சனி, நவம்பர் 30, 2013

ஜோக்ஸ் 3சுப்பிரமணி அண்டு பழனிச்சாமி அண்டு சுமதி
சுப்பிரமணிக்கு சூப்பர் பொண்ணு பார்த்திருப்பதாக புரோக்கர் வந்து குடும்பத்தையே அழைத்துப் போனான் பெண் வீட்டுக்கு! பெண்ணும் வந்து காபி கொடுத்தது அனைவருக்கும். சுப்பிரமணி சூப்பர் என்று புரோக்கர் சொன்னதால் வந்தான். ஆனால் கடுப்பில் வெளிவந்ததும் அவனை சட்டையை பிடித்து திட்டினான். 

பொண்ணுக்கு ஒரு காது தொங்கிக் கொண்டிருந்தது! ஒரு கண் நெற்றியில் இருந்தது. இன்னொரு காது மேலே தூக்கி வளைந்திருந்தது! தாவாங்கட்டை கோணலாக இருந்தது! ங்கொய்யாலே! என்னை என்ன கேனப்பயல்னு நெனச்சியா?

சுப்பிரமணி மொதல்ல சட்டையில இருந்து கையை எடுப்பா! உங்கூட்டுல சுவத்துல பிக்காசோ ஓவியமா மாட்டி ரசிச்சுட்டு இருப்பியா.. அதனால தான்.. ரோட்டுல போறவங்கெல்லாம் பாக்காங்க உட்டுடுப்பா!

()()()()()()
சுப்பிரமணி பழனிச்சாமியிடம் சோகமாய் சொன்னான்! வாழ்க்கை கசந்து விட்டது நண்பா! மனைவியை கூட எனக்கு காதலிக்கத் தெரியவில்லை என்றான்.

கடைவீதி போய் பூங்கொத்து வாங்கிக் கொண்டு வீடு போ நண்பா! போனதும் இன்று பகல் முழுதும் உன்னையே நினைத்துக் கொண்டிருந்தேன் சகி! என்று கூறு! வாழ்க்கை இனிக்கும், என்றான் பழனிச்சாமி.

சுப்பிரமணி அப்படியே செய்தான். கதவைத் தட்டினான். மனைவி வெளியே வந்ததும் மண்டி போட்டு நீட்டி வசனம் சொன்னான்.

-
அடக்கருமமே! காத்தால இருந்து எனக்கு நேரமே செரியில்லை போல. கண்ணாடி பாத்திரத்தை மதியம் உடைத்து விட்டேன். குழந்தைக்கு வயிற்றுப்போக்கு! துவைக்க ருக்கா வரலை! எங்கம்மாக்கு ஒடம்புக்கு முடியலியாம்! நீ என்னடான்னா குடிச்சுட்டு வந்திருக்கே?!

()()()()()()
சுப்பிரமணியின் மனைவி காவல் நிலையம் அடிக்கடி போய் தான் படுக்கும் கட்டிலுக்கு கீழே பழனிச்சாமி வந்து படுத்துக் கொள்கிறான் என்று சொல்லிக் கொண்டிருந்தாள். சுப்பிரமணியை அதிகாரி விசாரிக்கையில் பழனி என் நண்பன் நல்லவன் என்றே கூறினான். பார்த்துவிட்டு உளவியல் மருத்துவரிடம் சென்றார்கள். அவர் மாத்திரை வில்லைகளை கொடுத்தார். சுமதி மாத்திரைகள் விழுங்கி விட்டு 2 நாளில் டாக்டரிடம் ஓடி, இப்ப ரெண்டு பழனிச்சாமி என் கட்டலுக்கு கீழே படுத்திருக்காங்க! என்றாள்.

விசயம் கேள்விப்பட்டு பழனிச்சாமி சுப்பிரமணி வீடு சென்றான். சுமதியை படுக்கை அறைக்குள் கூட்டிப்போய் கதவை சாத்திக் கொண்டான்.

-
பழனிச்சாமி என்ன காரியம் பண்றீங்க? நிறுத்துங்க. சுப்பு இதை ஒத்துக்க மாட்டார்.

-
கத்தாதே சுமதி. இதை அவன் முன்பே செய்திருக்க வேணும்!
-
இப்படித் தான் கிறுக்குவாக்குல செய்யுறதா? காட்டுமிராண்டி நீ!

வெளியே சுப்பிரமணி மற்றும் அக்கம் பக்கத்தவர்கள் உள்ளே என்ன தான் நடக்குது என்று குழம்பிப்போய் நின்றிருந்தார்கள். சற்று நேரத்தில் பழனிச்சாமி வெளி வந்தான்.

-
அவளுக்கு சரியாப் போயிடுச்சு. இனி பிரச்சனை இல்ல! என்றான். ஆமாங்க! என்று சுமதியும் வந்தாள். எல்லோரும் உள்ளே ஓடிப் பார்த்தார்கள். நாலு கட்டல் கால்களும் கழற்றப்பட்டு கட்டில் தரையில் கிடந்தது!!!

நீதி : இதுக்குத்தான் நண்பன் வேணுங்கறது ஒரு அத்து அவசரத்துக்கு!!!

()()()()()()
சுப்பிரமணியின் மனைவி கோவையில் கலைமகள் லாட்ஜில் அறை எடுத்து தங்கியிருந்தாள். அவள் ரிசப்சனுக்கு போனைப் போட்டு மேனேஜரை சீக்கிரம் வரச் சொன்னாள். எனக்கு எதிர் ரூம்ல ஒருத்தன் ட்ரஸ் இல்லாம பாக்கவே சகிக்கலை! என்று கத்தினாள். மேனேஜர் பறந்தடித்து ஓடிவந்தான். அவள் சொன்னது மாதிரி எதிர் அறையின் ஜன்னலில் ஒருவன் நடந்தபடியே இருந்தான். மேடம் அவன் நிர்வாணமா தான் இருக்கான். ஆனா இங்கிருந்து பார்க்க அவன் இடுப்பு வரைக்கும் தான தெரியுது. நீங்க பாக்காதீங்க விடுங்க மேடம்! என்றான். 

கிறுக்கு மேனேஜரே! இங்க வந்து என்னை மாதிரி பெட்டுல ஏறி நின்னு பாரு! வா ஏறிப்பாரு!

()()()()()()
சுப்பிரமணி வீட்டின் முன் அன்று ஒரு பறக்கும் தட்டு வந்து இறங்கியது. அதிலிருந்து நீங்கள் நினைப்பது மாதிரியே ஒரு உருவம் கால்கள் மூன்றை சாய்த்து சாய்த்து சென்று கதவைத் தட்டியது. சுப்பிரமணி மனைவி கதவைத் திறந்து முட்டிங்கால் அளவு நின்ற உருவத்தைப் பார்த்தாள்.

-
சோச்சி மூஞ்சு போச்சு வேற ஊடு பாரு!
-
ம்!
-
பறக்கும் தட்டுலயா வந்தே?
-
ம்ம்!
-
பத்து நாளு ஆயிருக்குமா செவ்வா கெரகத்துல இருந்து வர?
-
ம்ம்!!
-
அதா அந்தா நிக்குதே வட்டமா அது உம்பொடதா?
-
ம்ம்ம்!
-
அதுக்குள்ள நீ ஒருத்தன் தான் வந்தியா?
-
ம்!
-
ஏம் முக்குறே? என்ன வேணும்?
-
ம்! முட்டீடுது பாத்ரூம் எங்க மிஸ்?

()()()()()()

சுப்பிரமணிக்கு உடல் பருமனாகி விட்டது என்று வருத்தம். பழனிச்சாமி ஒரு இடத்திற்கு தாட்டி விட்டான். ஆறு மணி நேரத்தில் உடல் இளைக்கிறது அதிசயம் என்று விளம்பர பலகை இருந்தது அந்த ஆபீசில். தொகை 5000. பணத்தை கட்டினான் ரிசப்சனில் உள்ளே உடனே கூட்டிப் போனார்கள். அங்கு அழகான பெண் டூபீஸ் உடையில் கழுத்தில் அட்டை தொங்க இருந்தாள். ”என்னைப் துறத்திப் பிடி காரியம் பார்என்றிருந்தது. துறத்திப்பிடிக்காமல் மேலும் சிறப்பு இருக்கிறதா? என்றான்.

இருக்கு10000 என்றார்கள். கட்டினான். இவளை விட சூப்பர் ஃபாரின் பிகர் இருக்கலாம் துறத்தி ஓடிப்பிடித்தால் எஞ்ஜாய் தான்! இழுத்துப் போனார்கள். ஒரு அறையில் இவனை விட்டு சாத்திப் போய் விட்டார்கள். அங்கே மனிதக் குரங்கு குக்கியிருந்தது. அதன் கழுத்தில் அட்டை! அதில்உம்மைப் பிடிப்பேன் உன்னோடு உறவு கொள்வேன்என்றிருந்தது1
()()()()()()
பழனிச்சாமி வீட்டு காளையைப் பார்த்து சுப்பிரமணி வீட்டு பசு மாடு கண்ணடித்தது! ஆக வேலியோரம் ஓடி வேலியில் சாய்ந்து காளை, கண்ணே !!! என்றது!

-
என் பெயர் கண்ணே அல்ல! சுமதி! நீ?

-
நான் டபுள் பழனிச்சாமி!

-
அது சரி. நான் எதிர்பார்த்ததை விட வேலி ஒசரமா இருக்கே?

-
அதைத்தான் நானும் யோசிக்கிறேன்!
()()()()()()()()
சுப்பிரமணி போலீஸ் வேலைக்கு சேர ஆசைப்பட்டு நுழைவுத்தேர்வுக்கு போனான். அதிகாரி இவன் சூப்பர் என்று நினைத்து எளிதான கேள்வியே கேட்டார்.

-
யாரு காந்தியை போட்டுத் தள்ளுனது? சுப்பிரமணி யோசிக்க ஆரம்பித்து விட்டான். 

-
கவலை வேண்டாம் நிதானமா சொல்லு! என்றார். 

பின் மாலையில் வீட்டுக்கு போகும் வழியில் பழனிச்சாமியை சந்தித்தான்.
-
என்ன போலீஸ் வேலை மாட்டீடுச்சா நண்பா? என்றான் பழனி.

-
அது மாட்டி என்னோட மொதல் கேசை விசாரிச்சுட்டு இருக்கேன்!
()()()()()()
ஒரு காகம் தவளையிடம் சொன்னது!

-
இன்னிக்கு சொர்கத்துல பயங்கரமான விருந்து தெரியுமா!

-
ரொம்ப தூரத்துலியா?

-
செரியான சரக்கு, சாப்பாடு ஐட்டமெல்லாம் பிரமாதம்

-
அவ்ளோ தூரத்துலியா?

-
பெண்கள் அழகா டேன்ஸ் பண்ணாங்க!

தவளை வாயை தொறந்து.. அங்கியா?
-
ஆமா பெரிய வாய் இருக்கும் ஆட்களை உள்ள உடமாட்டாங்க! உடனே தவளை வாயை மூடிக்கொண்டு முதலை பாவம்! என்றது!
()()()()()()

சுப்பிரமணி தன் மனைவியிடம் நல்லநாளும் கிழமையுமாய் கிரிக்கெட்பற்றி பேசிக்கொண்டிருந்தான். அவளும் மூன்றுமணி நேரம்ம்கொட்டி கேட்டாள். மனைவிக்கு போரடிக்குமோ என்று நினைத்தவன்,

ரொம்ப சலிப்பா இருக்கா?” என்றான். 

-
அப்படியெல்லாம் இல்லங்க! கிரிக்கெட்டுன்னா என்ன? அதை மட்டும் சொல்லுங்க
()()()()()()
சுப்பிரமணி கால்கட்டுகளுடன் மருத்துவமனையில் கிடந்தான். பழனிச்சாமி அவன் அருகில் முகத்தை தொங்க வைத்து அமர்ந்திருந்தான்.

-
நேத்து நடந்தது ஞாவகம் இருக்கா சுப்பிரமணி? 

-
இல்லியே! இங்க ஏன் கிடக்கேன் நானு? காலு அவுட்டு போல?

-
டாஸ்மார்க் பார் சுவத்துல ஏறி எல்லோருக்கும் பறந்து காட்டுறன்னு சொல்லி ஏறிட்டேடா நீ!

-
என்னை தடுத்து தொலஞ்சிருக்கலாம்ல நீ?

-
நானும் உங்கூட சேர்ந்து தான குடிச்சேன் முட்டாள்! ஒருவேளை நெசமாவே பறந்துடுவியோன்னு நெனச்சிட்டேன்!
()()()()()
சுப்பிரமணியின் பாப்பா ஒன்றாம் வகுப்பு சென்று கொண்டிருந்தது! பள்ளியில் ஆசிரியர் எத்தனை நட்சத்திரங்களை இரவில் பார்த்தீகள்? என்று வரிசையாய் கேட்டார். ஒரு பாப்பா ஆயிரம் என்றது. இன்னொன்று ஐந்தாயிரம் என்றது! சுப்பிரமணியின் பாப்பா, மூன்று! என்றது! எல்லா குழந்தைகளும் நேற்று லட்சக்கணக்கில் பார்த்ததாக கூறுகிறார்கள்.. உனக்கு மட்டும் மூனுதான் தெரிந்ததா?

-
எங்கூட்டு ஜன்னல் சின்னது!
()()()()()()

விண்வெளி காவல் நிலைய கதவை பலமாக தட்டி உள்ளே நுழைந்த சுப்பிரமணி, “ஐய்யா! ஐய்ய்யயா! வேறு கிரகத்துல இருந்து வந்த ஜந்துவால என் மாமியா தாக்கப்பட்டு சீரியசா இருக்காங்கஎன்றான்.

-
என்னாச்சுன்னு விளக்கமா பதட்டப்படாம சொல்லு!

-
நானும் மாமியாவும் ஊருக்கு போயிட்டு இருந்தோம் சார்! அப்ப அது...அது ..பயங்கரம்மா இருந்துச்சு.. என் மாமியாவ பிடிச்சுக்கிச்சு!

-
விளக்கமா சொல்ல முடியுமா?

-
செவச்செவன்னு கண்கள்! மஞ்சள் ஏறிய பற்கள்! சடைசடையா முள்ளுகம்பி மாதிரி தலைமுடி! அருவருப்பா தேவாங்கு மாதிரி முகம்

-
என்ன பயங்கரம்?

-
அந்த ஜந்து எப்பிடி இருந்துச்சுன்னு இனிச் சொல்றன் கேளுங்க ஐயா!
இன்னாவரை மாமியாவை சொல்லியிருக்கான் பயல்!!
()()()()()()

சுங்க இலாகா அதிகாரி காரை நிறுத்தி செக் செய்தார். சுப்பிரமணி மனைவி தன் சூட்கேசை திறந்து காட்டினாள். உள்ளே உள்ளாடைகள் ஆறு இருந்தன.

-
எதுக்கு ஆறு உனக்கு மேம்?

-
சனி, ஞாயிறு, திங்க,செவ்வா,புதன், வியாழன்

-
அப்ப வெள்ளி?

-
ஊஊஊலலலல்ல்லா!

சுப்பிரமணி மாமியார் தன் சூட்கேசை திறந்தார். அதில் 12 உள்ளாடைகள் இருந்தன!

-
எதுக்கு அம்மணி 12?

-
ஜனவரி,பிப்ரவரி, மார்ச், ஏப்ரல்......!”
()()()()()()

சுப்பிரமணி வலப்பை இதழுக்கு நிருபராக பணியாற்றியபோது விண்வெளி வீரனை சந்தித்தான்! 

-
நிலா சாம்பல்நிற பாலாடைக்கட்டியால் ஆனதுன்னு மக்கள் சொல்றாங்களே உண்மையா?

-
நிலாவுல நாங்க பாலாடைக்கட்டி ஒன்னையும் நாங்க பாக்கலை!

-
நிலாவுல எலிகள் அதை சாப்பிட்டிருக்குமோ?

-
எலிகள் எதையும் நாங்க பாக்கலை!

-
எலிகள் எல்லாம் எங்க போயிருக்குமுன்னு நினைக்கிறீங்க?

-
எலி வங்கைக்கூட நாங்க பாக்கலை.

-
வடை சுட்டுட்டு ஆயா இருந்தாளா? வடை சாப்டிங்ளா?
()()()()()

படுமோசமான சாலை விபத்தில் சுப்பிரமணி அகப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். கூடவே விபத்தில் சிக்கிய அனைவரும் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சுப்பிரமணியின் மனைவி அவனது காப்பீட்டுத் தொகையை மனதில் நினைத்தபடி ஓடி வந்தவள் டாக்டரிடம்..
அந்தாளு போயிட்டாரா?” என்றாள் படுக்கையில் கிடந்த சுப்பிரமணியைக் காட்டி!

அப்படித்தான் பயப்படுறேன்என்றார் டாக்டர். ஸ்ட்ரெச்சரில் பலர் தூக்கி வரப்பட்டதால் டாக்டருக்கே குழப்பம். சுப்பிரமணி முனகியபடி, “நான் சாவலைடிஎன்றான்.

கம்முன்னு கெட! டாக்டருக்குத் தெரியாதா?” என்றாள்.
()()()()()()()

சுப்பிரமணி கடலில் ஓடியோடி குதித்து நீச்சல் போட்டபடி இருந்தான். கரையில் சுமதியும் பையனும் இருந்தனர்.

-
அம்மா நானும் போயி அப்பாகூட கடல்ல நீஞ்சட்டுமா?

-
வேணாம்! அலைகள் ஜாஸ்தியா இருக்குடா!

-
அப்பா மட்டும் குதிக்குறாரு?

-
இன்சூரன்ஸ் அவரு நிறைய போட்டு வச்சிருக்காரு!
()()()()()

டாஸ்மாக் பாரில் மிதமான போதையில் பழனிச்சாமியும், சுப்பிரமணியும் அமர்ந்திருந்தார்கள். பழனிச்சாமி தான் ஆரம்பித்தான்.

-
நேத்து பிரேமாவை ஓட்டலுக்கு கூட்டிட்டு போனியேடா சுப்பு காரியம் ஆச்சா?

-
எங்க? கையி, காலெலெல்லாம் காயம் தான் ஆச்சு!

-
அந்த அளவுக்கு ஆயிடுச்சா? கிங்குடா நீ!

-
ஓட்டலுக்கு போனதீம் ஆர்டர் போட்டோம் சாப்பாட்டுக்கு! முதல்ல ஜூஸ் கொண்டு வந்தான் பணியாள். அவளுக்கு குடுத்த ஜூஸ்ல ஒரு பூச்சி கெடந்துச்சு! “டேய் இந்த பூச்சியத் தூக்கி வெளிய வீசுடான்னுகத்தினாள் பிரேமா. அவன் என்னைத் தூக்கி வெளிய வீசிட்டான்!
()()()()()()()()


சுப்பிரமணி ஜவுளிக்கடலுக்குள் நுழைந்தான் தனக்கு ஜீன்ஸ் பாண்ட் வாங்க! கடைச்சிப்பந்தி ஒரு அழகான யுவதி.

-
வாங்க சார்! உங்க விருப்பம் என்ன? என்றாள்.

-
என் விருப்பமா? இங்க கடையில ஒன்னும் பண்ண முடியாது, கட்டிப்பிடிச்சு என் ரூமுக்குத் தான் தூக்கணும் உன்னை!

Post Comment

1 கருத்து:

சசிமோஹன்.. சொன்னது…

அடிக்கடி கடையை தொறங்க ..அப்படியே கொஞ்சம் சிரிச்சுட்டு போயிடுறோம் சாமீ ;-)