ஞாயிறு, அக்டோபர் 27, 2013

தோழரின் டாட்காம் பதிவு

  இருபது வருடங்களுக்கு முன்பு நான் கல்கத்தாவில் குப்பை கொட்டிக் கொண்டு இருந்த போது எனக்கு கடவுள் மீது நம்பிக்கையோ, ஆன்மிகத்தில் நம்பிக்கையோ இருந்தது கிடையாது. கல்கத்தாவில் டோம்பர் ஏரியாவில் குடிசையில் தான் இருந்தேன். பத்துக்கு பத்து என்கிற அளவில் தகரத்தால் வடிவமைக்கப்பட்ட இருப்பிடத்தை குடிசை என்று தன் சொல்ல வேண்டும். அந்த தகரக் குடிசைக்கு நான் உறங்குவதற்காக மட்டும் தான் இரவு நேரங்களில் சென்று வந்து கொண்டிருந்தேன்.

  எனது குடிசைகள் இருந்த இடத்தை சுற்றிலும் மலத்தொட்டிகள் தான். தமிழில் எழுத்தாளர்கள் யாரும் மலத்தொட்டிகளுக்கு அருகில் வீடமைந்து தூங்கியிருக்கவே முடியாது. அப்போதே எனது குடிசைக்கான பாதுகாப்பு பூட்டை திண்டுக்கல்லுக்கு ஆர்டர் கொடுத்து வாங்கி பூட்டிக் கொண்டிருந்தேன். கல்கத்தாவில் எந்த நேரமும் திருடர் பயம் தான். அடிக்கடி மழை கொட்டோ கொட்டெனக் கொட்டும். பார்த்தால் திடீரென மழை ஓய்ந்திருக்கும். சென்னையில் அப்படிக்கிடையாது. மழை உண்டு என்பதை டிவி சேனல்களும், ரேடியோ சேனல்களும் முன்பே சொல்லிவிடுகின்றன.

  எனது சுகமான தூக்கத்திற்கு அப்போது கட்டில் கூட கிடையாது. புத்தகங்கள் தான். அதிலும் மாஸ்கோ முன்னேற்றப் பதிப்பக புத்தகங்கள் தான். கஸாக்குகள், வெண்நிற இரவுகள், பாட்டிசைக்கும் பையன், ஓட்டம் என்ற வகை வகையான புத்தகங்களை விரித்து மேலே படுத்துக் கொள்வேன். பியோதர் தாஸ்தோவ்ஸ்கி, லேவ் தல்ஸ்தோய் எல்லோரும் என் கனவில் குதிரையில் ஏறி ஸ்தெபி புல்வெளியில் திரிவார்கள். அவர்களின் பின்னால் நான் தினமும் ஓடிக்கொண்டிருப்பேன். நான் சேகரித்து வைத்திருந்த பத்தாயிரம் புத்தகங்களும் கடும் மழை நாள் ஒன்றில் மலம் கலந்த வெள்ளம் அடித்துப்போய் விட்டது.

  இலக்கியம் எழுதுபவர்கள் எத்தனை பேர் ஜேப்படி திருடர்களாக இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. அப்போது நான் தாவாங்கட்டைக்கு கீழ் கொஞ்சம் முடியும் பிடணியில் ரப்பர் பேண்ட் போட்டு இறுக்கிய தலை முடியும் வைத்து சில்வஸ்டர் ஸ்டோலன் போன்றே இருப்பேன். ஸ்டோலனை திரைப்படத்தில் நடிப்பதற்கு முன்பு அவர் அம்மா நீலப்படங்களில் பணத்துக்காக நடிக்க வைத்தார். என் அம்மா உயிரோடு இருந்திருந்தாலும் அதைத்தான் செய்திருப்பாள். ஆனால் தமிழ்நாட்டில் அதற்கும் எழுத்தைப் போலவே பணம் கிடையாது. கேரளாவில் ஒருமுறை பைசா இல்லாமல் சென்னைக்கு திரும்ப வழியின்றி மாட்டிக் கொண்டேன். என் என் நண்பர் நாயரை நம்பி சென்றிருந்தேன். அவர் கள்ளுக்கடையில் ஒரு லிட்டர் கள்ளு குடித்ததும் மட்டையாகி விட்டார். எனக்கு கள்ளு வயிற்றில் பிரச்சனையை உண்டு பண்ணி விட்டதால் அருகில் தென்பட்ட குளத்தின் ஓரம் ஒதுங்கி விட்டேன். சாரல் மழை வேறு. திரும்பி வந்து பார்க்கையில் நாயரைக் காணோம். அப்போது செல் வசதியும் கிடையாது.
  என்ன செய்வது என்று விழித்துக் கொண்டிருக்கையில் ஊணுன்னி வந்தான். சாருக்கு எந்து வேணும்? என்றான். டேய் மாதர் சோத் பைசாடா பைசா நஹி என்று கத்தினேன். ஓ! சாரெ பின்ன ஓமனக்குட்டி வீட்டுக்கு யான் கூட்டிக்கொண்டு போவும்! சார் ஒன்னு சம்சாரிக்க வேண்டா! என்று கூட்டிக்கொண்டு போய் முண்டு கட்டிய ஓமனக்குட்டி வீட்டில் விட்டான். அவள் வீட்டில் இன்னும் சில குட்டிகள் தலுக் மொழுக்கென இருந்தார்கள். அன்று ஓமனக்குட்டியின் தயவால் சென்னை வந்து சேர்ந்தேன்.

  எப்படி என்கிறீர்களா? மலையாளத்தில் பைங்கிளி புத்தகம் ஒன்றுக்கு இருபத்தி ஐந்து போட்டோக்கள் ஓமனக்குட்டியோடு நான் புணருவது போல போஸ் கொடுத்து பைசா வாங்கிக் கொண்டு வந்தேன். தமிழ் நாட்டில் நான் மூன்று மணி நேரம் புணருவேன். ஆனால் கேரளாவில் பத்து நிமிடம் கூட என்னால் ஓமனக்குட்டியை புணர முடியவில்லை. கேரளாவில் குட்டிகளே தேங்காய் உரிக்கிறார்கள். அது தான் பிரச்சனை என்று என் சவுதி நண்பர் கூறினார். அதாவது தமிழ்நாட்டில் பெண்கள் பாயை நோண்டிக்கொண்டு படுத்துக் கொள்வதால், சிலசமயம் மனதில் தோன்றிய பாடலை முனுமுனுத்துக் கொண்டே படுத்திருப்பதால் புணர்ந்து முடிக்க நேரம் எடுக்கிறது என்றார். கேரளாவில் நான் கொடுத்த போஸ்கள் இங்கே தமிழ்நாட்டில் சரோஜா தேவி புத்தகத்தில் வந்திருந்தது. புகைப்படம் எடுத்தவன் உள்ளூர் ஸ்டுடியோக்காரன். பெரிய கலைஞன் தான். ஓமனக்குட்டியின் பருத்த உடலை கூட என்னையும் சேர்த்து காமிராவில் அடக்குவது என்றால் பெருத்த வேலைதான். ஓமனக்குட்டி உயரமும் பருத்த உடலும் அமையப்பெற்றவள். அவள் மேலே கிடக்க கீழே நசுங்கிக் கிடந்த நான் செத்து விடுவது போல முகத்தை வைத்துக் கொண்டிருந்தேன் ஏழாவது புகைப்படத்தில். என்ன போட்டோக்கள் அனைத்தும் கறுப்பு வெள்ளையில் இருந்தது.

  சிவஸ்டர் ஸ்டோலன் என்னைப்போல ஊர் திரும்புவதற்காக நீலப்படங்களில் நடிக்கவில்லை. நல்ல உணவு வகைகளுக்காக நடித்தார். அவர் பர்ஸ்ட் ப்ளட் படத்தில் வைத்துக்கொண்டு சுட்ட மிஷின் கன்னை என்னாலும் சாதாரணமாக இப்போதும் தூக்கிச் சுட முடியும். ஆனால் விஜயகாந்த் துக்கிச் சுடும் லோடெட் கன்களை தூக்குவேன் என்பதை நினைத்துக்கூடப் பார்க்க முடியாது.

  உலகிலேயே கால்பந்தாட்டத்தைப்பற்றி சிறுகதை எழுதியவன் நான் ஒருவன் தான். இதில் ஆச்சரியம் என்னவென்றால் அதே கால்பந்தாட்டம் பற்றி எனக்கும் அடுத்து இரண்டாவது சிறுகதை எழுதியவர் அர்ஜெண்டீனா எழுத்தாளர் கோல் கீப்பர். அவரும் முன்னதாக ஜேப்படி திருடனாக இருந்திருக்கிறார். ஒருமுறை பேருந்து ஒன்றில் ஒரு பெண்மணியின் கைவளையல் கழற்ற வரவில்லை என்றபோது அவரது மணிக்கட்டில் கத்தி கொண்டு வெட்டி கையோடு பேருந்திலிருந்து இறங்கிப் போயிருக்கிறார். இதி நம் ஊரில் எல்லாம் நினைத்துக்கூடப் பார்க்க முடியாது. தமிழ் திரைப்படங்களில் கன்னட நடிகர் அர்ஜூன் எதிரிகளை அவ்விதம் வெட்டுவார். கோல்கீப்பர் அர்ஜெண்டீனா கால்பந்தாட்ட அணியில் கோல்கீப்பராகவும் இருந்து பனிரெண்டாயிரம் பந்துகளை தடுத்தும் இருக்கிறார். அமீபத்தில் இவர் எழுதி வெளிவந்திருக்கும் மஸ்ட் பி கிரேசி காட் நாவல் முப்பது லட்சம் பிரதிகள் வெளியான ஒரே வாரத்தில் விற்றுத் தீர்ந்திருக்கிறது. கதை இது தான் –

  அடையாளம் தெரியப்படாமலிருந்த எழுத்தாளன் ஒருவன் தன் நாட்டிலிருந்து வெளியேறி தரை மார்க்கமாக தமிழகம் வந்து சேருகிறான். தன் பெயரை இங்கு வந்ததும் சூரியப்பிரகாசம் என்று கூறிக் கொண்டு கோவிலில் பூஜை செய்யும் குடும்பத்தை சேர்ந்த லட்டு போன்ற பெண்மணியை விரும்பி திருமணம் செய்து கொள்கிறான். அவன் தனது முதல் புத்தகத்தை மனைவியின் நகைகளை விற்று வெளியிட்டு தமிழகத்தை கலக்க வந்தவன் என்று விளம்பரப்படுத்தி கொள்கிறான். பத்தோடு பதினொன்றாக இருந்து விட்டுப்போகட்டும் என்று வந்தாரை வாழவைக்கும் தமிழக படிப்பாளிகளும் அவனை ஏற்றுக் கொள்கிறார்கள். அவன் மனைவி பக்கத்து வீட்டுக்காரனிடம் சோரம் போய் ஆண்மகனை ஈன்றெடுக்கிறாள். மேலும் இவனை மதிக்காமல் எடுத்தெறிந்து பேசுவதை வழக்கமாக்கிக் கொள்கிறாள். ஒருமுறை குண்டுக்கட்டாய் இவனை தூக்கி வந்து சாலையில் எறிந்து விட்டுப்போய் கட்லெட் சாப்பிடுகிறாள்.
  குடும்ப சிக்கல்கள், சண்டை சச்சரவுகள் நாவலில் நூறு பக்கங்கள் வரை சொல்லப்படுகிறது. அந்த நூறு பக்கங்களும் வாசகனிடம் பரிதாபத்தை வேண்டி நிற்கின்றன. தமிழகத்தில் புழக்கத்தில் இருக்கும் அத்தனை வசவுகளையும் இவர்கள் இருவரும் பேசிக்கொள்கிறார்கள். கடைசியில் டைவர்ஸ் வாங்கிக் கொண்டு இருவரும் பிரிகிறார்கள். எழுத்தாளன் தான் ஈன்றதாய் நினைக்கும் பொடியனுக்காய் இருபது பக்கம் நலமாய் உள்ளாயா! என்று கேட்டு எழுதிய கடிதங்கள் தமிழின் பேஜார் என்று இன்றும் வாசகர்கள் பேசிக்கொள்கிறார்கள். இடையில் மூன்று திருமணம் செய்து தனித்து அல்லாடிக் கிடந்த பூமிகாவை பிராக்கெட் போட்டு சேர்த்துக் கொள்கிறான். சோற்றுக்கு பூமிகா பார்த்துக் கொள்ள மீண்டும் பேனாவை நீக்குகிறான் சூரியப்பிரகாசம்.

  பூமிகா தன் மூன்றாவது கணவனிடம் ஈன்றெடுத்த வேணு பெருக்கல் குறி என்ற திருநங்கையை தன் படைப்பாக அறிவித்துக் கொண்டு வாழ்வதாக மஸ்ட் பி கிரேஸி காட் நாவல் முடிவடைகிறது. எனக்கோ ஏண்டா இந்த இழவுகளை எல்லாம் எழுத்தில் எழுதி நோகடிக்கிறார்களோ என்று தலை வேதனை தான். தமிழ் எழுத்தாளர்கள் தான் முன்பெல்லாம் இதே பாணியில் நோகடிப்பார்கள். இதனாலேயே தமிழில் நான் படிப்பதை நிறுத்தி பத்து வருடங்கள் ஆகிறது.

  இனி ஆங்கிலத்தில் அர்ஜெண்டீனா எழுத்துகளை நான் படிப்பதில்லை என்று முடிவு செய்து விட்டேன். இவரது முந்தைய நாவலான சர்ரியலிசமும் பெப்ஸி கோலாவும் உலக மகா பாங்குப்பை! ஆனால் இவது சிறுகதைகள் எந்த மொழிக்கு மொழி பெயர்த்தாலும் நின்று பேசும். உதிரித் தகவல் : சென்னையில் கிருஷ்ணா கபேயில் கோல்கீப்பரின் புத்தகங்கள் பத்தும் ஒரே செட்டாக கிடைக்கிறது. விலை தான் கூடுதல். என் சூவின் விலையைப் போல அவைகள் இருபத்தைந்தாயிரம்.

  மிழக மக்களிடம் தொன்று தொட்டு ஒரு பழக்கம் இருந்து வந்திருக்கிறது. அது குடிப்பழக்கம். குடி குடியைக் கெடுக்கும் என்று அரசாங்கம் என்ன தான் மதுவின் தீமைகளை எடுத்துரைத்தாலும் கடை முன்பாகத்தான் நின்று கொண்டிருப்பார்கள் ஒரு கட்டிங்குக்காக. நான் குடியை நிறுத்தி மூன்று மாதங்களாகி விட்டது. தினமும் இரண்டு பியர் குடிப்பது என்பது குடிப்பழக்கம் அல்ல.

  அக்பர் காலத்தில் அவரது அரசவையில் இருந்த ஜகாங்கீர் ஒரு மதுப் பிரியர். ஒருமுறை மதுத் தொட்டிக்குள்ளேயே விழுந்து இருபத்தி நாலுமணி நேரம் கழித்து அரண்மனை காவலர்களின் உதவியால் வெளி வந்திருக்கிறார். நாற்பத்தி எட்டு மணி நேரம் மதுப்பானைக்குள் விழுந்து கிடந்தவர் உகாண்டாவில் இன்றும் உயிருடன் இருக்கிறார். அவருக்கு வயது முன்னூற்றி இருபத்தி ஒன்று. பாகிஸ்தான் அணி சென்னை சேப்பாக்கத்தில் இந்திய அணிக்கு எதிராக வெற்றீ பெற கொடுத்த டார்கெட்டும் முன்னூற்றி இருபத்தி ஒன்று தான். என்ன பொருத்தம் பாருங்கள். ஜகாங்கீர் மதுவை கிண்ணத்தில் ஊற்றி அக்பருக்கு வார்த்து விட்டவர்.

  ஜெர்மனியில் அந்த சமயத்திலெல்லாம் வோட்கா கிடைத்ததில்லை. நாஜி வீரர்கள் போர்க்காலங்களில் காலையில் நன்கு மணி சுமாருக்கே உள்ளூர் பனை, தென்னை மரங்களுக்கு அடியில் சென்று நின்று கொள்வார்கள்.. பனை, தென்னை மரங்களில் சுண்ணாம்பு கலக்காத பதநீர் இறக்குவார்கள். தலைக்கவசத்தை பிச்சைப்பாத்திரம் போல் திருப்பி நீட்டி சுரக்குடுவையிலிருக்கும் பதநீரை வாங்கி உடல் உஷ்ணத்தை தணித்துக் கொள்வார்கள். இதை எலம் ஸ்ட்ரீட் நைட் மேர் படத்தில் பதினைந்து நிமிடம் காட்டியிருப்பார்கள். பிலாசுலாங்கி இதன் இயக்குனர். இவரது சிறந்த படம் என்றால் தி டாக் வெஞ்ன்ஸ் என்கிற படத்தைத் தான் நான் சொல்வேன்.

  ஜெர்மன் பனையேறிகள் தமிழகத்திலோ, கேரளாவிலோ பனை ஏறுபவர்களைப் போல ஏறுவதில்லை. அதற்கென மோட்டார் சைக்கிள் அவர்களுக்கு உண்டு. நானூறு அடி உயர மரங்களில் மூன்று நிமிடங்களில் ஏறி இரங்கி விடுவார்கள். மோட்டார் வைத்து கேரளாவில் கூட இன்று வரை யாரும் பனை ஏறுவதில்லை.
  சாமுண்டி என்றொரு திரைப்படம் தொன்னூறுகளில் வெளிவந்து சக்கைப் போடு போட்டது. அதில் சரத்குமார் பனையேறியாக நடித்திருப்பார். இவர் இரண்டாயிரத்து முப்பத்தைந்தில் தமிழக முதலமைச்சராகிவிடும் வாய்ப்பு இருக்கிறது. அதுவரையிலும் நான் உயிரோடு இருந்தால் பார்ப்போம் அந்த ஆட்சியை.

  கேரளாவில் கள்ளுக்கடைகள் நிரம்ப உண்டு. ஒவ்வொரு கிராமங்களுக்கும் ஒவ்வொரு கடை. இதை நான் சொன்னால் தோழர் புளுகுகிறான் என்று தமிழ் எழுத்தாளர் கூட்டம் தங்கள் இணைய தளங்களில் எழுதுகிறார்கள். கேரளாவில் பனை, தென்னை மரங்களை அழித்து பல வருடங்கள் ஆகிவிட்டதென்றும், மம்முட்டி, மோகன்லால் ரசிகர்கள் எல்லாம் அந்த இடங்களில் ப்ளாட் போட்டு கட்டிடங்கள் கட்டி விட்டார்கள் என்றும், கள்ளுக்கடைகளுக்கு பதிலாக கஞ்சா, அபின், ப்ரெளன்சுகர் கடைகள் தான் உள்ளன என்றும் ஜல்லியடிக்கிறார்கள். புளுகுவது ஒரு கலை. அது பிறப்பிலிருந்தே இருக்க வேண்டும்.
  குண்டு சட்டிக்குள் மட்டும் குதிரை ஓட்டிக் கொண்டு கிணற்றுத் தவளையாகவும், கண்ணாடித் தொட்டி மீன்களாகவும் குமாஸ்தாக்களாக வாழும் இவர்களை நான் வெறுப்பதற்கு காரணமே இந்த ஜல்லியடிப்புகளுக்காகத் தான். கணவன் இறந்த பின் மனைவியும் தீக்குளிக்க வேண்டும் என்ற காலத்திலிருந்து இன்னும் இவர்கள் வெளியே வரவேயில்லை. தெரியாததை தெரியாது என்று ஒப்புக்கொள்ளும் வழக்கமே இவர்களிடம் இல்லை. கொலை வெறித்தாக்குதல் நடத்துகிறார்கள் என் மீது.

  ஜப்பானில் இப்படிப்பட்ட பழக்க வழக்கங்கள் இல்லை. உலகிலேயே நடிகர்களை எழுத்தாளர்களை உபசரிப்பதில் ஜப்பானியர்களுக்கு நிகர் யாருமில்லை. எனது ஜப்பான் காதலி கீமோசு என் தலை சிறந்த நாவலான புட் இன் கரைக்ட் ஓல்ஸ் ஜப்பானிய மொழிபெயர்ப்பை ஒரே இரவில் படித்தவள். என்னை பார்த்தேயாக வேண்டுமென்று ஒரே பிடிவாதம். இந்த டிசம்பரில் வந்தீர்களென்றால் எருக்கலம்பூ, வேலிக்காத்தான் பூ இங்கே நிறைய பூத்துக்கிடக்கும் அழகைக் காணலாம். கட்டிய துணியோடு வாருங்கள் செலவை இங்கு நான் பார்த்துக் கொள்கிறேன் என்று அழைத்ததால் எனது எழுத்தார்வத்தை ஒதுக்கிவிட்டு ஜப்பான் சென்றிருந்தேன்.

  ஜப்பானில் டக்கியா மாகாணத்தில் ஒண்டிக் குடித்தனம் செய்பவள் கீமோசு. அவள் வீட்டைச் சுற்றிலும் வெள்ளைப் பன்றிகள் கூட்டம். பன்றி வளர்த்து விற்பனை செய்பவளாம். நம் ஊரில் சிக்கன் கோழிகளை வளர்ப்பது போலத்தான்.
  டக்கியோ நகரில் மிகச்சிறந்த மதுபான விடுதிக்கு என்னை அழைத்துச் சென்றாள். விடுதியில் எல்லா நாட்டு உணவு வகைகளும் கிடைக்கிறது. ஜப்பானிய பெண்களை கடவுள் ஒரு அளவுகோல் கொண்டு தான் படைத்திருக்க வேண்டும். கனகச்சிதமாய் கத்திரிக்காய்களுக்கு கை கால் முளைத்தது போல இருக்கிறார்கள். அவர்களுக்கு கண்கள் தான் அழகு. தமிழ்நாட்டில் என் பெண் தெய்வம் கவிதாவுக்கு மட்டும் தான் கண்கள் அழகு.

  எல்லாப் பெண்களும் கீமோசுவின் முகச்சாயலில் தான் இருந்தார்கள். உள்ளே சென்றதும் மூன்று பெக் அருந்தினோம். உணவு வகைகளை சூடு ஆறுவதற்குள் சாப்பிட்டு விட வேண்டும் என்றாள். சூடு ஆறிப்போனவற்றை உடனடியாக அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்து விடுகிறார்களாம். அன்று நாங்கள் சாப்பிட்ட உணவு இட்லி. ஆளுக்கு ஐம்பது ஐம்பது. கேரளாவிலிருந்து புளிய மரவிறகால் எரித்து தோசை போல இல்லாமலும், இட்லி போல இல்லாமலும் நடுத்தரமாக அது இருந்தது பஞ்சு போல. குஷ்பு இட்லியை நான் லாஸ் ஏஞ்சல்ஸில் சாப்பிட்டது போல் தான் இருந்தது. தொட்டுக்கொள்ள மாங்காய் சட்னி வைத்தார்கள். செம்மெ!

  கீமோசு தொட்டுக் கொள்ள என்ன சட்னி வேண்டும் தோழர் என்று கேட்டாள். மாங்காய் சட்னி என்றேன். பன்றி சிரிப்பது போலவே சிரித்தாள். எனக்கு காரணம் புரியவில்லை. கேரள உணவு வகைக்கு கேரள குழம்பு வகை தான் தருவார்களாம். வந்தது ராமர் தவளைக்குழம்பு. கேரளாவில் ராமர் தவளை குளங்களில் எருமைச்சாணி அளவில் பச்சை நிறமாகக் கிடைக்கும். உடம்பு முழுவதும் சதை தான். அன்று அதையே சாப்பிட்டோம்.

  நாங்கள் அங்கிருந்த போது நடிகை மீனா அங்கு சிறப்பு விருந்தினராக வந்தார். ஜப்பானிய உடையில் அவர் இருந்தார் என்றாலும் கண்கள் அடையாளம் காட்டிக் கொடுத்து விட்டன. அதை வழக்கம் போல சிமிட்டிக் கொண்டு உதடுகளை கூமாச்சி பண்ணி பேசிக்கொண்டிருந்தார். அமர்ந்திருந்தவர்கள் அவரை தில்லானா தில்லானா பாடலுக்கு டான்ஸ் ஆடுமாறு கேட்டுக் கொண்டிருந்தனர்.. தமிழ்நாட்டிலிருந்து எழுத்தாளர் தோழர் பெரியசாமி வந்திருப்பதாக விடுதி மேலாளர் மீனாவுக்கு தகவல் கொடுக்க இருவரும் சந்தித்து கை குலுக்கிக் கொண்டோம். எனது நாவலின் பிரதியொன்றை கொடுக்கலாம் என்றால் கைவசம் எடுத்துப் போகவில்லை. ஆனால் அவரோ முன்பே படித்து விட்டதாக கூறினார். படித்து முடித்ததும் சூப்பர் ஸ்டாருக்கு ஓசி குடுத்து விட்டதாகவும் கூறினார். நான் மீனாவிடம் பேசிக் கொண்டிருக்கையில் கீமோசுவுக்கு பொறாமை வந்ததாகக் கூறினாள். கீமோசு வீட்டில் அதன்பின் ஐந்து நாட்கள் நான் தங்கியிருந்தும் நான் மதுவைத் தொடவில்லை. அவளுக்கு அது ஆச்சரியம். காரணம் கீமோசு வீட்டில் டூபாத் ரூம் இல்லை. வெட்ட வெளி தான்.

  கிட்டத்தட்ட முடியப்போகும் தருவாயில் இருக்கும் எனது அடுத்த நாவல் ப்ளீஸ் கிஸ் மீ. எனது தமிழக ரசிகர்கள் இன்னமும் ஒருமாத காலம் அந்த நாவலை தமிழில் படிக்க காத்திருக்க வேண்டும். தமிழ் மொழிபெயர்ப்பை ஜெர்மனியைச் சேர்ந்த யோகேஷ்வரும், அவரது மனைவி யோகேஷ்வரியும் அதி அற்புதமாக செய்து கொண்டிருக்கிறார்கள். இணையத்தில் ஆறு மாத காலமாக ஜப்பானிய மொழியில் அதை நான் எழுதிக் கொண்டிருப்பதால் ஜப்பானில் எனக்கு பறந்த வாசகர் வட்டம் கிடைத்துள்ளது.

  தினமும் ஏகப்பட்ட மெயில்கள். தூக்கம் என்பதே எனக்கு முழுதாக இருப்பதே இல்லை. நான் தூங்கியே ஒரு மாத காலம் இருக்கும். தூக்கத்தை நான் மறந்தும் போய் விட்டேன். எனது பத்து லட்சம் ரசிகர்களுக்காக நான் ஒருவனே சிந்திப்பதால் இந்த நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறேன். கவிதா இது ஒரு வியாதி என்றாள். கவிதா தனுடலை வடசென்னையில் இருக்கும் ஹோமியோபதி டாக்டரிடம் காட்டிக் கொண்டிருப்பதால் என்னையும் அதே டாக்டரிடம் கூட்டிப் போவதாய் கூறினாள். வேண்டாம் கண்ணே! எனது டாக்டரையே பார்த்து விடுகிறேன் என்று சொல்லி அப்பாய்ண்மெண்ட் வாங்கிப் போய்ப் பார்த்தேன். முழு உடம்பையும் வாங்கும் காசுக்கு தட்டிப் பார்த்தவர் ஒன்றுமில்லை என்றார். சிலரது உடம்பு வாகு அப்படி என்றார். இதியே கவிதாவிடமும் கூறினேன்.

  இதற்கு வேறு மருந்து கைவசம் இருக்கிறது என்றவள் களைப்பாய் இருப்பதாய் உணருகிறீகளா? என்றாள். என்னை படுக்கையில் கிடத்தி எனது தொப்புள் குழியில் தனது ஆள்காட்டி விரலை விட்டு மாவு ஆட்டும் கிரைண்டர் மிஷின் போல் ஆட்டிக் கொண்டேயிருந்தாள். என்ன ஆச்சரியம். மூன்றாவது நிமிடத்தில் தூங்கிப் போய் விட்டேன். கவிதாவுக்கு ஏதோ சக்தி இருக்கிறது என்று கூறிக்கொண்டே இருக்கிறேன் அல்லவா! அவளது லீலைகளில் இதுவும் ஒன்று. ஒருமாத கால தூக்கத்தை அன்று வெறும் எட்டு மணி நேரம் தூங்கிக் கழித்து எழுந்தேன். உரியில் நெய்யை வைத்துக் கொண்டு ஊர் முழுக்க தேடிய கதை இது தான்.

  விடிந்து எழுந்ததும் புதிய உலகத்தில் பிறந்து விட்டது போன்ற உணர்ச்சியில் இருந்தேன். அந்த நேரத்தில் தான் ஜப்பானிலிருந்து சுமோவின் அழைப்பு வந்தது. சுமோ என் புதிய காதலி. ஜப்பானில் ஒன்பது திரையரங்கம் வைத்திருக்கும் ஏழைப் பெண். பீகோ என்றேன் பீகோ என்றால் ஜப்பானிய மொழியில் பேசு அல்லது சொல்லு என்று அர்த்தம். பி என்பதற்கு பதிலாக சு போட்டுக் கொண்டால் சீன மொழியில் சொல்லு என்று அர்த்தம். நான் இறப்பதற்கு முன்பாக உலக மொழிகள் அனைத்தையும் கற்றுக் கொள்ள விரும்புகிறேன்.  உலக் மொழிகள் அனைத்தும் பேசத்தெரிந்த ஒருவர் நேபாளத்தில் இருந்தார். அவர் பெயர் பெல். அவர் இறந்து மூன்று வருடங்களாகிறது.

  தோழர் சார் இந்த நாவல் தமிழ்நாட்டையே ஒரு கலக்கு, ஒரு உலுக்கு உலுக்கி புறட்டி போட்டு விட்டு உலக நாடுகளுக்கு பரவப் போகிறது. ஜப்பானில் தென்கடைசியில் இருக்கும் அனது தியேட்டரில் ஒன்றை விற்று விட்டு உங்களுக்கு நகரம் முழுதும் இந்த நாவல் வெளியீட்டின் போது கட்டவுட் வைக்கிறேன். நீங்கள் உங்கள் வீட்டில் செல்லமாக வளர்த்தும் சிம்பன்சியோடு வாக்கிங் செல்கையில் எடுத்த ஸ்டில் ஒன்றை மெயிலில் அனுப்புங்கள். உங்கள் ஊர் சூப்பர் நட்சத்திரத்துக்கு முதலில் நகரத்தில் கட்டவுட் வைத்தவள் நான். அதன் பிறகு தான் அவர் புகழ் ஓஹோ என்று ஜப்பானில் பரவியது தெரியுமா! என்றாள் சுமோ.

  சிம்பன்சியோடு நான் சென்னை வீதியில் வாக்கிங் போவதா? என்னிடம் இருக்கும் சிம்பன்சி ஆப்பிரிக்க கருப்பினத்தைச் சேர்ந்த டோரா வகை. அதற்கு சூரியஒளி சுத்தமாக ஆகாது. தினமும் அதற்கான உணவு வகைகளின் செலவு பயங்கரமாய் ஆகிறது. கவிதாவின் மாதச் சம்பளத்தில் பாதியை அதுவே விழுங்கி விடுகிறது. பாட்ஷா படத்தில் ரஜினிகாந்த் அமர்ந்திருக்கும் சிம்மாசன்ம் போன்ற ஒன்றில் சிம்பன்சியை அமர வைத்து அருகே நான் தோள் மீது கை போட்டபடி ஒரு ஸ்டில் எடுத்து அனுப்பலாம் என்றிருக்கிறேன்.

  பாட்ஷா படத்தில் ரஜினிகாந்த் அருகில் அமர்ந்திருக்கும் நாய் செக்கோஸ்லோவியா நாய். அதன் வகையை கோம்பை என்று தமிழ்நாட்டில் சொல்கிறார்கள். இந்த நாய் ஒரு சீனில் படத்தில் நடித்து விட்டு சென்று விட்டது. தமிழ்நாட்டில் பவானியில் எனது வாசகர் முருகன் வீட்டில் கடசி கோபை நாய் இருந்து அதுவும் அழிந்து விட்டது. பாட்ஷாவில் நடித்த நாய்க்கு ஒருநாள் சம்பளம் இருநூறு டாலர். தமிழ்நாட்டில் முப்பத்தி ஏழு ரூபாய். பேட்டா தனி. 

  அந்த வகை நாய் நம் சீதோசண நிலையில் மூன்று நாள் தாங்காது. புலக்கை தீசி விடும். கடற்கரை ஓரமாக தலைவர்கள் கல்லறைக்கு அருகில் புதைத்து திண்டு எழிப்பி விடலாம். அது பனி பிரதேசத்து நாய். மைனஸ் பதிமூன்று டிகிரியில் உயிர் வாழ்பவை.. ஜெர்மனியில் எனது நண்பர் ஏசி அறையில் ஒன்று வைத்து வளர்த்துகிறார். மின்சாரம் போய் விட்டால் என்னாவது? என்று அப்பாவியாய்க் கேட்டேன். அது உங்கள் ஊரில்! என்றார்.

  உகாண்டாவில் நாய்கள் வளர்ப்பதற்கு அரசாங்கமே தடை போட்டிருக்கிறது. உகாண்டாவில் எனது நண்பர்கள் வேறு வழியின்றி குழந்தைகளை தத்தெடுத்து செல்லப்பிராணிகளாக வீட்டில் வளர்த்துகிறார்கள். ஜிம்மி கேட்ச் என்று பிஸ்கட்டை உயர்த்திப் பிடித்தால் குழந்தைகள் எட்டிக் குதித்து பிஸ்கெட்டை கவ்வித் தின்பார்கள். குழந்தையும் தெய்வமும் ஒன்று என்று இங்குதான் சொல்லிக் கொண்டிருக்கிறோம்.

  நாடோடிகள் என்றொரு படம். தமிழ்நாட்டில் யாருக்கும் சினிமா ரசனை என்பதே இல்லாமல் போய்விட்டது போல ஆகி விட்டது. யாருக்குமே பிடிக்காமல் போன அந்தப்படம் எனக்கு மிகவும் பிடித்து விட்டது. அந்தப்படத்தின் மையக்கரு தமிழில் யாரும் இதுவரை தொடாதது. இந்தப் படத்தை பார்த்த பிறகு தான் உலகப் படங்களுக்கு இணையாக இங்கும் படங்கள் எடுக்கப்படுகின்றன என்று தெரிந்தது. இளையராஜாவின் இசை இந்தப்படத்தில் உச்சம். ஏழுமுறை இந்தப்படத்தை தியேட்டரில் பார்த்தேன். ஒருமுறை கண்களை இறுக மூடியபடி சமாதி நிலையில் இசையை மட்டுமே ரசித்து கேட்டுக் கொண்டிருந்தேன். மொராக்கோ தேச இசைக் குழுவின் நாடோடி இசையை தமிழுக்கு ஏற்றாற் போல் இசைஞானி மாற்றித் தந்திருக்கிறார். இதற்காகத்தான் நான் அவரை இசையின் கடல் என்று பலமுறை குறிப்பிடுகிறேன். இசை அவர் கையில் ஊற்றாய் பெருக்கெடுக்கிறது.

  ஸ்லம்டாக் மில்லியனர் என்றோரு படத்திற்கு யார் இசையமைத்தார்கள் என்று தெரியவில்லை. ஒரே கும்பாபிஷேக இறைச்சல். தியேட்டரை விட்டு வெளிவந்து மூன்று நாட்கள் யாருடனும் என்னால் பேச முடியவில்லை. அந்தப் படத்தின் மியூசிக் டைரக்டர் யார் என்று என் அமெரிக்கத் தோழி சைனியிடம் விசாரித்து சொல்லக் கேட்டிருக்கிறேன். அவர் அர்னால்டு சுவார்ஸனகரிடம் விசாரித்துச் சொல்வதாக சொல்லியிருக்கிறார். எனது ரசிகர்கள் ஆர்வம் மிகுதியில் ரிலீசே ஆகாத படத்திற்கு எல்லாம் விமர்சனம் எழுதச் சொல்கிறார்கள். மருதநாயகத்திற்கு எழுதச் சொன்னால் எப்படி? கமலே சும்மா எழுதுங்கள் என்கிறார்.

  நாடோடிகள் படம் காதலுக்கு உறுதுணையாக இருந்த நண்பர்கள் படும் துன்பத்தை  சொல்கிறது. பல இடங்களில் தியேட்டரில் விசில் அடித்தேன். விசில் அடிக்க நான் கற்றுக் கொண்டது ஹங்கேரியில் என் தோழி ஒருத்தியிடம். எப்படியென்றால் தன் குழந்தைக்கு அவள் விளையாடக் கொடுத்திருந்த சிறுவர் விளையாட்டுப் பொருளை அவள் இல்லாத சமயம் சுட்டுக்கொண்டு வந்து விட்டேன். கல்கத்தா பழக்கம். கை அரிப்பு தாங்காமல் வெகுகாலம் கழித்து அந்தக் காரியம் செய்தேன்.
  தியேட்டரில் இருந்த பதினைந்து பேரும் என்னை விசில் அடிக்கும் போதெல்லாம் திரும்பித் திரும்பி முறைத்தார்கள். மறதி எனக்கு பெரும் துன்பமாக இருக்கிறது. நாடோடிகள் படத்தில் கதாநாயகனாக நடித்தவர் சுசி கணேசனா? கணேசகுமாரனா?

  தமிழில் அதிகம் நான் படிப்பதில்லை என்றாலும் என் இருபத்தி மூன்று வாரிசுகள் எழுதும் கவிதைகளையோ, சிறுகதைகளையோ தவறாமல் மண்டியை போட்டு படித்து விடுவேன். அவர்கள் என்னை விட பயங்கரமாய் புளுகுகிறார்கள். குஞ்சு மிதித்து கோழி சாகுமா? என்றொரு பழமொழி சுவீடனில் உண்டு. வாரிசுகள் என் எழுத்தை குப்பை என்று எழுதுகிறார்கள். கற்றுக் கொண்ட கல்வியிடத்தை பழிக்கக் கூடாது. பா.சிங்காரம், நகுலன், கு.ப.ரா இன்னமும் என் குருநாதர்கள் தான்.
  நான் தான் பிறரது படைப்புகளை குப்பை என்று சொல்வேன். அந்த உரிமையை நான் எழுதத் துவங்கிய காலத்திலேயே தமிழ் வாசகர்கள் எனக்கு கொடுத்து விட்டார்கள். என் நண்பர்களே கூட என் எழுத்துகளை மலம் துடைக்கப் பயன்படுத்துவதாக கூறுகிறார்கள் என்றாலும் என் காதுப்பட அல்ல. என் வாரிசுகளில் ஒருவன் மார்க்குவசை விட பயங்கரமாய் எழுதுவான். அவன் ஹரிகிருஷ்ணன். இத்தனை காலம் என் பார்வைக்கு தட்டுப்படாமல் இருந்திருக்கிறான். அவனும் நானும் சென்ற வருடம் ஒருவரை சந்திப்பதற்காக செமத்தண்ணியில் போய்க் கொண்டிருந்தேன். இந்தப்பயல் குடிப்பதில்லை. அந்த ஆள் சேலத்தில் பாரில் அமர்ந்து கொண்டு வந்தாச்சா? வந்தாச்சா? என்று கேட்டுக் கொண்டிருந்தான். இதோ என்று இருவரும் மாற்றி மாற்றி பதில் சொல்லிக் கொண்டே வந்தோம். காரில் ஸ்பீடா மீட்டரின் முள் துடித்தபடி ஏறிக் கொண்டேயிருந்தது.

  திடீரென்று ஹரி அபயக்குரல் எழுப்பினான். ”தோழர் குறுக்கே குழந்தை!” என்று. எதிர்க்கே சாலையில் ஐந்து வயதுக் குழந்தை ஓடி வந்து விட்டது. ஸ்டியரிங்கை லெப்டில் கட் செய்து வலது கையால் குழந்தையை தோள்பட்டையில் பிடித்து தூக்கி வண்டியை ஓரம் கட்டினேன். குழந்தையை இறக்கி விட்டு சும்மா! என்று கண்ணடித்து விட்டு கிளம்பி விட்டேன். ஹரி பயத்தில் இருதயம் வெளியில் குதித்து விடுமோ என அஞ்சியதாக கூறினான். எல்லாம் கவிதா என்கிற கடவுளின் கருணை தான். என் கடவுள் மீது நானே காரை ஏற்றுவேனா? அது குழந்தையல்ல! தெய்வரூப தரிசினி. எல்லாம் கவிதாவின் மகிமை. இந்த முழு உலகமும் விடிவதும் இருள்வதும் கவிதாவின் கையில் தான் இருக்கிறது. வெள்ளைத் தாமரைப்பூவில் வீணையும் கையுமாக அமர்ந்திருக்கும் சரஸ்வதியின் கொள்ளுப்பேத்திக்கு எள்ளுப் பேத்தியின் மகள் கவிதா.

  புளியம்பிஞ்சு தொக்கு கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இதோ செய்முறை. சீசனில் தான் இதை நீங்கள் உங்கள் இல்ல அங்கத்தினருக்கு செய்து தர முடியும். புளியம் பிஞ்சு கொட்டையே இல்லாமல் இருக்க வேண்டும். சும்மாவே அதன் அழகிலும் சுவையிலும் இருநூறு பிஞ்சுகளை சாப்பிட்டு விடுவேன். வாய் புளித்து இனித்து மணந்து கிடக்கும். முதலில் சுத்தமான வெண்ணீரில் பிஞ்சுகளை அலம்பி பொடிப்பொடியாக ஒடித்து வடச்சட்டியில் போட்டுக்கொள்ள வேண்டும். அளவிற்குத் தகுந்தாற் போல் மிள்காய், வெங்காயம், பூண்டு, இஞ்சி எடுத்துக் கொள்ள வேண்டும்.

  ஆண்கள் சமையல் கட்டில் நுழைந்து என்ன செய்தாலும் பெண்களுக்குப் பிடிக்கும். எனக்குத்தான் கவிதாவின் சமையல் பிடிக்காதேயொழிய அவளுக்கு என் சமையல் பிடிக்கு.. அன்று என் வீட்டில் முத்தச் சப்தம் சாலையில் சொல்வோருக்கு கூட அடிதடி சப்தம் மாதிரி கேட்கும். வடைச்சட்டியில் உள்ள பொருள்களை வறுத்து மிக்ஸியில் போட்டு அடித்து வைத்துக் கொள்ள வேண்டும். பின் எண்ணெய் விட்டு கடுகு சேர்த்து தாளித்து இதைக் கலந்து அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி கரண்டியால் கிண்ட வேண்டும். இதனுடன் பல்லி முட்டை சேர்த்துக் கொண்டால் பிரமாதம் கூடிவிடும். உங்கள் மனைவி சமையல் அறைப்பக்கம் வந்து எட்டிப் பார்க்கக் கூடாது. சுவை போய்விடும். இப்போது தொக்கு ரெடி.

  இதற்கு நீங்கள் தக்காளி பூரி தான் போட வேண்டும். வசதி இல்லாதவர்கள் தர்பூசணியை துண்டாக வெட்டி தொட்டுக் கொண்டு சாப்பிடலாம். தோசையும் பெட்டர். இதில் உருளைக்கிழங்கு தோசை என்றால் எழுபது சாப்பிடுவேன். எனக்கு இரண்டு இரைப்பைகள். ஒன்றில் முப்பது தோசைகளை சேகரித்து வைத்துக் கொள்வேன். ஏதாவது பாடாவதி படத்திற்கு விமர்சனம் எழுதுகையில் அசை போட்டு மென்று கொள்வேன்.

  கோவையில் வெள்ளக்கிணறு என்றொரு குறுநகரம் இருக்கிறது. அந்த ஊரைச் சேர்ந்த பெண் தான் ஜெனிலியா. அந்த ஜெனிக்குட்டிக்காகவே இந்த ஒரு மாத காலமாக இரவு பதினொரு மணியிலிருந்து பனிரெண்டு மணிவரை நேரம் ஒதுக்கி இருக்கிறேன். உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் பேசிவிடுவேன் என்று பொய் சத்தியம் செய்திருக்கிறேன். உங்களுக்கெல்லாம் காதலிகள் இருந்தால் அவர்களின் வயது இருபதுக்கும் மேல் சொல்வீர்களா? என் காதலியின் வயது பதினைந்து.

  எனது சூனிய நிழல் நாவலை பத்து வருடம் கழித்து படித்து முடித்து விட்டு வாசகியாய் பேச்சுக் கொடுத்து தொடர்பை வளர்த்திக் கொண்டவள். மைனா ஒன்று கீச் கீச்சென பேசுவது போல இனிமையான குரல் அவளுக்கு. அப்பாவின் மூன்றாவது மனைவிக்கு பிறந்த தங்க மைனாவாம். என்னை அங்கிள் என்றே கூப்பிடேன் என்றேன். அது தப்பாம். அங்கிள் என்றால் அண்ணன் என்ற அர்த்தம் வருகிறதாம். ஸ்வீட்பாய் என்றே கூப்பிடுவதாக கூறியவள் அதையே இன்றுவரை தொடர்கிறாள். ஜெனிலியா அடிக்கடி என்னிடம் கேட்டுக் கொண்டிருக்கும் ஒரே கேள்வி, ”சரியா வைக்கத் தெரியாதா?”

  “ஸ்வீட் பாய் நான் உன்னை தொல்லை செய்கிறேனா?”
  “இல்லை என் ஜெனி செல்லமே!”
  “ஏதாவது எழுதித் தள்ளிக் கொண்டிருந்தாயா?”
  “இல்லை உன் அழைப்பு வரும் முன்பே பேனாவை மூடி வைத்து விட்டு ஹாயாக காலை விரித்து அமர்ந்திருந்தேன்”
  “ஹாயாகவா? அப்படியென்றால் நானும் உன்னைப் போல் கால்களை விரித்து அமர்ந்து கொள்கிறேன். உன் கை எங்கே இருக்கிறது?”
  “செல்போன் பிடித்துக் கொண்டு”
  “உன் செல்போன் அவ்வளவு வெய்ட்டா? இரண்டு கைகளிலுமா பிடித்திருக்கிறாய்?”
  “அதை விடு ஜெனி செல்லமே, உன் வலது கை என்ன செய்கிறது? எங்கிருக்கிறது?”
  “நீ எதிர்பார்ப்பது மாதிரியே பத்திரமான இடத்தில் இருக்கிறது. சரி வேலு பிரபாகரனின் காதல் கதை பார்த்து விட்டாயா?”
  “நல்ல படமாயிற்றே? ஜெனிக்குட்டி எப்போ பார்த்துச்சு?”
  “ரெண்டு நாட்கள் ஆயிற்று. அந்த பாடல் காட்சியை மட்டும் பலதடவை பார்த்து விட்டேன் என் சிடி பிளேயரில்.”
  “அதில் ஆசிரியராக நடித்தவர் பிரமாதப்படுத்தி இருப்பாரே!”
  “உன்னைப் போலவே தான் ஜொள் ஊற்றுகிறார்”
  “என்னைவிடக் குறைவுதான்”
  “நீயே பேசாமல் வேலு பிரபாகரனிடம் பேசி அந்த கேரக்டரை செய்திருக்கலாம்”
  “நான் நடித்திருந்தால் அந்தப் படத்தை என் ரசிகர்கள் சில்வர் ஜூப்லிக்கு கொண்டு சென்றிருப்பார்கள். ஆஸ்கருக்கு என் வெளிநாட்டு நண்பர்கள் முயற்சித்திருப்பார்கள்”
  “நீ எப்போதும் இப்படியே தான் பேசுவாயா? வாயா அது?”
  “புளுகுவது ஒரு கலை ஜெனி. எனக்கு மட்டும் வாய்த்திருக்கிறது அது. ஆனால் உன்னிடம் மட்டும் நான் புளுக மாட்டேன். நீ என் செல்லம்”
  “உன் பெண் கடவுள் எங்கே இப்போ?”
  “குறட்டை விட்டு தூங்கிக் கொண்டிருக்கிறாள்”
  “கடவுளை ஏமாற்றிக் கொண்டிருக்கிறாய். ஆமாம் நீ திருநங்கை என்றுதானே உன் புத்தகமொன்றில் எழுதியிருந்தாய். அதனால் தான் உன் கடவுள் நேரத்தில் தூங்கிப் போய்விட்டது. அப்படியானால் நீ வேஸ்ட் ஃபெலோ. உன்னிடம் இப்படி ராக்காலத்தில் தாளித்துக்கொண்டிருப்பதும் வேச்ட்”
  “புத்தகத்தில் எழுதுவதையெல்லாம் உண்மை என்று என் வாசகர்களைப் போலவே நீயும் பேசுகிறாய். சின்னக்கொழந்தை என்பது சரியாய் இருக்கிறது போ!”
  “மூன்று மணி நேரம் பிஸ்டனின் விரைப்பு குறையாது என்று எழுதியிருந்தாயே! அதுவும் அப்போ பொய் தானே! அதை நம்பி பள்ளிக்கு இரண்டு நால் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம் என்றிருந்தேன். ராஜேசும், குணாவும் அப்போதே சொன்னார்கள் நாங்கலெல்லாம் எவ்வளவு நேரமோ அவ்வளவு நேரம் தான் கொம்பாதி கொம்பனும் செய்வான் என்று”
  “கண்ணே ஜெனி அப்படியானால் நம் காதல் பொய்யா? உருதுவில் ஒரு வேதனைப் பாடல் இருக்கிறது கேட்கிறாயா இப்போது?”
  “போடா ஸ்வீட் பாய், அந்தப்பாட்டை நீயே கேட்டுக் கொண்டு சொறிந்து கொண்டு கிட! அதை விட லட்சம் பாட்டை நான் இணையத்தில் கேட்டு விட்டேன்.
  “ராஜேஷ், குணா சொல்வதை எல்லாம் நம்பாதே கண்ணே!
  “நான் நம்பவில்லை தான். என் பக்கத்து பங்களாவில் ஐம்பத்தி ஐந்து வயது பாய் ஃப்ரண்டு இருக்கான். ராஜேஷ், குணாவை விட அதிக நேரம் எடுத்துக் கொள்கிறான். உன் வயிறு இப்போது எரிகிறதா?”
  “என் வயிறு எதற்காக எரிய வேண்டும்?”
  “உண்மை தான். திருநங்கையாக இருப்பதால் எரியாது அது. போடா டம்மி பீஸ்”
  “கண்ணே! ஜெனீ செல்லமே! போனை கட் செய்து விட்டாயா? மாதர்சோத்”

  சென்னை செண்ட்ரல் ரயில்நிலையம் அருகே ஒரு டாஸ்மார்க் கடை இருக்கிறது. எந்த நேரமும் அங்கு கூட்டம் இருந்து கொண்டேயிருக்கும். கடையை ஒட்டி மேலே மாடியில் பார் ஒன்று இருக்கிறது. இங்கு நான் உள்ளே சந்தித்த சப்ளையர் பற்றியோ, ஹோமோ செக்ஸ் வைத்துக் கொண்டிருக்கும் இரண்டு நபர்களைப் பற்றியோ, குடி வகைகளைப் பற்றியோ சொல்லப் போவதில்லை. அதற்கும் மேலான விசயம் சொல்லப் போகிறேன். அதே கார்னரில் ஒரு டீக்கடையில் போடப்படும் டீ பற்றி பேசப் போகிறேன். கண்ணாடி டம்ளரில் அரை டம்ளர் அளவு தான் தருவார்கள். நான் முப்பது ரூபாய்க்கு ஆறு டம்ளர்கள் டோக்கன் நீட்டி நீட்டி வாங்கி குடிப்பேன். இது பற்றி கவிதாவிடம் பலமுறை சொல்லியிருக்கிறேன்.

  ஒருமுறை கவிதா தன் தோழி ஒருவரை ஐந்தரை மணிக்கு பெங்களூர் செல்லும் எக்ஸ்பிரஸில் அனுப்பி விட்டு டீ வாங்கி ருசித்துப் பார்த்திருக்கிறாள். அப்போது ஒரு தாடி வைத்த ஆசாமி ஒருவன் கவிதாவிடம் தோள்பையை லவட்டிக் கொண்டு போக முயற்சித்திருக்கிறான்.

  கவிதா அவனது கையை பின்பக்கமாக பிடித்து முறுக்கி ஊமைக்குத்து போட்டிருக்கிறாள். கவிதா கராத்தேவில் எல்லா பெல்ட்டுகளையும் வாங்கியவள். அவனோ கையை உடும்மே! உடும்மே வயிக்குது! கையி ஒடஞ்சி பூடும் உடும்மே என்று கத்தல் போட்டிருக்கிறான். பின் கையை விட்டு விட்டு அவன் கையில் பத்து ரூபாய் கொடுத்து விட்டு வந்ததாக கூறினாள். கூடவே இருந்ததால் புளுகும் பழக்கம் இவளுக்கும் ஒட்டிக் கொண்டதோ? என்று ஐய்யமாக இருந்தது. கடவுளிடம் குத்து வாங்கிய பயல் திருட்டை ஒழித்து விடுவான். அவன் இரண்டாவது ஆள். முதல் ஆள் அடியேன் தான்.

  

Post Comment

வியாழன், அக்டோபர் 10, 2013

வா.மு.கோமு புதிய கவிதைகள்
உனக்குத்தெரியும் தூக்குபவனல்ல நான் என்று!
ஊராருக்குத் தெரியும் அப்படிப்பட்ட பயல் அல்லவென்று!
இருந்தும் எனைக்கண்டதும் தெருத்தெருவாய் பறக்கிறாய்!
உன்னிடமிருப்பது போல என்னிடம் சிறகுகள் கிடையா!
ஏதாவதொரு தெருச்சந்தில் வசமாய் ஒருநாள் மாட்டுவாய்!
அன்று நான் நடத்தும் கச்சேரியில் நீ ஊர் முழுக்க
போய்ச் சொல்வாய்! அந்தப்பயல் கசக்கீட்டான்! நல்லவன்னு
இத்தினி நாள் நெனச்சிருந்தேன் என! இதற்குத்தான்
பெருசுகள் முன்பே சொன்னார்கள் வேலியில போறதை
சுடிதார்க்குள்ள எடுத்து விட்டுக்க கூடாதுன்னு!
()()()()()()()

எல்லா நாளும் முத்தம் தருவாய் என்றால்
எல்லா நாளும் முச்சந்திக்கி வருகிறேன்!
எல்லா நாளும் காட்ட மறுப்பாய் என்றால்
எல்லா நாளும் ஏமார்ந்து திரும்ப மாட்டேன்!
எல்லா நாளும் அதே வேலை தானா என்றால்
அந்த வேலைக்காகத்தான் எல்லா நாளும் என்பேன்!
()()()()()()()

என் அழகு யாருக்கு வரும் என்று நீயே சொல்லிக்கொண்டால்
உலக அழகிகளையெல்லாம் என்ன செய்வது?
ஒன்று செய்! உனக்கு மிதி வெண்டுமென்றால்
வந்து கேட்டு வாங்கிப் போ!
உன்புருவங்களை எவனோ அர்ச்சுனனின் வில்லுக்கு ஒப்ப
கவிதை எழுதி நீட்டி விட்டான் என்பதற்காக படபடத்துத்
திரியாதே! இதயம் தெருமுனையில் கிடந்து மீனைப்போல் துடிக்கும்!
அது சரி அந்த வண்ணத்துப்பூச்சிக்கு உன்
உதட்டின் மீது என்ன வேலை?
()()()()()(

என் இறப்புச்செய்தி கேட்டு வீடு வந்திருந்தாய்!
பெண்கள் கூட்டத்தில் உதடு விம்ம நின்றிருந்த
உன்னை தற்செயலாய் கவனித்தேன்!
நல்ல சகுனம் என கிளம்பி விட்டேன்!
()()()()()(

இத்தினி நாள் நெனச்சிருந்தேன் என! இதற்குத்தான்
பெருசுகள் முன்பே சொன்னார்கள் வேலியில போறதை
சுடிதார்க்குள்ள எடுத்து விட்டுக்க கூடாதுன்னு! 
()()()()()()()

எல்லா நாளும் முத்தம் தருவாய் என்றால்
எல்லா நாளும் முச்சந்திக்கி வருகிறேன்!
எல்லா நாளும் காட்ட மறுப்பாய் என்றால்
எல்லா நாளும் ஏமார்ந்து திரும்ப மாட்டேன்!
எல்லா நாளும் அதே வேலை தானா என்றால்
அந்த வேலைக்காகத்தான் எல்லா நாளும் என்பேன்!
()()()()()()()

என் அழகு யாருக்கு வரும் என்று நீயே சொல்லிக்கொண்டால்
உலக அழகிகளையெல்லாம் என்ன செய்வது?
ஒன்று செய்! உனக்கு மிதி வெண்டுமென்றால்
வந்து கேட்டு வாங்கிப் போ!
உன்புருவங்களை எவனோ அர்ச்சுனனின் வில்லுக்கு ஒப்ப
கவிதை எழுதி நீட்டி விட்டான் என்பதற்காக படபடத்துத்
திரியாதே! இதயம் தெருமுனையில் கிடந்து மீனைப்போல் துடிக்கும்!
அது சரி அந்த வண்ணத்துப்பூச்சிக்கு உன்
உதட்டின் மீது என்ன வேலை?
()()()()()(

என் இறப்புச்செய்தி கேட்டு வீடு வந்திருந்தாய்!
பெண்கள் கூட்டத்தில் உதடு விம்ம நின்றிருந்த
உன்னை தற்செயலாய் கவனித்தேன்!
நல்ல சகுனம் என கிளம்பி விட்டேன்!
()()()()()(0
பஜக்கென ஒரு முத்தத்தை என் உதட்டின் மீது
கொடுத்துவிட்டு ஒன்னும் தெரியாதது போல்
போய் விட்டாய்! திருகிக் கிடந்தேன் நான்!
தினமும் கொடுத்து விட்டுப்போ இப்படி
சரக்குச் செலவு மிச்சம் எனக்கு!
()()()()()()

பலர் எரிந்தும் விழாத மாங்காயாய் இருந்த உன் இத்யம்
என் ஒரே கல்வீச்சுக்கு நாலாய் மூனாய்
தெரித்து விழுந்தது! கல்லெறின்னாலும்,
காதல்னாலும் சும்மாயில்ல பப்பி!
ஐ ஆம் இன் பேக்!
()()()()()()

எங்கே காதலித்து விடுவேனோ என்று
பார்க்கையிலெல்லாம் ஓடினாய் நீ!
எங்கே காதலிக்க வைத்து விடுவாயோ என்று
பார்க்கையிலெல்லாம் ஓடிக்கொண்டிருந்தேன் நான்!
கடைசியில் இந்த சினிமா படத்தில் வருவது
மாதிரியே ஆயிப்போயிற்று!
வர்றபோது பூ வாங்கிட்டு வாங்க என்று
வாசல் படியில் முத்தம் கொடுத்து
ஜாப்புக்கு அனுப்புகிறாய் நீ!
()()()()()()

மஞ்சுவோட ஒடஞ்ச வளையலு இது என்று சீனு
வந்து என் கையில் கொடுத்துப் போனான்.
மஞ்சுவோட பழைய ரிப்பனு என்று முருகன்
வந்து என் கையில் திணித்துப் போனான்!
மஞ்சுவோட உள்ளாடை என்று ரவி வந்து
வந்து வந்து வந்து நண்பர்கள் குடுத்தபடி சென்றார்கள்!
கடைசியாக மஞ்சு வந்து நின்றாள்.
எல்லாப்பொருளும் வந்துச்சா? என் ஞாபகார்த்தமா
ஊட்டுல பத்திரமா வெச்சுக்கோ.. நாளைக்கி
புதுப்பட்டில இருந்து என்னை பொண்ணு
பாக்க வர்றாங்க! என்று சொல்லிப் போனாள்!
இந்தப்புள்ளைக்கி எப்ப பைத்தியம் புடிச்சுது?
()()()()()

டாமி, ஜிம்மி, மணி, டைகர் என்று நிறையப்பேர்
நீயிருக்கும் வீதியில் எந்த நேரமும் சுற்றுவதால்
அழகி என்ற கர்வம் உனக்குள் வந்து விட்டது!
இன்றிலிருந்து யாரும் உன் வீதிப்பக்கம் வரமாட்டார்கள்!
உனக்கு கடுதாசியும் வீச மாட்டார்கள்! உன்னை உன்
வீட்டார் வேறு ஊருக்கு கட்டி அனுப்பி விடுவார்கள்!
அங்கு போய் நீ என்ன வேண்டுமானாலும் செய்துகொள்!
 ()()()()()

அரைக்கம்பத்தில் கொடி ஏற்றியிருந்தேன்.
பார்த்தவர்கள் எல்லாம் கேட்டார்கள் இது எந்த கட்சிக்கொடி?
எந்தத் தலீவரு செத்தாரு என்று?
என் காதல் இன்னிக்கி செத்துப்போச்சு என்றேன்!
தகவலறிந்து நீயும் சும்மா அந்தப்பக்கமாய்
வருவது போல் வந்து போனாய்!
வீடு போய் என் அலைபேசியில் பேசினாய்,
லூசாடா நீ! என்று. பிணம் பேசியதாக
சரித்திரத்தில் ஒரு குறிப்பு பின்னாளில் வரும்.
()()()()()()

நம் காதல் கூவி விட்டது என்று நண்பர்கள்
சந்தோசத்தில் பட்டாஸ் போட்டுக் கொண்டிருந்தார்கள்.
அந்தக்கூட்டத்தில் நீயும் கம்பி மத்தாப்பு பிடித்து
சங்கு சக்கரத்திற்கு தீ வைத்துக் கொண்டிருந்தாய்!
()()()()()()

நீ என்னை காதலிப்பதற்கு ஏகப்பட்ட
விதிமுறைகள் வைத்திருந்தாய்!
1. தண்ணி போடக்கூடாது
2. பீடி சிகரெட் ஊதக்கூடாது
3. அடுத்தவளை ஓரக்கண்ணால் பார்க்கக்கூடாது
4. பொய் சொல்லக்கூடாது
5. மேல கை படக்கூடாது
6. சினிமாக்கு கூப்பிடக்கூடாது என்று ஒரு குயர் நோட்டு
அளவுக்கு வைத்திருந்தாய். – இந்த டி. ராஜேந்தர் காலத்து
காதலை இன்னமும் யாரடி செய்து கொண்டிருக்கிறார்கள்?
இத்தனைக்கும் ஓக்கேடி! நான் சொல்ற ஒன்னுக்கு
ஓக்கே சொல்லு! ஒரு வாட்டி என் ரூமுக்கு வந்துட்டு
 போயிடு! அப்புறம் நீ சொன்னாப்ல இருந்துக்கறேன்!
()()()()()

என் கால் கட்டுகளை அவிழ்த்து தூக்கிப்போட்டு
மூடவே பத்திரமாய் வைத்திருக்கிறாள் ஒரு குழியை
அவள் வயிற்றுக்கருகில்!
()()()()()( 

மொகுட்டையே வெறித்துக்கொண்டு கிட!
காபி டம்ளரை கொட்டு!
பைக்ஹாரன் கேட்டால் ஓடி வந்து தேடு!
இரவெல்லாம் விழித்துக்கிட தலையணையை கட்டிக்கொண்டு!
இத்தனைக்கும் காதலித்துப்பார்!
()()()(


Post Comment