அவைகள்
வெளியேறப்போவதாக
இறுதி
வார்த்தைகளை என்னிடம்
சொல்கையில்
கொஞ்சம் சங்கடம்
வந்ததென்னவோ
உண்மைதான்!
இருந்தாலும்
அவைகளின் சந்ததிகளை
காப்பாற்ற
இப்படி ஒரு நிலமைக்கு
அவைகளை
வரவழைத்தது நான் தான்!
ஒரே
ஒரு மூங்கில் குச்சி அவைகளில்
பலரை
இந்த ஒருவருட காலமாக கொல்லப்
பயன்படுத்தினேன் என்று
உண்மையை
இப்போது
ஒப்புக்கொள்கிறேன்! –முதலாக
அவைகள்
டிவிக் டிவிக்கென கத்தும் ஓசை
எனக்கு
பிடிக்கவில்லை! அடுத்ததாக அவைகளின்
நடமாட்டம்
வீடெங்கும் சுவர்களில்
இருப்பதும்
பிடிக்கவில்லை! பிடிக்காதனவற்றை
அழிப்பது
என் இயல்பு! –ஒரு பூரானையோ
பாம்பையோ,
தேளையோ கண்டால் தோன்றும்
உணர்வுதான்
உங்களை கண்டதும் நான்
தடியெடுப்பது!
என்று விளக்கினேன்! –அவைகளில்
சில
பொறுமை எல்லை கடந்து போன
பிற்பாடு
எடுத்த முடிவு தான் என்றன!
சரி
வேறு வழியில்லை! இனி என் வீட்டில்
கொல்வதற்கு
வேறு விலங்கினங்கள் தான்
வர
வேண்டும்! அவைகளில் சில பக்கத்து
வீட்டுக்கு
செல்வதாய் என்னிடம் விடைபெற்றன!
அவைகளுக்கு
கையசைத்து வழியனுப்பினேன்!
என்
மூங்கில் தடி இன்னமும் அந்த மூலையில்
தான்
இருக்கிறது பல்லிகளை கண்டால் கொல்ல!
0000000000000
ஏலே
எடுபட்ட சிறுக்கி!
எம்
பிருசன் என்னை மிதிப்பான்!
அப்புவான்!
கொமட்டுல குத்துவான்!
முத்தா
குடுப்பான்! ஊத்தியுங் குடுப்பான்!
சக்கையா
புழிவான்! எப்பப்பாரு..
எம்பிருசனை
ரூட்டுப் போடவே
பாத்துட்டு
இருக்கேடி நீ!
இன்னொரு
விசுக்கா அவம்முன்னாடி நீ
ஈஈன்னு
பல்லைக்காட்டிட்டு …
கொஞ்சூண்டு
தெரியற மாதிரி காட்டீட்டு…
நின்னீன்னு
வெய்யி.. வந்து ஒரே மிதி!
பூணு
கழண்டு கெடையில உழுந்துருவே பாத்துக்கோ!
ஏண்டி
தென்னமரத்துல ஏறுனீன்னு கேட்டா
புல்லு
புடுங்கோன்னாளாம்!
தென்ன
மரத்துல ஏதுடி புல்லுன்னா
அதான்
எறங்குறேன்னாளாம்!
0000000000
கிழமைகளில்
ஞாயிறு என்றால் மட்டும்
மதுவிடுதிகளில் கொண்டாட்டமும் கும்மாளமும்
அதிகரித்துவிடுகிறது!
புதிதாய் மதுவருந்த
அரங்கினுள்
வந்தவர்கள் ‘வீட்டுல அதான்’
என்று
அசடு வழிகிறார்கள்! அந்த நாளில் என் மேஜை
முன்
புதியவர்கள் சிலர் அமர்ந்திருந்தார்கள்!
குடியை
விட சாப்பிடுவதில் அவர்கள்
குறியாய்
இருந்தார்கள். ஒருவனின் காதலி
நான்
கலைக்கவெல்லாம்
மாட்டேன்! என்று
சொல்லி
விட்டாளாம்! என்ன எடுத்துச் சொன்னாலும்
அவளுக்கு
புரியவே மாட்டேங்கிறதாம்! என்றபடி
டம்ளரை
கவிழ்த்திக் கொண்டான்! அப்புறம்?
அப்புறமென்ன?
காதலையே நா கலச்சிட்டேன்!
சொல்பேச்சு
கேக்காதவ சம்சாரமா வந்து
எனக்கு
ஆக்கிப் போடுவாளா? –துக்கமாய் குடித்தான்!
அவன்
நண்பர்கள் அழும் நிலையில் இருந்தார்கள்!
இருந்தும்
ஆம்லெட்டை பிய்த்து வாயில்
போட்டபடி
உதடு பிதுங்கினார்கள்! –ஞாயிறு என்றால்
துக்கம்
வைத்திருப்பவர்களும்
அழுவதற்கு
அரங்கம்
வருகிறார்கள்!
00000000000
நீ
பிரிந்து போன கிழமையொன்றின்
மதிய
வேளையில் சரடின் நுனி பிடித்து
ஞாபக
மழையொன்றில் திழைக்கிறேன்!
நான்
உன்னை பல வழிகளில் துன்புறுத்தி
நீ
துக்கப்படுகையிலெல்லாம்
புன்னகை
பூத்திருக்கிறேன்!
மல்லிகை வேண்டுமென்றால்
ஒரு
சரமுடன் வந்து நிற்பாய்! உடல்நிலை
சரியில்லை
என்றால் பறந்தடித்து ஓடி வந்து
பக்கத்திலமர்ந்து பணிவிடைகள்
செய்வாய்!
கடைசியாய்
நீ என்னை பயன்படுத்திக்கொண்ட
மதியவேளையொன்றில் உன்
கழுத்தை
அறுத்தெறிந்து விட்டு
வந்து விட்டேன்!
அதை
நீ பெரிதாக எடுத்துக் கொள்ளாமல்
மீண்டும்
என்னோடு தொடர்பில் வந்தாய்!
எனக்குத்தான்
பயம் பிடித்துக் கொண்டது பிற்பாடு!
மீண்டும்
உன்னிடம் முன்போல் பழகினால்
திடீரென
கழுத்தை அறுத்து விடுவாய்! கழுத்தில்லா
முண்டமாய்
நீ வேண்டுமானால் அழகாயிருக்கலாம்!
ஆனால்
நான் அப்படியல்லவே!
00000000000
ரெய்னீஸ்
தலித் தெருவில் இப்போது
நான்கு
வீடுகளே அடுத்த மழைக்கு
தாக்குப்
பிடிக்கும் நிலையில் இருந்தன!
மிச்ச
வீடுகள் குட்டிச் சுவர்களாகி
ரூத்தின்
நாய்கள் தங்கும் வசிப்பிடங்களாகி
விட்டன!
–மில்டன் சாராயம் காய்ச்ச திருவேங்கிட
கிழவனின்
இடிந்த வீட்டை உபயோகிக்கிறான்.
எந்த
நேரமும் நாய்களின் குரைப்பொலியில்
ரெய்னீஸ்
தலித் தெருவில் ஜன நடமாட்டம்
குடிக்க
வந்து போய்க்கொண்டிருக்கிறது!
மாமூலுக்கு
வரும் ஜீப் தெருமுனையிலேயே
திரும்பி
பொழுதுக்கும் நின்றுவிடுகிறது!
மூன்றாம்
வீட்டில் சரோஜா வீட்டை விட்டு
வெளியில்
வருவதேயில்லை! இருந்தும் அவள்
வீட்டினுள்
வரிசையாக ஆட்கள் போய்
வந்து
கொண்டுதானிருந்தார்கள்
நனைந்து போய்!
சுப்பாக்கிழவி செத்தால்
தூக்கிப்போக மில்டன்
ஒருவன்
மட்டுமே ஆண்பிள்ளையாய் இருந்தான்!
கிட்டத்தட்ட
2015ல் ரெய்னீஸ் தலித் தெரு
டோசர்களால்
நிரவப்பட்டு வர்ணக்கொடிகள்
பறக்க
முருகன் நகர்… குறைந்த விலையில்
என்ற
வாசகம் தாங்கிய ப்ளக்ஸ் ஒன்றும்,
நான்கு
வெள்ளை வேட்டிகளும் நின்றிருக்கலாம்!
000000000000