திங்கள், ஆகஸ்ட் 26, 2013

முகநூல் ஆகஸ்டு கடைசி பதிவுகள்


.மனிதன் உணவு இல்லாமல் உயிர் வாழ முடியாது. அதைப் போல, உடலுறவு இல்லாமல் மனிதன் தொடர்ந்து வாழ முடியாது. அத்துடன் உடலும் உள்ளமும் வளமாய் இருந்தால் உயிர் உடலில் நீண்ட நாள் இருக்கும். உடலையும், மனத்தையும், வளமாய் வைத்திருக்க உடலுறவு உதவுகிறது என்பதை மருத்துவ விஞ்ஞானம் நிரூபிக்கிறது.

எந்த மதமும் எந்தத் தத்துவமும் குடும்ப வாழ்க்கையை உடலுறவைத் தவறு என்று சொல்லவில்லை. சாதிக்குள்ளேயே திருமணம் செய்யாவிட்டால் தவறு ; பாலுறவு பற்றி எழுதுவது, பேசுவது, ஆராய்வது தவறு என்னும் பத்தாம்பசலிக் கொள்கை வேரூன்றியுள்ளது. இளைஞர்கள் தாங்களே பொருத்தமான இணையைத் தேடி நிர்ணயிக்க இயலவில்லை. மாறாக, வாழ்க்கைத் துணையைச் சாதியும் மதமும், உற்றாரும் உறவினரும், சொத்தும் வரதட்சணையுந்தாம் நிர்ணயிக்கின்றன.

பொருத்தமான வாழ்க்கைத் துணை யைத் தாங்களே தேடி நிர்ணயித்துக் கொள்ள முடியாத பரிதாபகரமான சூழ்நிலை உள்ளது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்ககு முன்பாக எழுதப்பட்ட தமிழ், சமஸ்கிருத நூல்களில் பாலுறவுபற்றிக் குறிப்பிட்டிருப்பது போல இன்று யாரும் எழுதத் துணியாததற்குக் காரணம் பாலியல் எழுத்தாளர்கள் என்று முத்திரை குத்தப்பட்டு விடுவோமோ என்று பயந்தான் காரணம். மக்கள் இன்னும் மனம் முதிர்ச்சி அடையவில்லை.

மதம், இதிகாசம், இலக்கியம், சிற்பம், சித்திரம் அனைத்திலும் பாலுறவு பற்றி எழுதப்பட்டுள் ளது. அது தவறானது என்றால் அவ்வாறு எழுதுவார்களா? மனித இனம் ஆதியிலிருந்து இன்றுவரை பாலுறவின் பற்று கொண்டிருக் கிறது. காரணம், அதில் கிடைக்கும் இன்பத் திற்கு ஈடான வேறு இன்பம் இன்று வரை கண்டுபிடிக்கப்படவில்லை.

எல்லாப் பிரச்சினைகளையும், நோய்களையும் ஒரே ஒரு மருந்தால் தீர்க்க முடியுமா முடியும் ; அது குடும்ப வாழ்க்கையில் உள்ள உடலுறவு ஒன்றால்தான், தலைவலி, முதுகுவலி, இடுப்புவலி, மனநோய் எல்லா வற்றையும் தீர்க்க முடியும். உடலுறவுதான் உடலிலுள்ள தடுப்புச் சக்தியான இம்யூன் (Imune) என்னும் சக்தியைத் துரிதப்படுத்துகிறது. இதனால் அனைத்து உடல் வலிகளும், தசை வலிகளும் நரம்பு வலிகளும், மனநோயும் தீருகின்றன.

நன்றி சொல்லலாம் நிந்த நிதுக்கு!!!!

()()()()()()()()()()()

இதழ் எண் 48ல் தலையங்கத்தில் ஒரு நெமே...சாம்பிள்!!!

இறக்கை இதழ்

எல்லோருக்கும் நமஸ்காரம்!

பாத்தீங்கனாக்க தமிழ்ல வர்ற அத்தனை குற்றிதழ்கள் மேலயும் எனக்கு விமர்சனமிருக்கு. நானு நடாத்தீட்டு இருகிறதால எம்படதுதான் டாப்புன்னு சொல்லமாட்டன். இதுல கொள்கே, கோட்பாடு எல்லாமே ஒரு பத்திரிக்கைக்கி அவசியங்கறது நெசந்தான். வாஸ்தவந்தான். நாயம்தான். ஆனா அப்படியாப்பட்ட காலத்தை தாண்டி வந்துட்டதாத்தான உள்ளார எனக்கு நெனப்பு. எம்பட நெனப்பு மேல மண்ணள்ளிப் போட்டுறாதீங்க. அடுத்தவீக மேல மண்ண அள்ளிப் போடற உரிமை ஆருக்குமே இல்லீன்னு செவ்விந்திய புரட்சியாளர் ரெமிலோஸ் டிகாரியோ சொல்லியிருக்காரு. அதை மறந்துறக் கூடாது. டாட்டாயிசம் படிச்சவீகளுக்கு இதை நானு சொல்ல, விளக்க வேண்டீதே இல்ல. இறக்கை இப்படியான ஒரு ANTIMAGAZINE அதனாலதான்எங்கு வேண்டுமானாளும் பறக்கும்ங்கற கேப்சன் சேர்த்தியிருக்கோம்.

பல்கலைக்கழகம், கல்லூரிகள்ல இருக்குற பேராசிரியர்கள், விரிவுரையாளர்களுக்கு இறக்கை ரீச் ஆகறது பெரிய விசயமில்ல.ஹையர் செகண்டரி ஸ்கூல் டீச்சர்களுக்கு இலக்கியம்னா கம்பராமாயணம், சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி, ங்கொக்கா மக்கா! ஆனா இதழைப் பாராட்டி அங்க இருந்து கடுதாசிக வருதுன்னா.. பெரியோர்களே தாய்மார்களே வாக்காளப் பெருங்குடி மக்களே இதப்பத்தி நீங்க தான் யோசனை பண்ணனும்!

பெட்டிச்சேதி ஒன்னு 

சந்தாதாரர்கள் கவனத்திற்கு. இதழ் ரெண்டு மாசத்துக்கு ஒருக்கா 1ம் தேதியில இருந்து 15ம் தேதிக்குள்ளார உங்க ஊடு வந்து சேர்ந்துடும். இதழ் வாய்ப்பாடிக்காரரு கையெழுத்துல ரெடியாவி ஏர்வாடிக்காரருக்கு மேட்டூர் வழியா போயி சேர்ந்து அவுரு அங்க இருந்து டெல்லிக்கி அனுப்பி டெல்லில பிரிண்டாயி நேரா சேலத்துக்கு வந்து.. சேலத்துக்கு ஏர்வாடிக்காரரு ஓடி பொட்டி எடுத்தாந்து ரிலீஸ் பண்றோம். தாமசமானா பொறுத்துக்கங்க!

படைப்பாளர்கள் கவனத்துக்கு! படைப்பை தபால் பொட்டீல இறக்கை முகவரிக்கு போட்டதுல இருந்து கெடச்சிருச்சா? போட்டுருவீங்களா? எப்ப போடுவீங்கண்ணு கேட்டுட்டே இருங்க. நீங்க எப்பக் கூப்பிட்டாலும் அன்போட பதில் கெடைக்கும். அதனால தான அன்போடே என்றும் ராசமைந்தன்னு போடறேன். இந்த விசயத்த எனக்கு பண்டுன ஒடனே துணை வாத்தியாரு கிட்டயும் கேட்டுக்கலாம். அவுரு பாட்டாளி, மார்க்சீய வழியில வந்து குறுக்கால முட்டி பாலியல் வழியில வந்தவரு! அவரும் அன்போட பதிலு பேசுவாரு! பாத்தீங்கன்னாக்க மூனு வரி கவிதைய எழுதி அனுப்பி உட்டுட்டு, மிச்சத்த பொறவு எழுதி தர்றீங்கன்னு சொன்னாக்கூட அந்த மூனு வரியப் போட்டு தொடரும் போட்டு மிச்சத்துக்காக காத்திருப்போம்.

()()()()()()()()()நகரின் இரவொன்றில்..

மார்ச்சுவரிக்குள் புதிய பிணம்
பயணப்பட்டுக் கொண்டிருந்தது
கோவில் குருக்கள் கல்லைக் 
கட்டிக் கொண்டு கிணற்றில் விழுந்தார்..
சுயமைதுனம் செய்து கொண்டிருந்தவள்
இறுதியாய் சப்தமிட்டாள் ஹா! வென!
எவனோ எவளுக்கோ கவிதை எழுதி
தும்மிக் கொண்டிருந்தான்
மதுபானக் கடை வாயிலில் கொட்டை
தெரிய ஒருவன் கிடந்தான்
இரவு ரயிலில் ஒரு அண்ணன் தங்கையோடு
அதே அம்மம்மா பாடல் பாடி
பிச்சை கேட்டபடி நகர்ந்தான்
நடு வீதியில் மாருதி வேன் அசைந்தாடி
குலுங்கிக் கொண்டிருந்தது
புதிய ரிலீஸ் போஸ்டர் ஒட்டியவன்
தமன்னாவுக்கு முத்தம் கொடுத்தான்..
நாய் ஒன்று ஆய் போனது பங்ளா தெருவில்..
பிச்சைக்காரன் கையடித்துப் படுத்திருந்தான்..
செகண்ட்ஷோ முடிந்து வந்த கூட்டத்தில்
நகையை காணோமென ஒருத்தி அழுதாள்..
ஒருத்தி சேலையை காணோமென அழுதாள்..
ஒருத்தி தன் கொங்கைகளை
காணோமென அழுதாள்
ஒருத்தி சும்மா அழுதாள்..
போப்பா நீயும் உன் கவிதையும்!!!

()()()()()()()()()

மீண்டும் ஒரு..

பேருந்து ஏறியதுமே அந்த சிறு பெண்ணின்
முகத்தைத் தான் முதலில் பார்த்தேன்.
அச்சிறு பெண் என்னிடம் எதையோ கடவுளிடம்
வரம் கேட்பது போல் கேட்டபடி இருந்தாள்.
அவள் என்னவிதமான சிக்கலில் இருக்கிறாள் 
என்று ஞானக்கண்ணால் உணரவும் முடியவில்லை!
பேருந்து கிளம்பும் சமயம் திடகாத்திரமான ஒருவன்
அச் சிறுபெண் அருகில் அமர்ந்து அவளுக்கு
செவ்வாழை ஒன்றையும் வாட்டர்கேன் ஒன்றையும்
பரிசளித்து புன்னகைத்தான். –அச்சிறு பெண்
அவைகளை வாங்கியதும் வெளியில் வீசினாள்.
அவன் புன்னகைத்து அவள் தோளில் கை போட்டு
ஜன்னலில் வேடிக்கை பார்க்கத் துவங்கினான்.
கோழிக்குஞ்சு போல் அவள் சிக்கியிருந்தாள்!
நடத்துனரிடம் சீட்டுகள் பெற்றுக் கொண்டதும்
அவன் பாடலை ரசித்தபடி கண் மூடினான்.
அச்சிறு பெண் அவன் முகம் பார்த்துவிட்டு
என்னிடம் மீண்டும் சைகையில் வேண்டினாள்!
பொறு! என்றவன் தக்க தருணத்தில் பேருந்தை
புளியாமரம் நோக்கி தள்ளிப் போய் இடித்தேன்!
அந்தச் சிறு பெண் தலையில் குருதி பீய்ச்ச
எனக்கு நன்றி சொல்லி கண் மூடினாள்.
நான் வேறு பேருந்து வருமா என காத்திருந்தேன்.

()()()()()()()()()()()

தலைப்பிடப்படாத நாவலில் இருந்து....

வாழைப்பழமோ, ஆரஞ்சிப்பழமோ எம்பட தட்டத்துல உங்கறதுக்கு போட்டுட்டுப் போங்களேண்டா! வாலை சும்மாநாச்சிக்கும் ஆட்டீட்டே சாமி கும்பிட படியேறிப் போறீங்களேடா! முருகன் முந்தாநேத்துத் தானடா உங்க அழிச்சாட்டியத்த தாங்காம பயந்துட்டு ஹண்ட்ரட் சிசி வண்டியில இதுவழியாத்தாண்டா போனாரு! வயித்தப் பசிக்குதுடா சாமிகளா! வாலை மட்டும் ஆட்டிட்டே போறீங்களே! அடுக்குமா! மனுசங்க ஒரே நாள்ல எல்லாருமே நாய்களா மாறிட்டீங்களே எப்படிடா?

என்னடா பாவம் செஞ்சீங்க? ஆத்தா அப்பன அனாதி இல்லத்துல உட்டுட்டீங்ளா? அரைகுறையாத் தின்னு பிளாஸ்டிக் பைகள ஊருக்குள்ளாரா போட்டுட்டு போனீங்களா? ஓடற தண்ணியில சாயத்தண்ணிய கலந்து உட்டுட்டீங்களா? அன்னாடங்காச்சிகளுக்கு ரேசன்ல அரைகுறையா சாமான் போட்டீங்களா? கழிசடை அரசியல்வாதி பேச்சுக்கு கையக்கிய்யத் தட்டினீங்களா? பாட்டன் சொத்தை வித்துத் தின்னுட்டீங்களா? வயல்களை ப்ளாட் போட்டீங்களா? கால்மேல காலுப்போட்டு நடிகை பேசுறதை உத்து உத்துப் பாத்தீங்களா? ஸ்கூலுக்குப் போற பாப்பாவ காட்டுக்குள்ள தூக்கிட்டு போனீங்களா? கூட்ட நெரிசல்ல சூத்துல இடிச்சீங்களா? என்னடா பாவம் பண்டுனீங்க? கூத்தாடிய அரசியலுக்கு கூப்புட்டீங்களா? காட்டுறவளுக்கு கோயலு கட்டுனீங்களா?

()()()()()()()()

குட்டிகள்

காமம் ஒரு சொட்டும் கலக்காத
இந்தக் காதலில்
என்ன இருந்து விடப் போகிறது?
வெறும் காதலைத் தவிர!!!
()()()()

நீ ஏன் உன் யோனியை இப்படி
பத்திரப்படுத்தி பாதுகாக்கிறாய்?
என்ற என் கேள்விக்கு அவள்
புன்னகையை பதிலாகத் தந்தாள்!!
()()()()()

விந்துத் துளிகளை தன்னுள்
வாங்கிக் கொண்ட யோனி ஒன்று
பூனையைப் போல் நழுவிக் கொண்டிருந்தது
அக்கம் பக்கம் பார்த்தபடி!!
()()()()()

எனது மதுக்குவளையில்
மிதக்கிறது ஒரு யோனி! – அது
வித்யா டீச்சருடையதாகவும் இருக்கலாம்!!
()()()()()

உன் கவிதைகளை வாசிக்கையில்
கள்ளக் காதலிகளை புணரும் சுகம்
கிட்டுகிறது என்றான் அவன்.
உன் விமரிசனத்தை மெச்சுகிறேன்!
()()()()()

நீயும் நானும் பகிர்ந்து கொண்டது
காதலை என்கிறாய் நீ!
படுக்கையை என்கிறேன் நான்!
()()()()()

இந்த எழுத்தில் குப்பை கொட்ட
முடியாத காலத்தில் நீ
துப்பிச் சென்ற எச்சிலில்
தூக்கிட்டுச் சாவேன் நான்!
நான் இறந்ததும் சீக்கிரமாய்
புதைத்து விடுங்கள் அல்லது
எரித்து விடுங்கள்! – ஏனெனில்
இந்த உலகை வேடிக்கை பார்த்தபடி
பிச்சைக்காரத்தனமாய் வாழ்வது
பழகிவிட்டது!!!

Post Comment