வியாழன், ஆகஸ்ட் 01, 2013

முகநூல் குறிப்புகள் ஆகஸ்டு


எங்கேப்பா இருக்கு உன் இலக்கியம்என்னிடம் கேட்கப்படும் கேள்விக்கு நான் சொல்லும் பதில் எப்போதும்அதோ அவர்கள் நிரப்பி வைத்திருக்கும் மதுக் கோப்பையில் இருக்கிறது பாருங்கள் உலக இலக்கியமேஎன்பேன்!அடுத்து ஒரு வருடமாக படிப்பானா இவன்என்று காத்திருந்த புத்தகத்தை கையில் எடுத்து விட்டேன்சும்மாவே மாதக்கணக்கில் புத்தகங்களை தொடாமல் இருப்பேன் என்றாலும் தொட்டேன் என்றால் பேயைப் போல வாசிக்கத்துவங்கி விடுவேன்என் படிப்பு ஒருமாத காலம் வரை நீட்டிக்கும்படிக்க காத்திருந்த புத்தகங்கள் வரிசையாக என் டேபிளுக்கு வந்து கொண்டே இருக்கும்இதில் வேடிக்கை என்னவென்றால் உலக இலக்கியங்களின் பக்கத்தில் வெளியில் சென்ற போது அவ்வப்போது வாங்கின குமுதம்ஆனந்த விகடன்ராணிமுத்துதவிர வீடு தேடி வந்த மணல்வீடுகுறிடெக்ஸ்வில்லர் என்று எல்லாவற்றையும் ஒருசேர வாசித்து ஓய்ந்து விடுவேன்மீண்டும் வாசிக்கத் துவங்க எத்தனை மாதங்களாகுமோ!


1997
ல் புக்கர் பரிசு பெற்ற நாவலான இது தமிழில் வெளிவந்து சேரவே ஆயிரத்தெட்டு பரிசுகளை எழுதிய இந்த அம்மாளுக்கு பெற்றுத்தந்து விட்டது போலத்தான் தெரிகிறதுவங்கத்தை சேர்ந்த தந்தைக்கும்கேரள கிறித்துவ தாய்க்கும் மேகாலயாவில் பிறந்து அய்மனம் கிராமத்தில் குழந்தை பருவத்தில் திரிந்தவர் என்று சரிதம் சொல்கிறதுகிடந்து சாட்டாது..

தனிமையின் 100 ஆண்டுகள் முடித்த கையோடு துவங்கி விட்டதால் பெருத்த வித்தியாசமெதுவும் இல்லாமல் உள்ளே போய் விட்டேன்இரட்டையர்கள் பற்றி அதிலும் இருந்தார்கள்இதில் எஸ்தா ஆண் (இது கொஞ்ச தூரம் பெண் என்றே படிக்க வேண்டி வருகிறதுராஹேல் பெண்.18 நிமிட இடைவெளியில் பிறந்த இந்த இரு இரட்டையர்களின் சின்னச் சின்ன விசயங்கள் தான் நாவல் போல போகிறது,, பார்ப்போம்ஏற்கனவே ஆங்கிலத்தில் இந்தம்மா படித்த ஒரு புத்தகத்தின் தாக்கத்தில் அம்மாதிரியான விசயங்களை கேரள பின்னணியில் எழுதிக்குவித்து விட்டதாக சொன்னார்கள் கண்டுபிடிப்பாளர்கள்இருந்து சாட்டாதுநமக்கு மண்டையில் என்ன ஏறுகிறது என்பதே முக்கியம்

நான் என்றுமே விமர்சகன் அல்லஅது என் வேலையுமல்லஆனால் நல்ல வாசிப்பாளன் என்று இன்னும் நம்புகிறேன்யார் மொழிபெயர்ப்பு என்பதை கண் பிரச்சனை உள்ளவர்கள் போட்டோவை கிளிக்கிச் சென்று பெரிதாய் பார்த்து அறிந்து கொள்ளுங்கள்!

=========================

.புத்தகங்களை வாங்கி தங்கள் வீட்டு ஷெல்ப்பில் அடுக்கி வைத்து அழகு பார்க்கும் பலரை எனக்குத் தெரியும். எந்த பதிப்பகமும் ஒரு புதிய புத்தகத்தை வெளியிட்டு விடக்கூடாது. ஆர்டர் போட்டு விடுவார்கள். வந்ததும் ஒரு தடவு தடவிப் பார்த்து விட்டு தங்கள் ஷெல்ப்பில் வரிசையில் அடுக்கி விடுவார்கள். அதை அவர்கள் படிப்பதேயில்லை என்பது சிலருக்கு மட்டுமே தெரியும். இதுகளை எதுக்கு வாங்கி அடுக்கறீங்க? என்கிற மனைவிமார்களின் பேச்சு அவர்கள் காதில் ஏறாது. யாருக்கும் படிக்க ஓசியில் கூட தரவும் மாட்டார்கள். ஒரு புத்தகத்தை காணலை என்றாலும் ஊர் முழுக்கத் தேடுவார்கள். தற்கொலை சிந்தனைகள் எல்லாம் அவர்கள் மனதில் எழும். ச்சே! அந்த முக்கியமான புத்தகம் இல்லாமல் ஒரு ஷெல்ப்பா! வாழ்க்கையா!

  காதலியை அருகில் வைத்துக் கொண்டு தடவி மட்டும் சந்தோசப்பட்டுக் கொள்வதைப்போல! (வேறு எக்ஸாம்பிலே சிக்கலைங்க) இவர்களால் இலக்கியம் வாழ்கிறதா? என்றுதான் நாம் பார்க்கவேண்டும். பதிப்பாளர்கள் வாழலாம்! மொக்கை பீஸ்கள்!!!!!

 மேலும் சில, 1. கண்ணாடி அட்டை போட்டு ஷெல்ப்பில் அடுக்கணும்.

      2. புத்தகம் அழுக்கு ஆகக்கூடாது.. ஆகிவிட்டால் அதற்கொருமுறை சாவுச் சிந்தனை!

      3. வாங்கிய புத்தகத்தில் பக்க குழப்பம் இருந்தாலும் அதே…..ஸ்சப்பா!
ஸ்டாம்பு சேகரிப்பு என்றொரு பழக்கம் ஆதிகாலத்தில் இருந்தது! 70களில் ஒரு குயர் நோட்டில் சேகரித்து ஒட்டி ஆல்பம் போல வைக்கும் பழக்கத்தை தந்தையார் எனக்கு பரம்பரை வியாதி ஒன்றை ஒட்டவைப்பது போல் தள்ளிவிட்டார்அச்சமயத்தில் அவருக்கு தமிழ்நாட்டிலிருந்தும்இலங்கையிலிருந்தும் சிற்றிதழ்கள் வந்து வாசலில் விழுந்து கொண்டேயிருந்தனசிரித்திரன்அலைதேன்மழை போன்ற இலங்கை இதழ்களுக்கு ஒட்டப்பட்டுவரும் ஸ்டாம்புகள் புதுமையாக இருக்கும்என் சேகரிப்புகள் பழைய புராதன வீட்டின் இடுக்கில் ஒளிந்து சிலகாலம் கண்ணாமூச்சி விளையாடின!
என் பையன் இப்போது எதையும் சேகரிக்கும் பழக்கம் இல்லாமல் இருக்கிறான்ஆனால் பலவகையான ஸ்டிக்கர்களை வாங்கி ஒட்டிவரும்படி பள்ளியிலேயே கண்டிசன் போட்டு விடுகிறார்கள்பழவகைகாடுபுலவர்விஞ்ஞானிகள்சுற்றுச்சூழல் என்று கடையில் காசு நீட்டினால் பேக் செய்து நீட்டுகிறார்கள்.. ஏண்டா இப்படிஎன்றால்.. 10 மார்க்குப்பாஎன்கிறான்அவன்=
காலத்தின் நீட்சியை நான் உணரமுடியாத வேலைகளை செய்து சிரிக்கிறான்வளர்ப்பு நாய்க்கான அட்டை பெட்டியில் பல வர்ண பல்புகளையும்ப்பேனையும் மாட்டி நாயிடம் உள்ளார போயி படு சிட்டிஎன்கிறான்புராதன காலத்திலிருந்து காக்கைகள் சூழப் பிறந்த நான் அந்த பேன் சுழழும் பெட்டிக்குள் வாலாட்டிக்கொண்டு படுத்திருக்கிறேன்!
==========================


நமக்கு கிடைத்த ஒரே வரம் கடவுள்!
கடவுளுக்கு கிடைத்த ஒரே வரம் நாம்!
கடவுள் நம்மை தொங்குகிறார்! 
நாமும் கடவுளை தொங்குகிறோம்! 


Post Comment

கருத்துகள் இல்லை: