
வாமுகோமுவின் சிறுகதை "ரகசியங்களை யாரிடமும் சொல்ல வேண்டாம்" இந்த வாரம் ஆனந்தவிகடனில் வெளிவந்துள்ளது.
நீலவர்ண சுடிதார் அணிந்த
பெண்களைக்கண்டால்
காதலாய் பார்க்கிறேன் சாலைகளில்!
என் காதலி நீல வர்ண சுடிதாரில்
இருந்த அன்றுதான்
"உன்னை எனக்கு வர வர ஏனோ
பிடிக்கலைடா! நீ ஒரு மண்ணு" என்றாள்.
கருப்பு நிற வெல்வெட் சுடிதார் அணிந்து
செல்லும் பெண்களைக் கண்டதும் ஒரு கணம்
நின்று மானசீகமாய் பார்த்து ரசிக்கிறேன்
என் காதலி கருப்பு நிற வெல்வெட் சுடிதார்
அணிந்து வந்த நாளில்தான்,
"உன்னை நம்பி எங்கு வேண்டுமானாலும்
எந்த நேரத்தில் வேண்டுமானாலும்
வரலாம் போலிருக்கே!ஒழுக்கமா உனக்கு
கற்பழிக்கக்கூட துப்பில்லைடா"என்றாள்
மஞ்சள் வர்ண சேலை அணிந்த பெண்கள்
மஞ்சள் சரடு கட்டியிருப்பினும்
நின்று நிதானித்து காதல்
பார்வை வீசுகிறேன் புன்னைகையோடு!
என் காதலி மஞ்சள் நிற சேலையில்
கோவிலில் என்னை சந்தித்தபோது
"ஒரு முழம் மல்லியபூ வாங்கித் தரக்கூட
உன்கிட்ட பைசா இல்லியாடா பரதேசி"என்றாள்.
பச்சை வர்ண சேலையோ சுடிதாரோ,தாவணியோ
அணிந்து வரும் பெண்களைக்கண்டால்
பாதை விலகி தலை தெறிக்க ஓடுகிறேன்
என் காதலி பச்சை நிறதாவணியில்
வந்த நாள் அன்றுதான்
"உன்னை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்குடா
ஐ லவ் யூ சோ மச் பழனிச்சாமி" என்றாள்..
நான் எழுதும் கவிதைகளுள்