ஞாயிறு, ஆகஸ்ட் 04, 2013

ஆகஸ்டு குறிப்புகள்


என் முதல் கவிதைகள் ஒரு குயர் ரூல்டு நோட்டில் எழுதி தீர்க்கப்பட்டபின் முதல் காதலிக்கு சமர்ப்பணம் செய்து அவளிடமே நீட்டி விட்டேன். என் இரண்டாம் கட்ட கவிதைகள் ஒரு குயர் பால் பேப்பர் நோட்டில் எழுதித் தீர்க்கப் பட்டபின் இரண்டாம் காதலிக்கு சமர்ப்பித்து அவளிடமே நீட்டிவிட்டேன். பின் நான் கவிதை எழுதுவதை விட்டொழித்து விட்டேன். மனைவி வந்த பிறகு பிளி ஒரு கிலோ, தக்கோளி அரைக் கிலோ, சக்கரை கால் கிலோ என வெத்துத் தாள்களில் எனக்கு கவிதை எழுதி நீட்டுகிறாள். வாழ்க்கை கவிதையாய் நகர்கிறது. உங்கள் காதலிகள் மீது வருத்தமுண்டா? என்றொருநாள் கேட்டாள். வருத்தம் அவர்கள் மீதல்ல..அந்த ஒருகுயர் நோட்டுகள் மீது தான், என்றேன். எனக்கு எப்போது எழுதுவீர்கள்? என்றாள். வயிறு உனக்கு புடைத்திருக்கிறதே தெரியவில்லையா! என்கிறேன்.

================================================

இப்படி இங்க எழுதாம விடலாம்னா விதி வலியதுங்றாங்கள்ல.. விடாது தான். பாட்டில் பிரச்சனை தான் வேறென்ன! முன்பெல்லாம் ஐஸ் பொட்டிக்காரான் பேங் பேங்குனு பொவ்வாத் அடிச்சான்னா எங்காளு சரியா 4 பாட்டிலை தூக்கிட்டு ஓடி நீட்டி ஐஸ் சப்பீட்டு வருவான். இப்ப ஐஸ்காரன் பீர் பாட்டில் வாங்குறதில்லை! வீட்டு ஓரத்துல மரச்சட்டங்கள் அடுக்கி வச்சிருக்கிற எடத்துல பாட்டில்களை போட்டு வச்சிருக்கிறதால என்னை தேடி வர்ற புதிய நண்பர்கள் நேர்ல சொல்லலைன்னாலும் பெருங்கொண்ட குடிகாரன் போலன்னு நெனச்சிக்குவாங்க! நெனச்சி சாட்டாறாங்க! சாமத்துல சாக்குல போட்டு ஊருக்கு ஒதுக்குபுறமா தூக்கியாந்து சங்க முள்ளு மேல ஒவ்வொன்னா வீசினா நேம்பா பொதர்ல கமல் புன்னகை மன்னன்ல ரேகா பிள்ளையோட தற்கொலைக்கி எட்டிக்குதிக்கறாப்ல வுழுந்துடும்கள். சரி ஓகே விசயம் என்னான்னா....

   சென்னையில இருந்து நண்பனின் போன் 10 நிமிசம் முன்னால! பாஸ் முப்பத்தி அஞ்சு ரூவா கெடச்சுது..16 பீர் பாட்டில், 5 ஆப் பாட்டில், 15 கோட்டர் பாட்டில்! ரூம் சுத்தமா இருக்கு பாஸ். ரெண்டு மாசத்துல 3800 ரூவாய்க்கி குடிச்சிருக்கேன் ரூம்ல மட்டும்! வெளியில கணக்கில்ல! குடி என்னை அழிச்சுப் போடுமா பாஸ்!

  நீ போராடி குடிய அழிச்சுப்போடாதே நண்பா! கவர்மெண்ட் உன்னை நம்பி இருக்கு.. நஷ்டமடைய வச்சுடாதே! திடீர்னு இந்த வால்தம்பி குடி உட்ட ஸ்டேட்டஸ் போடற மாதிரி ஆரம்பச்சுடாதே! நான் ஷாக் ஆயிடுவேன்!

=====================================================================

ஈரோடு புத்தக கண்காட்சியில் இப்போது என் புதிய புத்தகங்கள் கிடைக்கிறது! எதிர் வெளியீடு ஸ்டால் எண். 112.
====================================
அடுத்த வாரம் ஞாயிறு 11-8-2013 புத்தக அறிமுக, விமர்சன கூட்டம் நடக்கிறது. இந்த ஞாயிறு என்று நாம் எல்லோரும் நம்பினோம். ஆடிக்காத்தில் அம்மியே பறக்கிறது. புத்தக வெளியீடு பறந்து ஒரு வாரம் பிந்திப்போய் விட்டது. ஈரோட்டில் வெளியீடு வைப்பது என்பது என் நீண்ட நாள் கனவு. தகவல்கள் தொடர்ந்து உறுதி செய்யப்படும்!
========================
============

Post Comment

கருத்துகள் இல்லை: