வெள்ளி, ஜனவரி 29, 2010

சாந்தாமணியும் அடியேனும்

நமஸ்காரம் ஸ்வாமிகளா !

இந்த வாட்டி சென்னை புத்தக கண்காட்சிக்கு உயிர்மை வெளியீடாக என்னோட சாந்தாமணியும் இன்ன பிற காதல் கதைகளும் நாவல் வெளிவந்து கொள்ளத்த பேரு வாங்கி ஒரு நாள் ரெண்டு நாள்லயே படிச்சும் பேசிட்டாங்க.

நாவல் வரப்போறது தெரிஞ்சதும் இந்த வாட்டி எஸ். ராமகிருஷ்ணன் , சாரு நிவேதிதா , ஜெயமோகன் இப்படியாப்பட்டவங்க நாவல் ஒண்ணும் இந்த வருசம் இல்ல கோமு, தனியா போட்டியே இல்லாம விஜய் படம் வர்ற மாதிரியே தான். என்று அலைபேசியில் சென்னையிலிருந்து பேச்சாய் பேசினார்கள்.

முதல் விமர்சனமே ஏன் உங்களுக்கு பெண்கள் மீது இத்தனை கோபம் ? எனக்கொரு காதலி இருந்தாள்..இனிமேல் எனக்கு காதலே வேண்டாம். அம்மாவை பையனோட சேர்த்தி எழுதீட்டிங்க . அது ஒன்றுதான் எனக்கு இந்த நாவல்ல குத்துற மாதிரி இருக்கு , இருக்கும் நண்பரே ! 89 ல் காதில் ஏனோதானோ என்று கேட்டு .. அதே போல் சீமெண்ணெய் ஊற்றி பற்ற வைத்து எரிந்து போன நண்பன் எனக்கு கோவையில் இருந்தான்.

அடுத்ததாக முஸிபுல்லா ! சாந்தாமணி உங்கள் வாழ்க்கையில் உண்டுங்களா ? ஆமாம் நண்பரே ! ஆனால் காலில் விழுந்து போடி என்றெல்லாம் அடியேன் கூறவில்லை . பாலகுமாரன் தான் நாவல்களில் அதிகம் பேசுவார், அதே போல் நீங்களும் பேசியிருக்கீங்க ! அப்புறம் கடைசியில் சென்டிமென்ட் வந்துவிட்டது ! ஜெயாவைத்தான் கட்டிக்கொண்டீர்களா ? அய்யோ நண்பரே! அது முடிவுக்காக வைத்தது ! விதவைக்கு மறுமணம் கொடுப்பது பழைய ஸ்டைல். அதற்க்காக மாற்றி இப்படி. அப்புறம் சென்டிமெண்டல் என்னையறியாமல் நாவலுக்குள் நுழைந்த பகுதி. அப்புறம் மதுரையில் ஒரு சந்திப்பில் வால்பையன் அறிமுகம் கிடைத்தது ! யார் நீங்க ? என்றுதான் ஆரம்பித்தார். அப்படியே அவர் பேசுவது போலவே சரியாக எழுதியிருக்கிறீர்கள் . நன்றி நண்பரே !

ஒரே நாள்தான், நாவல் படு ஸ்பீடு . இன்னும் ரெண்டு பக்கம் பாக்கி கோமு. ஆனாலும் உங்க கிட்டே பேசிடமுன்னு தோணிச்சி . இதுல வர்ற பழனிச்சாமிக்கு அப்ப்டியே எதிர்பார்ட்டி நான் . இப்படி நம்பனாலே முடியாது. கள்ளி நாவல்ல கூட கொங்குப் பேச்சு வழக்கு டிஸ்டர்ப்பா இருந்துச்சு.. இதுல ஒண்ணு ரெண்டு இடத்துல இருந்தாலும் டிஸ்டர்ப் இல்ல . பொதுமொழிக்கு வந்துட்டீங்க. சக்தி நாவல்ல பழனிச்சாமிட்ட , "என்னடா யாரோ பெத்த பொண்ணுகளை நாம விரும்பணுமுன்னு நினைக்கிறோம்..தனம் பிடிக்க ஆசைப்படறோம்.. " அப்படின்னு பேசுற இடம் எல்லாம் நாவலின் உச்சம். அழுத்தமா செஞ்சிருந்தீங்கனா நாவல் வேறு தளத்துக்கு போயிருக்கும்.. என்று கூறிய நண்பர் செந்தூரம் ஜெகதீஸ் என்னா தலெ.. நாவலை லேடீஸ் வாங்கீட்டுப் போறாங்களே.. என்னோட நண்பனை நிறுத்தி வெச்சுப் பாக்க வச்சேன் கோமு.. நல்லா போயிட்டு இருக்கு.. என்றவன் நண்பன் சாமிநாதன்.

காலச்சுவடு ஸ்டாலில் நண்பர் கதிர். என்கிட்ட கேட்டாங்க கோமு.. உங்க புத்தகம் இருக்கான்னு..அவர் மாதிரியே யாராச்சும் புதுசா எழுத வந்தவங்க எழுதறாங்களா! குடுங்க !

காசில்ல கோமு! உடனே வாங்கி உங்களுக்கு ஒரு புக் குரியர் பண்ணிட்டு தமிழச்சி தமிழச்சி தங்கபாண்டியனுக்கு ஒண்ணு குடுத்துடணும். சமர்ப்பணம் பகுதி ஜம்முன்னு இருக்கு! முதல் பக்கமே என் கவிதை!கட்டமைப்பு அருமை. என்றான் பாக்கியம் சங்கர்.

வெறும் பாலியல் சமாச்சாரங்களா இருக்குன்னு உதவி இயக்குனர்கள் அபிப்பிராயப்பட்டாங்க கோமு.. விளக்கிச் சொல்லி இன்னொரு முறை நிதானமா படிக்கச் சொன்னேன் என்றார் வினோத்.

பெங்களுரூவிலிருந்து நஞ்சுண்டன் ... உன்னோட நாவல் ஒண்ணு உயிர்மைல வந்திருக்கா கோமு என்றார். ஆமாங்க ! செக்ஸ் புக்குனு சொல்லி நிறைய வாங்கிட்டுப் போறாங்களாமே ! ஆமாங்க , அப்படின்னா விரிச்சு வச்ச வலையில எல்லாரும் விழுந்துட்டாங்கன்னு நினைக்கிறேன், என்றேன் . ஐயோ, அது தப்பாச்சே ! ஆமாங்க .. தப்புதான் மறுபடி இந்த மாதிரி விஷயங்களே இல்லாமலும் என்னால எழுத முடியுங்க !

இந்த மாதிரி விசயங்கள் நடக்குதான்னு .. நடக்குது! இப்படியே இந்த நாவலை விட்டுடவும் கூடாது! இதுதான் துவக்கம். விவாதிக்கப்படனும் . நல்ல பெண்கள் நாலு பேரை உள்ளே விட்டிருக்கலாம். அன்னாகரினாவை எடுத்துட்டோம்னா .. நாம எல்லோரும் அவளைத்தான் விருப்புறோம். ஆனா ஒழுக்கமான பொண்ணுங்களும் நாவல்லுக்குள்ள இருக்காங்க!

நாவலை வாங்காமலேயே பொத்தாம் பொதுவாய் எழுத்தாள நண்பர்கள் கூறுவது .. இது பிட்டுப்படம்.

விஜய்மகேந்திரன் பேசுகையில் .. எத்தனையோ நாவல் உள்ளார போகவே முடியமாட்டேங்கீது கோமு.. சாந்தாமணி மாதிரி கேரக்டர்கள் கண்ணுக்கு முன்னாடி இருக்காங்க ! ஐயோ .. ஆபாசமுன்னா ..பேப்பர்லே டெய்லியும் எத்தனை பாலியியல் குற்றங்களை படிக்கிறோம். எல்லாமே கொடுமைகள்தான். 20 வயசு பெண் 50 வயசுக்காரரோட டச்சு வைச்சுக்குது ! தூங்குறப்ப கள்ளக்காதலனோட சேர்ந்து புருசன் தலையில கல்லை போட்டு பத்தினி கொல்லறா ! வாத்தியாரு ஸ்கூல் புள்ளைங்களை , இப்பைப்பார்த்தா சீர்திருத்த நாவல் தான் இது.!

என்ன தலை எல்லாரும் ப்ளாக்ல என்னைப்போட்டுத்தள்ளிட்டாங்க.. நீங்களும் தனி அத்தியாயம் போட்டு தாக்கிட்டீங்க.. என்றவர் வால்பையன். வேண்டுமானால் கரூர் இளங்கவி என்று அந்த அத்தியாயத்தை மாற்றிவிடவா வால் ? அல்லங்கேல் கேபிள்சங்கர் என்றோ.. கும்கி என்றோ மாற்றிவிடட்டுமா ? என் சவுகரியம்தானே !

அடலேறு ! இவர் பொள்ளாச்சிக்காரர். சென்னையில் பணி. நம்ம ஏரியாவுல எழுத்தாளர்னு தெரிஞ்சுடுச்சுன்னா ! மூணு புத்தகம் வாங்கி நண்பர்கள் கிட்டே படிக்கக் கொடுத்துவிடுவேன் .தகவல் கொடுத்துட்டு நேர் விஜயமங்கலம் வரணும் !

மறுபடியும் ஒரு பொதுமக்கள் கணிப்பு ; இப்பத்தான் கோமு பார்ம்முக்கு வந்திருக்காரு !பார்ம்முல தான் நடுப்பிச்சுல இறங்கி இறங்கி நாலு , ஆறுன்னு அடிச்சுட்டு திடீர்ன்னு ஸ்லிப்புல கேட்ச் குடுத்துட்டு இருந்தேன் பெவிலியனுக்குள்ள ... இப்பத்தான் க்ரீசுக்குள்ள நின்னு பொறுப்பா ஆட ஆரம்பிச்சுட்டேன் .

நிறைய புதிய நண்பர்கள் பேசினார்கள் என்றாலும் போதையில இருக்கச்சே பெயரை பதிவு பண்டாமல் கோட்டை விட்டாச்சுங்க. இதுவரை பேசிய நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள் பல! எனக்கென சிரமம் பாராமல் எனது புத்தக வெளியீட்டில் கலந்து கொண்ட நண்பர்களுக்கு நன்றி ! கார்த்தி தான் வாங்கிய பிரதியை காங்கேயம் வந்து என்னிடம் சேர்ப்பித்து விட்டு சென்றார். பிரதியை புரட்டிய கையோடு அது இப்போது ஷாராஜ் வசம். ஒரு வருடமாக கோவையில் மூன்று நண்பர்கள் அறிவுலகவாதிகளின் அட்சய பாத்திரத்தில் (விஜயா) எனது கவிதை தொகுப்பை வாங்க முடியாமல் தவித்து கடைசிக்கு சாந்தாமணி வந்துவிட்டார்கள்.அவர்களூக்கு அட்சய பாத்திரத்தில் இதுவும் கிடைக்காமலேயே போகட்டும். மேலும் இந்த நாவல் பற்றி நண்பர்கள் பேசினால் பேசுவோம் . உயிர் எழுத்து வெளியீடாக " கூப்பிடுவது எமனாக இருக்கலாம்" நாவல் கூடிய சீக்கிரம் கடைகளுக்கு வந்து விடுமா ? வராமல் போய் விடுமா ? எனக்கு தெலவலேதுப்பா!

அடுத்த நாவல் " எட்றா வண்டியை " தலித் வாலிபனின் கதை!

அகநாழிகை பதிப்பக வெளியீடாக இந்த ஆண்டு பொன்.வாசுதேவன் கொண்டுவருவார்.

இதைக்குறிப்பிடுகையில் இன்னுமொரு நாவல் அகநாழிகை வெளியீடாக வரும் என்று என் மனதினுள் பட்சி கத்துகிறது !

பேசுவோம் நண்பர்களே !


சாந்தாமணியைப் பற்றி அன்பர் மாதவராஜ்ஜின் விமர்சனமும் , நண்பர்களின் கருத்துகளும் பார்க்க........

Post Comment