செவ்வாய், நவம்பர் 05, 2013

ஜோக்ஸ்தீபாவளி மொதல் வெடி!

-அம்மா! சொர்கத்துக்கு போகும் அனைவரும் தங்கள் கால்களை மேலே தூக்கிப் பிடித்துக் கொண்டா போவார்கள்?
-இல்லை என் தங்கமே! கான்வெண்ட்டில் படிக்கிறாய் என்றுதான் கோடு. இப்படியுமா முட்டாள் தனமாக கேட்பாய் பெண்ணே?
-இல்லம்மா நான் நேரா பெட்ரூம்ல இருந்து தான் வர்றேன். நம்ம வேலைக்காரப்பெண் தன் கால்களை உயரத் தூக்கிக் கொண்டு “கடவுளே நான் வருகிறேன் கடவுளே நான் வருகிறேன்னு” கத்திட்டு படுத்திருக்காள். நம் அப்பா தான் அவளை போக விடாமல் அவள் மேல் விழுந்து அழுத்திக் கொண்டு இருக்கிறார்.

தீபாவளி இரண்டாம் வெடி

அந்த வயதான பெண்மணி தனக்கு பிடித்த தொலைக்காட்சி நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருந்தபோது அவள் கணவன் வீட்டினுள் நுழைந்து தன் துணிமணிகளை பெட்டியில் அடுக்கினான்.
-நீ என்ன செய்யுறே?
-நான் வேலையை இந்த தீவாளியோடு விட்டு விட்டேன். ஆஸ்திரேலியாவுக்கு புறப்படுறேன். உன்னை கண்டாலே எனக்கு பிடிக்கலை. அங்கு இளம் பெண்கள் தங்களுக்கு ஒரு இரவு சேவை புரியும் ஆண்மகனுக்கு அஞ்சு டாலர் தருவதாக கேள்விப்பட்டேன். எனது காதல் புரியும் சேவையால் வரும் வருமானத்திலேயே நான் உயிர் வாழ்வேன்
உடனே மனைவியும் தன் துணிமணிகளை பெட்டியில் அடுக்கினாள்.
-நீ எங்கேடி போவதாக உத்தேசம்?
-ஆஸ்திரேலியாவுக்குத்தான். ஒரு மாதம் முழுக்க பத்து டாலரில் நீ எப்படி ஜமாளிக்கப் போகிறாய் என்பதை பார்க்கத்தான்!!!

தீபாவளி மூன்றாம் வெடி

ஒருவர் தன்னை ஜெயமோகன் என்று கூறிக்கொண்டதால் பைத்தியகார ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டிருந்தார். மருத்துவமனை பணியாளர்களிடம் இது ஒரு பிரச்சனையாகி விட்டது. ஏனெனில் ஏற்கனவே ஒரு ஜெயமோகன் அந்த மருத்துவமனையில் தங்கியிருந்தார். அந்த நபர் புறப்பாடு மூன்றாம் பாகம் எழுதிக் கொண்டிருப்பதாகவும் டிஸ்டர்ப் பண்ணாதீர்கள் என்றும் கூறிக்கொண்டிருந்தார். தலைமை அதிகாரி ஏதாவது பிரச்சனை ஆகிவிடுமோ என்று பயந்து கிடந்த போது ஒரு ஐடியா உதித்தது அவருக்கு.
  அதன்படி இரண்டாவதாக சேர்க்கப்பட்ட ஜெயமோகன் என்பவரையும் முன்பிருந்த ஜெயமோகன் அறைக்குள் அடைத்தார். இருவரும் பேசி முடிவுக்கு வந்து விடுவார்கள் என்பது அவர் கணக்கு. இருவரில் ஒருவருக்கு சரியாகி விடும் என்று கணக்கிட்டார். –விடிந்தது!
  மறுநாள் புது மனிதனை தன் அறைக்கு வரவழைத்தார் அதிகாரி. ”முதல் நாள் இரவு எப்படி போயிற்று?” என்றார்.
-நான் பல ஆண்டுகளாக தவறான நினைவுகளில் வாழ்ந்திருக்கிறேன்.
-அருமை! என்ன ஒரு உள்நோக்கு! சொல் சொல்!
-எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்தே என்னை ஜெயமோகன் என்றே நினைத்து வந்துள்ளேன். ஆனால் நான் அவரல்ல!
-அருமை! பின்னே நீ யாரென்று சொல்.
-நான் தான் சுந்தர ராமசாமி!

தீபாவளி நான்காம் வெடி

-நீங்கள் ஒரு கம்யூனிஸ்ட் என்பதால் அனைத்தையும் பகிர்ந்து கொள்வீர்களா?
-ஆம்
-இரண்டு மோட்டார் சைக்கிள் இருந்தால் ஒன்றை தந்து விடுவீரா?
-எனக்கு ஒன்னு போதும். இன்னொன்றை தந்து விடுவேன்.
-இரண்டு வீடுகள் இருந்தால்?
-ஒன்றை தந்து விடுவேன்
-இரண்டு கார்கள் இருந்தாலும் தந்து விடுவீர் ஒன்றை?
-ஆம்!
-உங்களிடம் இரண்டு சட்டைகள் இருந்தால் ஒன்றை எனக்கு தந்து விடுவீர், அப்படித்தானே!
-தர மாட்டேன்
-ஏங்க முடியாது?
-ஏனா? எங்கிட்ட ரெண்டு சட்டை இருக்கிறதே!

தீபாவளி கடைசி வெடி

பெருந்துறை மதுபானக்கடையில் சின்னச்சாமி நின்றிருந்தபோது ஒருவர் நெருங்கி வந்து,
-நீங்கள் சின்னச்சாமியா?
-ஆமாம் நான் சின்னச்சாமியே தான்.
-போன மாதம் சென்னை போயிருந்தீர்களா?
-அட ஆமாம்
-ஆக்ஸ்போர்டில் 14ம் அறை எடுத்து தங்கியிருந்தீரா?
-ஆமா ஆமா சொல்லுங்க.
-15ம் எண் அறையில் திருமதி முத்துசாமியை சந்தித்தீரா?
-ஆச்சரியமா இருக்கே! ஆமாம்.
-அவரோடு காதல் புரிந்தீரா?
-ஆமாங்கோவ்
-நான் தான் முத்துசாமி. எனக்கு நீ பண்ண காரியம் புடிக்கவே இல்ல!
-அட எனக்கும் தான் புடிக்கவே இல்ல அது!

()()()()()()()()()


சின்னச்சாமி விபத்தில் அடிபட்டு ஆஸ்பத்திரியில் கிடந்தான். மயக்க நிலையில் இருந்து விடுபட்டதும் டாக்டரின் முகம் பார்த்தான்.
-அருமை! நீ விழித்துக் கொண்டாய்டா பயலே! உனக்கு ரெண்டு விசயம் சொல்லிட்டு போலாம்னு காத்திருந்தேன். ஒரு விசயம் கெட்டது. இன்னொன்னு நல்லது!
-கெட்ட விசயத்தை மொதல்ல சொல்லுங்க டாக்டர்!
-உன்னோட ரெண்டு காலையும் எடுத்துட்டோம்!
-போச்சாது. சரியான விபத்து தான். அந்த நல்ல விசயம்?
-அந்தா பக்கத்து பெட்டுல படுத்திருக்கான்ல அவன் உன்னோட புதுச் செருப்பை விலைக்கு வாங்கிக்கறன்னு சொல்லிட்டான்.

மிச்சமான வெடி ஒன்னு

அடர்ந்த வனத்தில் ஒரு கிழஜோடி வாழ்ந்து வந்தது. காட்டில் எதேச்சையாக கிழவனுக்கு ஒரு முகம் பார்க்கும் கண்ணாடி கிடைத்து விட அதில் முகம் பார்த்தவன் தனது தந்தை இவர்தான் என்று எண்ணி கொண்டு போய் மர வீட்டில் பத்திரமாய் வைத்துக் கொண்டான். தினமும் தூங்கப்போகையில் பரண் ஏறி குட்நைட் சொல்லி விட்டு வந்து உறங்குவதைக்கண்ட மனைவி சந்தேகத்தில் ஒருநாள் பரண் ஏறி கண்ணாடியில் பார்த்தாள். “அட ஆகாவழி கிழவா! தினமும் மறைத்து வைத்து இந்த அசிங்கமான கிழவியிடமா குட்நைட் சொல்கிறாய்?” என்று கத்துப்பிடித்தாள்.

()()()()()()()()()()()-எனக்கு ரெண்டு பிரச்சனை பழனிச்சாமி. நான் பலமுறை கெஞ்சி கேட்டும் என் முதலாளி இந்த தீவாளியோட கம்பெனிக்கி வராதேன்னுட்டாரு!
-இன்னொரு பிரச்சனை என்ன சுப்பிரமணி?
-என் சம்சாரம் ரெண்டு வருசமா கர்ப்பமே ஆகமாட்டீங்றா! ஊட்டுல எல்லா சாமி போட்டோவையும் வச்சுட்டு எந்த நேரமும் உழுந்து உழுந்து கும்புடுறா! ஆனா எதுவும் நடக்க மாட்டேங்கு!
-தப்பு தப்பா பண்ணா அப்படித்தான் ஆவும். இந்த தீவாளி நெறயப்பேருக்கு செரியில்ல தெரியுமா! நீ இனிமே ஊட்டுல உட்கார்ந்து சாமி கும்பிடு. சம்சாரத்தை கம்பெனிக்கி அனுப்பி உன் முதலாளி கிட்ட பேசச் சொல்லு சுப்பிரமணி!
மூனு மாசம் கழிச்சு நடக்கப்போவது……..

-நீ சொன்னது சரிதான் பழனிச்சாமி. ஆனா நீ பெரிய ஆளுதான். என்னை என் மொதலாளி வேலைக்கி சேத்திட்டாரு. என் சம்சாரம் இப்ப கர்ப்பம்.

Post Comment

கருத்துகள் இல்லை: