புதன், ஆகஸ்ட் 31, 2011

மதுரையில் உயிர்மையின் நான்கு நூல்கள் வெளியீட்டு விழா


மதுரையில் உயிர்மையின் நான்கு நூல்கள் வெளியீட்டு விழா

நாள்: 3.9.2011 சனிக்கிழமை

நேரம்: மாலை 4 மணி

இடம்: புத்தக கண்காட்சி மைதானம்,

தமுக்கம் மைதானம், மதுரை

வெளியிடப்படும் நூல்கள்

1) இரண்டு சூரியன் - தேவதச்சன்

2) சேகுவேரா வந்திருந்தார் - வா.மு.கோமு

3) திரைப்படக் கலை - முனைவர். வெ.மு.ஷாஜகான் கனி

4) ஈழத்து நாட்டார் பாடல்கள் - தொகுப்பு: ஈழவாணி

வரவேற்புரை:

மனுஷ்ய புத்திரன்

சிறப்புரைகள்:

1) மு.ராமசாமி

2) எஸ்.ராமகிருஷ்ணன்

3) சுகுமாரன்

4) . முருகேச பாண்டியன்

5) எஸ். அர்ஷியா

முதல் பிரதி பெறுவோர்:

1) சேது சொக்கலிங்கம்

2) சமய வேல்

3) தேவேந்திர பூபதி

4) .முத்து கிருஷ்ணன்

வெளியிடப்படும் நான்கு நூல்கள் மொத்த விலை: ரூ.610

வெளியீட்டரங்கில்: ரூ. 475

அனைவரும் வருக.


Post Comment

வெள்ளி, ஆகஸ்ட் 26, 2011

சேலை வாங்கலியோ சேலை


பாவையர் மலரில் இந்த வாரம் வெளிவந்த "சேலை வாங்கலியோ சேலை" கதை பட உரை வடிவம்கருத்துகளை அனுப்பவும் நன்றி.
Post Comment

திங்கள், ஆகஸ்ட் 22, 2011

"ரகசியங்களை யாரிடமும் சொல்ல வேண்டாம்"

வாமுகோமுவின் "ரகசியங்களை யாரிடமும் சொல்ல வேண்டாம்" ஆனதந்த விகடன் கதையின் படக்காட்சி உரை வடிவம். கருத்துக்களை தெரிவிக்கலாம்.விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன.Post Comment

செவ்வாய், ஆகஸ்ட் 02, 2011

பிலோமி டீச்சர்ஆனந்தவிகடனில் வெளிவந்த "இரகசியங்களை யாரிடமும் சொல்லவேண்டாம்" கதையில் காதல் எந்த காரணங்களுக்காக வேண்டுமானாலும் நிராகரிக்கப்படும் என்று கூறி சாதாரணமான காரணங்களான வீட்டு வாடகை,சூடான போண்டா,வடை,சில நேரங்களில் இரவல் இரசம் என்று ஒரு பெண்ணின் மீதான‌ காதல் அமுங்கிவிடுகிறது.ஆனால் அது எந்த வகையிலும் மறுக்கப்பட காரணங்கள் இல்லாத போது கட்டற்றுப்போனதாய் மாறி காமத்தில் முடிவதாய் கதை செல்கிறது.

ஆனால் உயிர்மை இந்த மாத இதழில் பிலோமி டீச்சர் கதை சற்று மாறுபட்டு காதலை மிருகத்தனமான காமமாய் மாற்றும் மனிதனிடம் வதைபட்டு,விவாகரத்துப் பெற்று மகளுடன் வாழும் ஒரு பெண், வாழ்க்கையின் பல பரிமாண‌ங்களில் மாறுபட்டு தாம்பத்ய நினைவு வரும்போது அதைத் தாண்டி மிருகவதைதான் ஞாபகத்துக்கு வந்த நிலை,இது வீட்டுக்கு வந்துபோகும் பக்கத்து வீட்டு இளைஞனிடம் மாறுபட்டு போகிறது.பெண் நினைத்தால் எதையும் செய்யமுடியும் என்பதை இந்த கதை காமம் தாண்டிய காதலாய் மாற்றும் போது எங்கிருந்தோ வந்த தொலைபேசி வில்லனாய் மாறும்போது முடிந்து போகிறது

காதலா,காமமா? விடை சொல்கிறது உயிர்மை இந்தமாத இதழ் பிலோமி டீச்சர்.

..

Post Comment