதழை நடத்தினீர்கள். வா.மு. கோமு என்ற பெயரிலேயே அந்த இதழை நடத்தியிருக்கலாம்தானே. அதற்கு ஏதேனும் தனிப்பட்ட காரணங்கள் உள்ளதா? எப்போது அந்தப் பெயரைச் சூடிக் கொண்டீர்கள்?

""கோவையில் இருந்தபோது "ஊன்றுகோல்' இதழை நடத்தியதாகக் கூறியிருந்தேன். அந்தச் சிற்றிதழில் படைப்பாளர்களின் படைப்புகள் பற்றாக்குறை நிகழ்ந்தமையால் எனது நண்பர் ராஜேந்திரன், கோமகன் என்கிற எனது முழுப் பெயரை தமிழ்ப் பெயராக மாற்றினார். கோ என்றால் அரசன் என்றும், மகன் என்றால் மைந்தன் என்றும் பிரித்து விளக்கி வைத்து, "இன்று முதல் ராசமைந்தன் என்கிற பெயரில் கவிதை எழுதக் கடவாய்' என்றார். அன்றிலிருந்து இன்றுவரை ராசமைந்தன் என்கிற பெயரை கவிதைகள் எழுதப் பயன்படுத்துகிறேன்.

பின்பாக "இறக்கை' இதழை ராசமைந்தன் என்கிற பெயரில் கொண்டு வந்தேன். ஏற்கெனவே "நடுகல்' இதழை வா.மு. கோமு என்கிற பெயரில் நடத்தியிருப்பதால் இதுவும் எனது பெயர்தானே என்கிற எண்ணத்தில்தான் "இறக்கை' இதழுக்கு எனது புனைப்பெயரைப் பயன்படுத்தினேன்.

"சுகன்' இதழில் ராசமைந்தன் என்ற பெயரில் எழுதிய கவிதைகள் அனைத்தும் நிறைய வாசகர்களின் பாராட்டுகளையும் வசவுகளையும் வாங்கிக் கட்டிக் கொண்டன. இருவரும் ஒருவரே என்று புதிதாக அறிந்தவர்கள் தங்கள் ஆச்சரியத்தை "சுகன்' இதழிலேயே பகிர்ந்திருக்கிறார்கள். "வாழ்க்கையை எப்படி வாழவேண்டும் என்பதைப் பல எழுத்தாளர்களின் கதைகள் கற்றுத் தந்தன என்றால், வாழ்க்கையை எப்படி வாழக்கூடாது என்பதை ராசமைந்தன்- வா.மு. கோமு எழுத்துகள் கற்றுத் தருகின்றன. "சுகன்' இதழில் இவர்களின் பங்களிப்பு மிக முக்கியமானது' என்றுகூட விமர்சனங்கள் அந்த இதழின் கூர்ப்பகுதியில் வெளிவந்துள்ளன.''

உங்களது கவிதை அனுபவத்திற்கும் சிறுகதை அனுபவத்திற்குமான பொருத்தங்கள் என்ன? எதை எளிமையாக உணர்கிறீர்கள்?

""இரண்டுமே எனக்கு எளிமையான பணிகள்தான். கரு கிடைத்தானபின் நானாக முடிவு செய்வதுதான். எழுதுவதற்கு சிரமமாக இருந்தால் அன்று சிறுகவிதை வடிவிலேயே விஷயத்தை எழுதி முடித்துவிடுவேன். சொல்ல வரும் விஷயம் வாசகனுக்குக் கவிதை வடிவிலோ கதை வடிவிலோ சென்று சேர்ந்தால் சரி. எனது ஏராளமான கவிதைகள் சிறுகதைகளையே தாங்கி நிற்கின்றன. தொகுப்பாக வருகையில்- அவற்றை நீங்கள் வாசிக்கையில் இந்த உண்மை புலப்படும்.

இதேபோல் சிறுகதைகளிலும் தேவையற்ற வர்ணனைகளை இதுவரை நான் வலிந்து திணித்ததில்லை. போகிற போக்கில் காகம் ஒன்று பறந்து சென்று மரக்கிளையில் அமர்ந்து அவனைப் பார்த்தது என்று எழுதினால், வாசகன் காகத்தைக் கவனிக்க ஆரம்பித்து விடுவான். திடீரென பறந்து வந்து அவன் கண்களை ஏதோ ஒரு இடத்தில் கொத்திச் சென்று விடுமோ என்ற யோசனைக்குச் சென்றுவிடுவான். ஆகவே காகங்களோ மற்ற இடைச்செருகல் இடைஞ்சல்களோ அதிகம் என் கதைகளில் இதுவரை இருந்திராது. கதை சொல்கையில் கதைதான் முக்கியம்.''

தலித் இலக்கியம் என்பதை தலித் அல்லாதவர்களும் எழுத முடியும் என்பதற்கு உங்களது பல கதைகள் சாட்சியாக உள்ளன. தற்கால தலித் இலக்கியம் பற்றி உங்கள் பார்வை அல்லது வாசிப்பு அனுபவம் என்ன?

""இது எனக்கு எளிமையான பணி. முன்பே கூறியதுபோல நான் கிராமத்தில் கிடப்பவன். அருந்ததியர் வாழ்க்கை என் கண்முன் நடக்கிறது. எல்லாருமே என் நண்பர்கள். இல்லாதது பொல்லாதது எதையும் என் கதைகளில் எழுதிவிடவில்லை. நீங்கள் குறிப்பிட்ட சில கதைகளோடு தலித் எழுத்தை கைவிட்டு விட்டேன். அதை அவர்களே எழுதட்டும். நான் அதை மட்டுமே பிடித்துக்கொண்டு எழுத வந்தவனல்ல; வேறு பணிகளும் எனக்கு எழுத்தில் உள்ளன. நான் செத்துப்போய் பத்து வருடம் கழித்து ஒரு கூமுட்டையன் வா.மு. கோமுவின் எழுத்துகள் தலித் வாழ்க்கையைப் பிரதிபலிக்கவில்லை என்று எழுதிவிடக் கூடாது என்பதற்காக எழுதியது.

என்னுடைய படைப்புகளில் நான் அறிந்த- பழகிய- என்னோடு கலந்த தலித்துகளின் வாழ்க்கை வருகிறது. அது தலித் வாழ்க்கைதானா என்பதை தலித் விமர்சகர்கள்தான் சொல்ல வேண்டும். நான் சொல்ல முடியாதுதான்.

தலித் இதழில் வந்த நேர்காணல்கள் மூன்று தொகுதிகளாக வெளிவந்துள்ளன. அவற்றை வாசித்தாலே அடிப்படையைப் புரிந்துகொள்ளலாம். தவிர தன் வரலாறுகள், சில நாவல்கள் வாசித்த அனுபவம்தான். தலித்தான் தலித் படைப்பை எழுத வேண்டும் என்று கருத்து இருக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் தலித் படைப்பாளிகளிடமிருந்து படைப்புகள் ஏதும் வரவில்லை. பாமா, இமையம் நல்ல படைப்பாளிகள்.''

இன்று பலர் அமைப்பு சார்ந்து இயங்குகிறார்கள். அமைப்பு சார்ந்து இயங்குவது படைப்பின் வீரியத்தைக் குறைத்துவிடுமா?

""அமைப்பு சார்ந்து இயங்குபவர்களிடம் சில முன் முடிவுகள் இருக்கின்றன. அவற்றில் எழுத்து சமுதாய மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும், மக்களிடம் விடுதலை உணர்வைத் தூண்டக்கூடியதாக அமைய வேண்டும், பாலியல் சீர்கேடுகள் பக்கம் தலை வைத்துப் படுக்கக் கூடாது என்கிற தங்களது திட்டமிடலுக்கு ஏற்ப, அமைப்பில் ஈடுபட்டு டோக்கன் பெற்று சமுதாய சிந்தனைக் கதைகள் எழுதி, அமைப்பிடமிருந்து பாராட்டுகள் பெற்று உள்ளம் குளிர்கிறார்கள்.

மறவாமல் அதை எங்கு வேண்டுமானாலும் குறிப்பிடுவார்கள். அமைப்பு எனக்கு கோவில் மாதிரி... எனக்கு பிரசாதம் குடுத்தாங்க... சலாம் போட்டாங்கன்னு! அமைப்பு சார்ந்த எழுத்தாளர்களின் எழுத்தைத் தவிர ஏனைய எழுத்துக்களை அவர்கள் படிப்பதுமில்லை. அமைப்பிற்கு ஆள் பிடிக்கும் வேலையையும் இவர்களே செய்யத் துவங்குகிறார்கள். நாய் பிடிக்கும் வண்டி தெருவில் வருகிறதென்றால் தெருநாய்கள் எப்படித்தான் உணர்ந்து கொள்ளுமோ தெரியாது. எங்காவது ஓடிப் பதுங்கிவிடும். அதுபோல இளைய படைப்பாளிகள் ஓடிப் பதுங்கி விடுகிறார்கள்.

ராமுவும் சோமுவும் பள்ளி நண்பர்கள். இருவரும் ஒரு பம்பரத்திற்காக அடித்துக்கொண்டு வீதியில் உருளுகிறார்கள். இதைக் கண்டு ராமுவின் அம்மாவும் சோமுவின் அம்மாவும் உன் பையன்தான் கெட்டவன் என்று ஒருவருக்கொருவர் சண்டை போட்டு முடித்து, ராமுவின் அம்மா ராமுவுக்கு முதுகில் இரண்டு சாத்து சாத்தி தன் வீட்டுக்கு இழுத்துப் போக... சோமுவின் அம்மாவும் சோமுவிற்கு இரண்டு சாத்து சாத்தி தன் வீட்டுக்கு இழுத்துப் போக... பம்பரம் வீதியில் அநாதையாகக் கிடந்தது என்கிற மாதிரியான எரிச்சலூட்டும் படைப்புகளை எல்லாம் கடந்து வந்து, ஆற அமர இப்போதுதான் சிறுகதை என்ற ஒன்றைப் படிக்கிறோம் என்ற உணர்வுடன் எல்லா கதைகளையும் வாசிக்க முடிகிறது. அநாதையாகக் கிடந்த பம்பரத்தினால் என்ன சமுதாய மாற்றம் நிகழ்ந்துவிடப் போகிறது என்பது இன்னமும் தெரியவில்லை.

நான் எந்த அமைப்பிற்குள்ளும் சேராதவன். சேர்ந்துதான் பணியாற்ற வேண்டுமென்ற எண்ணம் எனக்குத் தோன்றியதேயில்லை. அதேசமயம் மனிதநேய மேம்பாட்டுக்காகச் செயல்படுகின்ற எந்த அமைப்புக்கும் நான் விரோதி அல்ல. எழுத்தைப் பல வழிகளில் எழுதிப் பார்ப்பவன் நான். அமைப்பானது படைப்பு வீரியத்தைக் குறைத்துவிடும் என்று நானாகவே நம்பிக் கொள்கிறேன். என்னை யாரும் அழைக்கவும் மாட்டார்கள். என் எழுத்து அப்படி.''

வாழ்க்கையைக் கொண்டாட்டமாகவே பார்க்கும் உங்களது "குட்டிப் பிசாசு' என்கிற பாத்திரம் உங்களது வன தேவதையா?

""நகுலனுக்கு சுசீலா, பாரதிக்கு கண்ணம்மா, கலாப்பிரியாவுக்கு சசி, ராசமைந்தனுக்கு சாந்தாமணி என்றிருக்கையில், எனக்குக் "குட்டிப்பிசாசு' இருந்துவிட்டுப் போகட்டும்.''
சமீபத்தில் படித்தவை...

""சைனா கெய்ரெற்சி-யின் "குழந்தைப் போராளி', கென்னத் ஆண்டர்சனின் "ஏலகிரியில் சிறுத்தை வேட்டை', பா. ராகவனின் "ரெண்டு', ஜிம் கார்பெட்டின் "எனது இந்தியா', ஓஷோவின் "மருத்துவத்திலிருந்து மனமற்ற நிலை வரை'. படியேண்டா என்று புத்தக அடுக்கில் காத்திருப்பவை- யாங்கோவின் "இளமையின் கீதம்', டால்ஸ்டாயின் "அன்னா கரீனினா', பரீஸ் பொலெவோயின் "உண்மை மனிதனின் கதை', சுஜாதாவின் "பதவிக்காக', தமிழ்ச்செல்வியின் "ஆறுகாட்டுத் துறை', முத்து காமிக்ஸின் "மஞ்சள் பூ மர்மம்', சிவசங்கரியின் "வேரில்லாத மரங்கள்'.''
தற்போது என்ன எழுதிக் கொண்டிருக்கிறீர்கள்?

""வழக்கம்போல சிறுகதைகள்தான்.

இனி தோழர் பெரியசுவாமி நேரம்.

சிந்தியா சாலினி ரன்ஜித் பெல்லா தான் தங்கியிருந்த அறையிலிருந்து ஓட்டல் மேனேஜருக்கு ஃபோன் செய்தாள். ""நான் இங்கு நானூற்று முப்பதாவது அறையில் இருக்கிறேன். எனக்கு உலக மகா கோபமாய் இருக்கிறது. எதிர் அறையில் ஒருவன் நிர்வாணமாக நடந்தபடியே இருக்கிறான். அவனது இடுப்புக்கும் கீழே ஆபாசமாக இருக்கிறது'' என்று கத்தினாள். ""இதோ இப்போதே வந்து என்னவென்று கவனிக்கிறேன்'' என்று மேனேஜர் கூறிவிட்டு பெல்லாவின் அறைக்குள் வந்தார். ஜன்னல் வழியாக எதிர் அறையைப் பார்த்தார். ""நீங்கள் சொன்னது சரிதான் மேடம். அந்த மனிதன் நிர்வாணமாகத்தான் இருக்கிறான். ஆனால் அவனுடைய ஜன்னல் இடுப்பு வரையில் மறைத்திருக்கிறதே, அவன் அறையில் எப்படி இருந்தாலும் நமக்கென்ன மேடம்?'' என்றார். ""ஆமாம்'' என்று கத்தினாள் பெல்லா. ""இந்தப் படுக்கையில் ஏறி நின்று பார், படுக்கையின்மீது ஏறு.''

முடித்துக் கொள்ளலாமா மனுஷா?''

நேர்காணல்: ஆர்.சி. ஜெயந்தன்

***********************************************
*****************************************

Post Comment