வெள்ளி, ஜூன் 28, 2013

காதல் மாதிரி இரண்டு கவிதைகள்

வள் எனக்கு எழுதிய கடுதாசி அனைத்திலுமே
நீ விளங்கமாட்டாய்! என்றே எழுதி இருப்பாள்.
நானும் அவளுக்கு கடுதாசிகள் எழுதி நீட்டியுள்ளேன்
உங்களைப் போலவே காதலிப்பதாயும்..
நீ பேசலை என்றால் இருதயம் தாறுமாறாய்  துடிப்பதாயும்!
இப்போது ரேசன் கடையில் வரிசையில் நின்றபடி
யோசித்தபடி இருக்கிறேன்! வீடு போனால் இம்புட்டு
நேரமா? யாரை பார்த்து பல்லை காட்டிட்டு இருந்தே?
யாரை பார்த்ததும் இருதயம் தாறுமாறா குதிச்சுச்சு?
கேட்பாளே! என் பழைய காதலியும் இன்றைய
மனைவியுமான சொர்ணா! என்ன மாதிரியான

வாழ்க்கை வாழ்கிறோம் நாம்?


ூச்சி றைக்க உன்னருகில் வந்து நின்றேன்..
என்னடா அப்படி அவசரம்? காலேஜ் பஸ் வர
இன்னும் பத்து நிமிசம் இருக்கு, என்றாய்!
கையிலிருந்த யாமம் நாவலை நீட்டினேன்.
போடா! காதலிக்கு எதை தரணும்னு கூட
தெரியாத பேக்குடா நீ! போ போயி ரமணிசந்திரன்
வாங்கியாந்து குடு! என்கிறாய்.
தலை குனிந்து செல்கிறேன் பழைய புத்தககடை பார்த்து!
என்ன மாதிரி வாழ்கிறோம்?

Post Comment

புதன், ஜூன் 26, 2013

முகநூல் டிட்பிட்ஸ்

                                           
                                         வெட்கமாக இருக்கிறது உன்
கவிதைகளைப் படிப்பதற்கு என்று
வெட்கமாக நீட்டுகிறாய்! – ஏதோ
வெட்கமாவது பட்டாயே! என்றேன்.
பின்ன மண்ணுன்னு நினைச்சியா? என்றாள்                   மது நிரப்பப்பட்ட குவளைகளைக் கண்டால் காதலெனக்கு!
யூனிபார்மில் பள்ளி சிறார்கள் பேருந்துக்காய் காத்து
நின்றிருப்பதை கண்டால் காதலெனக்கு!
யார் வீட்டிலும் புசுபுசுவென பூனைகளைக் கண்டால்
காதலெனக்கு! கொளுத்தும் வெய்யிலில்
வேப்பை நிழலில் கிடப்பதில் கூட காதலெனக்கு!
ஜோடிப் பாடல்களை இளையராசா இசையில்
கேட்பதில் காத்லெனக்கு! – இருந்தும் அலைபேசியில்
“உன்னை போடான்னு நாஞ் சொல்லாம யாரை
சொல்லுவேன்” என்று கீதா பேசுகையில் எல்லாத்தையும்
விட காதலோ காதலெனக்கு!            அன்பு நண்பனுக்கு...
முதலைக் குட்டிகளை சாக்குப்பை ஒன்றில்
போட்டு கூவிக்கூவி ஒருவன்
விற்றுக்கொண்டு நம் தெருவில்
வந்த நாள் அன்றுதான் நிரந்தரமாய்
நீ இந்த ஊரைவிட்டு சென்றிருந்தாய்!
இப்படியிருக்க உன் நல விசாரிப்பு
கடிதம் நேற்று மதியமாகத்தான் கிடைத்தது.
உன் பிரிவின் துயரில் ஊரார்
நாளொரு மேனியும் பொழுதொரு
வண்ணமுமாக அல்லலுறுகிறார்கள்.
நகரத்திலிருந்து வெள்ளை அரைக்குட்டை
பாவடையணிந்த தாதி ஒருத்தி
தினமும் ஊருக்குள் யமாஹாவில்
வந்து மாத்திரை வில்லைகளும், டானிக் பாட்டில்களும்
தந்து போகிறாள். – உனது பிரிவால்
கொள்ளை நோய் பீடித்து மிகவும்
அல்லலுறுகிறவன் பிலால் தான்.
நாட்களை எண்ணிக்கொண்டு
நரம்புக் கட்டிலில் கிடந்தழுகிறான்.
ஷகிலா உன்னைப்பற்றி என்னிடம்
எதுவும் விசாரிக்கவில்லை.
அவள் இப்போது ஷாகிப்போடு
காதலைப் புதுப்பித்துக் கொண்டாள்….
என்ற வதந்தி பரவியிருக்கிறது.
உன் அம்மா ஒருநாள்
வானொலியில் பெற்றகடன்
தீர்ந்தது பற்றி அழகுற பேசினார்..
கூடவே எதிர்நீச்சலில் புதிய பாடல்
ஒன்றை ஒலிபரப்பச் சொன்னார்.
அத நாங்கள் கூடி நின்று கேட்டு
மகிழ்ச்சிக்கடலில் திழைத்தோம்.
உன் வீட்டினுள் நீ சென்ற பிறகு
எலிகள் குடிவந்துவிட்டன என்று
உன் தங்கை மும்தாஜ்
மளிகை ஜாமான் வாங்க நான்
போகையில் வழிமறித்து கூறினாள்.
அதனால் அவள் இப்போது
Stayfree உபயோகிப்பதில்லை என்றாள்.
உயிர்மை இந்தமாதம்
தாமதமாக வந்து சேர்ந்தது…அது
தோழரை தற்கொலைக்கு
தூண்டுவதாக வேறு சொன்னான்.
உனது சினேகிதர்கள் போர்ஹே,
மார்குவஸ், அம்ருதா பிரீதம், ஜெனே
எல்லாருமே என் புத்தக அடுக்கில் தூங்குகிறார்கள்.
முதலைக்குட்டிகளை சாக்குப்பையிலிட்டு
விற்பனை செய்ய யாரேனும் வரும் நாளில் நீ வருவாய் என்று
உன் தந்தை காத்திருக்கிறார்.
துட்டு அனுப்ப இயலுமா? என்று
எனப் போன்ற ஒட்டுண்ணியிடம்
வெட்கம் இல்லாமல் கேட்டிருக்கிறாய்.
நீ என்னிடம் எதிர்பார்ப்பது அதிகம்
உனக்கே தெரியும் எனது
காதலியின் திருமண பரிசாக
ஏற்கனவே ஒரு விரையை
பரிசளித்தவன் நான் என்று!
என்னிடம் இன்னும் ஒன்றே ஒன்றுதான்
பாக்கியிருக்கிறது…இருந்தும்
உனக்கு உதவ ஆசைதான்.
தூக்கிட்டு செத்துப்போ! அல்லது
ரயிலின் குறுக்கே விழு!             வனென்று நினைத்தாய்.. எதைக்கண்டு சிரித்தாய்?
விதை ஒன்று முளைக்கையில் வெளிப்படும் முழுரூபம்!!!!!
நெருப்புக்கு பிறந்தான் நித்தம் நித்தம் வளர்ந்தான்
வேளைவந்து சேரும்போது வெளிப்படும் சுயரூபம்!
யாரென்று புரிகிறதா? இவன் தீயென்று தெரிகிறதா?
தடைகளை வென்று சரித்திரம் படைப்பவன்
ஞாவகம் வருகிறதா?????

   
வாங்க சார்! இந்தியா டுடேல இருந்தா வர்றீங்க? நா வாத்தியாரு சார்! எம் பொண்டாட்டி தட்டுவாணி முண்டெ எங்க தலைம ஆசிரியர் கூட போறா சார். இத அன்னிக்கே திருவள்ளுவர் எழுதீட்டு போயிட்டார் சார். கற்க கசடறன்னு. நானும் கவிதெ எழுதுவேன் சார். மயிலப் பார்த்து மயங்கி நின்ன மானே! குயிலப் பாத்து குலுங்கி நின்ன தேனே! உன்னப் பாத்து செத்தேன் நானே கண்ணே!
 சுந்தரம் சார் தான் என்னை இங்க கொண்டாந்து உட்டாருங்க இந்தியா டுடே! இந்த ஸ்கூல் எனக்கு பிடிக்கல! பழைய ஸ்கூல்ல பிலோமின்னு ஒரு டீச்சர் இருந்தா சார். பாத்ரூம்ல நின்னுட்டு சிகரெட் பிடிப்பா சார் அவ! அவதான் மோகினியா மாறி ஒடம்புல பூந்துட்டா சார். மந்திரவாதி கிட்ட போனா ஒரே நாள்ல முடுக்கி உட்டுருவான். எம் பொண்டாட்டி தப்பு பண்றாள்னு மோகினி தான் சார் சொல்லுச்சு. பேப்பர்ல பாருங்க.. பக்கம் பக்கமா கள்ள உறவுகள் பத்தி போடறானே. அது எல்லாம் எப்பிடி வெளிய தெரியுதுங்கறீங்க? மோகினிகளால தான். ஆனா ஒன்னு சார் அப்பாவி புருசங் கிடச்சா பொண்டாட்டி கூரை மேல ஏறி கூப்புடுவா சார்! என் பேட்டி வர்ற ஸ்யூல வந்துடுமா

Post Comment

செவ்வாய், ஜூன் 25, 2013

கள்ளி - ஒரு பார்வை


வா.மு. கோமு எழுதிய “கள்ளி
by RV மேல் ஓகஸ்ட் 19, 2012
இந்த நாவலின் வடிவம் கொஞ்சம் வித்தியாசமானது. பின் நவீனத்துவ நாவலில் காலம் முன்பின்னாக இருந்தாலும், கதை என்று ஒன்று தொடர்ச்சியாக இருக்கும். இதையோ பத்து தொடர்புள்ள சிறுகதைகள் என்றுதான் சொல்ல வேண்டும். கோமு கள்ளி # 1, 2, 3… என்று இந்த சிறுகதைகளை வரிசைப்படுத்துகிறார். அவை காலவரிசைப்படித்தான் நடக்கின்றன. ஒரு கள்ளியில் வரும் பாத்திரங்கள் பிறவற்றிலும் வருகின்றன. ஒரே கிராமத்தில்தான் நடக்கின்றன். ஆனால் இவற்றை எல்லாம் இணைக்கும் கண்ணி என்று ஒன்று இல்லை.
ஆனாலும் புத்தகம் படு சுவாரசியமாக இருக்கிறது. ஒவ்வொரு கள்ளியும் பாத்திரங்களின் சித்தரிப்புதான். அறுப்பு வேலை செய்பவர்களை கூலியில் ஏமாற்றப் பார்க்கும் முத்தாக் கவுண்டர், அவரிடம் பண்ணையம் பார்க்கும் மல்லி, ஊர் மேயும் மைனர்கள் சுரேந்திரன் மற்றும் பழனிச்சாமி, சுரேந்திரனின் ஓய்வு பெற்ற வாத்தியார் அப்பா சரக்கு அடித்துவிட்டு பண்ணும் அழும்பு, ஊரில் முடிச்சு போட்டுவிடும் வண்ணான் ராமசாமி, முத்தாக் கவுண்டரின் பெண்ணோடு ஓடிவிடும் மல்லியின் மகன் சண்முகம், படுக்கத் தயாராக இருக்கும் சிகாமணி, சுந்தரி, விஜயா என்று பல பெண்கள் என்று பாத்திரங்களின் சித்தரிப்புதான். அது பிரமாதமாக இருக்கிறது. தண்ணி அடிப்பதும், பெண்ணுக்கும் ஆணுக்கும் அலைவதும் நிறைய. பச்சை பச்சையாக பேசுகிறார்கள், திட்டிக் கொள்கிறார்கள். ஆனால் அது வலிந்து புகுத்தப்பட்டதாகத் தெரியவில்லை.
கதையின் களம் ஒரு வாய்ப்பாடி என்ற ஒரு சின்ன கிராமம். திருப்பூர், சென்னிமலை அருகில். “கீழ்சாதியினரான மாதாரிகள் திருப்பூரில் வேலைக்குப் போக ஆரம்பித்திருக்கிறார்கள். நாவிதர்கள் வீட்டுக்கு வராமல் சலூன் வைக்கிறார்கள். கவுண்டனை விட்டால் சாப்பாட்டுக்கு வழியில்லை என்ற நிலை இல்லை. மாறாக கவுண்டர்களுக்கு வேலைக்கு ஆள் தேடுவதில் கொஞ்சம் சிரமம். கவுண்டர்களின் பாலியல் மீறல்கள் நிறைய என்றாலும் மாதாரிகளுக்கும் கவுண்டர் பெண்களோடு உறவு இல்லாமல் இல்லை. பழைய ஜாதி சார்ந்த பொருளாதாரம் உடைய ஆரம்பித்திருப்பது நாவலின் பின்புலமாக இருக்கிறது.
கதையின் பலம் பலவீனம் இரண்டுமே அது சித்தரிப்போடு நின்றுவிடுகிறது என்பதுதான். அருமையான சித்தரிப்பு என்றாலும் நாலைந்து கள்ளிக்குப் பிறகு கொஞ்சம் அலுப்புத் தட்டுகிறது. கூறியது கூறல்!
கோமு ஆர். சண்முகசுந்தரம், சி.ஆர். ரவீந்திரன், பெருமாள் முருகன்பரம்பரைக்காரர். எனக்கு இவர்களில் பெ. முருகன்தான் டாப் என்றாலும் கோமுவுக்கும் நிச்சயமாக இடம் உண்டு.


Post Comment