வெள்ளி, ஜூன் 28, 2013

காதல் மாதிரி இரண்டு கவிதைகள்

வள் எனக்கு எழுதிய கடுதாசி அனைத்திலுமே
நீ விளங்கமாட்டாய்! என்றே எழுதி இருப்பாள்.
நானும் அவளுக்கு கடுதாசிகள் எழுதி நீட்டியுள்ளேன்
உங்களைப் போலவே காதலிப்பதாயும்..
நீ பேசலை என்றால் இருதயம் தாறுமாறாய்  துடிப்பதாயும்!
இப்போது ரேசன் கடையில் வரிசையில் நின்றபடி
யோசித்தபடி இருக்கிறேன்! வீடு போனால் இம்புட்டு
நேரமா? யாரை பார்த்து பல்லை காட்டிட்டு இருந்தே?
யாரை பார்த்ததும் இருதயம் தாறுமாறா குதிச்சுச்சு?
கேட்பாளே! என் பழைய காதலியும் இன்றைய
மனைவியுமான சொர்ணா! என்ன மாதிரியான

வாழ்க்கை வாழ்கிறோம் நாம்?


ூச்சி றைக்க உன்னருகில் வந்து நின்றேன்..
என்னடா அப்படி அவசரம்? காலேஜ் பஸ் வர
இன்னும் பத்து நிமிசம் இருக்கு, என்றாய்!
கையிலிருந்த யாமம் நாவலை நீட்டினேன்.
போடா! காதலிக்கு எதை தரணும்னு கூட
தெரியாத பேக்குடா நீ! போ போயி ரமணிசந்திரன்
வாங்கியாந்து குடு! என்கிறாய்.
தலை குனிந்து செல்கிறேன் பழைய புத்தககடை பார்த்து!
என்ன மாதிரி வாழ்கிறோம்?

Post Comment

கருத்துகள் இல்லை: