செவ்வாய், ஆகஸ்ட் 02, 2011

பிலோமி டீச்சர்ஆனந்தவிகடனில் வெளிவந்த "இரகசியங்களை யாரிடமும் சொல்லவேண்டாம்" கதையில் காதல் எந்த காரணங்களுக்காக வேண்டுமானாலும் நிராகரிக்கப்படும் என்று கூறி சாதாரணமான காரணங்களான வீட்டு வாடகை,சூடான போண்டா,வடை,சில நேரங்களில் இரவல் இரசம் என்று ஒரு பெண்ணின் மீதான‌ காதல் அமுங்கிவிடுகிறது.ஆனால் அது எந்த வகையிலும் மறுக்கப்பட காரணங்கள் இல்லாத போது கட்டற்றுப்போனதாய் மாறி காமத்தில் முடிவதாய் கதை செல்கிறது.

ஆனால் உயிர்மை இந்த மாத இதழில் பிலோமி டீச்சர் கதை சற்று மாறுபட்டு காதலை மிருகத்தனமான காமமாய் மாற்றும் மனிதனிடம் வதைபட்டு,விவாகரத்துப் பெற்று மகளுடன் வாழும் ஒரு பெண், வாழ்க்கையின் பல பரிமாண‌ங்களில் மாறுபட்டு தாம்பத்ய நினைவு வரும்போது அதைத் தாண்டி மிருகவதைதான் ஞாபகத்துக்கு வந்த நிலை,இது வீட்டுக்கு வந்துபோகும் பக்கத்து வீட்டு இளைஞனிடம் மாறுபட்டு போகிறது.பெண் நினைத்தால் எதையும் செய்யமுடியும் என்பதை இந்த கதை காமம் தாண்டிய காதலாய் மாற்றும் போது எங்கிருந்தோ வந்த தொலைபேசி வில்லனாய் மாறும்போது முடிந்து போகிறது

காதலா,காமமா? விடை சொல்கிறது உயிர்மை இந்தமாத இதழ் பிலோமி டீச்சர்.

..

Post Comment

4 கருத்துகள்:

Saminathan சொன்னது…

அருமையான கதை...

sangeetha senkodan சொன்னது…

kathai ilakkiyaththai vear oru thalaththirkku ittselkirirkal.
irandu kathaikalumey nadai azhakutan pramathamai vaaalththukalll...

Rajendiran RVR சொன்னது…

bilomi..yen pinnokkina sila ninaivugalin nagal..kaathalukum kaamathirkum eidaiye sila nun unarvugalai meendum meendum thottu paarthu thuyaram kasintha kathai.. nandri V.K. Salem,Gobi yendru maan manathudan irunthathal, ulloora eiram unara mudinthathu.. - rvr.rajendiran@gmail.com pl visit to rvrrajen.blogspot.com

Rajendiran RVR சொன்னது…

pl read as "man manam" -rvr.rajen