புதன், மார்ச் 31, 2010

வேட்டை ஆரம்பமாயிருச்சு டோய்!

கம்ப்யூட்டர்கள் நம் கலாசாரத்தையும் பண்பாட்டையும் குடும்ப உறவுமுறைகளையும் கூடிய சீக்கிரம் அழித்துவிடும் அபாயம் நெருங்கிக்கொண்டு இருக்கிறது. விஞ்ஞான கண்டுபிடிப்பின் உச்சம்தான் கம்ப்யூட்டர். மன்மத வெப்சைட்டுகள் இளைஞர்களையும் , பெண் பிள்ளைகளையும் வலை வீசி இழுக்கின்றன. "என் மனைவியின் அழகை பாருங்கள்" என் மைத்துனியின் துணியில்லாக் காட்சியை பாருங்கள்" என் அத்தை குளிக்கறச்சே மறைஞ்சு நின்னு எடுத்த ஸ்டில் " வக்கிரமான கேள்விகளுக்கு மஜா மகேஸ்ஸின் பதில்கள் என்று கொட்டிக் கிடக்கின்றனவாம், அடியேன் நெட் சென்டருக்குள் நுழைந்தது கூட கிடையாது. சென்னை சைபர் கிரைம் இணை ஆணையர்," இந்தியாவில் வெளியில் இருந்து நடத்தினால் தடுக்க முடியாது, இப்படிப்பட்ட ஆபாச வெப்சைட் பக்கம் நம் சமுதாயமும் , இளைய தலைமுறைகளும் போகாதபடி விழிப்புணர்வு ஊட்டுவதுதான் பாதுகாப்பான வழி" என்றார்.

எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வு பிரசுரங்கள் , படங்கள் என்று வருவது போல மன்மத வெப்சைட்டுகளின் தீமை பற்றிய விவரண படங்கள் விழிப்புணர்வு பிரசுரங்களின் தேவை இன்று அதிகமாய் இருக்கிறது.
செல்போன் கடையில் வேலை பார்க்கும் பெண் பகலில் தன் ஓனருக்கு நெருங்கி வந்து முத்தம் கொடுத்து சில்மிசம் செய்தது. பரவலாக தமிழகமே பார்த்திருக்கிறது. அந்தப்பெண் டிகிரி முடித்தவர் , ஓனர் மேலே உச்சத்தை அந்தப்பெண்ணிடம் எதிர்பார்த்து இருக்கிறார். அந்தக் கிறுக்குக்கருமம் மண்டையை ஆட்டியிருக்கிறது. பதிவு செய்த செல்போன் காட்சியை நெட்ல போட்டிடுவேன் என்று கூற வீடு சென்ற பெண் தூக்கு மாட்டி செத்துவிட்டது.
அடுத்ததாக செல்போனில் மிஸ்டு கால்கள் ! கணவரின் ஏற்பாட்டில் மனைவி ஏதோ ஒரு எண்ணை அழுத்தி கூப்பிடுவது. செல்வியா ? பூமிகாவா? என்பது. இல்லைங்க என்று பதில் சொல்வது ஆணாக இருந்தால் வலையை விரிப்பது. உங்க வாய்ஸ் இனிமையா இருக்குது, உங்களைப்பத்தி சொல்லுங்க !என்று பிட் ஓட்டுவது. தன்னை கல்லூரி மாணவி என்பது. முதலிரவில் என்ன பண்ணுவீங்க ? என்று ரூட் மாறுவது , எப்போ சந்திக்கலாம் என்பது. சந்திக்கும் சமயம் தன் கண்வனோடும் ,ஆட்களோடும் வருவது. இவனிடம் இருக்கும் பணம் , நகைகளை பிடுங்கிச்செல்வது, அல்லது பேச்சை ஆடியோ ரெக்கார்டிங் செய்வது , பணம் கறப்பது. இவர்கள் வில்லிகள் என்றால் மறுபுறம் வில்லன்கள். பேச்சில் பெண்களை தன் வயப்படுத்துவதில் கெட்டிக்காரர்கள். வில்லன்கள் பணத்தை குறிவைப்பதில்லை! காமம்தான் அவர்களின் பிரதானம்,இவர்களால் சீரழிந்த பெண்கள் வழக்கம்போல சேலை தலைப்பிலோ , துப்பட்டி நுனியிலோ கண்ணீரை துடைத்துக்கொள்கிறார்கள். ஆசையும் காமமும் யாரையும் விடுவதேயில்லை! ஏராளமான குற்றச்சம்பவங்களுக்கு செல்போன் தான் துணை. உருமாண்டி வந்து புடிச்சுட்டு போயிருவான் சாப்புடு செல்லம், சாப்புடு கண்ணு !என்று மிரட்டிய காலம் மலை ஏறிவிட்டது. செல்போனை கையிலகுடுத்துடுவேன் பேசாம சாப்புடறியா என்ன ? என்று மிரட்டலாம்! வீடுகளுக்குள் சைத்தான்கள் கையடக்க டப்பா வடிவில் உங்கள் அருகில் கிடக்கின்றன.

ஏமாறுபவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள்! கணவர்களை மனைவியர் ஏமாற்றுகிறார்கள். தோழிகள் நண்பரகளை ஏமாற்றுகிறார்கள். காதலர்கள் காதலிகளை ஏமாற்றுகிறார்கள். இந்த உலகம் முச்சூடுமே எதிரிகள் உக்கிரமாய்த்தான் திரிகிறார்கள். உங்களால் ஏமாற்றவே முடியாதவர் ஒரு வகையினர் சுற்றுகிறார்கள். உங்களால் ஏமாற்றப்படக்கூடியவ‌ர்களாக ஒரு வகையினரும் இங்கேயேதான் சுற்றுகிறார்கள்.
******************** **************************************
ஒரு பைத்தியகாரனுக்கு தான் ஒரு பைத்தியகாரன் என்று நினைவில் இருக்காது.அறியாமையில் இருப்பவனுக்கும் தான் அறியாமையில் இருக்கிறோம் என்ற நினைவு இருக்காது! கனவு கண்டு கொண்டு இருப்பவனுக்கும் தான் கனவு கண்டு கொண்டு இருக்கிறோம் என்பது நினைவில் இருக்காது! பைத்தியகாரர்கள் தங்களை பைத்தியமற்றவர்களாகத்தான் எண்ணிக்கொள்கிறார்கள். எதிராளியை பைத்தியம் பிடிச்சிருக்கா உனக்கு ? என்பார்கள்.
உளவியல் மருத்துவர் ஒருவரை காண அழகிய பெண்மணீ அசின் சென்றாள். மருத்துவர் இவளைப்பார்த்ததும் எழுந்தார், " அருகே வரவும் மிஸ் " என்றார். அசின் அருகே வ‌ந்ததும் அசின் அதிர்ச்சியடைந்து நின்றாள். பின் விலகிய மருத்துவர் " இப்போ உட்காருங்கள் மிஸ் . இத்தோடு என் பிரச்சினை ஒழிந்தது. இனிச் சொல்லுங்கள்... உங்கள் பிரச்சினை என்ன?"

ஒரு பைத்தியம் இன்னொரு பைத்தியத்திடம் நிலாவைக்காட்டி அழகாக இருக்கிறது. பார் நிலா அழகுதான் என்றது! இந்த பைத்தியமும் ஆம் என்று ஒத்துக்கொண்டது. மேகங்களுக்குள் நிலா சிறிது நேரம் மறைந்துவிட்டது ! எங்கே அந்த நிலாவை காணவில்லையே? என்றது ஒன்று . அது எங்காச்சிம் போற வழியிலே செல்டவர்ல் கீது போயி அப்பியிருக்கும்"
எனக்குத் தெரிந்து 88ல் திருப்பூர் இரயில் நிலையம் அருகே ஒரு மன நோயாளி சுற்றிக் கொண்டிருந்தார். கம்யூனிஸ்ட் கட்சி மேடைப்பேச்சாளராய் இருந்தவராம் அவர். பேச்சு பேச்சு எந்த நேரமும் பேச்சுதான், காசுக்காக கை நீட்டும்போது மட்டும் பேசாமலா விடுவார் . கணீரென்ற குரல் வளம் ,அவர் கையில் ஒரு முறை மனஓசை புத்தகம் சுருட்டப்பட்டு இருந்தது.

கோபிக்கு அருகில் ஒரு பைத்தியம் ,, தன் உடலில் முன்பின் பெரிய அட்டை ஒன்று தொங்கவிட்டு சுத்தும். அதில் பேப்பர் கட்டிங், விளம்பரங்கள், அண்ணா, எம்.ஜி.ஆர் , ஜெயலலிதா புகைப்படங்கள் குத்தப்பட்டு இருக்கும். அவரால் யாருக்கும் தொந்தரவு இல்லை.

பெருந்துறை பஸ் நிறுத்தத்தில் முக்கால் நிர்வாணமாக ஒரு பெண் மன‌நோயாளி. பேருந்து வருகிறது என்றால் சீட் பிடிக்க ஒரு கும்பல் ஓடுகையில் இதுவும் அவசரமாக ஓடும்.ஆனால் பஸ் ஏறாது! தலையை சொறிந்தபடி திரும்பிவிடும்.

புத்திசாலி பைத்தியங்கள் இருக்கின்றன! உதாரணமாக!

ஒரு புதிய பணக்காரர் தன் தோட்டத்தில் மூன்று நீச்சல் குளங்கள் கட்டினார். அவைகளை நண்பனுக்கு கூட்டி வந்து காட்டினார். அப்போது நண்பன் கேட்டான். " ஒண்ணு பத்தாதா ? எதுக்கு உனக்கு மூணு? "ஒண்ணு எப்படி போதும்? ஒண்ணு வந்து வெந்நீர் குளியலுக்கு . இன்னொன்னு குளிர்ந்த நீர் குளியலுக்கு " என்றார். " இன்னும் ஒண்ணு இருக்கே ? " அது வந்து நீச்சல் தெரியாதவங்களுக்கு.."அன்போட என்றும் வாமுகோமு.


***********

Post Comment

புதன், மார்ச் 24, 2010

வேட்டை ஆரம்பமாயிருச்சு டோய்!

"எனக்கு சொந்த ஊர் சிதம்பரம். ப்ளஸ் டூ வரை படிச்ச நான் லவ் பண்ணி கண்ணாலம் கட்டிக்கிட்டேன். ஒரு குழந்தையை குடுத்துட்டு அவர் எஸ்கேப் ஆயிட்டார். இனி வாழ்க்கை நமக்கேன்னு கெடந்தப்ப கிருஸ்துவ சபையின் தலைமை போதகர் நெய்வேலியில் இருக்கும் சபையில் வார்டனாக வேலைக்கு அமர்த்தினார். அடிக்கடி நெய்வேலி வந்தவர் எனக்கு வலை விரிச்சார். இணங்க வச்சார்.சமையல்காரியா வீட்டுல கூட்டிப்போய் வச்சுக்கிட்டார்.கர்ப்பமாக்கினார். 50 வயதான ராபர்ட்டுக்கு உடனே கண்ணாலம் கட்டி வெச்சார். மறுபடி என் கூட இணங்கணுமுன்னு ஒரே டார்ச்சர். சாம் சுந்தர் இதே மாதிரி பல பெண்களோட வாழ்க்கையில விளையாடியிருக்கிறார்." என்று பூங்கோதை நக்கீரன் 5.12.2009 இதழில் பேசியிருந்தார்.

பள்ளிக்கூடங்களில் பதற வைக்கும் கொடுமை என்று 25.02.09 இதழில் செய்தி. கல்வியும் நல்லொழுக்கமும் ஏழைகளுக்கு போய்ச் சேரவேண்டும் என்று தேவாலயங்களையும் பள்ளிக்கூடங்களையும் நிறுவி மகத்தான சேவையில் ஈடுபடும் கிறிஸ்துவ சமுதாயம் அது. இப்போது பாதிரியார் முதல் பணியாளர் வரை செய்யும் தவறுகளை களைய வேண்டிய நிலையில் இருக்கிறது. மதுரையில் ஏழாம் வகுப்பு மாணவிகள் நடத்தையை யாரும் கவனிக்க வில்லை, பள்ளிக்கு எதிரே சர்ச்சில் சர்வமும் பால்ராஜ் மாணவிகள் பிரார்த்தைக்காகத்தான் போய் வருகிறார்கள் என்று ஆசிரியர்கள் பள்ளியில் நினைக்க அங்கே நடந்தது வேறு ! அதே பள்ளியில் ஆசிரியர் ஒருவர் லாட்ஜில் ரூம் போட்டு மாணவியை கெடுத்து இருக்கிறார். எந்தெந்த சூழ்நிலைகளில் மாணவிகள் எப்படியெல்லாம் பாலியல் கொடுமைகளுக்கு ஆளாகியிருக்கிறார்கள் என்பதை அவர்களே சொல்கிறார்கள். " புது நன்மை வகுப்பு எடுக்கப்போகிறோம் சர்ச்சுக்கு வாங்க" பத்துக்கட்டளைகளை சொல்லிக்கொடுக்கிறேண்டி செல்லம் என்று தனி அறையில் தள்ளி சொல்லிக் கொடுக்கிறார்கள். தேவாலயத்தில் உண்டியல் திருடினவன் ! வீடு புகுந்து கிருஸ்துமஸ் தாத்தா திருடிப்போனார் என்று ஆரம்பத்தில் பத்து வருடம் முன்பிருந்தே பேப்பரில் தான் நான் செய்தி பார்த்து வருகிறேன். சிறார்கள் பாலியல் கொடுமைக்கு உள்ளாவது சர்ச்சினுள்ளேயே! இதெல்லாம் பெருங்குடி மக்களே, நம்மை மிக மிக பதற வைக்கிறது! என்ன கொடுமைடா இது ! வேட்டை ஆரம்பமாயிருச்சு டோய்! இப்படியான பாலியல் கொடுமை செய்திகளை தினமும் பார்க்க , படிக்க வேண்டியிருக்கிறது ! நாம் படிப்போம், உச்சுக்கொட்டுவோம்.

மதங்கள் எப்போதுமே ஏமாற்று வேலைகளைத்தான் செய்கின்றன. அப்போதுதான் பிழைப்பும் நடக்கும், "கொஞ்சூண்டு பொறுமையா பல்லைக் கடிச்சுட்டுத் தாங்கிக்கங்க.. நெக்ஸ்ட் ஒரு பிறவி இருக்கில்ல , அதுல எல்லாமே நல்ல விதமா நடக்குமடி" என்றுதான் அவைகள் சொல்கின்றன. மக்களை கிறிஸ்துவ மதங்களுக்கு கவர்ந்திழுக்க பல குழுக்களை உலகம் முழுக்க காந்தங்களுடன் அனுப்புகிறார்கள். ஜீசஸ்சை குச்சியில் ஏற்றிக்கொன்றதால்தான் அந்த மதம் இன்று உலகம் முழுக்க பெரிய மதமாக கிளை படர்ந்து நிற்கிறது, உலக மக்களில் பாதி இன்று கிறிஸ்துவ மதத்தில்தான். ஜீசஸ் தன்னை கடவுளின் பையன் என்றே சொன்னார்.

எனக்கு தெரிந்து மனவளர்ச்சி குன்றீய அழுக்கேறிய ஒருவன் திருப்பூரில் ராம் லக்ஷ்மண் தியேட்டருக்கும், ஈஸ்வரன் கோயிலுக்கும் எந்த‌ நேர‌மும் லெப்ட் ரைட் என்றே நடப்பவன் ஒருவன் இருந்தான். அவன் தன்னையே கடவுள் என்று கூறீக்கொண்டான். கோவிலுக்கு வருபவர்கள் அவனுக்கு தேங்காய் பழம் கொடுத்துப்போவார்கள். அவன் ஆசிர்வதிப்பான் . ஜீசஸ் மீன் துண்டுகளை சாப்பிடுப‌வர். இறைச்சியை உண்பவர். மது அருந்துபவர். கடவுள் ஜீசஸ்சை பெற்றுப்போட்டுவிட்டு உயர் ரக மருத்துவமனை சென்று கருத்தடை செய்து கொண்டார். பிறகுதான் ஒரு ஆட்களையும் காணோமெ! தண்ணீரை சரக்காக்கி தரக் கேட்கலாம். பகைவனையும் நேசியுங்கள் என்று சொன்ன ஜீசஸ் தன் அம்மாவையே ஒதுக்கியிருக்கிறார் . பாதிரியார்கள் பெண்களை " நரகத்தின் வாயில்கள்" என்றுதான் சொல்லியிருக்கிறார்கள். சாம்சுந்தர், செல்வின் போன்றோர் வாயிலில்தான் நாக்கை வைக்கிறார்கள்.

சிலுவையில் சிரமப்பட்டபோது கடவுள் வந்து உதவி செய்வார் என்று தான் ஜீசஸ் நம்பினார். ஜெருசலேம் வந்தால் கஞ்சிதாண்டி உனக்கு என்று அவருக்கு ஏற்கனவே தெரியும்தான். ஆகாய மார்க்கமாகத்தான் வருவார் கடவுள் என் ஆகாயத்தை பார்த்தபடி இருந்தார். எந்த தேவதைகளும் அல்லேலூயா பாடவில்லை . ஆறுமணி நேரம் கடவுளுக்காய் சிலுவையில் காத்திருந்தார். ஏன் நீங்கள் என்னை கைவிட்டீர் ? என்றே கதறினார். நோ ரெஸ்பான்ஸ். கடவுள் என்பது மனிதனை பிடித்துக் கொண்ட நோய் ! இயலாமையின் வேர். பாதிரியார் ஒருவர் கன்னியாஸ்திரி ஒருவரை நெருங்கி நிற்க கன்னியாஸ்திரிதான் முதலில் அந்த வேலை துவங்குகிறார். பாதர்தான் வீடியோ எடுத்து இருக்கிறார். கன்னியாஸ்திரி முகம் தெளிவாக வெள்ளை உடையில் இருக்கிறார். பல்வேறு விளையாட்டுகளுக்கு பின் உறவு கொள்கின்றனர். புனித வெள்ளி அன்று பத்து நிமிடம் ஓடக்கூடிய வீடியோகாட்சி வெளியாகி புனித பூமியை நிலை குலைய வைத்தது. கடவுளே வந்தால் கூட கேமரா செல்போன் வைத்திருக்கும் எவரையாவது தலையில் கல்லைத்தூக்கி போட்டு கொன்று விட்டு .. அவரது செல்போனை எடுத்து தேடி .. காஞ்சிவரம் குருக்கள் கோவிலினுள் மூலையில் அம்மணியை நிற்கவைத்து வெளியே எட்டி எட்டி பார்த்து .. பின் பூஜை தட்டை வாங்கிக்கொண்டு உள் சென்று அதே கையில் பூஜை முடித்து கொண்டு சென்று நீட்டிவிட்டு மீண்டும் உள்வந்து அம்மணீயை குனிய‌ வைத்து அதைப்பார்த்து முடித்து விட்டு கடவுள் பாதிரியார் கன்னியாஸ்திரியை பார்ப்பார்! தலையில் கைவைத்துக் கொண்டு வந்து அதே இடத்தில் அமர்ந்து விடுவார் என்றெல்லாம் நான் சொல்லமாட்டேன் பெருங்குடி மக்களே!

கடவுளீன் முழுமையான அவதாரம் கிருஷ்ணந்தான் . மாட்டு மந்தைகள் போல 16000 பெண்களுடன் சல்லாபித்தவர். எல்லோருக்குமே கணவர்கள் உண்டு ! ஊட்டுக்காரனை ஏமாற்றிக்க்கொண்டு ஓடி வந்தார்கள். வீட்டுக்காரர்கள் வீட்டினுள் குமைகிறார்கள். ஐயோ போயிட்டாளே! பச்சை கொழ்ந்தைய அனாதையா வுட்டுப்போட்டு ஓடுறாளே! ஒண்ணும் பண்ண முடியாது அப்புனுங்களா ! டைனமோ சார்ஜ் இல்லின்னா அப்படித்தான் நடக்கும், கிருஷ்ணா அழகிய பெண்களைப் பார்த்தாலே தூக்கிக்கொண்டு அரண்மனை வரச்சொல்லி விடுவார். துணையாக சிறந்த வீரன் அர்ஜுனன் அவன் மூலமாக இந்தியா அதுவரை பார்க்காத பெரிய யுத்தத்தை கிருஷ்ணர் உண்டாக்கினார். பகவத் கீதா முழுவதும் வன்முறைகள் தான். அஹிம்சாவதி காந்தி அவர்கள் பகவத்கீதாவை தன் அம்மாவுக்கு நிகரானது என்றார்.

முகமதுவிற்க்கு ஒன்பது மனைவிமார்கள் , முகமதிய ஆண்கள் தங்கள் மனைவியாக நான்கு பெண்களை மணந்து கொண்டு வாழ்க்கை ஓட்டலாம். எல்லோரும் கூலி வேலை செய்தாவது கணவருக்கு உணவு ஊட்டலாம். இதை திறந்துவிட்டது மதரீதியாக முன்பே ! கடவுளின் கருணையை நிரம்பப் பெற்றவர் ஹைதராபாத் நிஜாம் . இந்த வறுமையான நாட்டில் அவருக்கு 500 மனைவிமார்கள்.

ராம‌ருக்கு வந்து விடுவோம் பெருமக்களே! அவர் தன் மனைவியை மீட்பதற்க்காக சண்டை போட்டததாகத்தான் நம்பியிருந்தேன் என் நண்பர்களைப்போல ! ல்வ்னா பின்ன என்ன விளையாட்டா ? லவ்னா தெய்வீகம்! இராவணைத் தோத்தகாலியாக்கி கூட்டி வந்ததும் சீதாவிடம்" பெண்ணே நீ என்னவோ பெருசா உனக்காகத்தான் மாங்கு மாங்குனு சண்டைகட்டி அவனை அடிச்சு வெச்சுட்டன்னு நெனச்சுக்காதே ! எம்பட முன்னோர்கள் பயங்கர சண்டைக்காரர்கள் ! அவங்க பெருமையை காப்பாத்தறக்கும் , என்னோட வீரத்தைக் காட்டுறத்துக்கும் தான் சண்டை போட்டேன். நீ போய் தீக்குளிச்சுட்டு வா ! உசுரோட வந்தீன்னா நீ சுத்தம்னு எனக்குத் தெரிஞ்சுடும் " அப்படின்னார். இவரு பொம்மானத் தொறத்தீட்டு ஓடுனவர் . அப்பும் அது பொம்மான் இல்லைன்னு கண்ணுக்கு தெரியல! இப்பவும் சீதா சுத்தமானவன்னு கண்ணுக்குத் தெரியல! சந்தேகக்கேடு அது சந்தோசக்கேடு !

ஒரு சின்னக்கதை : 50 பெண்களைத் தொட்டவர்கள் சொர்க்கத்திற்க்கு நடந்து போகலாம் . 100 பெண்களைத்தொட்டவர் சைக்கிளில் போகலாம் என்ன 200 பெண்களைத் தொட்டவர் புல்லட்டில் போகலாம் என்ன செய்யப்போகிறீர்கள் ? துண்டுப் பிர‌சுரம் நகரெங்கும் விரிந்து பறந்தன ! நாட்கள் பல ஆயிற்று , இறந்தவர்கள் பலர் நரகத்திற்க்கு தான் போய்க்கொண்டு இருந்தனர். ஒரே நெரிசல் சொர்க்கத்திற்க்கு செல்லும் பாதையில் , பாதிரியார்கள் பலர் சைக்கிளில் சென்று கொண்டி இருந்தனர். அவர்களைத்தாண்டி புல்லட் ஒன்று வெகு வேகமாகச் சென்றது , ஓட்டிச் சென்றவர் போப்.

பாலியல் உணர்வு மனிதர்களிடம் உள்ள அதி தீவிரமான ஆற்ற்ல் . அது இயற்கையானது . இயல்பான உயிரியல் இயக்கம் .அதைப்போய் அழித்துவிட இயலுமா ? உள்ளுக்குள் அடக்கி ஒடுக்கி வைக்க இயலுமா? எப்படியும் அது வெடிக்கத்தான் செய்யும். பலூன் போல. உலகில் எல்லா மதங்களும் பாலியலைக்கண்டு பயம் கொள்ளத்தான் செய்கிறது,. பாலியலை வெறுத்தால் பெண்ணை வெறுத்தாக வேண்டும். பெண்களை ஏற்றுக்கொண்டால் பாலுணர்வு இயற்கைதான் என்று ஏற்றுக்கொள்ள வேண்டும். பாலுணர்வை ஒருவர் எந்த அளவுக்கு அடக்கி ஒடுக்கி வைத்துள்ளார்களோ அதெ அளவுக்கு அவர்கள் முட்டாள்தனமாகச் செயல்படுவார்கள். இயற்கை உணர்வு செயல்படாமல் அதற்கு மாறாக ஒடுக்கப்படும் போது புத்திசாலித்தனமும் ஒடுங்கி மறைந்து விடும். முட்டாள்தனம் தான் மிச்சம். பெண்களின் கவர்ச்சி இங்கு எல்லாரையும் பயமுறுத்துகிறது. ஷ்கிலா, நமிதா, தமன்னா என்று பலர் கவர்ச்சியால் நடு நடுங்க வைக்கிறார்கள். நடுக்கத்திலேயே தான் திரையில் பார்வை வைக்கிறார்கள், பின்னர் கனவிலும் துன்புறுத்துகிறார்கள்.

இது ஆணாதிக்க உலகம் . அவதாரங்கள் என்று அறிவித்து பப்லிசிட்டி தேடிகொண்டவர்கள் எல்லாரும் ஆண்களே !

ஒரு இசுலாமியர் மூன்று பெண்களை மணந்து கொள்ள குரான் அனுமதிக்கிறது. மசூதியில் பெண்கள் நுழைய மறுக்கிறது.
பாலியியல் உணர்வு இயற்கையானது என்பதால் அதனால் பாதிப்பு ஒன்றுமில்லை . இயற்கையின் உணர்வை அடக்குவதால் தான் இத்தனை கேடுகள். சில கிறிஸ்துவ கத்தோலிக்க மடாலயங்களில் 1000 ஆண்டுகளாக பெண்கள் நுழைந்தது கிடையாது. 6 மாத பெண்குழந்தை கூட செல்ல அனுமதி கிடையாது. 6 மாத குழந்தையை கண்டு பயப்படும் மத குருமார்கள் இது போன்று பாலியல் உணர்வ கட்டுப்படுத்துவதன் மூலம் பாலியல் நெறி பிறழ்வை உருவாக்கி விடுகிறார்கள். மனித குலத்தின் உண்மை எதிரிகள் தான் இவர்கள், புனிதமானவர்கள் என்ற போர்வைக்குள் மறைந்து விடுகிறார்கள்.

நமக்கு கற்பழிக்கத் தைரியமில்லை என்கிறபோது கற்பழிப்பு செய்திகளை படித்து ரசிக்கிறோம்.கொலை செய்ய எண்ணினாலும் முடியாமல் போகிறது, ஆகவே கொலை செய்திகளை ரசித்துப் படிக்கிறோம்.

காப்பிய நாயக‍ நாயகிகள் உலவிய பூம்புகாரில் எந்தப்பக்கம் ஒதுங்கினாலும் காதல் ஜோடிகளின் முத்தச் சத்தம், முனகல் சத்தம்தானாம். அவர்களை கண்காணித்து ஒரு கும்பல் காதலனை விரட்டியடித்து விட்டு காதலியை லவட்டிக்கொண்டு கருவைக்காட்டுக்குள் காரியம் முடித்து அனுப்புகிறார்களாம். கள்ளக்காதல் ஜோடி, பள்ளிக்கூட ஜோடி, தப்புத்தண்டா ஜோடிகள்தான் பூம்புகார் வருகின்றனவாம். 60 வயசு 20 வயசுடனும் ஒதுங்குறாங்களாம். இப்படி பல ஊர்களீல் ஒதுங்கறவுங்க நேரா முடிஞ்சா கஜுராகோவுக்கும் போங்க, அடர்ந்த காட்டின் நடுவில் கோவில்கள் உள்ளதாம் ( வசதி பாருங்கள்) சிற்பங்கள், சிற்பங்கள், சிற்பங்கள் ! பல நிலைகளில் கலவி.
அப்படியெல்லாம் முயற்சி எடுங்கள். அப்படியான வழிகளில் பெண்ணை ஒரு போதும் திருப்தி செய்ய முடியாது என்பதை உணருவீர்கள். கடவுளை ஒரு கல்லில் அடக்குவது அறியாமை என்பது முகமதியர்களின் வாதம். பெரும்பாலான கோவில்களை அழித்தொழித்தார்கள். மிச்சத்தையும் அழித்திருக்கலாம் . எங்கே ஏமாந்தார்கள் என்று தெரியவில்லை.


...

Post Comment

வியாழன், மார்ச் 18, 2010

வேட்டை ஆரம்பமாயிருச்சு டோய்!

பெண்கள் புள்ளை பெக்குற மிசின்னு ரொம்ப காலத்துக்கு மிந்தியே பெர்னாட்டோ டிகில்ங்ற அமெரிக்காகாரர் சொன்னது அப்ப நமக்கு மண்டையில ஏறலை. ஓ ! அப்படியா . இந்த ஓ ! அப்படியா ! என்பதை நீங்கள் வாழ்க்கையில் எத்தனை முறை சொல்லியிருப்பீங்கள் என்று யோசித்துப் பாருங்கள் ! அட ! எப்போதுமே அதையேதானே சொல்லிக்கொண்டே இருக்கிறேன் என்று தோன்றும்.

திருவாருர் மாவட்டத்தில் செந்தியமங்கலம் கிராமத்தில் நடந்த விசயம் பயங்கரமாயிருக்கிறது. இங்கே பத்மா என்கிற ஊமைப்பெண்ணை குறி விரைத்ததும் காடுகளுக்குள் தூக்கிச்சென்று குறி விரைப்பை குறைத்துக்கொள்ளும் ஆட்கள் உண்டாம் .( யாரென்று ஊர்ப்பொதுமக்களுக்கு தெரியாது. பொதுமக்கள் எல்லா ஊர்களிலும் அப்பாவிகள் தான். தேவ நாதன் குருக்கள் மாதிரியான ஆண் அழகர்களை வேண்டுமானால் திடீரென சீவக்கட்டை , சாணி என்று எப்போதாவது தாக்க கிளம்புவார்கள்)
பத்மா ஊமை என்றாலும் ஊமையில்லாத பேசும் குழந்தைகளை ஈன்றிருக்கிறார்,) பத்மா மந்த புத்தியுடையவரும் கூடவாம். குழந்தைகளை ஈனமுடியாத குடும்பஸ்திரிகள் எனக்கொன்னு எனக்கொன்னு என்று எடுத்துப்போய் வளர்த்துகிறார்கள். பிள்ளை பெற்றுத்தரும் மிஷின் பத்மா ! அழகான தமிழில் வாடகைத்தாய் என்று வைத்துக் கூப்பிடலாம், இப்படி செந்திய மங்கலத்தில் மட்டும் நடப்பதில்லை. எல்லா ஊர்களிலும் தான். மன நலம் சரியில்லாத பிச்சைக்காரிகளை புணர்வது அதீத கலை என்று கலை வல்லுனர்கள் கூறியிருக்கலாம். யாரும் தெரியாமல் தவறுகளை செய்வதில்லை.யாரும் தெரியாமல் செய்வதில்லை . எய்ட்ஸ் நோயாளிகளிடம் பேசிப்பாருங்கள்!

எம்பொண்டாட்டி ஊர்மேயப்போயி வாங்கீட்டு வந்துட்டா !என்று கணவன் என்கிற ஆணும் ,எம்பட ஊட்டுக்காரன் லாரியில டிரைவரா போறான். தொப்பூர் மேட்டுல வாங்கீட்டு வந்து என்கிட்ட உட்டுட்டான். இப்படித்தான் சொல்கிறார்கள். எல்லாருமே தெரிந்துதான் தவறு செய்து வினையை வாங்கிக் கொள்கிறார்கள். தெரியாமப்போயிட்டேன் என்று சொல்பவர்களை அவர்களுக்கு சொல்லியே சாவு ஊசி குத்தி சாகடிக்கலாம். ஒன்றுமே இவற்றை பற்றி அறியாமல் பந்தை உருட்டி விளையாடிக்கொண்டு இருக்கிறதே .. இவர்களது குழந்தை ! இவர்களால் தானும் எய்ட்ஸை வாங்கிகொண்டு!

அது சரி பெருமக்களே , ஊமையை என்ன சைகை காட்டி அதற்கென காட்டுக்குள் நம் குறீ விரைத்த வாலாக்கள் கூட்டிப்போவார்கள்? திங்கறதுக்கு அல்வா அங்கே மரத்துக்கடியில் வாங்கி உனக்காக வச்சிருக்கேன் கண்மணி என்றா. நம்பிக்கை எப்போதும் உங்களுடனே கைகோர்த்தபடிதான் இருக்கிறது. உங்கள் வாழ்க்கைக்கான அர்த்தத்தை நம்பிக்கைதானே வழங்குகிறது. எப்படிச்செய்வது ? எப்படி இயங்குவது ? எல்லாவற்றிற்க்கும் வழிகாட்டுகிறது உங்கள் நம்பிக்கை. யாரும் உங்களை கொன்று விட மாட்டார்கள் என்ற நம்பிக்கையில் தானே நகர வீதியிலோ , கிராம வீதியிலோ நடமாடுகிறீர்கள்! உங்களைப்போலத்தானே மற்றவர்களூம் நம்பிக்கை கொண்டு உங்களை கடந்தும் செல்கிறார்கள் ! மன நலம் குன்றிய ஊமைக்கு இதுவெல்லாம் , ஏன் எதுவுமே தெரியாது ! பெருங்குடி மக்களே !

ஒரு சின்னக்கதை ! தினேஷ் என்கிற குறும்புக்கார பொடியன் திருப்பூரில் பாண்டியன் நகரில் இருந்தான். எதற்க்கெடுத்தாலும் லொள்ளு , பிடிவாதம் சிறுவர்கள் என்றாலே அப்படித்தானே! குசும்பு பண்ணாத சிறுவர்களை யாரும் ரசிப்பதில்லை. அவர்கள் ஊமைகோட்டான்கள்! பப்ளிமாஸ்கள் ! பெற்றொர்கள் அவனிடம் லொள்ளு பண்ணாதே , உறுமாண்டி வந்தா புடிச்சுட்டு போய்டுவான்! எண்ணெய் கொப்பரையில் போட்டு மீன் பொறிப்பது மாதிரி பொறித்து தின்று விடுவான். என்று மிரட்டி சொல்லி வந்தார்கள். அதற்கெல்லாம் அசந்து விடுவப‌ன் நம் தினேஷ் அல்ல. தினேஷ் விஜய் ரசிகன் வேறு ! வேட்டை ஆரம்பாயிடுச்சு டோய் !

எனது நண்பர் பிரதீப் ஈரோட்டுக்காரர் . எல்.ஐ.சி பாலிசி பிடிப்பதற்க்காக வேறு
ஒரு நணபர் வாயிலாக அந்த வீட்டினுள் நுழைந்துவிட்டார். பையன் தினேஷ் அவன் அம்மாவிடம் , இவர்தானா உறுமாண்டி ? பொறிக்கறவரா? எனக் கேட்டிருக்கிறான். வா சாமி! என்ன சாமி! முட்டாய் வேண்டுமா ! குழந்தைகளிடம் பாசம் அதிகமுள்ள நண்பர் பாச்சாவெல்லாம் தினேஷிடம் தவிடு பொடியானது !. சரி எதுதான் உனக்கு பிடிக்கும்! சொல்லு சாமி ! என்று நண்பரும் விடா முயற்சியில் இறங்கினார். கடைசியில் தினேஷ் எனக்கு முயல்தான் பிடிக்கும் அங்கிள் என்றான், முயலுக்கு திடிரென பிரதீப் எங்கு போவார்?
நீ அப்பா அம்மா சொல்றதை கேட்டு நல்ல பையன்னு பெயர் வாங்கீட்டா அவங்க அடுத்த வாரமே உனக்கு முயல் குட்டி வாங்கி பிரசண்ட் பண்ணிடுவாஙக !என்றார் . பையனும் சம்மதித்தான். அப்பா அம்மா கேட்டு இனிமேல நடந்துக்கிறேன் என்றான். பெற்றோர்களூக்கு ஆச்சரியம் ப்ளஸ் சந்தோச‌ம், பெற்றோர்கள் அவனுக்கு முயல் வாங்கிக் கொடுத்தார்கள். மூன்று வாரங்கள் பையன் வீட்டில்தான் இருக்கிறானா ? ஒரு சப்தமும் ரவுசும் இல்லையே என்று பெற்றவர்களுக்கு சந்தோசம்.

நமது நண்பர் பிரதீப் அந்த சமயத்தில் அந்த வீட்டினுள் ஒரு ஞாயிற்றுக்கிழமை மதியம் காலடி வைத்தார். பையன் இந்த முறை விருமாண்டியா ? என்று கேட்கவில்லை. அமைதி. உனக்கு முயல் கிடைச்சுடுச்சுன்னு உன் அப்பா சொன்னாரெ தினேஷ் ! எங்கே , அதை நான் பாக்கட்டுமா ? அங்கிளுக்கு எடுத்துக்காட்டு என்றார். தினேஷ் சந்தோசமாய் வீட்டின் வெளியே தோட்டத்திற்க்கு குடுகுடுவென ஓடினான். அந்த முயலை அதன் பெட்டி வீட்டினுள் இருந்து தூக்கிக்கொண்டு வீட்டினுள் வந்தான், அதே நேரம் அந்த முயல் குட்டி போட ஆரம்பித்து விட்டது . நான்கு, ஐந்து என்றுமே எல்லாம் சுகப்பிரசவம்.
தினேஷ்க்கு மாபெரும் அதிர்ச்சி , அப்படியே கையில் பிடித்தபடி அதிர்ச்சியில் நின்று விட்டான்.பின் மெதுவாக என்ன கருமம்பா இது ! என்று இறக்கிவிட்டு விட்டு பிரதீப்பை பார்த்து சொன்னான். " அங்கிள் ! என்ன கருமம் ! இது திருட்டுத்தனமாய் பண்ணின ஜோலி, இப்பப்பாருங்க வரிசையா கீழாற விழுந்துட்டு இருக்குது" என்றான்.

துமாரே நாம் க்யா? மேரே நாம் ஜோக்கர்.


*************

Post Comment

கூப்பிடுவது எமனாகவும் இருக்கலாம்.

புதிய வெளியீடு

கூப்பிடுவது எமனாகவும் இருக்கலாம்.

ஆசிரியர் : வாமுகோமு

வெளியீடு:

உயிர் எழுத்து பதிப்பகம்
தீபம் வணிக வளாகம்
கருமண்டபம்.
திருச்சி 62001. செல் 99427 64229
.

விலை ரூ 150/=

பக்கம் : 248.

Post Comment

நித்யானந்தாவும் இன்னபிற கதைகளும்நடைபெறாத சம்பவம் மற்றொன்று:

ஒரு நாள் காவிரி ஆற்றின் கரையோரம் நித்யானந்தா உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தார். அதை வால்பையன் பார்த்து விட்டான். வால்பையனுக்கு அன்று ஞாயிற்றுக்கிழமை! நேற்றைய இரவில் மீதமான சரக்கை இரண்டு துண்டு வெள்ளரிப் பிஞ்சை கடித்துக் கொண்டு குடித்து விட்டான். அறைக்குள்ளேயே அடைபட்டுக் கிடந்தால் தூக்கம் வந்துவிடுமே என்று காலார நடக்கத் தீர்மானித்து கிளம்பிவிட்டான்.வெறும் வயிற்றில் இறங்கிய சரக்கு குபுகுபுவென மசமசப்பைத் தந்திருந்தது! மணலில் கால் புதைய நடந்தவன் தான் நித்யானந்தா ’தண்டால்’ எடுத்ததை கவனித்தான். ஒரே குழப்பமாகவும் இருந்தது!


உடற்பயிற்சியை மாற்றி மாற்றி செய்து கொண்டிருந்தார் நித்யானந்தா.வால்பையன் அவரையே சுற்றிச்சுற்றி வந்து உன்னிப்பாக கவனித்தான்.தவறாகப் போய் விடக்கூடாதல்லவா!
”ஐய்யோ! நித்யானந்தா..உங்களது பர்சனல் விசயத்தில் தலையிவதாக நினைக்க வேண்டாம்! உங்களது கேர்ள் ஃப்ரெண்டு ரஞ்சிதா போய் விட்டாள். வீணாக எதற்கு இப்படி சிரமப்படுகிறீர்? முதலில் எழுந்து வந்து அவளை எங்கே என்று தேடிப் பிடியுங்கள்” என்றான்.


ஒரு சம்பவம் கற்பனையாக :-
நித்யானந்தா,அமலநாதன்,முஜீப் மூவரும் பத்து வருடம் சிறைத்தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டார்கள்.ஜெயிலர் இவர்களிடம் ‘நீங்கள் பத்து வருடம் உள்ளே இருக்கப் போகிறீர்கள்...உங்கள் தேவை என்ன? ஒரே ஒரு பொருள் கேளுங்கள்..நிறைவேற்றி தருகிறோம்’ என்றார். நித்யானந்தா “பெண்” என்றார். முஜீப் “செல்போன்” என்றார். அமலநாதன் “சிகரெட்” என்றார்.


பத்து வருடங்கள் கழித்து மூவரும் வெளியே வந்தார்கள். முஜீப் செல்போன் மூலம் வியாபாரம் பேசி,கமிஷனாக ஏராளமான பணம் சம்பாதிருந்தார். அதேபோல் அமலநாதன் வெளியே செல்கையில், “ நெருப்பு பெட்டி இருக்கா?” என்று கேட்டுக் கொண்டே சென்றார். நித்யானந்தா பத்து குழந்தைகளோடும் மனைவியோடும் சென்றார்.


இரண்டாவது சம்பவம் கற்பனையாகவே :-
நித்யானந்தாவும், பாதர் அமலநாதனும் திக்கஸ்ட் ப்ரெண்ட்ஸ்.அவர்களுக்குள் எந்த ஒளிவு மறைவும் கிடையாது! ஒளிவு மறைவு இருந்தால் நண்பர்களாக கண்டிப்பாக இருக்க முடியாதுதான் ஒன்றை நாம் புரிந்திருக்கிறோம். மறைத்து மறைத்து பழகும் நட்பு நீடிக்காது! காதலுக்கும் அப்பிடித்தான்.


அதுவும் வெற்றி பெறாது! நித்யானந்தாவும்,பாதர் அமலநாதனும் ஒன்றாகத்தான் எங்கும் வெளியே செல்வார்கள். ஒரு திரைப்படம் பார்க்க என்றாலும் இருவரும்தான். இருவருக்கும் இன்று ஒரு சிறப்பான நிகழ்ச்சி இருந்தது! திரைப்பட நடிகை நளினாசிரீ இன்று நித்யானந்தாவின் ஆசிரமத்திற்கு வருவதாக மெசேஜ் விட்டிருந்தாள். sms பார்த்ததும் நித்யானந்தா அமலநாதனுக்கு தகவல் கொடுத்து விட்டார். அவரை பிக்கப் செய்து கொண்டு செல்வதற்காக நித்யானந்தா தன் காரில் அமலநாதனை தேடி வந்தார். பாவமன்னிப்பு கேட்பவர்களின் வரிசை அன்று நீண்டிருந்தது.
இவர் வெளியே காரில் காத்திருந்தார். அமலநாதன் செல்போனிற்கு
ரிங் விட்டு ரிங் விட்டு கட் செய்தார். அமலநாதன் ஓடிவந்து இவர் காரில் ஏறிக் கொண்டார். காரில் ஒரு கண்ணாடி ஜன்னல் கொஞ்சம் இறக்கிவிட்டார். வெளியே இருந்து பாவமன்னிப்பு கேட்டார்கள். பாவத்தை சொன்னார்கள்.


அமலநாதன் காரில் ஏறியதுமே “நமக்கு இன்று நிரம்ப நேரமகிவிட்டது.ஸாரி” என்றார். ”எவ்வளவோ விரைவாக முடிக்க முயன்றும் முடியாமல் போய் விட்டது. அவர்கள் தங்கள் பாவங்களை சுருக்கமாக சொல்வதேயில்லை.கதை போல நீளமாய் சொல்கிறார்கள். எனக்கோ கடுப்பாய் இருக்கிறது. அவர்கள்நான் அப்பிடி செய்தேன் இப்படி செய்தேன் என்று கூறுகிறார்கள் ... ஒரு கற்பழிப்பை, இது ஒரு பெரிய விசயமா? நீ கற்பழித்தாய்...அவ்வளவுதானே...அந்த
உண்டியலில் ஐந்தாயிரம் போட்டு விட்டு நகர்ந்து செல்” என்பேன், என்றார்.”சரி இவ்வளவு தானா விசயம்...இப்படி முன்புறம் வந்து நீங்கள் தயாராகுங்கள்... பவுடர்,சீப்பு,கண்ணாடி,செண்ட் என்று இதோ இருக்கிறது. நான் பார்த்துக் கொள்கிறேன். உள்ளே யார் இருக்கிறார்கள் என்று வெளியே இருப்பவர்களுக்கு இந்த கண்ணாடிகள் காட்டிக் கொடுக்காது ! நான் இதை ஜமாளிகிறேன்”, என்கிறான். “சரி இந்த உண்டியலில் 20 ஆயிரம் போட்டுவிட்டு போ” என்றார் நித்யானந்தா. அதர்கு அவன், ஐயோ பாதர் இது மிக அதிகம்...போன தடவை 5ஆயிரம் உண்டியலில் போட்டேன்...அபராதத் தொகையை ஏற்றிவிட்டீர்களா? “ என்றான். “இல்லை...தொகை ஐந்தாயிரமே தான்...ஆனால் பதினைந்தாயிரம் முன்னதாகவே உண்டியலில் போடச் சொல்கிறேன்,ஏனெனில் நீ அடுத்தடுத்து சீக்கிரமே கற்பழிப்புகளை நடத்துவாய்” என்றார் நித்தியானந்தா.டிஸ்கி:
பாலுணர்வுதான் தன்னுடைய முழு வாழ்க்கையும் என்று ஒருவன் கருதினால் அந்த வாழ்க்கை முழுமையாகவே வீணாகிவிடும். பாலுணர்வு சக்தி என்று ஒன்று தனியே கிடையாது. சக்தி என்பது ஒன்றுதான். அந்த சக்தி வெள்யேற ஆண் பெண் கலவி துணை செய்கிறது! அவ்வளவுதான். --...வாழ்க வளமுடன்.Post Comment

காதல் கவிதைகள் - வா.மு.கோமு

என்னைக் கிள்ளி
எடுத்து
உன் கூந்தலில்
சூடிப்போ!

*************************************************************
நீ எல்லாவற்றையும்
மறைக்கிறாய்.
என்னையும் உன்னுள்.

*************************************************************
ஒவ்வொரு பார்வையிலும்
ஓராயிரம் ரகசியத்தை
உன் விழிகள் சொல்கின்றன.
-சும்மாதான் பார்த்தேன்
என்கிறாய்!என்னையே உன்
பார்வையால் விழுங்கிவிட்டு.

****************************************************************
உன் கடிதங்களை
எதிர்பார்ப்பது கூட
வழக்கமாகி விட்டது.
எப்பொழுதும் நீ
கடிதம் எழுதாத போதும்.

******************************************************************
எனக்கு பிடிக்காததையே
செய்யும்
எனக்குப் பிடித்தமானவள் நீ.

*******************************************************************
உனக்கே என்னை
தெரியவில்லை எனில்
யாருக்குத் தெரிந்து
என்ன பயன்?

**************************************************************
நீ தான் சொன்னாய்
நீ என்னில் பாதி என.
தவறு சகி
நான் உன்னுள் முழுமை.

***************************************************************
என்னை மறந்து விட்டீர்களா? என்கிறாய்.
மறக்கவில்லை.
ஞாபகத்திலிருந்து அடித்திருக்கிறேன்.
மறப்பதற்கான முயற்சியா? என்கிறாய்.
முயற்சியல்ல சோதனை
வெற்றி பெறுவீரா? என்கிறாய்.
உன்னால் முடிந்திருந்தால், என்கிறேன்.

*****************************************************************
எப்போதும் போல் வசந்தம் வருகிறது
பூமி குளிர்கிறது
நீயும் நானும் வேறுவேறு பக்கம்
சுவாசித்தும்.

*****************************************************************
ஆறாதிருந்த ரணத்தின் மேல்
கனல் கக்கும் வேல்
எய்தவள் நீயும் சுகமற்றிருக்க !

*****************************************************************
அன்பை விதைத்து விட்டு
அறுவடை சமயத்தில்
பைபை சொன்னவள் நீ.

*****************************************************************

எனது பிரியத்தின் மீது
மிகப்பெரிய முற்றுப்புள்ளியை
வைத்தவள் நீ!

*****************************************************************
நாவுகள் நிஜம் பேசுமென்பது
நம்பத்தகுந்ததல்ல என்பதை
மறுபடியும் நிரூபணம் செய்தவள் நீ !

******************************************************************

...

Post Comment

செவ்வாய், மார்ச் 02, 2010

பரிசல்காரன், கேபிள்சங்கர் தொகுதிகளை முன்வைத்து ஒரு டான்ஸ்

நேற்றே இன்று வரும் என்று குறிப்பிட்டு விட்டு சன் தொலைக்காட்சியை பார்த்தால் இதைவிட மேலான மேட்டர் நேற்று நெட்டுலகுக்கு கிடைத்து விட்டதால் சற்று காலதாமதத்துடன் இன்றைய பதிவு வெளிவருகிறது..


இதன் முந்தைய பதிவு

இனி தோழர் பெரியசுவாமி நேரம்.

நண்பர் தகதிமிகா தன் மனைவி லத்திகாவிடம் நமக்கு திருமணம் என்கிற பந்தம் ஏற்பட்டு காலம் எவ்வளவு ஆயிற்று என்றார்.லத்திகா விரலை ஒவ்வொன்றாக விட்டு விட்டு எண்ணி ஐந்து வருடங்கள் ஆயிற்று என்றாள். சரி இதை நாம் கொண்டாட வேண்டுமே என்றார். திட்டத்தை இருவருமே போட்டார்கள். ஹனிமூன் சென்ற ஊட்டிக்கு இப்போதும் செல்லலாம் என்று முடிவு செய்யப்பட்டது. திட்டம் போட்டாகி விட்டதும் மளமளவென பேக்கப் செய்தார்கள். ஊட்டியில் பழைய நினைவுகள் ! விழியே கதை எழுது ,கண்ணீரில் எழுதாதே! மஞ்சள் வானம் தென்றல் காற்று , உனக்காகவே நான் வாழ்கிறேன்! அதே தங்கும் விடுதி ! அதே பதினேழாம் எண் அறை !

லத்திகா படுக்கையில் ஓய்வாய் விழுந்தாள். தகதிமிதா கைலியை உடுத்திக்கொண்டு பாத்ரூம் சென்றார். உள்ளிருந்து தகதிமிதா சிரிப்புச் சப்தம் லத்திகாவிற்க்கு கேட்கிறது. இதென்ன? 25 வருடத்திற்கு முன்பு இதே அறைக்குள் வந்ததும் கைலி கட்டி உள்ளே சென்றவர் சிரித்தார். அப்போது கூச்சத்திலும் வெட்கத்திலும் அவதியுற்றதால் கேட்கத்தவறி விட்டது. இப்போது ஏன் சிரித்தீர்கள் என்று கேட்டுவிடவேண்டும் என்று நினைத்தாள். அதன்படி தகதிமிதா வெளியே வந்ததும் லத்திகா , ஏன் சிரித்தீர்? ப்ளீஸ் டெல்மீ டார்லிங்! வொய் ஆர் யூ லாப்பிங்? என்று கேட்டாள்.

"
அதுவா கண்ணே ! அன்று நான் ....ச்சாவை பாத்ரூமில் என் உயரத்திற்கும் மேலாக சுவத்தில அடித்ததற்க்கு சிரித்தேன் அன்பே! இன்று அப்படித்தான் முயற்சித்து பார்த்து .. இதோ என் கால்கள் நனைந்து விட்டது! அதற்காக சிரித்தேன் டியர்"

(
எக்ஸ்டென்சியலிச முதல்பிரதியாக தன்னையே எண்ணிக்கொள்ளும் மனவியாதி பீடித்தவர்களின் அந்தரங்க சேஷ்டைகள் இப்படித்தான் இருக்கும்)

தமிழில் சிறுகதை எழுத்தாளர்களின் வரவு அதிகமாகி இருக்கிறது. இதுகளை எல்லாமே கதைகளாக எழுதலாமா ? என்று யோசிக்க முடியாதனவைகள் எல்லாமே சிறுகதைகளாக எழுதப்படுகின்றன. தமக்கென ப்ளாக் ஸ்பாட்டுகளை உருவாக்கிக்கொண்டு கட்டற்ற சுதந்திரத்தில் இன்று ஏராளமான நண்பர்கள் எழுத்தாளர்களாக உருவாகிறார்கள்.தங்களுக்கு நடந்த சம்பவங்கள் , நண்பர்களுக்கு நடந்த சம்பவங்களே இவர்கள் கதைகளுக்கான கரு. தீட்டத்தீட்டத்தான் அருவாளாகட்டும், வீச்சாகட்டும் கூர்மை பெறும். நீண்ட நாட்களாக என் தனிப்பட்ட எண்ணமாக ப்ளாக்கில் எழுதுபவர்கள் தங்களுடைய எழுத்துகளை புத்தகமாக கொண்டு வருவதில் அதிகமாக ஆர்வம் காட்டாமல் இருப்பது ஏன்? என்ற கேள்வி இருந்தது.

முன்பு சிற்றிதழ்கள் என்று இருபத்தி நாலு பக்க ,ஒன்றுக்கு எட்டு சைஸ் புத்தகங்கள் நிறைய புழக்கத்தில் இருந்து வந்தன. அதில் எழுத வருபவர்கள் அந்த பத்திரிக்கை ஆசிரியரின் வேண்டுகோளின்படி பத்துவரி , இருவதுவரி கவிதைகள் எழுதிக்கொடுத்து நாஙகள் கவிஞர்கள் என்று அறிவித்துக்கொண்டார்கள். இன்று ஒவ்வொரு தனிமனிதனும் ப்ளாக்ஸ்பாட் என்று சிற்றிதழ் நடத்துகிறார்கள். உடனுக்குடன் பின்னூட்டங்கள்! பின்னீட்டீங்க! கலக்கிட்டீஙக! சமுதாயத்தை சாக்கடையிலிருந்து தூக்கி சீர்கேட்டை தடுத்துட்டீங்க ! விமர்சனங்கள்தான்.

ஒரு நண்பரிடம் என்னதான் நடக்கிறது ஸ்பாட்டுகளுக்குள் என்ற கேள்வியை வைத்தேன். காலையில எழுந்து இன்ன சமையல் செஞ்சேன். புளியம்பிஞ்சு தொக்கு செய்தேன். சாப்பிட்டேன் ,காய்ச்சல் வந்தமாதிரி இருக்குது என்று ஸ்பாட்டில் எழுதிவிட்டார் என்றால் பின்னூட்டங்கள் சரமாரியாய் பறக்குமாம்!
உடம்பை பத்திரமாய் பாத்துக்கங்க ! டேபிளெட்ஸ் எடுத்துக்கஙக ! தொக்கு சாப்பிட்டா காய்ச்சல் .. டாக்டரை சீக்கிரம் பாருங்க! இப்படி ஐம்பது, அறுபது
பின்னூட்டங்கள் பறக்குமாம் !

ப்ளாக் ஸ்பாட்டுகளுக்கு நண்பர்கள் வைத்துக்கொள்ளும் பெயர்கள் அதி பயங்கர ஆச்சரியங்களாக இருக்கிறது . புலவன் புலிகேசி, தண்டோரா,மீன் துள்ளியான்,சைவ கொத்துப்புரோட்டா,வெட்டிப்பயல் என்று ! வால் பையன்ங்ற பேர்ல ப்ளாக் எழுதுறேன் தலை என்று அறிமுகமாக கை நீட்டியவரின் பின்புறத்தை நான் நோட்டமிட்டேன். நல்ல வேளை நன்கு வளர்ச்சிடைந்த நிலையில் ஒரு வால் இருந்தது. பெயர்கள் விளையாட்டுக்காய் வைக்கப்படுவதில்லை என்பது அப்போதுதான் புரிந்தது !
இப்போது சங்கர் நாராயனண் , பரிசல் கிருஷ்ணா இருவரது சிறுகதைதொகுப்புகளும் வந்துள்ளன. சங்கர் நாராயணனை கேபிள்சங்கர் என்றஅடைப்பெயரில்தான் எல்லோரும் விளிக்கிறார்கள். எனக்கு உடனே தோன்றியது சென்னையின் ஒரு பகுதியில் கேபிள் கனெக்ஷன் கொடுத்து சன் , ஸ்டார் , சோனி என்று படம் காட்டி மாத வசூல் செய்பவரோ என்றுதான்.( அடியேன் லோக்கலில் ஒரு காலத்தில் செய்து கொண்டு இருந்தேன். அது என் தொழில் நெ 30)

பரிசல் கிருஷ்ணாவை பரிசல்காரன் என்று விளிக்கிறார்கள். கொடுவேயில் பரிசல் ஓட்டுவதை பிரதான தொழிலாக கொண்டவரோ என்ற யோசிப்பு எனக்கு !
சங்கர் நாராயணன் தனது சிறுகதை தொகுப்பின் தலைப்பாக "லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்" என்று வைத்திருக்கிறார். சர்ரியலிசமும் பெப்ஸி கோலாவும் என்பது மாதிரி. சிறுகதைகள் பதிமூன்றும் வாசிக்க தங்குதடை இன்றி சரளமாய் இருக்கின்றன. இந்த மாதிரியான சரளமான வாசிப்பு அனுபவம் சாருவின் கதைகளீலதான் காணமுடியும். முத்தம் என்கிற முதல் கதையிலேயே அசந்துவிட்டேன். (இன்னாமா எய்துகிறாங்கோ மக்கா) தொகுப்பின் தலைப்புக் கதையை பட்டிக்காட்டான் முட்டாய் கடை பாத்து ஹாவென வாய் பிளந்து நிற்பது போலத்தான் வாசிக்க முடிந்தது. முன்பு சாருவின் கதைகளில் சரக்குகளின் பெயர் புதுமையும்,தீனிகளின் வகைகளும் ஆட்டம் பாட்டங்களையும் படிக்கையில் , தெரிந்துகொள்கையில் ஒரு எரிச்சல் அடிவயிற்றில் தோன்றும். மீண்டும் அதே ! சங்கர் எடுத்துக்கொள்ளும் பாலியல் சமாச்சாரங்களை விட வரும் பெண்களில் சுதந்திரமான நடவடிக்கைகள் வாசகனை திக்குமுக்காடச் செய்கின்றன.
துரை.. நான் ..ரமேஷ் சார் என்கிற கதை இந்த தொகுப்பில் நல்ல சிறுகதையாக இருக்கிறது. தலைப்பு தடுமாற்றமாக இருந்தாலும் ஆகச்சிறந்த கதை இது. ஒரு ஜீ . நாகராஜனோ, சுந்தரராமசாமியோ,சாருவோ நினைத்தால் கூட தம் கதையில் செய்யமுடியாத வேலையை எளிதாக போகிற போக்கில் செய்து விடுகிறார். பார்த்தால் மாம்பழ வாசனை கதையில் நிகழ்த்திக் காட்டுகிறார். போதும் சங்கர் ! இதற்குமேலும் சிறுகதை என்று எழுதி தொகுப்பு போட்டு சிறுகதையாளனாக காட்டிக்கொள்ள அவசியமேயில்லை. நான் படித்த கெழடு,கட்டைகளின் கதைகளை எல்லாம் இந்த தொகுப்பில் உள்ள குறிப்பிடத்தகுந்த நான்கு சிறுகதைகளால் தூக்கி கடாசிவிட்டீர்கள்!

எனது புத்தக அடுக்கில் சில தொகுப்புகள் உள்ளே வருகையில் செத்துப் போன எழுத்தாளர்களின் சிறந்த தொகுப்புகளை எடைக்குப் போட்டுவிடுவேன். சாக்னா கடை செலவுகளுக்கு அவைகள் எப்போதும் உதவும்! இந்த முறை விஜய் மகேந்திரனின் தொகுப்பு,ஷாராஜ் மொழிபெயர்ப்பில் ஸிதாரா எஸ்சின் சிறுகதைகள் என்று அடுக்கில் வந்ததால் எடைக்கு போன புத்தகஙகள் வரிசை
1.ராஜெந்திரசோழன் எழுதிய பரிதாப எழுத்தாளர் பரதேசி பண்டித புராணம் , நாவல் , சிறுகதைகள்.
2.சாருவின் ஜீரோ டிகிரி , பேன்ஸி பனியன் , சிறுகதைகள்
3.சுந்தரராமசாமியின் புளியமரத்தின் கதை, ஜேஜே,பல்லக்குத்தூக்கிகள்
4.பெருமாள் முருகன், கங்கணம்,கூளமாதாரி,திருச்செங்கோடு
5.பூமணி. நகுலனின் நாவல்கள் தலா மூன்று!பெயர்கள் எழுத மொடை
6.க.நா.சு,லா.ச.ரா.,எம்.வி வெங்கட்ராம்,இந்திரா பார்த்தசாரதி புத்தகங்கள் தலா நான்கு!

தேறிவிட்டது! சாக்னா செலவுக்கு தேறிவிட்டது!சங்கர் நாராயணன் தன் தொகுப்பில் போஸ்டர், நண்டு , தரிசனம்,ஆண்டாள், ஒரு காதல் கதை என்கிற குப்பைக் கதைகளையும் சேர்த்துள்ளார்.

" டைரிக்குறிப்பும் காதல் மறுப்பும்" பரிசல் கிருஷ்ணாவின் கதைகள் பதினேலு தொகுப்பில் நிரம்பி இருக்கின்றன . ஆரம்ப எழுத்தாளரின் சிறு சிறு தவறுகள் நிரம்பிய தொகுதிதான் என்றாலும் எனக்கு எல்லாக் கதைகளும் குதூகலம்தான். 20 வருடங்களுக்கு முன்பாக நானும் இப்படித்தான் எழுதி எழுதி நோட்டு நோட்டாக நண்பர்களுக்கு படிக்கக் கொடுத்து சந்தோசப்பட்டுக்கொண்டிருந்தேன்.

சாரு என்னிடம் ஒரு முறை கூறினார். உலகத்திலேயே மோசமான எழுத்து என்று ஒன்று இருந்தால் அது பெருமாள் முருகன் எழுத்துதான் என்று! அப்போது அது எனக்கு மண்டையில் ஏறவில்லை சரியாக! பின்னர்தான் கங்கணம் வந்தது! அவர் கருத்தை உறுதி செய்தது! மேலே எடைக்கு அவரது புத்தகங்களை போட்டு விட காரணமே இந்தத் தொகுப்புதான். இந்தத் தொகுப்பில் கூட நான் தெரிந்து கொள்ள வேண்டிய விசயங்கள் சிலதி இருந்தன. என்னைப்பொறுத்த வரை அவரைப் படித்து புதிதாய் நான் தெரிந்து கொள்ள ஒன்றுமில்லை! அந்த விதத்தில் பெருமாள் முருகனுக்கு பரிசல் எனக்கு பெஸ்ட்.

ஒரு சின்ன விசயம்;
சமீபமாக ஜெயமோகன் என்கிற புதிய எழுத்தாளரின் புத்தகங்கள் வருவதாகவும் , பயங்கரமாய் எழுதுவதாகவும் நண்பர்கள் ஈரோட்டுவீதியில் பேசிக்கொண்டேயிருக்கிறார்கள். எனக்கு இப்போதுதான் கேபிள்சங்கர், பரிசல்காரன் என்ற எழுத்தாளர்களையே தெரிய வருகிறது. கைவசம் அந்த புதிய எழுத்தாள நணபரின் புத்தகங்களை வீட்டில் படித்துவிட்டு சும்மா வைத்திருக்கும் நண்பர்கள் எனக்கு அனுப்பி உதவினால் அவரது புத்தகங்கள் பற்றீ நானும் விமர்சிக்கலாம் என்றிருக்கிறேன். எனக்கு எத்தியோப்பிய மொழி தெரியாது! தெரிந்திருந்தால் அந்த மொழிக்கு மொழிபெயர்க்கலாம்.

பரிசல் கிருஷ்ணா, சங்கர் நாராயனண் இரண்டு தொகுப்புகளும் விலை :50.00 நாகரத்னா பதிப்பகம், 3ஏ , டாக்டர் ராம் தெரு, நெல்வயல் நகர்,பெரம்பூர், சென்னை 11.

..................

Post Comment

வேட்டை ஆரம்பமாயிருச்சு டோய்!

எல்லாருக்கும் நமஸ்ஹாரம்!

அஜித்-விஜய் ரகசிய சந்திப்பு! அதிரடி ப்ளான்!

என்னடா கருமமா இருக்குதுன்னு புத்தகம் வாங்கி கொண்டு போய் கட்டிலில் நீட்டி விழுந்து படபடப்பாய் புத்தகத்தின் பக்கங்களில் விசயத்தை தேடினேன்! சென்னைக்கு மெரினாபீச்சுக்கு நம்பளை எல்லாரையும் கூப்பிட்டு நாங்க சினிமாவுல சம்பாசிச்ச காசுக பூராத்தையும் எடுத்துகோங்க நீங்களே! அப்படினு தூக்கி புடிச்சிகோங்க, புடிச்சிகோங்கன்னு வீசி எறிஞ்சிட்டுவாங்களோ! நாங்க ரெண்டுபேரும் பொண்டாட்டி புள்ளைங்களை விட்டுப்போட்டு தனிக்குடித்தனம் போறோம்னு சொல்வாங்களோ?
சினிமாவே ரெண்டுபேருக்கும் வேண்டாம்.. இலங்கை பிரச்சனை, ஜக்குபாய் பிரச்சனை,தண்ணீர் பிரச்சனை வாங்க வாங்க.. வரல்லின்னா கழுத்தைப்பிடிச்சு சினிபீல்டுல இருந்து தள்ளி விட்றுவோம்னு மிரட்டுறாங்க.. இந்த எழவெல்லாம் நம்மளுக்கு எதுக்கு? நேரா குடும்பத்தோட வெளிநாடு ஓடிப்போய் செட்டில் ஆயிடலாம்னு அதிரடி ப்ளான் போட்டுடாங்களோன்னு படிச்சிப் பார்த்தா.... ங்கொய்யாலே!

அதாவது பெருங்குடி மக்களே. தீவாளி நோம்பியன்னிக்கி, பொங்க நோம்பியன்னிக்கி ரெண்டு பேரு படமும் ரிலீஸானா எதோ ஒன்னு ஓடறதில்லையாம், பை நெம்புறதில்லையாம், அதுக்காக‌ வேண்டி தீவாளியன்னி அஜித்படம்னா அஜித்படம் மட்டும் தான், பொங்கலுக்கு அஜித் படம் வராது. விஜய் படம் தான். இப்படி கரைக்ட் பண்ணிக்குவோம்னு சமரச திட்டம் போட்டாங்க! இத எதுக்கு நாம பேசணும்? அப்படின்னு கேட்கப்படாது பெருமக்களே! எல்லாப்பக்கமும் எதை பேசுறாங்களோ அதை தான் நாமளும் பேசிக்கணும்! அதான் இப்போ இலக்கியம்,

தல போல வருமா! ஹேய் தல போல வருமா!?

வேட்டை ஆரம்பிக்கவே இல்ல டோய்!

--

தொடரும்

--
டைப்பிங் உதவி
வால்பையன்..


**************

Post Comment

பரிசல்காரன், கேபிள்சங்கர் தொகுதிகளை முன்வைத்து ஒரு டான்ஸ்

தமிழில் விமர்சகர்கள் மிகக்குறைவு என்பது நீண்டகாலமாக எழுத்துலகில் புலங்கிக் கொண்டிருப்பவர்கள் உணர்வார்கள். அப்படியே ஒன்றிரண்டு பேர்கள் விமர்சித்தாலும் அவர்கள் படைப்பாளிகளாகவும் இருப்பார்கள். தன் மாமனுடைய புத்தகத்திற்க்காகவோ தன் கூடவே புறண்டெழுந்தவளினுடைய வீட்டுக்காரன் எழுதிய புத்தகத்திற்க்காகவோ விமர்சனம் என்கிற பெயரில் ஜல்லியடிக்க தனது படைப்பு வெறியை ஒதுக்கி விட்டு பேனா நீக்குவார்கள். விமர்சனம் என்ற பெயரில் சக படைப்பாளியை எதிராளியாக பாவித்துக்கொண்டு குதறி எடுப்பதுதான் விமர்சனம் என்கிற புதுமையான பாணி. இதைத்தான் கற்றுக்கொடுத்து முன்னோர்கள் செத்துப்போயிருக்கிறார்கள். பீடத்தில் இருப்பவர்களும் தம் கத்துக்குட்டிகளுக்கு கற்றுக் கொடுத்துக்கொண்டும் இருக்கிறார்கள். நான் இவைகளை குறை சொல்வதாக தப்பாக அர்த்தம் செய்து கொள்ளலாகாது நண்பர்களே ! அது குறையல்ல. வாசகனை விசில் அடித்தபடியே படிக்க வைக்கும் ஒரு பாணி . நானும் அவர்களை கடைபிடித்து வழி மொழிந்துதான் இந்த புதிய முயற்சியில் இறங்கியிருக்கிறேன். என்னைத்தேடி வரும் புத்தகங்களுக்கு ஜல்லியடிப்பு வேலைகள் செய்வது என்பது இனி என் தலையாய பணி.

திரைப்படங்களுக்கு விமர்சனம் எழுதுவது என்பது சமுதாயக் கடமையாக மாறிவிட்டது போல ஒரு தோற்றம் இப்போது உருவாகிவருகிறது. அதை செய்யும் இலக்கியவாதிகள் கூட அப்படித்தான் இப்போது முழுதாக நம்பிக்கை வைத்து எழுதுகிறார்கள். தமிழில் வரும் ஒவ்வொரு படங்களும் உலகப்படங்களில் இருந்து டூமீல் செய்யப்பட்டதாக எழுதுவது இப்போது பேஷனாகி விட்டது. அமீர்,மிஸ்கின் செல்வராகவன் படங்கள் நம் விமர்சகர்கள் எழுத்து சாமர்த்தியத்தால் இப்படித்தான் குதறப்படுகின்றன. நாம் ஒரு தமிழ்ப்படம் பார்த்து இவர்கள் விமர்சனங்களை படித்தோமென்றால் ஒன்பது டிவிடிக்கள் அலைஅலையொவென அலைந்து லெக்ஸ்களீல் விழாத குறையாக விழுந்து ,ஊர் ஊராக போனப்போட்டு மொழிதெரியாத படங்களை வாங்கி சாமத்தில் கொட்டறக்கோ எனப் பார்க்க வேண்டியிருக்கிறது. ஒரு தமிழ்ப்படத்தால் நம் செலவுக்கணக்கை நமக்கு இன்றைய விமர்சகர்கள் நமக்கு ஏற்றுகிறார்கள். . நமக்கு பட்ஜெட்டும் உதைக்கிறது. இதனால் செவ்வாய் கிரகத்திற்க்கு சென்று வீடு கட்டித் தங்கும் என் ஏற்பாடு தள்ளிப்போகிறது! உயிர்மை இந்த வருடம் ஏப்ரல் இறுதிக்குள் எனக்கான கணக்கை சரி செய்து கொடுத்துவிட்டது என்றால் கட்டுமானப்பணீகளை துவக்கிவிட வேண்டும்.

தமிழில் இனிவரும் எல்லா திரைப்படங்களும் அவற்றின் கதாசிரியர்களுக்கே தெரியாமல் உலகப்படங்களுடன் சம்பந்தப்படுத்திதான் பேசப்படும். நமது இலக்கிய விமர்சகர்கள் குறிப்பிட்ட படத்தை இன்ன உலகப்படத்திலிருந்து டுமீல் செய்யப்பட்டது என்று எழுதிய பிற்பாடுதான் அந்த தமிழ்படத்தின் டைரக்டர்கள்,ஸ்கிரிப்ட் ரைட்டர்கள் கேமரா மேன்கள் , டச்சப் பாய்கள் , என எல்லாருமே பார்க்க வேண்டிய நிலை உருவாகிறது !எல்லாமே இவர்களே கொண்டுவந்துவிட்ட குரலால்தான் . உலகப்படங்களுக்கு இணை இல்லை ! இல்லை! என்று கூச்சல் போட்டதால்தான்.

படைப்பாளிகளுக்கு எழுதுவதற்கு விசயம் என்று ஒன்றுமே கிளிக் ஆகாத தருணங்களில் தான் திரைப்படங்களுக்கு விம‌ர்சனம் எழுதுகிறேன் பேர்வழி என்று இலக்கிய பத்திரிக்கையின் பக்கங்களை ஆக்கிரமிப்பதால்தான் அசம்பாவிதங்கள் நடந்து விடுகிறது ! இதை இப்படியெல்லாம் கிடையாது கோமு.. நீ ஜல்லியடிக்கப்படாது என்று பேசப்பிடாது சார். அபகாலிப்பதோ பற்றீ எழுதுவாக இருந்தால் அதைப்பற்றீ மட்டும் எழுதுங்கள் . அதை ஆயிரத்தில் ஒருவனோடு சேர்த்தி எழுதினால் தான் விசயம் தீவிரமடைவதாக காட்டாதீர்கள். அவதார் படத்தைப்பற்றி எழுதுவதாக இருந்தால் தனித்து அதன் பிரமாண்டங்களை எழுதுங்கள் .அங்கே நொட்டியதாகவும் , இங்கே நொட்டாததாகவும் எழுதாதீர் நண்பர்களே ! அஞ்சரைக்குள்ள வண்டியை காப்காவின் உருமாற்றத்திற்கு இணையாகப் பேசாதீர்கள். அதை ரிலீஸ் செய்த மயில்ராவணன் பிளாக்காரரை மெல்கிப்ஸனுக்கு இணையாகப் பேசாதீர்கள்!அப்புறம் எல்லோரும் சிரிப்பதற்க்கு வாயைப்பயன்படுத்த மாட்டார்கள்.தொடரும்..........

நாளை

இப்போது சங்கர் நாராயனண் , பரிசல் கிருஷ்ணா இருவரது சிறுகதைதொகுப்புகளும் வந்துள்ளன. சங்கர் நாராயணனை கேபிள்சங்கர் என்றஅடைப்பெயரில்தான் எல்லோரும் விளிக்கிறார்கள். எனக்கு உடனே தோன்றியது சென்னையின் ஒரு பகுதியில் கேபிள் கனெக்ஷன் கொடுத்து சன் , ஸ்டார் ,சோனி என்று படம் காட்டி மாத வசூல் செய்பவரோ என்றுதான்.( அடியேன் லோக்கலில் ஒரு காலத்தில் செய்து கொண்டு இருந்தேன். அது என் தொழில் நெ
30)

........

Post Comment